முதல் முறை விழுதல் - முதுமையின் தொடக்கம். இரண்டாம் முறை விழுதல் - முதுமையின் முடிவு.
புதன், 23 மே, 2012
வயது ஆனவர்கள் அடிக்கடி
கீழே விழுந்து விடுகிறார்கள். ஒவ்வொரு முறை கீழே விழும் போது தலையில் அடிபட்டு
இறந்து விடுவாரோ அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையில் படுத்து விடுவாரோ
என்ற பயம் என்னை வாட்டும். இப்படி முதியவர்கள் அடிக்கடி கீழே விழுவதைத் தடுக்க
ஏதாவது வழி உண்டா?
வயதாக ஆக உடலைச் சரிசமமான முறையில் வைத்துக் கொள்ள
இயங்கும் உறுப்புகளின் திறன், கொஞ்சம்
கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும். உடலைச் சரியான நிலையில் வைத்துக் கொள்வதற்கு
உள் காது, சிறுமூளை, கண், தசைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும்
ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த இணைப்பில் ஏதேனும் குறைபாடு நிகழ்ந்தால், நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உண்டு.
இந்த மாற்றம், முதுமையில்
அதிகம் ஏற்படுவதால் முதியவர்கள் அடிக்கடி கீழே விழுகிறார்கள்.
கீழே விழுவதற்கான காரணங்கள்:
* நரம்பு சார்ந்த நோய்கள், உதாரணம்: அறிவுத்திறன் வீழ்ச்சி, உதறுவாதம், பக்கவாதம்.
* காது சார்ந்த நோய்கள்
* கண் பார்வை குறைதல். உதாரணம்: கண்புரை.
* மூட்டுவலியும், தசைகள் சார்ந்த நோய்களும்.
* ரத்த அழுத்தத்தினால் மாற்றம் ஏற்படுவது. அதாவது, ஒருவர் படுத்த நிலையில் இருக்கும்போது ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென்று எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது ரத்தம் அழுத்தம் வேகமாகக் குறைந்து விடுகிறது. இதனால், கீழே விழ வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
* மருந்துகள். உதாரணம்: நீர் மாத்திரை, தூக்க மாத்திரை, உயர் ரத்த அழுத்த மாத்திரை, மனநோய்க்குக் கொடுக்கப்படும் மாத்திரை.
* அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.
* வழுவழுப்பான தரை, ஈரமான தரை, மேடுபள்ளமான தரை, அதிக உயரமுள்ள படிக்கட்டுகள்.
* மங்கிய வெளிச்சம்.
* அறையில் உள்ள தேவையற்ற பொருட்கள். உதாரணம்: மேசை, நாற்காலி.
இப்படி, முதுமையில் கீழே விழுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன.
கீழேவிழுந்தால் ஏற்படும் தொல்லைகள்:
கீழே விழுவதால் சிறிய சிராய்ப்பிலிருந்து எலும்பு முறிவு வரை பல தொல்லைகள் ஏற்படலாம். சுமார் 20 சதவிகித முதியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. தலையில் அடிபட்டு காயமும், அதனால் மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருமுறை கீழே விழுந்ததும் மறுபடியும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தால் பலர் நடக்கவே பயந்து, படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள்.
கீழே விழுவதை தடுக்க:
உடலை முழுமையாகப் பரிசோதனை செய்து, கீழே விழுவதற்கு நோய்கள் ஏதேனும் காரணமா என கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
* கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ளவும். பார்வைக் குறைவால் அணியும் கண்ணாடி சரியில்லாமல் போனால் கூட, கீழே விழ ஒரு காரணமாக அமையும். ஆகவே, சரியான கண் கண்ணாடி அணிவது மிக அவசியம்.
* காதை முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காதல் அழுக்கு சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் கூட நிலை தடுமாறலாம்.
* முதியவர்கள், சாபிடும் மருந்துகளைப் பற்றியும் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால், மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட கீழே விழ வாய்ப்பு உண்டு.
* மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.
* படுக்கையில் இருந்து எப்போதும் வேகமாக எழுந்து, உடனே நடக்கக் கூடாது. மெள்ள எழுந்து உட்கார வேண்டும். பிறகு சற்று நேரம் கழித்து மெதுவாக நிற்க வேண்டும். அதன் பின்னரே நடக்க வேண்டும்.
* நடக்கும்போத கைத்தடி அல்லது தேவையான “வாக்கிங் ஃப்ரேம்’ உடயோகிக்க வேண்டும். மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்கள் என்று கூச்சப்படத் தேவையில்லை. நம் உடலை நாம் தான் பேணிக் காக்க வேண்டும்.
* பொருத்தமான காலணிகளை அணிவது சிறந்தது.
* தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, தசைகள் மற்றும் மூட்டுகளின் திறனை அதிகப்படுத்தி கீழே விழுவதைத் தடுக்க உதவுகிறது, உடலைச் சரிசமமாக வைத்துக் கொள்ள சிறப்பு உடற்பயிற்சிகளும் தேவை.
* படுக்கை அறை, குளியல் அறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை கைக்கு எட்டும் தூரத்திலேயே வைக்க வேண்டும். உதாரணம்: டெலிஃபோன், பேனா, கண்ணாடி, மருந்து டப்பா, சாவி.
* முதியவர்கள் அதிகமாகப் புழங்கும் இடங்களில் இரும்புக் கைப்பிடிகளை பொருத்த வேண்டும். உதாரணம்: குளியலறை, கழிவறை, படிக்கட்டு.
* குளியலறை வழுவழுப்பு இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
முதல் முறை விழுதல் - முதுமையின் தொடக்கம்.
இரண்டாம் முறை விழுதல் - முதுமையின் முடிவு.
இப்பொழுது புரிகிறதா கீழே விழுதல் என்பது ஒரு விபரீதமான தொல்லை என்று? முதியவர்கள், சற்று நிலை தடுமாற்றம் உள்ள கைத்தடி மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்களை உபயோகப்படுத்தி கீழே விழுதலைத் தடுத்து மகிழ்ச்சியாக வாழலாம்!