களிமண்ணாலும் சாதிக்கலாம்
வியாழன், 22 நவம்பர், 2012
காகிதம், களிமண் ஆகியவற்றால், நகை செய்து வரும் உஷா நடராஜன்: பெங்களூருவில்,சொந்தமாக ஒரு சாப்ட்வேர்
கம்பெனி நடத்தி வந்தோம். அது நஷ்டம் அடைந்ததால், சென்னைக்கு வந்து விட்டோம்.
இங்கு புதிதாக என்ன தொழில் செய்யலாம் என யோசித்த போது தான், காகிதம் மற்றும் களிமண்ணைக்
கொண்டு, நகைத் தயாரிக்கும் யோசனை வந்தது."காகிதத்தில் செய்த நகையை
வாங்கி, என்ன செய்ய முடியும்' என, ஆரம்பத்தில் சிலர் எதிர்மறையாகப் பேசினர். ஆனாலும், அவற்றை நான் பெரிதாக எடுத்துக்
கொள்ளவில்லை. என் இலக்கை அடைவதில்,மும்முரமாய் இருந்தேன். என் உழைப்பிற்கும், தன்னம்பிக்கைக்கும் பலன்
கிடைக்க ஆரம்பித்தது.மாடலிங் செய்யும் பெண்கள் சிலர், எங்கள் நகையை வாங்கிப்
பயன்படுத்த ஆரம்பித்தனர். அதன் பின், நாங்கள் தயாரித்த நகைக்கு, நல்ல வரவேற்பு கிடைத்தது. நிறைய வடிவங்களில், நாங்கள் காகித நகைகளை உருவாக்குவதால், பலரும் விரும்பி
வாங்குகின்றனர். அதில், சில பிரபலமானவர்களும் உண்டு. ஆர்டரின் பேரிலும், நாங்கள் நகைகள் செய்து
கொடுக்கிறோம்.காகிதங்களாலும், களிமண்ணினாலும் நகைகள் செய்யப்படுவதால், எடை குறைவாக இருப்பதுடன், உடுத்தும் உடைக்கு, ஏற்ற நிறத்தில், நகைகளை அணிய முடியும் என்பது
தான் இதன் சிறப்பு.காகித நகைகள், 50 ரூபாய் முதல், 45 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. திருமணம் உட்பட, பல நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்ளப் பலரும், இப்போது காகித நகைகளை விரும்பி அணிய ஆரம்பித்து விட்டனர்.தங்கம்
விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், பேன்சி நகைகள் மீது, பெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, இந்த தொழிலில் இறங்கினால், வெற்றி நிச்சயம்.