வாழ்ந்த வீட்டுக்கும், வாழப்போற வீட்டுக்கும் பெருமையாம்.!
சனி, 3 நவம்பர், 2012
பெண்களின் உயரிய குணத்தை, தங்கத்தோடு ஒப்பிட்டு, "பத்தரை மாற்று பெண்' என கூறியதாலோ என்னவோ, பெண்களையும், தங்கத்தையும் பிரிக்க
முடியவில்லை. அழகுப் பெண்ணைக் கூட,
"தங்கம்' போல ஜொலிக்கிறாள் என்று
வர்ணிக்கிறோம். இன்னும் ஒரு படி மேலே போனால், குழந்தைகளை சாப்பிட வைக்கும் போது, "என் தங்கம்... என் வைரம்...' என "விலை மதிப்பில்லாமல்' கொஞ்சி சாப்பிட வைக்கிறோம். நாம் இவ்வளவு
முக்கியத்துவம் கொடுத்தாலும், ஏழை, எளியோருக்கு எட்டாத பொருளாய், விலையில் வானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தங்கம்.
வசதியில்லாதவர்கள் கூட, திருமணத்தின் போது காது, மூக்குக்காவது நகை வேணும் என மாப்பிள்ளை வீட்டார்
வெட்கமில்லாமல் பெண்வீட்டாரிடம் எதிர்பார்க்கின்றனர்.
நடுத்தர வர்க்கத்தினரின், "தங்கக்கனவு' கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருக்கிறது. அங்கத்தில் தங்கம் அணிவதன் மீதான பெண்களின் மோகம் தீரும் வரை, தங்கம் தனது விலையிலிருந்து குறையாது. என்று தீரும் தங்கத்தின் மீதான மோகம்?'
நடுத்தர வர்க்கத்தினரின், "தங்கக்கனவு' கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருக்கிறது. அங்கத்தில் தங்கம் அணிவதன் மீதான பெண்களின் மோகம் தீரும் வரை, தங்கம் தனது விலையிலிருந்து குறையாது. என்று தீரும் தங்கத்தின் மீதான மோகம்?'
புன்னகை இருந்தால் போதும், எந்நகையும் வேண்டாம்.
நகை வேண்டாம்ன்னு சொன்னாலும், கழுத்தில் செயின் அணியச் சொல்லி வீட்டில்
கட்டாயப்படுத்துகின்றனர். செயின் போடலைனா,
"இவ ஒண்ணுமில்லாதவ'ன்னு மத்தவங்க பேசுவாங்களாம்.
பெண்ணை எவ்வளவு படிக்க வச்சீங்கன்னு யாரும் கேக்கறதில்ல. எவ்வளவு நகை போட்டீங்கனு
தான் கேக்குறாங்க.
என்னவோ பெண்கள் மட்டும் தான் நகை அணிவதாக சொல்றீங்க.
ஆம்பிளைகள் கழுத்தில் ரெண்டு செயின், கையில் அகலமான பிரேஸ்லெட், பெரிய மோதிரங்கள் அணிந்து, நடமாடும் நகைக்கடையா வர்றாங்களே. அவங்களுக்கும் தான்
நகையின் மீது மோகம் இருக்கிறது.( இஸ்லாத்தில் ஆண்கள் தங்கம் அனிவது தடை செய்யப்
பட்டுள்ளது}
தங்கத்தின் மீதான மோகம் என்றுமே தீராது. நகை இருந்தால் தான்
சமுதாயத்தில் மதிக்கப்படுகின்றனர். அந்தக் காலத்தில் அழகுக்காக நகையணிந்தனர்.
தற்காலத்தில் அந்தஸ்துக்காக தங்கம் அணிய வேண்டியுள்ளது. நகையணிந்தால் தான் வாழ்ந்த
வீட்டுக்கும், வாழப்போற வீட்டுக்கும் பெருமையாம்.
ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும், கை, காது, கழுத்தில் தங்கநகை அணிந்தால்
கூடுதல் அழகாக இருப்பாள். பெண்களை அழகுபடுத்துவது தங்கம் தான். வீட்டு விசேஷம், விழாக் காலங்களில் நகையணிந்து
வந்தால் தான் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும் என்ற எழுதப் படாத சட்டம் இருப்பதால்
தங்கத்தின் மோகம்—பாடாய்ப்--படுத்துகிறது..
.
நகையணிந்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும்.
பாதுகாப்பு இருக்குமா? நகைக்காக எத்தனை பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தனை
லட்ச ரூபாய், பெண் பெயரில் "டிபாசிட்' செய்கிறோம் என்று சொல்ல வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே
பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.