பட்டைய கிளப்பும் பினாயில் தயாரிப்பு!
வியாழன், 22 நவம்பர், 2012
வீடுகள், தொழிற்சாலைகள் என பினாயில் பயன்பாடு
இல்லாத இடமே கிடையாது. இவற்றை தரமான முறையில் தயாரித்து விற்றால் நிரந்தர வாடிக்கையாளர்களை பெற
முடியும். அதன் மூலம் வீட்டில் இருந்தபடியே லாபம் சம்பாதிக்க முடியும் என்கிறார்
உடுமலை போடிபட்டியை சேர்ந்த இந்திராணி.
அவர் கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன புதிதில் கணவரின் வருமானம் போதவில்லை.
பினாயில் தயாரிப்பது குறித்து, இங்குள்ள ஆசிரியர் ஒருவர், பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்தார். அதைக் கற்றுக்கொண்டு, பினாயில் தயாரிப்பை தொழிலாக செய்ய தொடங்கினேன். அப்போது ரூ.100 செலவில் பினாயில் லிக்விட், சென்ட் வாங்கி வீட்டில் உள்ள பாத்திரங்களை கொண்டு பினாயில் தயாரித்தேன். காலி பாட்டில்களில் ஊற்றி, கடைகளுக்கு விற்றேன். அன்றாட செலவுக்கு பணம் கிடைத்தது.
பின்னர், தொழிலை சிறிது சிறிதாக விரிவு படுத்தினேன். கணவர் உதவிகரமாக இருந்தார். அவர் பினாயில் பாட்டில் களை சைக்கிளில் எடுத்து சென்று உடுமலையில் உள்ள வீடுகள், மருத்துவமனை கள், ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு விற்றார். பினாயில் லிக்விட் 3 தரத்தில் உள்ளது. முதல் தரத்தை கொண்டு பினாயில் தயாரித்தால் பல மாதங்களுக்கு நீர்த்துப்போகாமலும், காலாவதியாகாமலும் இருக்கும். முதல் தரத்தில் தயாரித்ததால் நிரந்தர வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள்.
8 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள நேசக்கரங்கள் அமைப்பு மூலம் ஜான்சிராணி மகளிர் சுய உதவி குழு உருவாக்கி, நிதியுதவி பெற்று, உற்பத்தி அளவை அதிகரித்தேன். மகளிர் குழுவை சேர்ந்தவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும், கோழிப்பண்ணைகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சப்ளை செய்கிறேன். வாடிக்கையாளர்கள் விரும்பும் சென்ட்களை பயன்படுத்தி, பிரத்யேகமாக பினாயில் தயாரித்து கொடுத்ததால், மேலும் மேலும் வாடிக்கையாளர்களும் கிடைத்தனர். வாடிக்கையாளர்களை பெறு வதற்காக மேற்கொள்ளும் உற்பத்தி தரத்தை, தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அதுதான் தொழி லுக்கு நிரந்தர வெற்றியை கொடுக்கும்.
புதிய தொழில் முனைவோர் துவக்கத்தில் குறைந்த அளவில் உற்பத்தி செய்து விற்று, படிப்படியாக உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். பெண்கள் வீட்டிலேயே பினாயில் தயாரிக்கலாம். இதற்கு பயன்படுத்தும் கெமிக்கல் பின்விளைவுகளை ஏற்படுத்தாது. குடும்பத்தினர் உதவியுடன் வீடுகள், மருத்துவமனைகள், விடுதிகள், ஓட்டல்களுக்கு நேரடியாக சப்ளை செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.
முதலீடு
20 லிட்டர் வாளி 2 (ரூ.400), கப் 2 (ரூ.60), புனல் 2 (ரூ.30). முதலீட்டு செலவுக்கு ரூ.500 போதும். தயாரிப்பு பொருட்கள் : பினாயில் பேஸ்ட், சென்ட் (மல்லிகை, தாமரை, தாழம்பூ, மரிக்கொழுந்து உள்ளிட்ட வெவ்வேறு மணங்களில் உள்ளன) கெமிக்கல் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பினாயில் தயாரிக்க தனி இடம் தேவை யில்லை. மூலப் பொருட் களையும், தயாரித்த பினாயிலையும் வைக்க வீட்டில் உள்ள ஒரு அலமாரி போது மானது. பினாயில் தயாரிக்கும் போதும். வெளி யேறும் நெடி அதிகமாக இருக் கும் என்பதால், காற்றோட்டமுள்ள வராண்டாவில் தயாரிப்பது நல்லது. நெடி காற்றில் பறந்துவிடும்.
எப்படி தயாரிப்பது?
பினாயில் லிக்விட் ஒரு லிட்டர், சென்ட் 150 மிலி, நல்ல தண்ணீர் 30 லிட்டர். 20 லிட்டர் கொள்ளளவு உள்ள 2 வாளியை அருகருகில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒன்றில் தண்ணீரை நிரப்ப வேண்டும். மற்றொன்று காலியாக இருக்க வேண்டும். ஒரு கப் எடுத்துக் கொண்டு, அதில் 30 முதல் 35 மிலி பினாயில் லிக்விட்டை ஊற்ற வேண்டும். மற்றொரு கப்பில் தண்ணீர் எடுத்து இரண்டையும் கலந்து நன்றாக ஆற்ற வேண்டும்.
இந்த கலவையை வாளியில் ஊற்ற வேண்டும். இப்படியே செய்து பினாயில் கலவையை வாளியில் ஊற்றி வர வேண்டும். வாளியில் ஊற்றிய பிறகும் நன்றாக கலக்கி விட வேண்டும். அப்போதுதான் லிக்விடும், தண்ணீரும் கலக்கும். இடையில் மக்கில் 15 மிலி சென்ட் எடுத்து அதில் தண்ணீர் கலந்து நன்றாக கலக்கி வாளியில் ஊற்ற வேண்டும். இவ்வாறு ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மில்லி சென்ட், 30 லிட்டர் தண்ணீர் முழுவதையும் கலக்க வேண்டும்.
பிறகு தயாரான பினாயிலை கப்பில் எடுத்து புனல் வழியாக காலி பாட்டிலில் ஊற்ற வேண்டும். பினாயில் லிக்விட், தண்ணீரோடு முழுமையாக கலக்காவிட்டால் திரிந்து விடும். திரியாமல் நன்று கலப்பதற்காக தான் மாறி, மாறி ஆற்ற வேண்டியது முக்கியம்.
உற்பத்தி செலவு
ஒரு லிட்டர் பினாயில் லிக்விட், 150 மிலி சென்ட் ஆகியவற்றுடன் 30 லிட்டர் தண்ணீர் கலந்தால் 31 லிட்டர் பினாயில் கிடைக்கும். இதை தயாரிக்க ஒரு மணி நேரம் ஆகும். ஒரு நாளில் 5 லிட்டர் பினாயில் லிக்விட், 750 மில்லி சென்ட் மூலம் 155 லிட்டர் பினாயில் வீதம், மாதத்தில் 25 நாளில் 3875 லிட்டர் பினாயில் தயாரிக்கலாம்.
ஒரு லிட்டர் பினாயில் லிக்விட் ரூ.200, சென்ட் ஒரு லிட்டர் ரூ.1300. மாதம் 25 நாள் உற்பத்திக்கு 125 லிட்டர் பினாயில் லிக்விட் தேவை. ஒரு லிட்டர் ரூ.200 வீதம் ரூ.25 ஆயிரம் தேவை. சென்ட் 18.750 லிட்டர் தேவை. ஒரு லிட்டர் ரூ.1300 வீதம் ரூ.24,375 தேவை. உற்பத்தி மற்றும் டெலிவரி கூலி ஒரு நாளைக்கு ரூ.300 வீதம் 25 நாள் கூலி ரூ.7,500, மினரல் வாட்டர் காலி பாட்டில்கள் தலா 70 காசு வீதம் 3875 காலி பாட்டில்கள் ரூ.2,700. இவ்வாறு ஒரு மாத உற்பத்தி செலவுக்கு ரூ.53,375 தேவை.
மாதம் ரூ.24 ஆயிரம்
ஒரு லிட்டர் பாட்டில் பினாயில் லிட்டர் தயாரிக்க ரூ.13.75 ஆகிறது. அது ரூ.20க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாட்டிலிலும், 5 லிட்டர், 10 லிட்டர் கேன்களிலும் விற்கப்படுகிறது. கேனுடன் 5 லிட்டர் பினாயில் ரூ.130க்கும், 10 லிட்டர் பினாயில் ரூ.250க்கும் விற்கப்படுகிறது. மாதம் 3875 லிட்டர் விற்பதன் மூலம் ரூ.24 ஆயிரம் லாபம் கிடைக்கும்.
தேவை அதிகம்
பினாயில் லிக்விட் கிருமி நாசினி. அதில் தண்ணீர் கலக்கப்பட்டுள்ளதால், அப்படியே பயன்படுத்தலாம். மேலும் தண்ணீர் கலக்க வேண்டியதில்லை. இதை சுத்தம் செய்யப்பட்ட இடங்களில் தெளித்தால் கிருமிகள் அழியும், சென்ட் கலப்பதால் வாசனையாக இருக்கும். ஈ மொய்க்காது. வீடுகள், ஓட்டல்கள், விடுதிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அன்றாடம் பயன்படுத்தப்படுவதால், தேவை அதிகம் உள்ளது. தரமான வாசனையுள்ள பினாயில்களுக்கு கிராக்கி உள்ளது. மக்களுக்கு வாடிக்கையாக சப்ளை செய்யலாம். குறைந்த லாபத்தில் கடைகளுக்கும் சப்ளை செய்யலாம்.