உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தைகளுக்கு பயனுள்ள நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுப்போம்.

செவ்வாய், 29 மே, 2012


உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியமாகவும், நலமாகவும் இருக்கும்-னு எல்லோருக்கும் தெரியும். அப்படி தெரிஞ்சும் நிறைய பேர் அதை செய்றது இல்ல. ஏனென்றால் அதை அவர்கள் விரும்பி, மகிழ்ச்சியோடு செய்யாததால தான். இந்த உடற்பயிற்சியை நல்லா பண்றதுக்கு ஒரு நல்ல வழி இருக்கு. அதுதான் நம்ம குழந்தைகளோட செய்வது.

பொதுவாக குழந்தைகள் நாம் என்ன செய்கிறோமோ, அ அப்படியே செய்வார்கள். ஆகவே அவர்களோடு தினமும் ஈஸியான உடற்பயிற்சியை செய்வதால் குழந்தைகளுக்கு ஒரு நல்ல பழக்கத்தை சொல்லிக் கொடுப்பதோடு, அவர்களது உடல்நலம் ஆரோக்கியமாகவும், மூளை நன்கு சுறுசுறுப்பாகவும், உடல் நல்லா பிட்டாவும் இருக்கும்.

ஈஸியான உடற்பயிற்சிகள்...

குழந்தைகளுக்கு தொங்வது என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அவர்களுக்குப் பிடித்த தொங்கும் பயிற்சியை செய்வதால், தொங்கும் போது அவர்களது தோள்பட்டை மற்றும் ஆம்ஸ் நன்கு வலுபெறும்.

காலையில் எழுந்ததும் ஸ்கிப்பிங் விளையாட வைக்கலாம். இதனால் அவர்களது கவனம் கூர்மையாவதோடு, புத்துணர்ச்சியும் அடைவர்.

மேலும் காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு பெப்பி மியூசிக் போட்டுவிட்டு, எழுந்த இடத்திலேயே அவர்களையும் ஓட வைத்து, நீங்களும் ஓடலாம். இதை தினமும் 5 நிமிடம் செய்தாலே போதும் நல்லா ஆக்டிவா இருக்கலாம்.

மேலும் சின்ன வயசுலயே அவங்களுக்கு கூடைப்பந்து, நீச்சல், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளை சொல்லிக் கொடுத்தா, ஒரு நல்ல விளையாட்டு வீரராக கூட வருவாங்க.

ஆகவே உடற்பயிற்சி சொல்லிக் கொடுங்க!!! குழந்தைகளை ஆரோக்கியமா வெச்சுக்கோங்க!!!

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets