உங்கள் வருகைக்கு நன்றி

முதியோர் பிரச்சினைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதியோர் பிரச்சினைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வயதான பின் வருந்துவதில் பயனில்லை.

செவ்வாய், 27 ஜூலை, 2021

ஓய்வுபெற்ற பின் நிம்மதியாக இருக்க, இளமையிலேயே முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? பாதுகாப்பான இடத்திற்கு நகர்வது என்பது தான். அலைந்து, திரிந்து வருகிறீர்கள். சற்று ஓய்வெடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். ஒரு கட்டடத்தின் கீழ் அமர்கிறீர்கள். அந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் விழும் அளவில் உள்ளது. அங்கே நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியுமா? அதுமாதிரி தான், ஒவ்வொரு மனிதரின் ஓய்வுகாலமும். ஆணோ அல்லது பெண்ணோ, 60 வயதுக்கு பிறகு தங்கள் வாழ்க்கையில் பொருளாதார கஷ்டங்களை அனுபவிக்காமல், பாதுகாப்பான மனநிலையில் இருப்பது தான் நிம்மதியான ஓய்வு காலத்திற்கு அடிப்படை.ஆனால், ஓய்வு காலத்தை நெருங்குபவர்களின் நிலையும், இன்னும் சில ஆண்டு களில் ஓய்வுபெறப் போகிறவர்களின் நிலையும் அப்படியா இருக்கிறது? அரசுத்துறை ஊழியர்களுக்காவது 'பென்ஷன்' கிடைத்து விடுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு, பென்ஷன் என்று எதுவும் கிடையாது. பி.எப்.,பில் சேர்த்து வைத்த சில லட்சங்களை, வாரிசுகளின் திருமணத்திற்கு அல்லது பிற குடும்ப செலவுகளுக்கு செலவழித்து விட்டு, வெறும் கையுடன் தான் பெரும்பாலானோர் இருப்பர். வயதான காலத்தில், மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் நேரத்தில் மனைவியுடன், கையில் சொற்ப பணத்துடன், மனதுக்கு பிடிக்காத வேலையுடன் தான் எஞ்சிய காலத்தை ஓட்ட வேண்டிய நிலை இருக்கும்.வாழ்நாள் முழுக்க, குடும்பத்திற்காக உழைத்து விட்டு, 60 வயதுக்கு பின் தனக்கும், தன் மனைவிக்கும் போதிய பணமில்லாமல், வாரிசுகளை நம்பி பிழைக்க வேண்டிய நிலை தான் பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. அப்போது தான் புரியும், 'இளம் வயதிலேயே, கை நிறைய சம்பாதிக்கும் காலத்திலேயே, ஓய்வுக்கு பிறகு நிம்மதியாக இருக்க, போதிய பணத்தை முதலீடு செய்திருக்காமல் விட்டு விட்டோமே' என்று. அந்த எண்ணம், 60 வயதுக்கு பிறகு, 60ஐ நெருங்கும் போதோ வந்து பயனில்லை. இளம் வயதிலேயே வர வேண்டும்; ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய வேண்டும். ஓய்வு காலத்திற்கான பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்க வேண்டும். பொதுவாக இளம் வயதில் தான் நாம் அதிகமாக சம்பாதிப்போம். அப்போதே ஒரு குறிப்பிட்ட தொகையை ஓய்வுக்கு பிறகு தேவைப்படும் செலவுகளுக்காக ஒதுக்க வேண்டும். இதை மொத்தமாக செலவு செய்ய முடியாது; சிறுக சிறுக செய்ய வேண்டும். ஓய்வுக்கு பின், எவ்வளவு பணம் மாதந்தோறும் தேவைப்படும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப சேமிப்பு, முதலீடு போன்றவற்றை செய்யவேண்டும்.இப்படி செய்தால், முதிய காலத்தில் பணத்திற்காக, பிறரிடம் போய் நிற்க வேண்டிய தேவை ஏற்படாது!

Read more...

மனிதனின் வயிறு,

புதன், 19 ஜூலை, 2017

மனித இனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான  உடலையும், நல்ல ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த சில அருமையான வழிகள்...
1 உடற்பயிற்சிக் கூடம்
வீட்டுக்கு அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது தினமும் 45 நிமிடங்கள், வாரம் 4 நாட்கள்  பயிற்சி மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு அதிகமாக உடலில் தங்கி யுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce  or Burn Extra  Calories) பயன் பெறலாம். பட்டினியாக - ஒருவேளை அல்லது இருவேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது  மடமையே. தசைகள் வலுவிழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An empty stomach can  lead to muscle loss).
2
ஆரோக்கிய உணவு 
நம் முன்னோர் கூறியபடி Eat breakfast like a king, lunch like a prince and dinner like a  pauper என்பதைப் பின்பற்றுங்கள். அனைத்து வகை  தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன் என அனைத்தும் கலந்த  சரிவிகித உணவு (Balanced Diet)    எடுத்துக்கொள்வது அவசியம். அதிக அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த  பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே 5 வேளைகளுக்கு சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு  உத்தமம். 
3. நிறைய தண்ணீர் 
உங்களின் எடையை சீராக வைத்துக்கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.

4.
எலும்புகளுக்குகால்சியம்
அதிக உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ  கால்சியம் எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில் தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில் தசைப்பிடிப்பு உண்டாகும். 

5
ஆழ்ந்த உறக்கம்

தூக்கமின்மையே இதயம், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு  மூலகாரணம். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால் உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த  நாளங்கள் அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான  உறக்கம்!

Read more...

முதல் முறை விழுதல் - முதுமையின் தொடக்கம். இரண்டாம் முறை விழுதல் - முதுமையின் முடிவு.

புதன், 23 மே, 2012


வயது ஆனவர்கள் அடிக்கடி கீழே விழுந்து விடுகிறார்கள். ஒவ்வொரு முறை கீழே விழும் போது தலையில் அடிபட்டு இறந்து விடுவாரோ அல்லது எலும்பு முறிவு ஏற்பட்டு படுக்கையில் படுத்து விடுவாரோ என்ற பயம் என்னை வாட்டும். இப்படி முதியவர்கள் அடிக்கடி கீழே விழுவதைத் தடுக்க ஏதாவது வழி உண்டா?
வயதாக ஆக உடலைச் சரிசமமான முறையில் வைத்துக் கொள்ள இயங்கும் உறுப்புகளின் திறன், கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வரும். உடலைச் சரியான நிலையில் வைத்துக் கொள்வதற்கு உள் காது, சிறுமூளை, கண், தசைகள் மற்றும் மூட்டுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்த இணைப்பில் ஏதேனும் குறைபாடு நிகழ்ந்தால், நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உண்டு. இந்த மாற்றம், முதுமையில் அதிகம் ஏற்படுவதால் முதியவர்கள் அடிக்கடி கீழே விழுகிறார்கள்.

கீழே விழுவதற்கான காரணங்கள்:
* நரம்பு சார்ந்த நோய்கள், உதாரணம்: அறிவுத்திறன் வீழ்ச்சி, உதறுவாதம், பக்கவாதம்.

* காது சார்ந்த நோய்கள்

* கண் பார்வை குறைதல். உதாரணம்: கண்புரை.

* மூட்டுவலியும், தசைகள் சார்ந்த நோய்களும்.

* ரத்த அழுத்தத்தினால் மாற்றம் ஏற்படுவது. அதாவது, ஒருவர் படுத்த நிலையில் இருக்கும்போது ரத்த அழுத்தம் சரியாக இருக்கும். ஆனால், திடீரென்று எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போது ரத்தம் அழுத்தம் வேகமாகக் குறைந்து விடுகிறது. இதனால், கீழே விழ வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

* மருந்துகள். உதாரணம்: நீர் மாத்திரை, தூக்க மாத்திரை, உயர் ரத்த அழுத்த மாத்திரை, மனநோய்க்குக் கொடுக்கப்படும் மாத்திரை.

* அளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.

* வழுவழுப்பான தரை, ஈரமான தரை, மேடுபள்ளமான தரை, அதிக உயரமுள்ள படிக்கட்டுகள்.

* மங்கிய வெளிச்சம்.

* அறையில் உள்ள தேவையற்ற பொருட்கள். உதாரணம்: மேசை, நாற்காலி.

இப்படி, முதுமையில் கீழே விழுவதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருக்கின்றன.

கீழேவிழுந்தால் ஏற்படும் தொல்லைகள்:
கீழே விழுவதால் சிறிய சிராய்ப்பிலிருந்து எலும்பு முறிவு வரை பல தொல்லைகள் ஏற்படலாம். சுமார் 20 சதவிகித முதியவர்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு ஏற்படுவதுண்டு. தலையில் அடிபட்டு காயமும், அதனால் மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருமுறை கீழே விழுந்ததும் மறுபடியும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தால் பலர் நடக்கவே பயந்து, படுத்த படுக்கையாகிவிடுகிறார்கள்.

கீழே விழுவதை தடுக்க:
உடலை முழுமையாகப் பரிசோதனை செய்து, கீழே விழுவதற்கு நோய்கள் ஏதேனும் காரணமா என கண்டறிந்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.
* கண் பார்வை பரிசோதனை செய்து கொள்ளவும். பார்வைக் குறைவால் அணியும் கண்ணாடி சரியில்லாமல் போனால் கூட, கீழே விழ ஒரு காரணமாக அமையும். ஆகவே, சரியான கண் கண்ணாடி அணிவது மிக அவசியம்.

* காதை முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காதல் அழுக்கு சுத்தம் செய்யப்படாமல் இருந்தால் கூட நிலை தடுமாறலாம்.

* முதியவர்கள், சாபிடும் மருந்துகளைப் பற்றியும் டாக்டரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். ஏனென்றால், மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட கீழே விழ வாய்ப்பு உண்டு.

* மது அருந்துவதை நிறுத்த வேண்டும்.

* படுக்கையில் இருந்து எப்போதும் வேகமாக எழுந்து, உடனே நடக்கக் கூடாது. மெள்ள எழுந்து உட்கார வேண்டும். பிறகு சற்று நேரம் கழித்து மெதுவாக நிற்க வேண்டும். அதன் பின்னரே நடக்க வேண்டும்.

* நடக்கும்போத கைத்தடி அல்லது தேவையான வாக்கிங் ஃப்ரேம்உடயோகிக்க வேண்டும். மற்றவர்கள் கேலியாகப் பார்ப்பார்கள் என்று கூச்சப்படத் தேவையில்லை. நம் உடலை நாம் தான் பேணிக் காக்க வேண்டும்.

* பொருத்தமான காலணிகளை அணிவது சிறந்தது.

* தினமும் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி, தசைகள் மற்றும் மூட்டுகளின் திறனை அதிகப்படுத்தி கீழே விழுவதைத் தடுக்க உதவுகிறது, உடலைச் சரிசமமாக வைத்துக் கொள்ள சிறப்பு உடற்பயிற்சிகளும் தேவை.

* படுக்கை அறை, குளியல் அறை, படிக்கட்டுகளில் போதுமான வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

* அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை கைக்கு எட்டும் தூரத்திலேயே வைக்க வேண்டும். உதாரணம்: டெலிஃபோன், பேனா, கண்ணாடி, மருந்து டப்பா, சாவி.

* முதியவர்கள் அதிகமாகப் புழங்கும் இடங்களில் இரும்புக் கைப்பிடிகளை பொருத்த வேண்டும். உதாரணம்: குளியலறை, கழிவறை, படிக்கட்டு.

* குளியலறை வழுவழுப்பு இல்லாமலும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


முதல் முறை விழுதல் - முதுமையின் தொடக்கம்.
இரண்டாம் முறை விழுதல் - முதுமையின் முடிவு.

இப்பொழுது புரிகிறதா கீழே விழுதல் என்பது ஒரு விபரீதமான தொல்லை என்று? முதியவர்கள், சற்று நிலை தடுமாற்றம் உள்ள கைத்தடி மற்றும் வாக்கர் போன்ற உபகரணங்களை உபயோகப்படுத்தி கீழே விழுதலைத் தடுத்து மகிழ்ச்சியாக வாழலாம்!

Read more...

இதை வர்த்தகமாக்கி வாழ நினைக்கலாமா?

திங்கள், 5 மார்ச், 2012

முதுமையின் அனுபவம்இளமையின் செயல் வேகம்'' எனக் கலந்த குடும்ப அமைப்பையே நமது முன்னோர் "கூட்டுக் குடும்ப உறவு'களாக வளர்த்தெடுத்தனர். ஆனால்இன்றைய இளம் தலைமுறையினரோ மேலை நாட்டுக் கலாசாரத்தையே விரும்புகின்றனர்.
இத்தகைய கலாசாரப் போக்கால்பெற்றெடுத்தவர்கள்உடன் பிறந்தவர்கள்மரத்தின் கிளைகள் போல நிற்கும் அக்கம்பக்கத்துச் சொந்தங்கள் என எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிபணமும்அதனால் வரும் சிற்றின்பமுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது.
அறத்தை மறந்த தலைமுறையால்தான் தற்போது ஊழல்முறைகேடு என பல தவறுகள் பொதுவாழ்வில் அரங்கேறி வருகின்றன என்பது சமூக ஆர்வலர்களது ஆதங்கம்.
அறத்தை மையமாக வைத்து தேடப்படும் பொருளும்அதனால் வரும் இன்பமும் தனி மனிதருக்கு மட்டுமல்லாது சமூகத்துக்கும் மிகுந்த பயன்தரக்கூடியவையாக இருக்கும். ஆனால் அறத்துக்குப் புறம்பாகச் சென்று தேடும் பொருளும்இன்பமும் தனி மனிதரை வேண்டுமானால் மேம்படுத்தும். சமூகத்தை அழிவு நிலைக்கே கொண்டு செல்லும்.   இக்கருத்தை நமது இன்றைய தலைமுறையினர் மறந்துபோனதற்கு மாறிவிட்ட கல்விச்சூழலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

நமதுநாடில் சமீபகாலமாக நடந்துவரும் சம்பவங்கள் நமது கலாசாரம் காணாமல் போய்வருவதை எச்சரிப்பதாகவே அமைந்துள்ளன. நல்ல பணியில் இருக்கும் மகன்மருமகள் மற்றும் பேரக் குழந்தைகள் என அனைவரும் இருந்தும் ஒரு மூதாட்டி அநாதை இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
மாமியாரை அநாதை இல்லத்தில் சேர்க்கக் கோரும் மருமகள்மாமனாரை தன்னுடன் தங்க அனுமதிக்கக் காரணம்அவர் கடைகளுக்குச் செல்லுதல் உள்ளிட்டசிறு சிறு வேலைகளுக்கு பயன்படுகிறார் என்பதுதான். ஆகபயன்படாமல் போகும் நாற்காலி உள்ளிட்ட பொருள்களைக்கூட தனி அறையில் வைத்துப் பாதுகாக்கும் பழக்கமுள்ள நமது மண்ணில் வேலை செய்யமுடியாத நிலையில் முதியோர்களை அநாதை இல்லங்களுக்கு அனுப்புகிற அநாகரிகம் வளர்ந்திருப்பதை என்னவென்று சொல்ல?
தமிழகத்தில் மட்டும் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் உள்ளன. இதில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் குக்கிராமங்களில் கூட அநாதை முதியோர் இல்லங்கள் அதிகமாகத் தென்படத் தொடங்கிவிட்டன.
மேலும்வயதானவர்களை மாத்திரை கொடுத்து மரணிக்கவைத்தல்எண்ணெய் தேய்த்து குளிர்ச்சியால் இறக்கவைத்தல் என பல வழிகளில் முதியோர் கொலைகள் மறைமுகமாக நடந்துவருவதும் அதிர்ச்சியளிக்க வைக்கிறது.
மாதத்துக்கு பலமுதியோர் தற்கொலை செய்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. சாப்பிடக்கூட திராணியற்றுசாகப்போகும் நிலையில் உள்ள பெற்றோரைபிள்ளைகளே அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டுதிரும்பிப் பார்க்காமல் செல்லும் நிகழ்வுகளும் அதிகம் நடக்கின்றன. அப்படிக் கைவிடப்படும் முதியோரைஉதவிக்கு ஆள் இல்லை எனக் காரணம் கூறி மருத்துவமனையிலிருந்தும் விரட்டிவிடுகிறார்கள். இதனால்அந்த முதியோர்மருத்துவமனை வளாகத்தில் குளிரிலும்வெப்பத்திலும் உடல்நடுங்க கிடப்பது மனதை பதைபதைக்கச் செய்வதாக உள்ளது.
அந்திம காலத்தில் உறவுகள் அற்ற நிலையில்அந்த அநாதை இல்லத்திலே அவர்களில் பலரும் கடைசி மூச்சையும்தங்களது உறவுகள் மீதான ஏக்கத்தையும் காற்றில் கரைக்கின்றனர். இறந்த நிலையில் அந்த இல்லத்தினரே சடங்குகள் செய்து புதைத்தும் வருகின்றனர்.
இதைவிடக் கொடுமையான சம்பவம்வாடகை வீட்டில் வயதான பெற்றோர் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையும் தென்மாவட்டங்களில் உள்ளது. அப்படி வயதான பெற்றோர் இருந்தால்மாதம் தனிக் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. வாடகை வீட்டில் குடியிருப்போரில் வயதானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தால்சடலத்தை வீட்டு வாசலில் மட்டுமே வைக்கவேண்டும் என்பதும் வீட்டு உரிமையாளர்களின் நிபந்தனையாகும். இதுபோன்று பிரச்னைகள் போலீஸ் நிலையம் வரை விசாரிக்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது.
ஆம்! கல்தோன்றிமண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய நாகரிகம் மிகுந்த மூத்த குடிகளாகிய தமிழர்கள்தான் இப்போது அனைத்தையும் வர்த்தகமாக்கி வாழ நினைக்கிறோம் என்பது வருத்தத்துக்குரியதே.
முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டும் அதை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.. முதியோருக்கான உரிமைகள் எங்கும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதுகுறித்து பல முறை மாநில தலைமைச்செயலர் முதல் நீதிமன்றம் வரை எடுத்துச்சென்றும் இன்னும் உரிய தீர்வு காணப்படவில்லை என வருத்தப்படுகிறார் முதியோர் நலனுக்காக பல ஆண்டுகளாகப் போராடிவரும் மதுரை இந்திரம் டிரஸ்ட் அமைப்பின் வழக்குரைஞர் கா.ராம்பிரபு.
ஏணிகள் இல்லாமல் உயரமான இடத்தை எட்டமுடியாது. ஏறிவந்துவிட்டோமே என ஏணியை எட்டி உதைத்தால் பிறகு இறங்கவேண்டிய நேரத்தில் பாதுகாப்பாக இறங்கமுடியாத நிலை ஏற்படும். வாழ்க்கையும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில் நமது நலனையே முன்னிறுத்தி வாழும் பெற்றோர்வயதாகி குழந்தைகள் போல செயல் இழந்து நிற்கும்போது அவர்களை பெற்றோர் இடத்தில் இருந்து பேணிக் காப்பதுதானே மனிதத்துவம். அதை மறந்து அறம் மறந்த மணிதர்களாக இன்றைய தலைமுறையினர் இருப்பது சரியல்ல என்பதை உணர்வது நல்லது.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets