உங்கள் வருகைக்கு நன்றி

புற்று நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புற்று நோய்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விழிப்புடன் இருந்து பார்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

செவ்வாய், 30 அக்டோபர், 2012


இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 80 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இது மிக எளிதாக தவிர்க்கக் கூடிய பிரச்னை. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஒவ்வொரு ஆண்டும் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிறது. நாற்பது வயதிற்கு மேல், இரண்டு ஆண்டிற்கு ஒரு முறை முழுமையாக மார்பகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது முக்கியம். மார்பகப் புற்றுநோயை கண்டறிய, "மேமோகிராம்' கருவி பயன்படுகிறது. இந்த பரிசோதனை, நவீன வசதியுடன், டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வந்துவிட்டது. இதில் எந்தச் சிரமமும் வலியும் இல்லாமல், பரிசோதனை செய்யலாம். மொத்தமே எட்டு நிமிடங்கள் தான் ஆகும்; மிகவும் துல்லியமாக முடிவைத் தெரிந்து கொள்ளலாம்; செலவும் அதிகம் இல்லை; 3,500 ரூபாய் வரை செலவாகும்.பரிசோதனையின் போது தரப்படும் கதிரியக்க அளவைவிட இதில் குறைவு. நோய் வந்த பின், தாமதமாகக் கண்டுபிடித்து சிகிச்சை செய்வதை விட, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ளும் போது, அவஸ்தைகளும், செலவுகளும் வெகு குறைவே. தொடர்ந்து கவனமாக இருந்தால், ஒரு வேளை புற்று நோய் பாதிப்பு வந்தாலும், மார்பகங்களை இழக்காமல் சிகிச்சை செய்து கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் ஏன் வருகிறது என்பதற்கு, இதுவரை எந்த சரியான காரணமும் கண்டுபிடிக்கப்படவில்லை. நம் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க மாற்றத்தால், பெண்கள் சீக்கிரமே வயதிற்கு வருவது, மாதவிடாய் சுழற்சி, 50 வயதிற்கு மேலும் தொடர்வது, "ஒபிசிட்டி' எனும், உடல் எடை அதிகரிப்பு, தாய்ப்பால் தராமல் இருப்பது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவை எதுவுமே இல்லாமலும், என்ன காரணம் என்று தெரியாமலும், சிலருக்கு மார்பகப் புற்றுநோய் வரலாம். எனவே, விழிப்புடன் இருந்து நம் உடலை பார்த்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம். 

Read more...

அறிவீர்களா ஆக்சிடோசின் ஆபத்தை ?

வெள்ளி, 13 ஜூலை, 2012


பெருகி வரும் மக்கள்தொகையின் விளைவாக உணவுத் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. இதைப் பயன்படுத்தி பல குறுக்குவழிகளில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறுகிய காலத்துக்குள் அதிக அளவில் உணவுப் பொருள்களைத் தயாரித்து லாபம் பார்க்கவேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம் அண்மைக்காலமாக மேலோங்கி வருகிறது.
இதன் காரணமாக முன்பைப்போல உணவில் சுகாதாரத்தையோ, வளமிக்க சத்தையோ பெற முடிவதில்லை. இதனால் ஒருகாலத்தில் உணவே மருந்தாகிய காலம்போய், இன்று உணவே விஷமாகி வருகிறது. அந்த அளவுக்கு நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுப் பொருள்களில் ஏதாவது ஒருவகையில் விஷத்தன்மை கலக்கிறது அல்லது கலக்கப்படுகிறது.
பசுமைப்புரட்சி என்ற பெயரில் பயிர்கள் அனைத்தும் விஷத்தன்மையோடு வளர்கிறது என்றால், அவை உணவுப் பொருளாக விற்பனைக்கு வரும்போது அவற்றில், மேலும் பல வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விஷத்தன்மை சேர்க்கப்படுகிறது. இதனால் இப்பொருள்களைச் சாப்பிடும் நாமும், தொற்றுநோய்களின் களமாக மாற்றப்படுகிறோம். உணவு விஷமாகி வருவதால், இன்று மனிதர்களைப் பல்வேறு தொற்றுநோய்கள் தாக்குகின்றன.
பெண்கள் பிரசவத்தின்போது நஞ்சைப் பிரித்தெடுப்பதற்காக மருத்துவர்கள் பயன்படுத்தும் ஒருவகை ஹார்மோன் ஆக்சிடோசின். இந்த மருந்தை மிகவும் குறைந்தவிலைக்கு அனைத்து மருந்துக்
கடைகளிலும் வாங்கலாம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை பெண்கள் பிரசவத்துக்கும் மற்றும் சில நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட ஆக்சிடோசின், இப்போது மாடுகளில் அதிகம் பால் சுரப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தப் பாலைச் சாப்பிடும் நபர்களைப் புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவை தாக்குவதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் மாடு வளர்ப்போரில் சில பேராசைக்காரர்கள் மாடுகளுக்கு இந்த வகை மருந்தை ஊசியின் மூலமாகச் செலுத்துவதை நிறுத்தவில்லை. இந்த மருந்து ஊசி போடப்பட்ட மாட்டின் பாலைச் சாப்பிடும் மனிதர்களுக்கே புற்றுநோய் போன்றவை வருகிறதாம். அந்த மருந்தைத் தினமும் உட்கொள்ளும் மாடுகளின் நிலைமையோ அதைவிட மோசம்.
உதாரணமாக 10 ஆண்டுகள் வாழவேண்டிய மாடுகள், இந்த மருந்தால் 5 ஆண்டுகளுக்குள் மடிந்துவிடுவதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அரசு மருத்துவப் பயன்பாட்டைத் தவிர்த்து வேறு எந்தப் பயன்பாட்டுக்கும் இந்த ஹார்மோனைப் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது. உத்தரவிட்டதோடு அரசு திருப்தியாகிவிட்டது எனலாம். ஆனால், இன்றும் நம் ஊரில் சிறிய மருந்துக்கடைகளில் இந்த மருந்தை மருத்துவரின் எந்தப் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல் வாங்கிவிடலாம். அந்த அளவுக்குத் தாராளமயமாக ஆக்சிடோசின் விற்பனை செய்யப்படுகிறது.
அதேவேளையில் ஆக்சிடோசின் ஆலகால விஷமாக, தனது விஷத்தன்மையை விஸ்தரித்து வருகிறது. மாடுகளுக்கு மட்டும் செலுத்தப்பட்ட இந்த மருந்து, இப்போது காய்கறிச் செடி வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதற்கு ஆக்சிடோசினை செடிகளில் செலுத்துவதாக மத்திய சுகாதாரத் துறை கூறுகிறது. இந்த மருந்தால் காய்கறிகள் அதிக பருமனையும், அழகான வடிவத்தையும், பசுமை நிறத்தையும் பெறுகின்றன.

குறிப்பாக பரங்கிக்காய், சுரைக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், கத்திரிக்காய் ஆகிய காய்கறிகளில் அதிகம் செலுத்தப்படுவதாக சுகாதாரத் துறையே தெரிவிக்கிறது. ஆக்சிடோசின் செலுத்தப்பட்ட செடியின் காய்கறிகளைச் சாப்பிடும்போது, நரம்புத் தளர்ச்சி, புற்றுநோய், குறைந்த ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஆகிய நோய்கள் ஏற்படும் என மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகச் சென்று கொண்டிருக்கிறது.

ஆக்சிடோசின் கொடுக்கப்படும் மாடுகளைக்கூட ஒருகாலகட்டத்தில் கண்டுகொள்ளலாம். ஆனால், காய்கறிகளை இனம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த காய்கறிகளைச் சாப்பிட்டவுடன், நமக்கு எந்தவிதப் பாதிப்பும் தெரியாது. வெகுநாள்கள் சென்ற பின்னர்தான், ஆக்சிடோசின் மனித உடலுக்குள் தனது வேலையைக் காட்டத் தொடங்கும்.

விலங்குகளுக்கோ, தாவரங்களுக்கோ ஆக்சிடோசினைப் பயன்படுத்தக் கூடாது என தடை இருந்தாலும், இந்த மருந்து மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதே, விவசாயிகள் இதை அதிகம் பயன்படுத்துவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதன் விளைவாகவே இந்த குறுக்குவழியை விவசாயிகள் தேர்ந்தெடுக்கின்றனர். இன்றைய நிலவரப்படி 1 மில்லி ஆக்சிடோசின் 15-ல் இருந்து  20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கும் சத்தான உரப் பொருள்களைக் காட்டிலும், பலமடங்கு விலை குறைவாகும்.

பெரிய விளைவையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் இப் பிரச்னையின் ஆழத்தை அரசு உணரவில்லையென்றே கூற வேண்டும். அதன் காரணமாகத்தான், இன்றும் மக்களிடம் சாதாரணமாக ஆக்சிடோசின் நடமாடுகிறது. அரசு இனியும் ஆக்சிடோசின் விஷயத்தில் தெளிவான, கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு காலதாமதப்படுத்தினால், நாளைய தலைமுறையை நோயுள்ளதாக்கும் செயலில் அரசுக்கும் முக்கிய பங்கு இருக்கும்.
 

Read more...

நீங்க புகை பிடிக்கல ஆனாலும் இதைப் படிங்க

புதன், 30 மே, 2012


புகை உயிருக்கு பகை: இன்று புகையிலை எதிர்ப்பு தினம்

புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக சுகாதார நிறுவனத்தால் மே 31ம் தேதி, சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

புகையிலை ஒழிப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.

எத்தனை நச்சுபொருள்கள்: மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரணியாக புகையிலை கருதப்படுகிறது. புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் தான், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்துள்ளன. இவற்றில் 43, புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியவை.

அருகில் இருப்பவர்களுக்கும்: உலகளவில் 6 விநாடிக்கு ஒருவர் புகையிலையால் பலியாகிறார். ஆண்டுக்கு 60 லட்சம் பேர், புகையிலை மற்றும் சிகரெட்டால் இறக்கின்றனர். 2030க்குள் இது ஒரு கோடியாக அதிகரிக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இதில், 70 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் உள்ளனர். சிகரெட் பிடிப்பவர்களால் அருகில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 6 லட்சம் பேர் இப்படி பாதிக்கப்படுகின்றனர் என உலக சுகாதார நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"
ஸ்டைல்':வளர்ந்த மெட்ரோ நகரங்கள் மட்டுமல்லாமல் சிறிய நகரங்களிலும் வயது பாரபட்சம் இல்லாமல் "சிகரெட்' பிடிக்கின்றனர். பெரும்பாலும் வேலைப்பளு, உடல் பருமனை குறைக்க புகைக்கின்றனர் என்றும், சிலர் "ஸ்டைலுக்காக' புகைக்கின்றனர் என்றும் சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

இன்றே நிறுத்துங்கள்:புகை பழக்கத்தை: படிப்படியாக நிறுத்தாமல் ஒரேயடியாக நிறுத்துவதே சிறந்தது. இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. புகைக்காமல் இருந்தால் ரத்த அழுத்தம், இருதயத்துடிப்பு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு சீரடையும். புகை பிடிக்காமல் ஒருநாள் இருந்தால், ரத்தத்தில் கலந் திருக்கும் கார்பன் மோனாக்சைடு வெளியேற்றப்படுகிறது. நுரையீரல் சுத்தமாகிறது. இரண்டு நாட்கள் இருந்தால், உடலில் சேர்ந்துவிட்ட நிக்கோடின் அகற்றப்படும். சுவைக்கும் திறனும், நுகரும் திறனும் அதிகரிக்கும்.மூன்று நாட்களுக்கு பிறகு சுவாசிப்பது எளிதாகிறது. 2 முதல் 21 வாரங்களுக்குள் ரத்த ஓட்டம் சீரடைகிறது. 3 முதல் 9 மாதங்களுக்குள் இருமல், தும்மல் போன்ற குறைபாடுகள் குறைகிறது. நுரையீரலில் செயல்பாடு 5 முதல் 10 சதவீதம் அதிகரிக்கிறது. புகை பிடிப்பதை நிறுத்தி 4 ஆண்டுகளுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிடும் போது பாதியாக குறைகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு நுரையீரல் புற்று நோய் வரும் வாய்ப்பு, புகைப்பவர்களை ஒப்பிட்டால் பாதியாக குறைகிறது. புகைபிடிக்கும் பழக்கத்தை விட்ட முதல் வாரம் சிரமமாக இருக்கும். எனினும், இதனால் கிடைக்கும் பலன், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.

வாய், கன்னப் புற்றுநோய்க்கு புகையிலையே காரணம்:மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புகையிலை பாதிப்பால் வாய், கன்னப் புற்றுநோய்க்கு ஆளாவோர் மாதம் 5 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.புற்றுநோய் வரும் காரணங்களில் புகையிலைக்கு 70 சதவீதம் பங்குள்ளது. இந்தியாவில் அதிகம்பேர் சிகரெட், பீடி மற்றும் வாய்க்குள் சுவைக்கும் புகையிலையால் பாதிக்கப்படுகின்றனர். இரண்டாவதில் பெண்கள் அதிகம் பேர் உள்ளனர். புகையிலையால் ஏற்படும் புற்றுநோய் கன்னம், நுரையீரலை மட்டுமின்றி, சிறுநீரகம், கணையம், சிறுநீர்ப்பையும் அதிகம் பாதிக்கும்.

மதுரை அரசு ஆஸ்பத்திரி புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு உதவிபேராசிரியர் ரமேஷ் கூறியதாவது: சிகரெட் புகையானது, அருகில் இருக்கும், "பாசிவ் ஸ்மோக்கர்' எனப்படும் பெண்கள், குழந்தைகள், உடன் பணியாற்றுவோரை பாதிக்கிறது. சிகரெட்டில் உள்ள "நிக்கோட்டின்' புகைபழக்கத்திற்கு அடிமைப்படுத்தும் நச்சுப் பொருள். புற்றுநோயை ஏற்படுத்தும் 40க்கும் மேற்பட்ட வேறுநச்சுப் பொருட்கள் சிகரெட்டில் உள்ளன. புற்றுநோயை தவிர்க்க புகைப்பழக்கத்தை நிறுத்துவது ஒன்றே வழி. இதற்கென சாக்லேட்டுகள் வந்துள்ளன. இதனால், சுற்றுச் சூழல் பாதிப்பு, இருதய, நுரையீரல், ரத்தக்குழாய் நோய்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும். பில்டர் சிகரெட்டுகளால் எவ்வித பயனும் இல்லை. மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு புகையிலையால் வாய், கன்னம், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புக்குள்ளானவர்களில் 50 சதவீதம் பேர் வருகின்றனர். வாய்ப்புற்று நோயாளிகளுக்கு துவக்கத்தில் பற்களில் கறை ஏற்படும். நாக்கு, கன்னப்பகுதியில் வெள்ளைத் திட்டுகள் உருவாகும். அடுத்து லேசான புண் ஏற்படும். பின் கட்டியாக உருவெடுக்கும். ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்றால் நூறு சதவீதம் குணப்படுத்திவிடலாம். வாயில் ஆறாத புண், மூக்கில் ரத்தம் வருதல் இருந்தால் முதலிலேயே பரிசோதனை செய்துவிட வேண்டும். புகையிலையை அறவே தவிர்ப்பதே நல்லது.

Read more...

மனிதனுக்கு பெரும் சவாலாக உள்ள நோய்

வியாழன், 1 டிசம்பர், 2011


இந்த நூற்றாண்டில் மனித சமூகத்துக்குப் பெரும் சவாலாக உள்ள நோய்களில் மிக முக்கியமானது புற்றுநோய். இந்தியாவில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்றுநோயை முழுமையாகக் குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது உண்மைதான். இருப்பினும் புற்றுநோய் என்றாலே மரண தண்டனை என்று நினைத்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

மருத்துவத்தின் வளர்ச்சியால் புற்றுநோயைக் கட்டுப்படுத்த நல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் பூரணமாகக் குணப்படுத்தி விடலாம். நம் நாட்டைப் பொருத்த வரை குறிப்பாக தென்னிந்தியாவைப் பொருத்தவரை ஜீரண மண்டலத்தில் ஏற்படும் புற்றுநோய்கள் மிக அதிகம். அதற்கு நமது உணவுப் பழக்க வழக்கங்களும் ஓர் காரணம். இதயம்,  சிறுநீரகத்தைப் போல் ஜீரண மண்டலமும் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும். இன்னும் சொல்லப்போனால் இதயமும் சிறுநீரகமும் செயல்படுவதற்குத் தேவையான ஊட்டச்சத்தை உணவில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பணியை ஜீரண மண்டலம்தான் செய்கிறது.

Lumpectomy          Modified radical mastectomy

ஜீரண மண்டலத்தில் பிரச்சினை என்றால் மற்ற உறுப்புகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போய்விடும். ஜீரண மண்டலத்தில் உள்ள எல்லா உறுப்புகளிலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
வாயில் தொடங்கி மலக்குடல் வரை எந்த இடத்தில் வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். வாய், நாக்கு, உணவுக் குழாய், இரைப்பை, கல்லீரல், கணையம், பித்தப் பை, சிறு குடல், பெருங்குடல் என எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம்.
நம் நாட்டில் சிறுகுடல் புற்றுநோய் மிக அரிதாகக் காணப்படுகிறது. அதுபோல் பெருங்குடல் புற்றுநோயைப் பொருத்தவரை, மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் நாட்டில் இது குறைந்து காணப்படுகிறது.

 lung cancer pictures
உணவுக் குழாய், இரைப்பை, கல்லீரல் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுவது நம் நாட்டில் அதிகமாகக் காணப்படுகிறது. நமது தட்பவெட்ப நிலைக்கு மாறான உணவுப் பழக்க வழக்கம், மது, புகைப் பழக்கம் (புகையிலை போடுவதும்) தவிர ஹெபடைடிஸ் பி, சி வைரஸ்யால் ஏற்படும் மஞ்சள் காமாலை போன்றவை புற்றுநோய் வருவதற்கான காரணங்கள். நாள்பட்ட பெருங்குடல் வியாதியாலும் புற்றுநோய் வரலாம். சிலருக்குப் பாரம்பரியக் காரணங்களாலும் புற்று நோய் வரக்கூடும்.
புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள் என்ன?:
பசியின்மை, எடை குறைதல், சோர்வு, ரத்த சோகை போன்றவை பொதுவான அறிகுறிகள். இதுதவிர, எந்த இடத்தில் புற்றுநோய் வருகிறதோ அந்த இடத்துக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட அறிகுறிகள் தென்படுவதுண்டு.
உணவுக்குழாய் புற்றுநோய்:

1. 
நீர் மற்றும் உணவு விழுங்குவதில் சிரமம்;
2. 
தீராத முதுகு வலி;
3. 
பசியின்மை;
4. 
ரத்த சோகை.
இரைப்பை புற்று:

1. 
வயிற்றுப் பொருமல்;
2. 
வயிற்றின் மேல் பாகத்தில் வலி;
3. 
ரத்த வாந்தி;
4. 
சாப்பிட்ட பல மணி நேரம் கழித்து ஜீரணம் ஆகாமல் வாந்தி எடுத்தல்.
சிறுகுடல் புற்றுநோய்:

1.
வயிற்று வலி;
2. 
வயிற்றில் வீக்கம்;
3. 
தீராத வாந்தி;
4. 
வயிற்றுப் பொருமல்.

பெருங்குடல் புற்றுநோய்:

1. 
ரத்த சோகை;
2. 
மலத்தில் ரத்தம்;
3. 
வயிற்று வலி;
4. 
வயிறு வீக்கம்.
கல்லீரல் புற்று:

1. 
வயிற்றின் மேல் பாகத்தில் வலி;
2. 
மஞ்சள் காமாலை;
3. 
கல்லீரல் வீக்கம்;
4. 
வயிறு வீக்கம்.
கணையப் புற்று:

1. 
தீராத வயிற்று வலி;
2. 
வயிற்றில் பொருமல்;
3. 
முதுகு வலி,
4. 
திடீரென சர்க்கரை வியாதி வருதல்.
உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டிய முக்கிய அறிகுறிகள்: உணவு விழுங்குவதில் சிரமம், வயிற்றில் கட்டி, ரத்த வாந்தி, மலத்தில் ரத்தம், தீவிர எடை குறைதல், மஞ்சள் காமாலை, பசியின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் சென்று தக்க ஆலோசனை பெறவேண்டும்.
அறிகுறிகள் மற்றும் உடல் பிரச்சினைகளின் அடிப்படையில் முழு உடல் பரிசோதனை செய்வது மிக முக்கியம். அறிகுறிகள் கொண்டு எந்தப் பாகத்தில் புற்றுநோய் உள்ளது என கணித்து அதற்குரிய பரிசோதனை செய்தால் புற்றுநோய் எந்த நிலையில் உள்ளது; எவ்வளவு தூரம் பரவி உள்ளது. எந்த சிகிச்சை முறையை கையாண்டால் பலன் கிட்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
பரிசோதனைகள்: ரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எண்டாஸ்கோப்பி முறைகள், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் "நிக்யூளியர் போன் ஸ்கேன்' (Nuclear Bone Scan) ஆகிய பரிசோதனைகள் மூலம் புற்றுநோயைக் கண்டறியலாம். எல்லா நோயாளிகளுக்கும் எல்லாப் பரிசோதனைகளும் செய்ய வேண்டியதில்லை. அவர்களது பிரச்சினைக்கு ஏற்ப தகுந்த பரிசோதனைகள் மூலம் புற்றுநோயைக் கண்டறியமுடியும்.
நவீன மாற்றங்கள்: இருபது ஆண்டுக்கு முன்பு புற்றுநோய் உள்ளது எனக் கண்டுபிடிப்பது மிகக் கடினம். சாதாரண எக்ஸ் ரே பரிசோதனை மற்றும் பேரியம் எக்ஸ்ரே பரிசோதனைகள் மூலம்தான் ஓரளவு கண்டுபிடிக்க முடிந்தது.
இதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது மிகவும் சிரமமாக இருந்தது. பலர் இறக்கும் தருவாயில்தான் நோய் இருப்பதையே கண்டுபிடிக்க முடியும். வியாதி என்ன என்று கண்டுபிடிப்பதற்கே அறுவைச் சிகிச்சை செய்யும் நிலை இருந்தது.
இதனால் புற்றுநோய்க்கு சிகிச்சையே இல்லை என்று பரவலாக நம்பப்பட்டது. ஆனால் மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி காரணமாக பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை முறைகளில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் புற்று நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க முடிகிறது. எந்த புற்றுநோய்க்கு என்ன சிகிச்சை என துல்லியமாகத் தேர்வு செய்யமுடிகிறது.
எண்டோ அல்ட்ரா சோனோகிராபி: உணவுக் குழாய், மலக்குடல், பித்தப் பை, கணையம் ஆகிய உறுப்புகளில் உள்ள புற்று நோயைத் துல்லியமாக ஆரம்ப நிலையிலேயே கண்டறிய எண்டோ அல்ட்ரா சோனோகிராபி என்ற கருவி உள்ளது. இதில் ஸ்கேனும் எண்டாஸ்கோப்பியும் இணைந்து செயல்படும்.
புற்று நோய் எந்த அளவில் உள்ளது. பாதிக்கப்பட்ட நபர் அறுவைச் சிகிச்சைக்குத் தகுந்தவர்தானா எனத் தெரிந்துகொள்ளலாம்.
விடியோ எண்ட்ராஸ்கோப்பி: சிறுகுடல் முழுவதும் நேரடியாகப் பார்த்து புற்று இருந்தால் அதை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க விடியோ எண்ட்ராஸ்கோப்பி உதவுகிறது.
பொதுவான சிகிச்சை முறைகள்: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து முழுவதும் அகற்றுவதே சிறப்பான சிகிச்சை. இந்த வகையில் அறுவைச் சிகிச்சை முறையே புற்றுநோய் சிகிச்சைக்குச் சிறந்தது.
உணவுக் குழாய் புற்று, வாய்ப் புற்று போன்ற சில வகை புற்றுநோய்களுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்கலாம். சில வகை புற்று நோய்களுக்கு ரேடியோதெரபி, ஹீமோதெரபி என கதிரியக்க முறையோடு மருந்துகள் கொடுத்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருக்கும்.
சில புற்றுநோய்க் கட்டிகளை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றிவிட்டு தொடர்ந்து கதிரியக்க சிகிச்சை கொடுக்க வேண்டியதிருக்கும். பாலிஃபெக்டமி என்ற முறையால் எண்டாஸ்கோப்பி மூலம் பெருங்குடலில் ஏற்படும் சதை வளர்ச்சியை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிய முடியும்.

கூட்டு சிகிச்சை: பொதுவாக புற்றுநோய் உள்ளவர்களுக்கு எல்லா முறையும கலந்து செய்யக் கூடிய கூட்டு சிகிச்சைதான் சிறந்தது. எண்டாஸ்கோப்பி சிகிச்சை, அறுவைச் சிகிச்சை என எல்லா வழிகளையும் கடைப்பிடித்து புற்றுநோய் திசுக்களே இல்லை என்ற நிலையை ஏற்படுத்தவேண்டும்.
புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை அளித்து முற்றிலும் குணப்படுத்திவிடலாம். ஆனால் பலர் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர். எனவே ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
வலி இல்லாமல் வாழ: சரி புற்று நோய் முற்றிவிட்டது. இனி குணப்படுத்த முடியாது எனத் தீர்மானத் தெரிந்துவிட்டது. சரி, அவர்களை அப்படியே விட்டுவிடலாமா. நிச்சயம் கூடாது. இருக்கும் நாள் வரை வலி இல்லாமல் மிகச் சிரமப்படாமல் கூடிய வகையில் வாழ்நாளைக் கூட்டிக் கொடுத்து நல்ல வாழ்க்கைச் சூழலை (Quality of life) ஏற்படுத்திக் கொடுப்பது டாக்டரின் கடமை. இதை ஆங்கிலத்தில் Palliative Treatment என்று கூறுகிறோம்.
எண்டோஸ்கோப்பி: ஆரம்ப நிலையில் உள்ள புற்று நோய் மற்றும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கும் சிகிச்சை அளிப்பதில் எண்டோஸ்கோப்பி பிரசித்து பெற்றது. வயிற்றைத் திறந்து சிகிச்சை அளிக்கத் தேவையில்லை. தீவிர மயக்க மருந்து தேவையில்லை. ஓரிரு மாதக் குழந்தை முதல் 100 வயது வரை எல்லா வயதினருக்கும் சிகிச்சை அளிக்கலாம்.
இதயம், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கும் இத்தகைய சிகிச்சை முறைகளை எளிதாகக் கையாளலாம்.
உணவு, உமிழ் நீர் கூட விழுங்க முடியாத முற்றிய உணவுக் குழாய் புற்றுநோய்க்கு எண்டோஸ்கோப்பி சிகிச்சையே சிறந்தது. எண்டோஸ்கோப்பி கருவி கொண்டு பலூன் மூலம் உணவுக் குழாயை விரிவடையச் செய்து செயற்கைக் குழாய் பொருத்தி அடுத்த நாளே உணவு உட்கொள்ளும் நிலை ஏற்படுத்த முடிகிறது.
இரைப்பை, குடல் அடைப்பை நீக்கவும் எண்டோஸ்கோப்பி மூலமாக சிகிச்சை தர முடியும். பித்தக் குழாய் புற்றுநோயால் தீவிர மஞ்சள் காமாலை ஏற்பட்டவர்களுக்கு எண்டோஸ்கோப்பி மூலமாக புதிய செயற்கைக் குழாய் பொருத்தி மஞ்சள் காமாலையைக் குறைத்து சிகிச்சை அளிக்கலாம்.
பித்தக்குழாயில் புற்றுநோய் உள்ளவர்களுக்கு அரிப்பு, ரத்தக் கசிவு, சோர்வு, மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. செயற்கைக் குழாய் பொருத்தியவுடன் அரிப்பு நின்றுவிடுவதுடன் ரத்தக் கசிவு நின்றுவிடும், பசி ஏற்படும். மஞ்சள் காமாலை போய்விடும்.
கணையத்தில் புற்றுநோய் இருந்தாலும் தீராத வயிற்று வலி, மஞ்சள் காமாலை, பசியின்மை, சோர்வு ஏற்படும். கணையம் வழியாக பித்தக் குழாய் வருவதால் கணையத்தில் உள்ள புற்றுநோயால் பித்த நீர் செல்வது தடை படுகிறது. எண்டோஸ்கோப்பி மூலம் செயற்கை குழாய் பொருத்தி பித்தநீர் செல்ல வழி செய்யப்படுகிறது.

* 
சோர்வு, பசியின்மை, எடை குறைதல், ரத்த சோகை ஆகியவை புற்று நோய்க்கான பொதுவான அறிகுறிகள்.

* 
உணவுக்குழாய் முதல் கணையம் வரை உடலில் இடத்துக்குத் தகுந்தவாறு புற்றுநோய் அறிகுறிகள்மாறுபடும்.

* 
உணவு விழுங்குவதில் சிரமம், மலத்தில் ரத்தம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் செல்லுங்கள்



Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets