நீங்க கம்ப்யூட்டர் புலியாக இருக்கலாம். ஆனாலும் இதையும் கொஞ்சம் படிங்க!
சனி, 10 நவம்பர், 2012
1.
இரண்டு கிளிக்: விண்டோஸ் சிஸ்டத்தில் இருமுறை
கிளிக் செய்வது, பைல் ஒன்றைத் திறப்பதற்காக. ஆனால் இதனையே, இணைய தளம் ஒன்றில், இன்னொரு தளத்திற்கான லிங்க்
தொடர்பின் மேல் கிளிக் செய்வதற்கோ, டயலாக் பாக்ஸில் கிளிக் செய்வதற்கோ பயன்படுத்தக் கூடாது. இதனால்
தளம் இரண்டு டேப்களில் திறக்கப்படும்; அல்லது உங்களுடைய ஆப்ஷன் இரண்டு முறை அனுப்பப்படும். சிலர், படிவங்களில் தகவல்களை
நிரப்பிவிட்டு, இறுதியில் அதனை அனுப்பும் Submit பட்டனில்
இரண்டு முறை கிளிக் செய்வார்கள். இது இரண்டு விண்ணப்பங்களை அனுப்பிவிடும். எனவே
எந்த இடத்தில் இரண்டு முறை கிளிக் செய்திட வேண்டுமோ,
அங்கு மட்டுமே இருமுறை கிளிக் செய்திட வேண்டும்.
2.சரியான சாய்வுக் கோடு (Slashbackward and forward):கம்ப்யூட்டர் குறியீடுகளில் முன் மற்றும் பின் சாய்வுக் கோடு முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றை மாற்றிப் பயன்படுத்துவது, விரும்பும் செயல் பாட்டி னைத் தராது. \ என்பது பின் சாய்வுக் கோடு(backward). /என்பது முன் சாய்வுக் கோடு (forward). விண்டோஸ் இயக்கத்தில் உள்ள கோப்புகள் உள்ள இடங்களைச் சுட்டிக் காட்டி வழிகளை அமைக்கையில் பின் சாய்வுக் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன. எ.கா.C:\Program Files\Whatever . . இணைய முகவரிகளில் முன் சாய்வுக் கோடுகள் அமைக்கப்படுகின்றன. எ.கா.http://www.dinamalar.com
3. பிழைச் செய்தி பதிவு: சிஸ்டம் இயங்குகையில் பல வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்பட்டு, இயக்கம் முடங்கிப் போகும். இந்த பிழைச் செய்திகளை அலட்சியப்படுத்தாமல் அவற்றை எப்படியாவது குறித்து வைக்க வேண்டும். அதனை செலக்ட் செய்து டெக்ஸ்ட் பைல் ஒன்றில் ஒட்டி வைக்கலாம். தேர்ந்தெடுக்க இயலாவிட்டால், அப்படியே இமேஜ் பைலாக சேவ் செய்து, பின்னர் அதனைப் பார்த்து மெசேஜ் என்னவென்று டைப் செய்து வைக்கலாம். இந்த பிழைக்கான தீர்வு காண முயற்சிக்கையில், சாப்ட்வேர் நிறுவனத்திற்கு இதனை அனுப்பிக் கேட்கலாம். அல்லது கூகுள் தேடலில் இதனை பேஸ்ட் செய்தால், இது போல பிரச்னை ஏற்பட்டவர்கள், அப்போது என்ன செய்தார்கள் என்ற விளக்கத்தினைப் பெறலாம்.
4. அழிந்த பைல் மீட்பு: கோப்பு ஒன்றை, கம்ப்யூட்டரில் இருந்து அழிக்கும் போது, அது அப்படியே அழிக்கப்படுவதில்லை. இந்த பைல் இங்கிருக்கிறது என்று கம்ப்யூட்டரின் சிபியுவிற்குச் சொல்லப்படும் இன்டெக்ஸ் குறியீடுதான் அழிக்கப்படுகிறது. இது அந்த பைல் இருக்கும் ஹார்ட் டிஸ்க் இடத்தைப் பின்னர் வேண்டும்போது மற்ற பைல்களுக்குப் பயன்படுத்தலாம் என்ற செய்தியைக் கம்ப்யூட்டருக்குத் தருகிறது. எனவே நாம் விரும்பாமல் ஏதேனும் பைல் ஒன்றை, ரீசைக்கிள் பின்னிலிருந்தும் எடுக்க முடியாத நிலையில் அழித்துவிட்டால், ஹார்ட் டிஸ்க்கிலிருந்து அதனைப் பெறலாம். இதற்கு ரெகுவா (Recuva)போன்ற பைல் மீட்கும் புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
5. ஹார்ட் டிஸ்க்கை முழுமையாக அழிக்க: பயன்படுத்திய கம்ப்யூட்டரை மற்றவருக்குக் கொடுக்கிறீர்கள். அல்லது விற்கிறீர்கள். அப்போது ஹார்ட் டிஸ்க்கினை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. பைல்களை அழித்துவிட்டுக் கொடுப்பதாக இருந்தால், முழுமையாக அவற்றை அழிக்க வேண்டும். ஏனென்றால், இதனைப் பெறும் மற்றவர்கள், அழிந்த பைல் மீட்டுத் தரும் புரோகிராம்கள் மூலம் உங்களின் பெர்சனல் தகவல்களைப் பெற்றுவிடும் வாய்ப்புகள் உள்ளன.
6. தேவையற்ற இன்ஸ்டால் : ஏதேனும் பயன்பாட்டு சாப்ட்வேர் புரோகிராம்களை உங்கள் கம்ப்யூட்டரில் பதியும்போது, அது தரும் கூடுதல் வசதிகளை இன்ஸ்டால் செய்திட வேண்டாம். பின்னர் எப்போது வேண்டுமானாலும், அந்த புரோகிராம் தரும் தளம் சென்று, பதிந்து கொள்ளலாம். ஏனென்றால், கூடுதல் வசதிகள் ஒவ்வொரு முறையும் புரோகிராமுடன் இயங்கத் தொடங்குகையில், அவை தொடங்க அதிக நேரம் எடுப்பதுடன், கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில், ராம் மெமரியில் அதிக இடம் எடுக்கும். எனவே அப்ளிகேஷன் சாப்ட்வேர் ஒன்றை பதிந்து கொள்கையில், கூடுதல் வசதிக்கான செக் பாக்ஸ் மற்றும் ரேடியோ பட்டன்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தால், அவற்றை நீக்கி இன்ஸ்டால் செய்திடவும்.
7. கிளீனர்களை நம்ப வேண்டாம்: நாம் நம்பிக்கை வைத்திருக்கும் தளங்கள் சிலவற்றில், உங்கள் கம்ப்யூட்டரை சுத்தப்படுத்த, இந்த இடத்தில் கிளிக் செய்திடுங்கள் என சில லிங்க்குகள் இருக்கும். ரெஜிஸ்ட்ரியைச் சரி செய்திடலாமே! ஸ்பைவேர்களை எடுக்கவா, இலவசமாய்! என்று சில லிங்க்குகள் இருக்கும். பெரும்பாலான இந்த லிங்க்குகள் நமக்கு உதவி செய்வதைக் காட்டிலும், உபத்திரவம் தருவதாகவே அமையும். இக்கட்டில் மாட்டிவிட்டு, பணம் கட்டு என்று சொல்லும் தளங்களும் உள்ளன. எனவே இவற்றைப் பயன்படுத்துவதனை அறவே தவிர்க்கவும்.
8. தேவையற்றவற்றை நீக்குக: மிகவும் ஆசையாக சில அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைப் பதிந்து பயன்படுத்தி இருப்பீர்கள். காலப் போக்கில் அதன் மேம்படுத்தப் பட்ட அல்லது கூடுதல் வசதிகளுடன் கூடிய சில சாப்ட்வேர்களையும் இன்ஸ்டால் செய்திருப்பீர்கள். இந்நிலையில், பழைய சாப்ட்வேர்களை, கம்ப்யூட்டரிலிருந்து நீக்குவதே நல்லது. கண்ட்ரோல் பேனல் சென்று, Add/Remove Programs பிரிவின் மூலம் பழையனவற்றை நீக்கிவிடுங்கள்.
9: சிந்திய திரவம்: லேப்டாப் பயன்படுத்துபவர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு ஆளாவார்கள். லேப்டாப் பயன்படுத்திக் கொண்டே தண்ணீர், காபி, டீ என பானங்களைச் சாப்பிடுவார்கள். அப்படியே சில வேளைகளில் கவனமின்றி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் இது சிதறிவிடும். உடனே அதனை இணைத்திருக்கும் பவர் ப்ளக்கை நீக்கவும். பவர் ப்ளக்கில் இல்லை என்றால், கம்ப்யூட்டர் உள்ளே இருக்கும் பேட்டரியை நீக்க வேண்டும். இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் அனைத்து சாதனங்களையும், வெப் கேமரா, யு.எஸ்.பி. போர்ட்டில் உள்ள ட்ரைவ் போன்றவை, நீக்க வேண்டும். உடனே லேப்டாப்பினைத் தலைகீழாக கவிழ்த்து அந்த திரவத்தினை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்க வேண்டாம். நல்ல உறிஞ்சும் தன்மையுடைய துணி கொண்டு, ஒற்றி எடுக்க முயற்சிக்கலாம். லேப்டாப்பினை வெவ்வேறு திசைகளில் அசைப்பதன் மூலம், மேலே உள்ள திரவம் இன்னும் உள்ளே போகும் வழியை அமைக்கிறீர்கள்.
10. அட்மின் அக்கவுண்ட்: பெரும்பாலான எக்ஸ்பி சிஸ்டம் பயனாளர்கள், அவர்களின் அட்மினிஸ்ட் ரேட்டர் அக்கவுண்ட்டிலேயே, தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணிபுரிவார்கள். கம்ப்யூட்டர்களில் மாற்றங்கள் ஏற்படுத்த, இந்த அக்கவுண்ட் வழி செல்ல வேண்டும் என்றாலும், மற்ற நேரங்களில் வேறு ஒரு அக்கவுண்ட் வழி சென்று பயன்படுத்தலாம். ஏனென்றால், அட்மின் அக்கவுண்ட் வைரஸ்களை எளிதில் உள்ளே வரவழைக்கும்.
11. சிஸ்டம் ட்ரே கிளீன்: உங்களுடைய டாஸ்க்பாரின் வலது பக்கம் சிஸ்டம் ட்ரேயில் பல ஐகான்கள் உள்ளனவா? இவை எல்லாம் உங்களைக் கேட்காமலேயே இயங்கிய புரோகிராம்களின் தடங்கள். இவை எல்லாம் கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குகையில், நீங்கள் அறிந்தோ அறியாமலோ இயக்கப்பட்டுப் பின்னணியில் இருக்கும். இங்கிருக்கும் புரோகிராம்கள் தேவையா என சிறிய கால இடைவெளியில் பார்த்துத் தேவைப்படாதவற்றை நீக்கவும். கண்ட்ரோல் பேனலில் Notification Area Icons என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாகவுள்ள Always show all icons and notifications on the taskbar என்ற பிரிவில் செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இதன் மூலம் உங்கள் சிஸ்டம் ட்ரே எவ்வளவு கூட்டமாக இருக்கிறது என்று தெரியவரும். இதில் தேவைப்படாத ஐகான் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Close என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அந்த குறிப்பிட்ட புரோகிராம், இயக்கத்தில் இருந்து நீக்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரி இதற்காக உங்களுக்கு நன்றி சொல்லும்.
12. மின் சிக்கனம்: லேப்டாப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்கள் பேட்டரியின் திறனைச் சற்று சிக்கனமாகப் பயன்படுத்தலாமே. இதற்கான Power Settingsஅமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்துங்கள். கண்ட்ரோல் பேனலில்Power Options என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். உங்கள் லேப்டாப் பயன்பாட்டிற்கேற்ப, இதில் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தவும்.