அணுஅணுவாய் வதைத்து சாகடிப்பது என்பது இதுதான்
வியாழன், 15 நவம்பர், 2012
காய்ச்சல் முதல் கேன்சர் வரை வரும் ஆபத்து உண்டு. தோல் வியாதிகளும் வரும்.
தலையில் 100 ரெம் வரை கதிர்வீச்சு ஏற்பட்டால், அதனால் தலைமுடி 2 வாரத்தில் கொட்டி விடும்.
வாந்தி, பேதி ஏற்படும். அதனால், வேறு கோளாறுகளும் ஏற்படும்.
ரத்தத்தில் கலந்து விட்டால், அதில் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். அதாவது
ரத்தம் கெட்டு விடும்.
ரத்தக்கொதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
உடலில் மைய நரம்பு மண்டலம் மிக முக்கியமானது. அதில் கதிர்வீச்சு பாய்ந்தால், மூளையில் இருந்து சிறுநீரகம் வரை பாதிக்க
வாய்ப்புண்டு. இதில் 2 ஆயிரம் ரெம் வரை
வீச்சு ஏற்படுமாம்.
குடலையும் கதிர்வீச்சு பாதித்தால் ரத்தப்போக்கு அதிகரிக்கும். கடைசியில் மரணம்
தானாம்.
மில்லிரெம் என்றால்
கதிர்வீச்சை கணக்கிடுவது மில்லிரெம் என்று அளவையால் கணக்கிடப்படுகிறது. மனித
உடலில் சாதாரணமாகவே ரசாயனம், வெப்பம் போன்றவற்றால் 300 மில்லிரெம் கதிர்வீச்சு உள்ளது. ஆனால், அணுக்கதிர் வீச்சு , உடலில் பரவினால் அதன் ஆபத்துக்கு அளவே இல்லை.
இதுவரை 3 விபரீதம்
கடந்த 1969ல் சுவிட்சர்லாந்தில் லுசென்ஸ் அணுஉலை,
1979ல் அமெரிக்காவில்
த்ரீமைல் தீவு அணுஉலை, 1986ல் உக்ரைனில் செர்னோபில் உலை ஆகியவற்றில்
இப்படி விபத்து ஏற்பட்டுள்ளது. பல லட்சம் பேர் இன்னமும் கூட ஊனமாகவும், வியாதிகளால் பாதிக்கப்பட்டும் உள்ளனர் என்பது
தான் உண்மை. இப்போது இந்த வரிசையில் ஜப்பான் அணுஉலைகள்.
வீட்டுக்குள் முடக்கம்
கதிர்வீச்சு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிடும்.
அதைத்தான் ஜப்பான் அரசு, மக்களுக்கு விடுத்துள்ளது. வீட்டுக்குள் முடங்க
வேண்டும்; வெளியில் வரகூடாது; ஜன்னல், கதவுகளை காற்றுபுகாவண்ணம் இறுக்கமாக மூட
வேண்டும். துணிகளை கூட வெளியில் காயப்போடக்கூடாது என்றெல்லாம் அதிரடி கட்டளைகளை
போட்டுள்ளது. மக்கள் இப்போது சோறு, தண்ணீர் சாப்பிடக்கூட பயந்து
கதிகலங்கிப்போயுள்ளனர்.
மெல்ட் டவுண்
அணு உலையில், யுரேனியம் கம்பிகள் வரிசையாக இருக்கும். இவை
மூலம் அணுக்கள் பிளக்கப்பட்டு, அணு மின்சாரமாக மாற்றப்படும்; அணுகுண்டாக தயாரிக்கப்படும். இது மிகுந்த
வெப்பசக்தி கொண்டது என்பதால் எப்போதும், குளிர்நிலையில் வைத்திருக்க தண்ணீர் போன்ற
திரவம் இருக்கும். இது குறைந்தால் யுரேனிய கம்பிகள் பாதரசம் போல உருகுவது
மட்டுமல்ல, 3200 சென்டிகிரேட் கொடூர வெப்பத்தை பரப்பும். இதனால் தான் உலை வெடிப்பு
ஏற்படுகிறது. அணுக்கதிர் வீச்சு, காற்று, தண்ணீர் மூலம் பரவி ஆபத்து தருகிறது.
வாழ்நாளில் 1.2 நிமிடம் போச்சு
உடலில் எந்த வகையிலாவது கதிர்வீச்சு நுழைகிறது. டிவி பார்ப்பதில் இருந்து
சிகரெட் பிடிப்பதில் வரை சொல்லலாம். ஒரு மில்லிரெம் கதிர்வீச்சு உடலில் சேர்ந்தால்
வாழ்நாளில் 1.2 நிமிடம் குறைகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
= கொழுப்பு உணவாக சாப்பிட்டு எடை கூடிப்போவது.
= அடிக்கடி சிகரெட் புகையை இழுத்து விடுவது
= மணிக்கணக்கில் டிவி பார்ப்பது
= பிரிஜ், ஏசி, மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துவது
= காற்று மாசு உள்ள இடத்தில் வசிப்பது
= அடிக்கடி எக்ஸ்ரே, ரேடியேஷன் தெரபி எடுப்பது
போன்றவை
மில்லிரெம் கதிர்வீச்சு உடலில் ஏற காரணங்களாக சொல்லப்படுகின்றன.
இதிலும்...
ரேடியேஷன் என்பது கதீர்வீச்சு. சூரியஒளி, மொபைல் போன், டிவி, ஏசி, பிரிஜ் என்று எதில் இருந்தும் பரவும்
கதீர்வீச்சு ஓரளவுக்கு மேல் வியாதியை தரக்கூடியது தான். அணுக்கதிர் வீச்சு, மிகவும் ஆபத்தானது. இது பட்ட பயிர்கள்
பொசுங்கும்; மரங்கள் பட்டுப்போகும்; விலங்குகள், பிராணிகள் முதல் மனிதர்கள் வரை
பாதிக்கப்படுவர். சுவாசப்பிரச்னை முதல் கேன்சர் வரை வரும். மொத்தத்தில் அணுஅணுவாய்
வதைத்து சாகடிக்கும்.