உங்கள் வருகைக்கு நன்றி

எதுக்குங்க டென்ஷனாகுறீங்க ?

வியாழன், 1 நவம்பர், 2012


வண்டிச் சாவி, பீரோ சாவி, பிரீமியம் கட்டச் சொல்லி வந்த கடிதம், செல்ஃபோன், நியூஸ் பேப்பர், மெடிக்கல் பிரிஸ்க்ரிப்ஷன்... போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தினமும் ஏதாவது ஒரு குடும்பத்தில் வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருப்பார்கள். 

சே... இந்த வீட்ல அவசரத்துக்கு ஒரு பொருளாவது கிடைக்குதா? என்று தேடுபவர் டென்ஷனாகிக் கத்த, மற்றவர்களும் சேர்ந்து கத்த குடும்பமே தேடு தேடென்று தேடினால் பீரோ சாவி கட்டிலுக்கு அடியில் கிடக்கும். மெடிக்கல் பிரிஸ்க்ரிப்ஷன் பூஜை அறையில் விபூதிக்கு வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கும். 

ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்... அந்தந்தப் பொருளை அந்தந்த இடத்தில் வைக்காததன் விளைவுதானே இந்த நேர விரயம்?  ஒவ்வொரு பொருளும் அதற்குரிய இடத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை எடுத்துப் பயன்படுத்திய பிறகும் மீண்டும் எடுத்த இடத்தில் அந்தப் பொருளை வைக்க வேண்டும். 

இந்த சூட்சுமத்தை சரியாகக் கையாண்டால்  எக்கச்சக்கமான மணித் துளிகள் தவழும். உங்கள் குடும்பத்தாருக்கும் எடுத்த இடத்தில் பொருளை வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்களேன். 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets