உங்கள் வருகைக்கு நன்றி

ஆராய்ச்சி குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆராய்ச்சி குறிப்புகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மூளையை ஆரோக்கியத்திற்கான வழிகள்.

புதன், 27 ஜூன், 2018


மனிதன் வளர வளர, மூளையும் வளரும். ஆனால், 45 வயது முதல், மூளை தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கும்.கருத்தரித்த நான்காவது வாரத்திலேயே, குழந்தையின் மூளை வளர துவங்கி விடும். அப்போது, தாய் ஆரோக்கியமான சூழலில் இருந்தால், குழந்தைக்கு மூளை குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம்.கருவுற்ற நான்காவது வாரத்தில், நிமிடத்திற்கு 2.50 லட்சம் நரம்பணுக்கள் குழந்தையின் உடலில் உருவாகின்றன. இவ்வாறு, நமக்கு தேவையான அனைத்து நரம்பணுக்களும், பிறப்பதற்கு முன்பே உருவாகி விடும். குறைப்பிரசவத்தால் மூளை வளர்ச்சி தடைபட வாய்ப்புள்ளதால், பிற்காலத்தில் மூளை சார்ந்த பல பிரச்னை வர வாய்ப்புள்ளது.குழந்தையின் மூளை, ஆறு வயதுக்குள்ளேயே, 95 சதவீத வளர்ச்சியை எட்டி விடும். இந்த பருவத்தில் மூளை மிகவும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். குழந்தை பருவத்தில், மூளை தனக்கு தேவையானதை விட, இரண்டு மடங்கு நியூரான்களை உற்பத்தி செய்யும். 20 வயதாகும் போது, மூளை நன்றாக வளர்ந்து விடும். அதனால், மூளையில் உள்ள வரிப் பள்ளங்கள் விரிவடையும். 20 - 90 வயது வரை, மூளை அதன் எடையிலிருந்து, 5 - 10 சதவீதத்தை இழக்கிறது.நம் மூளையின் உச்சக்கட்ட செயல்திறன், 22 வயதில் துவங்கி, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளே நீடிக்கும். அதன்பின், ஞாபக சக்தி, பணி ஒருங்கிணைப்பு திறன், திட்டமிடல் திறன் குறைந்து விடும்.மேலும், 45 - 49 வயதுக்குள் ஆண்களும், பெண்களும், 3.6 சதவீத மூளைத்திறனை இழந்து விடுகின்றனர். அதன்பின், காரணத்தை ஆராயும் திறன், புரிந்து கொள்ளும் திறன், ஞாபகசக்தி ஆகியவை, வெகுவாக குறைய துவங்கும்.வயதான பருவத்தில், நாம் தொடர்ச்சியாக மூளையின் செல்களை இழந்தபடியே இருப்போம். நரம்பணுக்களில் செய்திகளை கடத்தும் பகுதியான, 'டெண்ட்ரைட்ஸ்' அதிக அளவில் சிதைவடையும். 65 - 70 வயதுக்குள் ஆண்களுக்கு, 9.6 சதவீதமும், பெண்களுக்கு, 7.4 சதவீதமும் மூளை இழப்பு ஏற்படும்.இதுதவிர, 80 வயதில், நம் மூளை சிறிது எடையை இழந்து, அளவிலும் சிறிது சுருங்கி விடும். மூளை சுருங்கு வதால், அறிவாற்றல் சார்ந்த திறமைகள் குறையும். வயதானவர்களுக்கு ஞாபக சக்திக்கு உதவும், 'ஹிப்போ காம்பஸ்' சுருங்குவதால், அவர்களுடைய நினைவாற்றல் குறைய துவங்கும்.தொடர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பது, மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவும். வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள், தொடர்ந்து, 45 நிமிடம் நடப்பது, மூளைக்கு நல்லது. தினமும், எட்டு மணிநேரம் உறங்குவது, ஞாபக மறதி அபாயத்தை குறைக்கும்.உயர் ரத்த அழுத்தம், மூளை சுருங்குவதை வேகப்படுத்துவதுடன், மூளைத்திறன் குறைபாட்டுக்கும் வழிவகுக்கும் என்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

Read more...

இப்போ இதிலிருந்தும் மின்சாரம் எடுத்தாச்சு !

திங்கள், 20 மே, 2013



தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் மின்தடை பிரச்சினைதான். அந்த மின்தடைக்கு ஆறுதல் தேடித் தரும் வகையில் நைஜீரிய மாணவிகள் நால்வரின் கண்டுபிடிப்பு வந்து சேர்ந்துள்ளது.



நைஜீரியா பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் ஆப்பிரிக்க நாடு. ஆனால் இங்கு மின்சாரம் என்பது பெரும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது. பல பகுதிகள் இன்னும் மின்சாரத்தைக் காணாமலேயே இருக்கின்றன. பலருக்கு மின்சாரத்தைப் பார்த்தே பல காலமாகி விட்டதாம்.
இந்த நிலையில்தான் 14 வயதான டூரோ அய்னா அடிபோலா, அகின்டேல் அபியோலா, பேலகே வொலுவடோயின் மற்றும் 15 வயதான பெல்லோ எனியோலா ஆகிய மாணவிகள் சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரித்து நைஜீரிய மக்கள் மனதில் பால் வார்த்துள்ளனர்.
லாகோஸில் நடந்த ஆப்பிரிக்க சிறு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தங்களது கண்டுபிடிப்பை அவர்கள் காட்சிக்கு வைத்தனர்.
சிறுநீரை முதலில் இவர்கள் நைட்ரஜன், தண்ணீர் மற்றும் ஹைட்ரஜனாக பிரிக்கின்றனர். பின்னர் ஹைட்ரஜனை ஒரு நீர் வடிகட்டிக்குள் அனுப்பி சுத்திகரிக்கின்றனர். அது பின்னர் ஒரு கேஸ் சிலிண்டருக்குப் போகிறது.
அங்கு ஹைட்ரஜன் போராக்ஸ் திரவமாக மாறுகிறது. பின்னர் அதிலிருந்து ஹைட்ரஜன் வாயு தனியாக பிரிக்கப்படுகிறது. அந்த சுத்திகரிக்கப்பட்ட ஹைட்ஜன் வாயு, ஜெனரேட்டருக்குப் போய் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
ஒரு லிட்டர் சிறுநீரைப் பயன்படுத்தினால் 6 மணி நேரத்திற்குத் தேவையான மின்சாரம் கிடைக்கிறதாம்.
நைஜீரிய இளம் மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு நைஜீரியாவில் இப்போது பெரும் பேச்சாக மாறியுள்ளதாம்.
தமிழ்நாட்டில் முதலி்ல் இந்த டெக்னிக்கைப் பயன்படுத்தி நிறைய மின்சாரம் தயாரிக்கலாம். பஸ் ஸ்டாண்ட் பக்கம் போனால் சுவர் பக்கம் ஒதுங்குவோரிடமிருந்து லிட்டர் கணக்கில் சிறுநீரைப் பிடித்தாலே போதும் நிறைய மின்சாரத்தை அள்ளி விடலாமே...

Read more...

குழந்தைகளில் அதிக பருமன் ஆபத்தா ?

ஞாயிறு, 6 ஜனவரி, 2013


உடல்பருமன்  உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதிர்ச்சி தகவல்பள்ளிக் குழந்தைகளிடைய நடத்தப்பட்ட ஆய்வில் தெரிந்துள்ளது.
நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையம் சார்ப்பில் பள்ளி குழந்தைகளின் உடல் தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மொத்தம், 23 அரசு மற்றும் 28 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவமாணவியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வின் முடிவில் தெரியவந்த முடிவுகள் பின்வருமாறு:

இதில் குழந்தைகளிடையே அதிக உடல் எடைக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிந்தது. மொத்த கணக்கெடுப்பில், 34 சதவீத மாணவமாணவியர் அதிக எடையுடன் இருந்தனர். சதவீத மாணவமாணவியரின் ரத்தத்தில் சக்கரையின் அளவு அதிகமாக இருந்தது.

எதிர்காலத்தில் உடல்நலத்தை கண்டுகொள்ளாத பட்சத்தில்சக்கரை நோய் வர அதிக வாய்ப்புள்ளது. ஆய்வில்   கலந்து கொண்ட அதிக எடை கொண்ட பலருக்கும் உடலில் ஆங்காங்கே தேவையற்ற சதைமடிப்புகள் இருந்தது.

இதுவும் பிற்காலத்தில் நீரிழிவு நோய் வழிவகுக்கும். அதிக உடல் எடையால்பருவமடைந்த மாணவியர் இடையே மாதவிடாய் ஒழுங்கற்ற முறையில் ஏற்பட்டு நீரிழிவு நோய் உண்டாகலாம் என்று அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

Read more...

கம்பியூட்டரும், யு. எஸ்.பி. போர்ட்டும்

திங்கள், 31 டிசம்பர், 2012


புதிய கம்ப்யூட்டரில் இப்போதெல்லாம் குறைந்தது நான்கு யு.எஸ்.பி. போர்ட்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் இணைக்கப்படும் சாதனங்களுக்கு, இவை கம்ப்யூட்டருக்குக் கிடைக்கும் மின் சக்தியை வழங்குகின்றன. இந்த சாதனங்களுக்கு வெளியே இருந்து மின்சக்தி இணைப்பு இல்லை எனில், கம்ப்யூட்டரிலிருந்துதான் பவர் தரப்படுகிறது. இதில் என்ன பிரச்னை என்றால், ஒவ்வொரு யு.எஸ்.பி. போர்ட்டும் அதிக பட்சம் 500 மில்லி ஆம்பியர் கரண்ட் தான் தர முடியும். கம்ப்யூட்டர் ஒன்றுடன், யு.எஸ்.பி. போர்ட் வழியாக, ஒரு சாதனம்இணைக்கப்பட்டால், இதில் பிரச்னை ஏற்பட வழியில்லை. யு.எஸ்.பி. ஹப் (பல யு.எஸ்.பி.போர்ட் கொண்ட ஒரு சாதனம் - மல்ட்டிபிள் ப்ளக் போல) ஒன்றை இணைத்து, அதில் பல சாதனங்களை இணைத்தால், அங்கு பிரச்னை எழ வாய்ப்புண்டு. இதற்குப் பதிலாக, ஒவ்வொரு யு.எஸ்.பி.போர்ட்டிலும் இணைக்கப்படும் சாதனங்கள் இயங்க எவ்வளவு மின் சக்தி தேவைப்படுகிறது என்பதனை நாம் அறிந்து கொண்டால், பிரச்னையை ஓரளவிற்குச் சமாளிக்கலாம். இதனை அறிந்து கொள்ள நமக்கு இலவசமாக USBdview என்ற ஒரு சாப்ட்வேர் கிடைக்கிறது. http://www.nirsoft.net /utils/ sb_devices_view.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைப் பெறலாம். இந்த சாப்ட்வேர் தொகுப்பினை டவுண்லோட் செய்து, கம்ப்யூட்டரில் இயக்கவும். இதில் உள்ள பல அப்ளிகேஷன்களில், பவர் என்பதுவும் ஒன்று. இதில் கிடைக்கும் பட்டியலில் கீழாக இது கிடைக்கும். இதில் நாம் காணவேண்டிய சாதனத்தினைக் கிளிக் செய்தால், அதற்கான தேவைப்படும் மின் சக்தி குறித்த தகவல் கிடைக்கும். இணைக்கப்படும் ஒவ்வொரு சாதனத்திற்கும் மின்சக்தி தேவையில்லை. இருப்பினும் அனைத்து இணைக்கப்பட்ட சாதனத்திற்கும் தேவைப்படும் மின்சக்தி குறித்த தகவல் காட்டப்படுகிறது. இந்த தகவல்களைக் கொண்டு நாம் கிடைக்கும் மின்சக்தியின் அளவுக்கேற்றாற்போல, யு.எஸ்.பி.போர்ட்டில் சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம். 

Read more...

குழந்தைகள் வளர்ந்ததும் டயபடீஸ் ஏற்படுவது ஏன்

வியாழன், 6 டிசம்பர், 2012


வாகன புகைதூசு போன்ற மாசு நிறைந்த சூழலில் வாழும் குழந்தைகள் வளர்ந்ததும் டயபடீஸ் ஏற்படக்கூடும். குண்டாகும் வாய்ப்பும் அதிகம் என்று அமெரிக்க ஆய்வில் எச்சரிக்கப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் சீர்கேடுதூசுபுகை ஆகியவற்றுக்கு இடையே வசிக்கும் குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் பற்றி அமெரிக்காவின் ஓகியோ பல்கலைக்கழகம் விரிவான ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை டெய்லி எக்ஸ்பிரஸ் நாளேடு வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:

மனித உடலுடன் நெருங்கிய தொடர்புடைய எலியின் குட்டிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடந்தது. மாசுவாகனப் புகை நிறைந்த பகுதிகளில் வாழும் எலிகள் மற்றும் தூய்மையானமாசற்ற பகுதிகளில் வசிக்கும் எலிகள் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டன. மாசு நிறைந்த பகுதிகளில் வசிக்கும் எலிகளிடம் நடந்த சோதனையில்உடலில் இன்சுலின் அளவு வேகமாக குறைவது தெரிய வந்தது. அதனால்டைப் 2 வகை டயபடீஸ் (பரம்பரை அல்லாதது) ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன்அந்த எலிகள் அதிக எடையுடன் இருந்தது தெரிய வந்தது.

இயற்கையானமாசற்ற பகுதிகளில் வசிக்கும் எலிகளிடம் நடந்த ஆய்வில் ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கும் இன்சுலின் தடுப்பு சக்தி அதிகரிப்பதையும்உடல் எடையை சீராக பராமரிப்பதையும் அறிய முடிந்தது. இரண்டு எலி குழுக்களையும் சோதனை கூடத்தில் இதே முறையில் பராமரித்தபோது இது உறுதியானது. எனவேஅதிக சுகாதாரசுற்றுச்சூழல் கேடானவாகன புகை நிறைந்த பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள் வளர்ந்ததும் டயபடீஸ் ஏற்படும் ஆபத்தும்கூடுதல் எடை போடும் அபாயமும் உள்ளது ஆய்வில் தெரிய வந்தது. இவ்வாறு ஆய்வு முடிவில் கூறப்பட்டுள்ளது.

Read more...

குடிநீரை சுத்தப்படுத்த எளிய வழி


குடிநீரை சுத்தப்படுத்த இனி பியூரிபையர் தேவையில்லை. வாழைப்பழ தோல் போதும். ஆம்குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரை விடவாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரேசில் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டிடியூட் ஆப் பயோசின்சியாஸ் நிறுவனத்தின் குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழுவினர் குடிநீரை சுத்தப்படுத்துவது குறித்து ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:

இன்று குடிநீராக பயன்படும் தண்ணீர்காரீயம்செம்பு உள்ளிட்ட உலோகம் மற்றும் ரசாயன பொருட்களால் மாசடைந்து காணப்படுகின்றது. இத்தகைய நச்சுப் பொருட்கள் உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவற்றை நீக்குவதற்கு பியூரிபையர் உட்பட பல்வேறு ரசாயன முறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால் அவற்றுக்கு செலவு அதிகமாவதுடன் நச்சுத் தன்மை உள்ளதாகவும் இருக்கின்றன.

இந்நிலையில்தேங்காய் நார் மற்றும் கடலை தோல் உள்ளிட்ட இயற்கையான பொருட்களைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்றும் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்சில்வர் பாத்திரங்கள் மற்றும் தோல் ஷூக்களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழ தோலைக் கொண்டும் தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்று இவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதாவதுதண்ணீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால் போதும்அதில் உள்ள உலோக நச்சுப் பொருட்களை உடனடியாக தன்னகத்தே உறிஞ்சிக் கொள்ளும். எவ்வித ரசாயனப் பொருளையும் சேர்க்கத் தேவையில்லை. தண்ணீரை சுத்தப்படுத்துவதில் மற்ற முறைகளைவிட இம்முறை சிறப்பானதாகவும் செலவு குறைவாகவும் உள்ளது. வாழைப்பழ தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன்படுத்தலாம். இவ்வாறு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

Read more...

ஆக்கமும்... அழிவும் தான் அணுசக்தி

செவ்வாய், 30 அக்டோபர், 2012


பூமியில் கிடைக்கும் கனிமப்பொருட்களில் யுரேனியம்ப்ளூட்டோனியம் முக்கியமானவை. இவை தான் அணுசக்திக்கு மூலப்பொருட்கள். அணுஉலையில் யுரேனியத்தை செலுத்திய பின்அதில் இருந்து அணுக்கூறுகள் பிளக்கபிளக்க முடிவில்லா வெப்ப சக்தி உருவாகிறது. இதில் இருந்து தான் மின்சாரமும்  தயாரிக்கப்படுகிறதுஅணு ஆயுதத்துக்கு  தேவையான சக்தியும் கிடைக்கிறது.
அணுஉலையில் யுரேனியத்தை செலுத்தியவுடன்அணுவை பிளப்பதால் மூன்று வித எனர்ஜி அதாவது எரிசக்தி கிடைக்கிறது. இதைத்தான் பிஷன் ப்ராடக்ட்ஸ்’ எபர். 1. கைனடிக் எனர்ஜி. 2. காமா கதிரியக்க சக்தி. 3. ப்ரீ நியூட்ரான்ஸ். இவை தான் மின்சாரம் முதல் அணுகுண்டு வரை தயாரிக்க கைகொடுக்கின்றன.
அணுஉலையில் அணுவை பிளக்கும் யுரேனியம்ப்ளூட்டோனியம் போன்றவை கம்பிகளாக இருக்கும். இவற்றில் வெளிப்படும் வெப்பம் அதிகரிக்கும் போது தான் ஆபத்தே. இதை கட்டுக்குள் வைத்திருப்பதுஇதில் பொருத்தப்பட்டுள்ள கோர்’ என்ற சாதனம்.
இந்த வெப்பத்தை தணித்து கட்டுக்குள் வைக்கவேகனநீர்திரவ சோடியம்ஹீலியம் போன்ற ஏதாவது ஒன்று செலுத்தப்படுகிறது.
கட்டுக்குள் உள்ள வெப்பசக்திஅடுத்து டர்பைன் வழியாக செல்லும் போது தான் மின்சாரம் தயாரிக்கும் பணி நடக்கிறது.
மின்சாரம் தயாரிக்கப்பட்டதும்வழக்கமான மேல்நிலை கம்பிகள் மூலம் கப்பலுக்கும் கூட மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. நீர்மூழ்கிக்கும் கூட ஒளியூட்டுகிறது.

ஆக்கமும்... அழிவும் தான் அணுசக்தி

அணுவை துளைக்கதுளைக்க அதன் சக்தியில் ஆக்கமும் இருக்கிறதுஅழிவும் இருக்கிறது. மின்சாரம் தயாரிப்பதுவிமானத்தை இயக்க பயன்படுவதுநீர்மூழ்கிகளை இயக்குவதுகேன்சர் சிகிச்சைக்கு உதவுவதுமருத்துவ இமேஜிங் பரிசோதனைகளுக்கு ஐசோடோப்களை உருவாக்குவது ஆகியவை ஆக்கமாக சொல்லலாம்.
அழிவு என்ன தெரியுமாஅணு குண்டு மற்றும் அணு ஆயுதங்கள் தான். ஒரு நகரத்தையே அழிக்க ஒரு அணுகுண்டு போதும். அணு உலையில் ஏற்படும் விபத்தினாலும் கதிர்வீச்சு மூலம் அழிவு ஏற்படும். 

எப்படி செயல்படுகிறது?

ரியாக்டரின் மையப் பகுதியில் கோர் கம்பிகளை சுற்றி நீர் இருக்கும். அதற்கு அதிக நீர் தேவை காரணமாகவே அணுமின் நிலையங்கள் பெரும்பாலும் ஆறுகடலோரப் பகுதிகளில் அமைக்கப்படும்.
அணுக்களை பிளக்கும்போது ஏற்படும் வெப்பம் ஒரே முறையாக வெளியாகாமல் தடுக்க கருவிக்குள் 2 அடுக்கு சுற்றுச் சுவர்கள் இருக்கும். இந்த நடைமுறையில் டர்பைன்ஜெனரேட்டரும் முக்கிய பங்கு வகிக்கும். பயங்கர சக்தியுடன் அணுவை பிளக்கும்போது கோர் கம்பிகளில் வெளிப்படும் வெப்பத்தால் நீர் கொதித்து ஆவியாகிஅதனுடன் டர்பைன் செயல்பட்டு ஜெனரேட்டரில் மின்சக்தியாக மாற்றப்படும்.

கதிர்வீச்சு ஆபத்து  என்னென்ன?

அணுஉலை கதிர்வீச்சு கசிந்துஉலையை குளிர்விக்க பயன்படுத்தப்பட நீரில் பரவும். அதன் மூலம் கடல்நீரில் பரவும்காற்றில் பரவும்மண்ணில் இறங்கிசெடிகொடிபயிர்களை அழிக்கும். வானில் நீராவியாக பரவிமழை தூறலில் கூட நம் தலையில் விழும். இப்படி அணுக்கதிர் ஆபத்துக்கு அளவே கிடையாது.
சாதா காய்ச்சல்இருமலில் தான் ஆரம்பிக்கும்காசநோய் முதல் கேன்சர் வரை வரும். உறுப்புகளை ஊனமாக்கும். காலம் காலத்துக்கு பாதிப்பு நீடிக்கும்.
ரஷ்ய செர்னோபில் விபத்து நடந்து 25 ஆண்டாகியும் இன்னும் அதன் பாதிப்புக்கு அளவே இல்லை.

குட்டிப்பையன்... குண்டு மனிதன்

1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதியை யாராலும் மறக்க முடியாதுஆம்இரண்டாம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில்நடந்த பயங்கரம் அது. ஜப்பானிய நகரான ஹிரோஷிமா மீது யுரேனியம் சார்ந்த துப்பாக்கி வடிவ அணுகுண்டை போட்டது அமெரிக்கா. இந்த குண்டுக்கு பெயர் லிட்டில் பாய்.
மூன்று நாளுக்கு பின்அதே நாட்டின் நாகசாகி நகரில் அமெரிக்கா மீண்டும் போட்டது. இந்த குண்டுக்கு பெயர் பேட் மென்.’ அப்போது ஏற்பட்ட அழிவுகளுக்கு பின் தான்அணுவை மின்சாரத்துக்கு மட்டும் பயன்படுத்த உலக நாடுகள் உறுதி பூண்டன. நிலைத்ததா அந்த உறுதி...?

யாரிடம் தான் இல்லை அணுகுண்டு?

ஐம்பது ஆண்டுகளை கடந்தாலும் ஹிரோஷிமாநாகசாகி அழிந்த கதையை இன்னும் மறக்கவில்லை பல நாடுகளும். ஆனாலும்குண்டுபோட்ட அமெரிக்காவில் ஆரம்பித்துசீனாபாகிஸ்தான்பிரான்ஸ்வடகொரியாஇஸ்ரேல்ரஷ்யாபிரிட்டன் மட்டுமல்ல இந்தியாவும் அணு குண்டு தயாரிக்கும் திறன் படைத்துள்ளன.  இதுவரை இந்த நாடுகள் சேர்ந்து 2 ஆயிரம் முறை பூமிக்கடியில் அணுகுண்டு சோதனைகளை நடத்தியுள்ளன.

Read more...

பழத்தில் சத்து எதில் உள்ளது ?

ஞாயிறு, 23 செப்டம்பர், 2012


இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிபுணரான ஷர்மிளா: உடலுக்குத் தேவையான ஒவ்வொரு சத்துக்கும்,தனித்தனியாக ஏதாவது ஒன்றை சாப்பிடுவதை விட, பழங்களைச் சாப்பிடுவது புத்திசாலித்தனம். அந்தளவிற்கு, பழங்களில் நிறைய சத்துக்கள் உள்ளன;ஆப்பிளை விட, பப்பாளிக்குத் தான் பல மடங்கு சத்து உண்டு. பெரும்பாலும் ஒவ்வொரு நாட்டிற்கும், அதன் தட்பவெப்பம், அந்த மக்களின் உடல் தேவைக்கு ஏற்ற சத்துள்ள பொருட்களையே, அந்த மண் விளைவிக்கிறது. அந்த வகையில், நம் தோட்டத்தில் விளையும் பப்பாளி, மிகச்சிறந்த பழம். "பப்பாளி சூடு' என, ஒதுக்குவர்; ஆனால், தை சாப்பிட்டு, அரை டம்ளர் பால் குடித்தால், சூடு பிரச்னை வராது. பழச்சாறு குடிப்பதை விட, பழமாகச் சாப்பிடும் போது தான், அதில் உள்ள நார்ச்சத்து, நம் உடலுக்குள் செல்லும். உணவுக்கு முன் அல்லது உணவுக்குப் பின் பழங்களை சாப்பிடுவதை விட,பழத்தையே உணவாக எடுத்துக் கொள்ளும் போது, உடலில் சேர்ந்துள்ள, நச்சுப் பொருட்களை எல்லாம் கழிவாக வெளியேற்றி விடும். பாதிக்கும் மேற்பட்ட பழங்களில், தோலில் தான் சத்துக்கள் உள்ளன. தோல்களை தூக்கிப் போட்டு விட்டு, பழங்களை மட்டும் உண்ணும் போது, அதன் பலன் குறைகிறது. முன்பெல்லாம், வாழைப்பழத் தோலில் உள்ள நார் போன்ற பகுதியையும்,சுரண்டிச் சாப்பிடுவர். வாழைப்பழம் தரும் சத்தின் பாதி, அந்தத் தோலில் தான் உள்ளது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இப்போது,விவசாயத்தில் ரசாயனங்கள் அதிகளவு பயன்படுத்தப்படுவதால், தோலை விலக்குவது அவசியம். எந்தப் பழமானாலும், அதைக் கழுவி, மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் வினிகர்,இரண்டு ஸ்பூன் உப்பு கலந்த தண்ணீரில் கழுவிச் சாப்பிடுவது நல்லது. அதே சமயம், இயற்கை முறையில் விளைந்த திராட்சை, நாட்டுப் பழங்கள்,மலைப்பழங்கள், மாம்பழம், சப்போட்டா, நெல்லி, கொய்யா போன்ற பழங்களை தோலுடன் சாப்பிடலாம்.

Read more...

ஆச்சரிமூட்டும் ஆராய்ச்சி குறிப்புகள்

வியாழன், 20 செப்டம்பர், 2012


இஞ்சி தின்றால் இனிப்பு வியாதி குறையும்!
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமானாலோ அதிக காலமாக சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டாலோ அன்றாட உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை வியாதியின் தீவிரம் குறைகிறது.
இந்த உண்மையை சிட்னி பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய பரிசோதனைகளில் கண்டறிந்துள்ளனர். இஞ்சி உணவு மூலம் மனிதரின் உடலில் இன்சுலின் சுரக்கச் செய்ய முடியும்என்று மருந்துதுறைப் பேராசிரியர் பாசில ரோபோகாலிஸ் தெரிவிக்கின்றார்.
 தொழுகை, பிரார்த்தனை பயிற்சி செய்வதால், மூளையில் உள்ள நரம்புகள் ஒரே மாதத்தில் பலப்படுவதாக அமெரிக்காவில் நிரூபித்துள்ளனர்.
அமெரிக்காவிலுள்ள உடல்-மனம்-பயிற்சி நிறுவனம் பல்கலைக்கழக மாணவர்களை இரு பிரிவாகக் கொண்டு பரிசோதித்ததில் நான்கே வாரத்தில் சுமார் 11 மணிநேரப் பயிற்சியில் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இயற்கையாகக் கிடைத்த முட்டையைவிட தற்போது கிடைக்கும் முட்டை உணவு சத்து மிக்கதாக இருக்கிறது என்று பிரிட்டன் உடல்நலத்துறை மூலம் நடைபெற்ற ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.
செயற்கை முட்டைகளில் குறைந்த அளவிலான கொழுப்பு, கொலஸ்ட்ரல், கலோரிகளைக் கொண்டதாகவும் விட்டமின் டி அதிகமாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
தினசரி இரண்டு கப் காபி பருகுவது, பர்கின்சன் நோய் தோன்றுவதைக் குறைக்க உதவும். இங்கிலாந்தின் மாண்ட்ரீல் நகரில் உள்ள மக்ஜில் பல்கலைக்கழகம் செய்த ஆராய்ச்சியிலிருந்து கண்டறியப்பட்ட உண்மை இது.
அங்குள்ள பேராசிரியர் ரோனால்டு போஸ்டுமா காபியிலுள்ள காஃபைன் சத்து உடலில் குறைவுபடுவதற்கும் பர்க்கின்சன் நோய்க்கும் உள்ள தொடர்பு இன்னும் புரியவில்லை. ஆனால் அதற்கான நிரூபணங்களை விரைவில் அறிய முடியும்என்று லண்டனிலிருந்து வரும் டெய்லி மெயில் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.
கொலஸ்ட்ரால் மிகுதியானதைக் குறைப்பதற்காக, அலோபதி மருத்துவர்கள் கொடுக்கும் ஒரு சில மருந்துகள் ஆஸ்த்மா நோயைத் தணிப்பதா மிஸிஸ்சிப்பி பல்கலைக்கழக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ் லேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின்படி இருமல் வருவது வரவரது மனவிருப்பத்தினாலேதானாம்.
தொண்டைக் கமறலை உண்டாக்கக்கூடிய வகையில் மிளகில் தயாரிக்கப்பட்ட ஒருவித உணவைக் கொடுத்துப் பரிசோதித்ததில், இருமலுக்குக் காரணம் அவர்தம் மனத்தில் தோன்றிய எண்ணம்தானாம்.
பக்கவாதம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டா என்பதை எளிய முறையில் கண் பரிசோதனை ஒன்றைச் செய்வதன் மூலம் முன்கூட்டியே கண்டறியலாம் என்று ஸுரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கண்களிலிருந்து மூளைக்குச் செல்லும் ஒரு சில நரம்புகளின் தன்மை மாறுபாட்டினால், காலப்போக்கில் உண்டாகக்கூடிய பக்கவாதத்தை முன்னதாகவே அறிந்து கொள்ள முடியுமாம்.
அல்சீமர் எனும் மறதி நோயிலிருந்து விடுபடவும், வராமல் தடுக்கவும் காபி குடிப்பது நல்லது. தெற்கு ப்ளோரிடா பல்கலைக்கழகமும் மியாமி பல்கலைக் கழகமும் செய்த ஆராய்ச்சிகளிலிருந்து காபியில் உள்ள காஃபைன் எனும் ரசாயனச் சத்து ரத்தத்தில் சேர்வதால் டிமென்டியா எனும் குறைபாடு நேர்வது தடுக்கப்படுகிறது. எனவே மறதி நோயிலிருந்து தடுக்கப்பட முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets