உங்கள் வருகைக்கு நன்றி

ரொம்பக் கஷ்டப் பட்டுப் பேசிப் புரிய வச்சுதான், என் பிசினஸை வளர்த்தேன்.

சனி, 10 நவம்பர், 2012


பட்டுக்கும் பெண்களுக்குமான பந்தம்தலைமுறைகள் தாண்டிஅன்று முதல் இன்று வரை தொடர்கிற பிணைப்பு! பட்டு விஷயத்தில் எல்லா பெண்களுக்கும் ஏதோ ஒரு சென்டிமென்ட் நிச்சயம் இருக்கும். முதல் பட்டுப்புடவைகூரைப்புடவைசீமந்தப் புடவை,ப்ரியமான யாரோ பரிசளித்த புடவை... இப்படி ஒவ்வொருவரின் ஒவ்வொரு பட்டுப்புடவையின் பின்னணியிலும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். பழசானால் தூக்கிப் போடுகிற மற்ற புடவைகளைப் போல பட்டை அத்தனை சுலபத்தில் ஓரங்கட்ட யாருக்கும் மனசு வராது. உடுத்தவும் முடியாமல்ஒதுக்கவும் முடியாமல் வெறும் நினைவுச் சின்னங்களாக மூலையில் உறங்கும் அத்தகைய சேலைகளை என்னதான் செய்வது?


‘‘பாலீஷ் போட்டால் புதுப்புடவை மாதிரிப் பளபளக்கும்’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த கனகவல்லி. 12 வருடங்களுக்கும் மேலாக பட்டுப்புடவை பாலீஷ் பிசினஸில் கொடிகட்டிப் பறப்பவர்! ‘‘நான் பிசினஸ் ஆரம்பிச்ச புதுசுலபட்டுப்புடவைக்கு பாலீஷ் போட்டுப் புதுசாக்கலாம்தொய்வடைஞ்ச புடவைகளை சரியாக்கலாம்னு சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க. பட்டாச்சே... வீணாக்கிடுவாங்களோதூக்கிட்டு ஓடிருவாங்களோன்னு பயந்து புடவையைக் கொடுக்க மாட்டாங்க. ரொம்பக் கஷ்டப் பட்டுப் பேசிப் புரிய வச்சுதான்என் பிசினஸை வளர்த்தேன். இன்னிக்கு வெளியூர்லருந்தெல்லாம் பாலீஷுக்கு புடவைகளை ஆர்டர் எடுக்கற அளவுக்கு இந்த பிசினஸ் என்னை பிசியா வச்சிருக்கு” என்கிற கனகவல்லிபட்டுப்புடவைகளுக்கு பாலீஷ் போடுவது மட்டுமின்றிநைந்து போன பார்டர்களை மாற்றித் தருவதுகறைகளை நீக்குவதுகிழிந்த பகுதிகளை சரி செய்வது போன்றவற்றுடன்,  காட்டன் புடவைகளுக்கு கஞ்சி போட்டுரோல் பிரஸ்ஸும் செய்து தருகிறார்.

இது இப்படித்தான்!

மூலப் பொருள்கள்
இரும்புக் கம்பிகள் 70 இன்ச் நீளத்தில் 6, 72 இன்ச் அகலத்தில் 6, புடவைக்குள் செருகும் மெல்லிய கம்பிகள் 40, புடவை மடிக்கும் கம்பி 3, ரோலர் கட்டைகள் வட்ட வடிவில் 5,சதுரத்தில் 5, பாலீஷ் பசைகாட்டன் நூல்வெள்ளை அல்லது பிளெயின் புடவை,
கிளீனிங் லிக்விட்.

எங்கே வாங்கலாம்?
கம்பிகளை வெல்டிங் கடைகளிலும்கட்டைகளை தச்சர்களிடம் ஆர்டர் கொடுத்தும்மற்ற பொருள்களை பட்டு நெசவுக்குத் தேவையான பொருள்கள் விற்பனை செய்கிற கடைகளிலும் வாங்கலாம். காஞ்சிபுரம்ஆரணிகும்பகோணம் பகுதிகளில் சுலபமாகக் கிடைக்கும். ஏற்கனவே பட்டு பாலீஷ் துறையில் உள்ளவர்களிடம் சொல்லி வைத்தும்,மொத்த விலையில் வாங்கலாம்.

முதலீடு
கம்பிகள் மற்றும் ரோலர்களுக்கு சேர்த்து 25 ஆயிரம். பாலீஷ் பசைஒரு கிலோ 100 ரூபாய். ஒரு புடவைக்கு 20 கிராம் தேவை. கிளினீங் லிக்விட் 350 ரூபாய்.

இட வசதி?
10க்கு 10 அளவுள்ள அறை போதும். அது தவிரபாலீஷ் செய்த புடவையை உலர்த்தும் அளவுக்கு மொட்டை மாடியோபால்கனியோ அவசியம்.எந்தெந்தப் புடவைகளுக்கு பாலீஷ் செய்யலாம்பட்டுமைசூர் சில்க்டிசைனர் சேலைகளுக்கு பாலீஷ் செய்துபுதுப் பொலிவு பெறச் செய்யலாம். காட்டன் சேலைகளாக இருந்தால்கஞ்சி போட்டுரோல் பிரஸ் செய்து கொடுக்கலாம். ரோல் பிரஸ் செய்வதன் மூலம்காட்டன் சேலைகளில்இஸ்திரி செய்ததைவிடமூன்று மடங்கு மெருகேறும். சிறிய சுருக்கம் கூட இருக்காது. 25வருடங்கள் ஆன பட்டுப்புடவைகளுக்குக் கூட பாலீஷ் போட்டுபுதிது போல மாற்றலாம். புடவை நைந்து போகாமல்நல்ல நிலையில் இருக்க வேண்டியது மட்டும் அவசியம்.

மாத வருமானம்?
ஒரு பட்டுப்புடவையை உலர் சலவை (ட்ரை வாஷ்) செய்துபாலீஷ் போட்டுக் கொடுக்க புடவையைப் பொறுத்து 150 ரூபாய் முதல் 450 ரூபாய் வரை வாங்கலாம். சிலர் புடவையைத் தண்ணீரில் நனைத்துத் துவைத்துக் கொடுக்கச் சொல்லிக் கேட்பதுண்டு. அதற்குக் கூடுதலாக 50 ரூபாய். நமக்கு ஒரு புடவைக்கான செலவு வெறும் 30 ரூபாய். காட்டன் சேலைக்கு கஞ்சி போட்டுரோல் பிரெஸ் செய்து கொடுக்க 35 ரூபாய் வாங்கலாம். நமக்கான அடக்க விலை 25 ரூபாய். ஒரு நாளைக்கு 10 புடவைகளுக்கு பாலீஷ் போட முடியும். அப்படிப் பார்த்தால் மாதம் 20
ஆயிரம் சம்பாதிக்கலாம்.

மார்க்கெட்டிங்?
பெண்கள் அதிகம் வேலை பார்க்கிற அரசாங்க அலுவலகங்கள்வங்கிகள்கல்லூரிகள் என எல்லா இடங்களிலும் நேரில் சென்று பேசிஆர்டர் பிடிக்கலாம். சேலையை வாங்கிச் செல்லவும்பாலீஷ் போட்ட பிறகு திரும்பக் கொண்டு சேர்க்கவும் ஒரு ஆளை வைத்திருப்பது நலம்.

பயிற்சி?
செயல்முறை விளக்கங்கள்மார்க்கெட்டிங் உத்திகள் என எல்லாவற்றுக்கும் சேர்த்து நாள் பயிற்சிக்குக் கட்டணம் ரூ.ஆயிரம்.

புதுசுக்கும் போடலாம் பாலீஷ்!
பழைய பட்டுப்புடவையை புதுசு போலாக்க பாலீஷ் செய்வது ஒரு பக்கமிருக்கபுத்தம் புதிய புடவைகளுக்கும் பாலீஷ் போடலாம் என்கிறார் இந்தத் துறையில் 45 வருட அனுபவமுள்ள,கும்பகோணத்தைச் சேர்ந்த சாந்தாராம். ‘‘பட்டுப்புடவை வியாபாரம் பண்றவங்கமொத்தமா பதினஞ்சுஇருபது புடவைகளைக் கொண்டு போவாங்க. வாடிக்கையாளர்களுக்குப் பிரிச்சுக் காட்டிதிரும்ப மடிச்சு வைக்கிறதுலசில புடவைகள் அழுக்காகிகசங்கிப் போகும். அந்த மாதிரிப் புடவைகளுக்கும் பாலீஷ் போடலாம். அதனால புடவையோட தரத்துக்கு எந்த பாதிப்பும் வராது. கூடுதல் பளபளப்புதான் கிடைக்கும்” என்கிறவர்பட்டுப் பராமரிப்புக்கான டிப்ஸ்களையும் சொல்கிறார்.  

 பட்டுப்புடவையின் உடல் பகுதியை இஸ்திரி பண்ணக் கூடாது. ஜரிகைப் பகுதியை மட்டும்தான் செய்ய வேண்டும்.
பட்டுப்புடவையை தாராளமாகத் துவைக்கலாம். புடவை ஒரு கலரிலும்பார்டர் ஒரு கலரிலும் இருந்தால்முந்தானையையும்பார்டரையும் ஒரு கயிற்றால் கட்டிதண்ணீரில் படாமல்உடல் பகுதியை மட்டும் பூந்திக்கொட்டை ஊற வைத்த தண்ணீரில் நனைத்துத் துவைக்கலாம். பிறகு அதைக் காய வைத்துஅடுத்து பார்டர்முந்தானைப் பகுதிகளை வேறு தண்ணீரில் தனியே துவைத்து உலர்த்த
வேண்டும். 
பட்டைத் துவைக்காமலோபாலீஷ் போடாமலோ அப்படியே உடுத்தினால்வியர்வை பட்டுஅதிலுள்ள உப்புஜரிகைப் பகுதியை அரித்து விடும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets