உங்கள் வருகைக்கு நன்றி

எதையுமே மனதிற்குள் வைத்துக்கொள்ளாதீர்கள்

வியாழன், 29 நவம்பர், 2012


வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும், மனதை அமைதிப்படுத்த, தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது.

மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். சில நோய்களும் மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோயின் தாக்கம், நோயின் பக்க விளைவுகள் போன்றவற்றால் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம் இருக்காது.

எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலை வலி, வயிற்று வலி, கோபம் போன்றவை ஏற்படுவதாக உணர்வோம். மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது.

மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்தான் எளிதில் போதைப் பொருளுக்கு அடிமையாதல், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, தற்கொலை முயற்சி, சூழ்நிலையை தவிர்க்க ஓடிப்போதல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் போன்றவை நிகழ்கிறது. மன இறுக்கத்தைத் தவிர்க்க  பிரச்சனைகள் ஏற்படும் போது அதை மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது.

 

Read more...

இஞ்சி, எலுமிச்சை சூப்

சனி, 24 நவம்பர், 2012


இஞ்சி, எலுமிச்சை சூப்
தேவையான பொருட்கள்: 

இஞ்சி விழுது - 5 டீஸ்பூன் 
தண்ணீர் - 2 கப் 
தேன் - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
கொத்தமல்லி - சிறிதளவு 

செய்முறை: 

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும். 


* பின் அதில் இஞ்சி விழுதை போட்டு, நன்கு 5 முதல் நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 


* பிறகு அதோடு தேன், எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வடிகட்ட வேண்டும். 


* இப்போது சத்தான இஞ்சி சூப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.

Read more...

பட்டைய கிளப்பும் பினாயில் தயாரிப்பு!

வியாழன், 22 நவம்பர், 2012


வீடுகள், தொழிற்சாலைகள் என பினாயில் பயன்பாடு இல்லாத இடமே கிடையாது. இவற்றை தரமான முறையில் தயாரித்து விற்றால் நிரந்தர  வாடிக்கையாளர்களை பெற முடியும். அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார் உடுமலை போடிபட்டியை சேர்ந்த இந்திராணி. 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

அவர் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன புதிதில் கணவரின் வருமானம் போதவில்லை.

பினாயில் தயாரிப்பது குறித்து, இங்குள்ள ஆசிரியர் ஒருவர், பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்தார். அதைக் கற்றுக்கொண்டு, பினாயில் தயாரிப்பை தொழிலாக செய்ய தொடங்கினேன். அப்போது ரூ.100 செலவில் பினாயில் லிக்விட், சென்ட் வாங்கி வீட்டில் உள்ள பாத்திரங்களை கொண்டு பினாயில் தயாரித்தேன். காலி பாட்டில்களில் ஊற்றிகடைகளுக்கு விற்றேன். அன்றாட செலவுக்கு பணம்  கிடைத்தது. 

பின்னர், தொழிலை சிறிது சிறிதாக விரிவு படுத்தினேன். கணவர் உதவிகரமாக இருந்தார். அவர் பினாயில் பாட்டில் களை சைக்கிளில் எடுத்து சென்று உடுமலையில் உள்ள வீடுகள், மருத்துவமனை கள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு விற்றார். பினாயில் லிக்விட் 3 தரத்தில் உள்ளது. முதல் தரத்தை கொண்டு பினாயில் தயாரித்தால் பல மாதங்களுக்கு நீர்த்துப்போகாமலும், காலாவதியாகாமலும் இருக்கும். முதல் தரத்தில் தயாரித்ததால் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். 

8 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள நேசக்கரங்கள் அமைப்பு மூலம் ஜான்சிராணி மகளிர் சுய உதவி குழு உருவாக்கி, நிதியுதவி பெற்று, உற்பத்தி அளவை அதிகரித்தேன். மகளிர் குழுவை சேர்ந்தவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கோழிப்பண்ணைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்கிறேன். வாடிக்கையாளர்கள் விரும்பும் சென்ட்களை பயன்படுத்தி, பிரத்யேகமாக பினாயில் தயாரித்து கொடுத்ததால், மேலும் மேலும் வாடிக்கையாளர்களும் கிடைத்தனர். வாடிக்கையாளர்களை பெறு வதற்காக மேற்கொள்ளும் உற்பத்தி தரத்தை, தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அதுதான் தொழி லுக்கு நிரந்தர வெற்றியை கொடுக்கும். 


புதிய தொழில் முனைவோர் துவக்கத்தில் குறைந்த அளவில் உற்பத்தி செய்து விற்று, படிப்படியாக உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். பெண்கள் வீட்டிலேயே பினாயில் தயாரிக்கலாம். இதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் பின்விளைவுகளை ஏற்படுத்தாது. குடும்பத்தினர் உதவியுடன்  வீடுகள், மருத்துவமனைகள், விடுதிகள், ஓட்டல்களுக்கு நேரடியாக சப்ளை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். 

முதலீடு

20 லிட்டர் வாளி 2 (ரூ.400), கப் 2 (ரூ.60), புனல் 2 (ரூ.30). முதலீட்டு செலவுக்கு ரூ.500 போதும். தயாரிப்பு பொருட்கள் : பினாயில் பேஸ்ட், சென்ட் (மல்லிகை, தாமரை, தாழம்பூ, மரிக்கொழுந்து உள்ளிட்ட வெவ்வேறு மணங்களில் உள்ளன) கெமிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பினாயில் தயாரிக்க தனி இடம் தேவை யில்லை.  மூலப் பொருட் களையும், தயாரித்த பினாயிலையும் வைக்க வீட்டில்  உள்ள ஒரு அலமாரி போது மானது.  பினாயில் தயாரிக்கும் போதும். வெளி யேறும் நெடி அதிகமாக இருக் கும் என்பதால், காற்றோட்டமுள்ள வராண்டாவில் தயாரிப்பது நல்லது. நெடி காற்றில் பறந்துவிடும்.


எப்படி தயாரிப்பது?

பினாயில் லிக்விட் ஒரு லிட்டர், சென்ட் 150 மிலி, நல்ல தண்ணீர் 30 லிட்டர். 20 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 வாளியை அருகருகில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மற்றொன்று காலியாக இருக்க வேண்டும். ஒரு கப் எடுத்துக்  கொண்டு, அதில் 30 முதல் 35 மிலி பினாயில் லிக்விட்டை ஊற்ற வேண்டும். மற்றொரு கப்பில் தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து நன்றாக ஆற்ற வேண்டும். 

இந்த கலவையை வாளியில் ஊற்ற வேண்டும். இப்படியே செய்து பினாயில் கலவையை வாளியில் ஊற்றி வர வேண்டும். வாளியில் ஊற்றிய பிறகும் நன்றாக கலக்கி விட வேண்டும். அப்போதுதான் லிக்விடும், தண்ணீரும் கலக்கும். இடையில் மக்கில் 15 மிலி சென்ட் எடுத்து அதில் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி வாளியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மில்லி சென்ட், 30 லிட்டர் தண்ணீர் முழுவதையும் கலக்க வேண்டும். 

பிறகு தயாரான  பினாயிலை கப்பில் எடுத்து புனல் வழியாக காலி பாட்டிலில் ஊற்ற வேண்டும். பினாயில் லிக்விட், தண்ணீரோடு முழுமையாக கலக்காவிட்டால் திரிந்து விடும். திரியாமல் நன்று கலப்பதற்காக தான் மாறி, மாறி ஆற்ற வேண்டியது முக்கியம். 

உற்பத்தி செலவு 

ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மிலி சென்ட் ஆகியவற்றுடன் 30 லிட்டர் தண்ணீர் கலந்தால் 31 லிட்டர் பினாயில் கிடைக்கும். இதை தயாரிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு நாளில் 5 லிட்டர் பினாயில் லிக்விட், 750 மில்லி சென்ட் மூலம் 155 லிட்டர் பினாயில் வீதம், மாதத்தில் 25 நாளில் 3875 லிட்டர் பினாயில் தயாரிக்கலாம். 

ஒரு லிட்டர் பினாயில் லிக்விட் ரூ.200, சென்ட் ஒரு லிட்டர் ரூ.1300. மாதம் 25 நாள் உற்பத்திக்கு 125 லிட்டர் பினாயில் லிக்விட் தேவை. ஒரு லிட்டர் ரூ.200 வீதம் ரூ.25 ஆயிரம் தேவை. சென்ட் 18.750 லிட்டர் தேவை. ஒரு லிட்டர் ரூ.1300 வீதம் ரூ.24,375 தேவை. உற்பத்தி மற்றும் டெலிவரி கூலி ஒரு நாளைக்கு ரூ.300 வீதம் 25 நாள் கூலி ரூ.7,500, மினரல் வாட்டர் காலி பாட்டில்கள் தலா 70 காசு வீதம் 3875 காலி பாட்டில்கள் ரூ.2,700. இவ்வாறு ஒரு மாத உற்பத்தி செலவுக்கு ரூ.53,375 தேவை. 

மாதம் ரூ.24 ஆயிரம்

ஒரு லிட்டர் பாட்டில் பினாயில்  லிட்டர் தயாரிக்க ரூ.13.75 ஆகிறது. அது ரூ.20க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாட்டிலிலும், 5 லிட்டர், 10 லிட்டர் கேன்களிலும் விற்கப்படுகிறது. கேனுடன் 5 லிட்டர் பினாயில் ரூ.130க்கும், 10 லிட்டர் பினாயில் ரூ.250க்கும் விற்கப்படுகிறது. மாதம் 3875 லிட்டர் விற்பதன் மூலம் ரூ.24 ஆயிரம் லாபம் கிடைக்கும். 

தேவை அதிகம்

பினாயில் லிக்விட் கிருமி நாசினி. அதில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதால், அப்படியே பயன்படுத்தலாம். மேலும் தண்ணீர் கலக்க வேண்டியதில்லை. இதை சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் தெளித்தால் கிருமிகள் அழியும், சென்ட் கலப்பதால் வாசனையாக இருக்கும். ஈ மொய்க்காது. வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படுவதால், தேவை அதிகம் உள்ளது. தரமான வாசனையுள்ள பினாயில்களுக்கு கிராக்கி உள்ளது. மக்களுக்கு வாடிக்கையாக சப்ளை செய்யலாம். குறைந்த லாபத்தில் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். 

Read more...

செக்குமாடாய் உழைத்தால் உயர்வி த்ருமா?


வாழ்க்கையில் உயர வேண்டுமானால் உழைப்பு மிக அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கடுமையாக உழைப்பது மட்டுமே உயர்வுக்கு உத்திரவாதமாகுமா என்றால் இல்லை என்பதே உண்மை. எவ்வளவோ பாடுபட்டு உழைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். பலர் எத்தனை காலமாக அப்படி உழைத்தாலும் துவக்கத்தில் இருந்தது போலவே பலகால உழைப்பிற்குப் பின்பும் இருக்கிறார்கள். உழைப்பு உயர்வுக்கு உத்திரவாதமென்றால் அவர்கள் எத்தனையோ உயர்ந்திருக்க வேண்டுமேஏன் அவர்கள் அவ்வாறு உயரவில்லைகாரணம் அவர்கள் செக்கு மாடாகத் தான் உழைத்திருக்கிறார்கள்.

செக்குமாடு ஒரு நாள் நடக்கும் தூரத்தைக் கணக்கிட்டால் அது மைல் கணக்கில் இருக்கும். ஆனால் அது ஒரே இடத்தில் தானே சுற்றி நடக்கிறது. அப்படித்தான் பலருடைய உழைப்பும் இருக்கிறது. இந்த செக்குமாடு உழைப்பில் சிந்தனை இல்லை. நாளுக்கு நாள் வித்தியாசம் இல்லை. புதியதாய் முயற்சிகள் இல்லை. மாற்று வழிகள் குறித்த பிரக்ஞை இல்லை. இது போன்ற உழைப்பு உங்கள் நாட்களை நகர்த்தலாம்ஆனால் வாழ்க்கையை நகர்த்தாது.

நாளுக்கு நாள் உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிது புதிதாகத் தேவைகள் உருவாகின்றன. பழைய சூழ்நிலைகள் மாறி புதிய சூழ்நிலைகள் உருவாகின்றன. உங்கள் தொழிலைத் தீர்மானிக்கும் மனிதர்கள் மாறுகிறார்கள். நேற்று வெற்றியை ஏற்படுத்திய வழிமுறைகள் இன்று அதே விளைவுகளை ஏற்படுத்தத் தவறுகின்றன. இப்படிப்பட்ட நேரத்திலும் ஒரே போல் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உழைப்பது தான் செக்குமாட்டின் உழைப்பு. இப்படி உழைத்து விட்டு உயரவில்லையே என்று வருத்தப்படுவதில் பயனில்லை.

உயர வைக்கும் உழைப்பு எப்படி இருக்க வேண்டும்?

*
செய்யும் செயல் நமது அறிவுக்கும் திறமைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

*
என்ன செய்கிறோம்ஏன் செய்கிறோம்கிடைக்கக்கூடிய பலன் என்னஅது உழைப்பிற்குப் போதுமானது தானா என்பதை எப்போதும் தெளிவாக அறிந்திருங்கள்.

*
நாம் செயல்புரிகிற விதம் கச்சிதமானது தானாமற்றவர்கள் எப்படிச் செய்கிறார்கள்நம்மை விட அவர்கள் செயல்புரிகிற விதம் சிறந்ததாக உள்ளதா என்பதை விருப்பு வெறுப்பில்லாமல் பார்க்க வேண்டும். அப்படி நம்மை விடச் சிறப்பாக இருந்தால் அதைப் பின்பற்றத் தயங்கக்கூடாது. நம்முடைய வழிமுறை என்பதற்காக தரம் குறைந்த ஒன்றை கண்ணைமூடிப் பின்பற்றும் முட்டாள்தனத்தை செய்யக்கூடாது.

*
செய்யும் செயலில் ஈடுபாடும்முழுக் கவனமும் இருக்க வேண்டும். செய்யச் செய்ய செயலில் நாளுக்கு நாள் மெருகு கூடா விட்டால்தரம் உயரா விட்டால்செயலைக் கச்சிதமாகச் செய்து முடிக்கும் நேரம் கணிசமாகக் குறையா விட்டால் நமக்குள்ள ஈடுபாட்டிலோகவனத்திலோ குறை உள்ளது என்பது பொருள்.

*
நம் தொழில் சம்பந்தமாக புதிது புதிதாக வரும் மாற்றங்களை கண்டிப்பாக கவனித்து வர வேண்டும்.

*
சரியாகச் செய்தும்முயன்றும் போதிய பலன் தராத தொழிலை விட்டுவிடத் தெரிய வேண்டும்.'செண்டிமெண்டல்காரணங்களுக்காக அதைத் தொடர்ந்து செய்வது முட்டாள்தனம்.

*
இதை விட்டால் வேறு வழியில்லைஇது தான் எனக்கு விதித்திருக்கிறதுஇதைத் தவிர வேறு எதற்கும் லாயக்கற்றவன் என்று நம்மை நாமே மட்டுப்படுத்திக் கொள்ளக் கூடாது. புதியதை முயன்று பார்க்கத் தயங்கக்கூடாது. முயன்று பார்த்தால் ஒழிய நம் உள்ளே உள்ள திறமைகளை நாம் அறிய முடியாது.

இப்படி எல்லா அம்சங்களையும் உள்ளில் கொண்டு உழைக்கும் உழைப்பே உயர்வைத் தரும்.

Read more...

கோதுமை பாயசம் நீங்களும் செய்யலாம்!




சம்பா கோதுமை - அரை கிலோ
பச்சரிசி - 100 கிராம்
தேங்காய் - அரை மூடி
வெல்லம் - 300 கிராம்
திராட்சை, முந்திரி - 50 கிராம்
பாதாம்பருப்பு - 25 கிராம் 
லவங்கம் - சிறிதளவு
பால் - கால் லிட்டர்
ஏலக்காய் - 3.


கோதுமையை மிக்சியில் ஒன்றிரண்டாக உடைத்து தண்ணீரில் ஊற வையுங்கள். பச்சரிசியையும் தனியாக ஊற வையுங்கள். தேங்காயை துருவிக் கொள்ளுங்கள். பாலை சுண்டக் காய்ச்சிக் கொள்ளுங்கள். ஊறிய பச்சரிசியோடு தேங்காய்ப்பூ, ஏலக்காய் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். பாதாம்பருப்பை கேரட் சீவி கொண்டு சீவுங்கள். 

ஊறிய கோதுமையை தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். நன்கு வெந்ததும் வெல்லம் போட்டு கிளறுங்கள். வெல்லம் கரைந்ததும், திராட்சை, முந்திரி, லவங்கத்தோடு, அரைத்து வைத்துள்ள மாவையும் கொட்டி அடிப்பிடிக்காமல் கிளறுங்கள். எல்லாம் கலந்து வாசனை பரவும் நேரத்தில் பால், பாதாம்பருப்பைப் போட்டு கொதிக்கவிட்டு இறக்குங்கள். சுவையும் சத்தும் நிறைந்த கோதுமைப் பாயசம் ரெடி!

Read more...

களிமண்ணாலும் சாதிக்கலாம்

காகிதம்களிமண் ஆகியவற்றால்நகை செய்து வரும் உஷா நடராஜன்: பெங்களூருவில்,சொந்தமாக ஒரு சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வந்தோம். அது நஷ்டம் அடைந்ததால்சென்னைக்கு வந்து விட்டோம். இங்கு புதிதாக என்ன தொழில் செய்யலாம் என யோசித்த போது தான்காகிதம் மற்றும் களிமண்ணைக் கொண்டுநகைத் தயாரிக்கும் யோசனை வந்தது."காகிதத்தில் செய்த நகையை வாங்கிஎன்ன செய்ய முடியும்எனஆரம்பத்தில் சிலர் எதிர்மறையாகப் பேசினர். ஆனாலும்அவற்றை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் இலக்கை அடைவதில்,மும்முரமாய் இருந்தேன். என் உழைப்பிற்கும்தன்னம்பிக்கைக்கும் பலன் கிடைக்க ஆரம்பித்தது.மாடலிங் செய்யும் பெண்கள் சிலர்எங்கள் நகையை வாங்கிப் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பின்நாங்கள் தயாரித்த நகைக்குநல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய வடிவங்களில்நாங்கள் காகித நகைகளை உருவாக்குவதால்பலரும் விரும்பி வாங்குகின்றனர். அதில்சில பிரபலமானவர்களும் உண்டு. ஆர்டரின் பேரிலும்நாங்கள் நகைகள் செய்து கொடுக்கிறோம்.காகிதங்களாலும்களிமண்ணினாலும் நகைகள் செய்யப்படுவதால்எடை குறைவாக இருப்பதுடன்உடுத்தும் உடைக்குஏற்ற நிறத்தில்நகைகளை அணிய முடியும் என்பது தான் இதன் சிறப்பு.காகித நகைகள், 50 ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. திருமணம் உட்படபல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளப் பலரும்இப்போது காகித நகைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விட்டனர்.தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில்பேன்சி நகைகள் மீதுபெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திஇந்த தொழிலில் இறங்கினால்வெற்றி நிச்சயம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets