மதுவினால் பிளாட்பாரத்திற்கு வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி!
புதன், 14 நவம்பர், 2012
இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான்,
“சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.” அல்குர் ஆன்-2:219
புதுவையில்
பிளாட்பாரத்தில் வசிக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியை தேடி அவரது தாய் நேற்று
கடற்கரை சாலைக்கு வந்தார். மகனை பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். புதுவை கடற்கரை
சாலை பிளாட்பாரத்தில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சில நாட்களாக நாடோடி போல வசித்து
வருகிறார். ஆனால் கையில் பீர் பாட்டில், சிகரெட் சகிதமாக
இருந்ததால் அவரை நெருங்க பயந்தனர். ஆனால் பார்ப்பதற்கு படித்தவர்போல இருந்தார்.
அவரிடம்
விசாரித்தபோது, ‘நான் டெல்லியில் இருந்து வருகிறேன், எனது பெயர் சக்கரவர்த்தி. சொந்த ஊர் கொல்கத்தா. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி‘ என ஆங்கிலத்தில் பதில் அளித்தார். ஏன் இங்கு இருக்கிறீர்கள்? என்று கேட்டபோது, எனக்கு அமைதியும், நிம்மதியும் தேவைப்பட்டதால் இங்கு வந்தேன், என்றார். எனக்கு
சாப்பாடு தேவையில்லை, மதுவும், சிகரெட்டும்
இருந்தால் போதும். இனிமேல் டெல்லி செல்ல மாட்டேன் என்றார். ஐபிஎஸ் அதிகாரி
பிளாட்பாரத்தில் வசித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஐபிஎஸ் அதிகாரியை
தேடி ஒரு பெண்மணி வந்தார். விசாரணையில் அவர், சக்கரவர்த்தியின்
தாய் அர்ச்சனா என தெரியவந்தது. அவர் தினகரன் நிருபரிடம் கூறும்போது:
மேற்கு வங்க
மாநிலம் கொல்கத்தாவில் பாரம்பரிய மிக்க குடும்பமாக வாழ்ந்து வந்தோம். பிறகு
டெல்லிக்கு சென்றோம். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் டாக்டர்களாகவும்,இன்ஜினியர்களாகவும்
பெரிய பதவிகளில் இருக்கின்றனர். என்னுடைய மகன் சக்கரவர்த்தி டெல்லி ஐஏஎஸ் தேசிய
அகாடமியில் படித்து, ஐபிஎஸ்&ஆக தேர்ச்சி
பெற்றார். நிறைய அவார்டு வாங்கி உள்ளார்.
பல்வேறு இடங்களில்
பணியாற்றிய இவர், குடும்ப பிரச்னையில் குடிக்கு அடிமையாகி பதவியை
விட்டு விலகினார். சிகரெட், மதுகுடிப்பதை கண்டித்ததால் எங்களை விட்டு
பிரிந்து வாழ்கிறார். புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்த என் மகன் தற்போது
பிளாட்பாரத்தில் வசிப்பது வேதனை அளிக்கிறது. போலீஸ் உயரதிகாரிகளை சந்தித்துவிட்டு
என் மகனை அழைத்து செல்வேன்.
எனக்கு தெரிந்த
டாக்டர் ஜிப்மரில் பணிபுரிகிறார். எனது மகனை அவரிடம் காண்பித்து சிகிச்சை அளிக்க
முடிவு செய்துள்ளேன். சக்கரவர்த்திக்கு பிடித்த புதுவையில் சில காலம் தங்க முடிவு
செய்துள்ளேன். அதற்காக எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்
ஸி8,000வாடகைக்கு வீடு எடுத்துள்ளோம். இவ்வாறு
அர்ச்சனா கூறினார்.