உங்கள் வருகைக்கு நன்றி

நாஊறும் மீன் ஊறுகாய்!'

திங்கள், 12 நவம்பர், 2012


கடல் உயிரினங்களில் இருந்துஊறுகாய்நூடுல்ஸ் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதூத்துக்குடி மாவட்ட மகளிர் சுய உதவிக் குழு செயலர் தொம்மை இன்னாசி: நாங்கள் மீன்பிடி தொழில் சார்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். எனவேநல்ல மீன்களை கண்டுபிடித்துவிலை குறைத்து வாங்குவோம். வாங்கிய மீன்களை சுத்தம் செய்துதண்ணீரில் வேக வைத்து விடுவோம். மீனின் தலை மற்றும் முட்களை அகற்றிவிட்டுசதைப் பகுதிகளை மட்டும்ஊறுகாய்க்கு பயன்படுத்துவோம்.மீன் ஊறுகாய்க்குமுக்கியமாக தேவைப்படும் பொருள்இஞ்சியும்பூண்டும் தான். இவற்றுடன்காய்ந்த மிளகாய் வத்தல் பொடிமஞ்சள் பொடி மற்றும் கறி மசாலா பொடிகளையும் சேர்த்துஊறுகாய் செய்கிறோம்.இதே போலத் தான்இறால் ஊறுகாய்கணவாய் ஊறுகாய்நண்டு ஊறுகாய் தயாரிக்கிறோம். மீன் ஊறுகாய் செய்வதற்கு தயார் செய்த பொருட்களைஅப்படியே நூடுல்ஸ் செய்வதற்கும் பயன்படுத்துகிறோம். மீன் ஊறுகாய் கலவையை,இடியாப்பம் செய்யும் குழலில் வைத்துப் பிழிந்து எடுத்தால்அது நூடுல்ஸ்.தற்போதுநாள் ஒன்றிற்கு, 50 கிலோ வரை ஊறுகாய் தயாரிக்கிறோம். இந்த அளவைவிரைவில் உயர்த்தி விடுவோம். எங்கள் குழுவில் உள்ள, 20 பேருக்கும்மாதம், 6,000 ரூபாய்க்கு குறையாமல்வருமானம் கிடைக்கிறது. தூத்துக்குடிதிருநெல்வேலிநாகர்கோவில் மற்றும் சென்னையில் உள்ள சில சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும்சப்ளை செய்கிறோம். இப்போதுசென்னையில் இருந்துபுதிய ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன.சிங்கப்பூர்மலேசியாஆஸ்திரேலியாஇலங்கை ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யசில தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடியிருக்கிறோம். ஒப்புதல் கிடைத்து விட்டால்வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யதயாராக இருக்கிறோம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets