உங்கள் வருகைக்கு நன்றி

குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை வளர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஒவ்வொரு குடும்பமும் அழகானது

சனி, 12 ஜூன், 2021

என் மகன் பள்ளியில் படித்த போது, ஒரு நாள் வந்து, 'அம்மா, என் நண்பன் தன் பிறந்த நாளை, நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கொண்டாடினான். அதில் நான் பங்கேற்றேன்; மகிழ்ச்சியாக இருந்தது. அதுபோல, என் பிறந்த நாளையும், அந்த நட்சத்திர ஓட்டலில் கொண்டாட வேண்டும்' என்றான்.'அதற்கு எவ்வளவு பணம் செலவாகும்?' எனக் கேட்டேன். '8,000 ரூபாய் ஆகும்' என்றான். அவனிடம் நான், 'அந்த பணத்தை நம் வீட்டில் வேலை பார்க்கும் அல்லது தெருவோரத்தில் சிரமமான முறையில் வாழ்க்கை நடத்தும் ஒருவரின் மகளுக்கோ அல்லது மகனுக்கோ கல்வி செலவுக்காக கொடுத்தால், ஓராண்டுக்கு அந்த பணம் உதவும். 'அதை நீ சில மணி நேரத்தில் ஆடம்பரமாக செலவழித்தால், அதனால் எந்த பயனும் இருக்காது' என்றேன்.மகனும் கேட்டுக் கொண்டான். எனவே, பணம் தொடர்பான விஷயங்களை குழந்தைகளுடன் அமர்ந்து பேசுங்கள். வீட்டில் பணத்திற்கு என்ன கஷ்டம் இருக்கிறது; பணம் எப்படி செலவாகிறது; எவ்வளவு வருமானம் உள்ளது போன்ற விபரங்களை குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.குழந்தைகளை உங்களுடன் சேர்த்து வீட்டு வேலைகளில் பழக்குங்கள். நிறைய பெற்றோர் வீட்டு வேலைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்காமல் இருக்கின்றனர்; அது தவறு. செல்லமாக வளர்க்க வேண்டியது தான். அதற்காக, துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, சமையலில் சிறிய அளவில் உதவி போன்றவை கூட செய்யாமல் இருக்கக் கூடாது. குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுக்கும் போது, அவர்கள் பெரியவர்களாக வளர்ந்த பிறகு, தேவைப்பட்டால் தனியாக சமைத்து சாப்பிட முடியும்.என் குழந்தைகள் சிறியவர்களாக இருந்த போது, அவர்களை பார்த்துக் கொள்வதற்காக, வேலைக்கு சென்ற நான், மூன்று மணி நேரம் மட்டுமே பணியாற்றினேன். அதன் பிறகு, அவர்கள் பள்ளிக்கு சென்ற போது, ஐந்து மணி நேரம் பணியாற்றினேன். அவர்கள் வெளிநாடுகளில் படிக்க, பணியாற்ற சென்ற போது, 'ஓவர் டைமில்' நான் பணியாற்றினேன்.எனவே, வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப வேலை பார்க்க வேண்டும். வெற்றி பெற்ற ஒவ்வொரு பெண்ணின் பின்னணியிலும் ஒரு ஆண் இருப்பார். அவர் கணவராகவோ, மகனாகவோ, தந்தையாகவோ கூட இருக்கலாம். எனவே, ஆண்களை பெண்கள் மதிக்க வேண்டும்.ஒவ்வொரு குடும்பமும் அழகானது தான். அவர்களை போல இல்லையே என, ஒப்பிட்டு பார்க்காதீர்கள். நம் குடும்பத்தை அழகாக வைப்பது நம் கையில் தான் உள்ளது!

 

'இன்போசிஸ்' கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி:

 

Read more...

குழந்தை வளர்ப்பு.

வெள்ளி, 20 டிசம்பர், 2019


வீட்டின் சின்னச்சின்ன வேலைகளில், குழந்தைகளை ஈடுபடுத்துவதால், அவர்களின் ஆற்றல் மேம்படு.,  குழந்தை கள், 2 வயதாக இருக்கும் போது, தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து தாங்களே சாப்பிட துவங்குவர். பெற்றோர் போல, ஆபிஸ் கிளம்புவது, சமைப்பது என, நடிக்கத் துவங்குவர். குழந்தைக்கு, 3 வயதானதும், கழிவறைக்கு தானே சென்று வர பழக்க வேண்டும். 4 வயதானதும், கழிவறையை சுத்தப்படுத்த, அந்தக் குழந்தையை பழக்க வேண்டும். இப்படியே, 5 வயது குழந்தை, பள்ளிக்கூட பை மற்றும் சாப்பாட்டு கூடையை மறக்காமல் எடுத்து வர வைக்க வேண்டும்.நன்கு நடமாட, பேச, வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தெரிய துவங்கிய குழந்தைகளுக்கு, வீட்டின் சின்னச்சின்ன வேலைகளை செய்ய கொடுக்கலாம். உதாரணமாக, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது; சாப்பிட உணவு தட்டை எடுத்து வருவது; ஷூ பாலிஷ் போடுவது; விடுமுறை நாட்களில், வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது என்பன போன்ற வேலைகளை செய்ய சொல்லலாம்.எனினும், சமையல் அறையில் நேரடியாக ஈடுபடுத்துவது, துணிகளை இஸ்திரி போடுவது போன்ற கடினமான பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தவே கூடாது. மாறாக, மீன் வளர்த்தல், பறவை, நாய்க்குட்டி, பூஞ்செடிகள் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் வேலை செய்யும் போது, அவற்றில் குறைகளை காண்பிக்காமல், இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை, பக்குவமாக சொல்லிக் கொடுங்கள். முடிந்த வரை, மொபைல் போன்கள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி போன்றவற்றில், அவர்களின் ஆர்வம் செல்லாத வகையில், பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.இதனால், எந்தச் சூழ்நிலை என்றாலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் மனப் பக்குவம், திறமை குழந்தைகளுக்கு வந்து விடும். இதற்கு, பெற் றோரின் ஒத்துழைப்பும், அரவணைப்பும் குழந்தைகளுக்கு அவசியம்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், 'அன்றாட வீட்டு வேலைகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பது தவறு. அவ்வாறு செய்தால், குழந்தைகளின் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மன தைரியம், வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்குவம், உடனிருப்போருடன் உறவாடும் உளவியல் தன்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்' என்கிறது.வீடு என்றால், வேலைகளை எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை, குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள்!
நாகர்கோவில்குழந்தைகள் டாக்டர் ஷபி:

Read more...

குழந்தையின் அறிவுத்திறன் பல மடங்கு மேம்படும்.

புதன், 13 மார்ச், 2019

குழந்தையின் கை நரம்பு, தசைகளை வலுவாக்கும், 'பைன் மோட்டார் திறன்' பயிற்சி மூளை, கை, கண் மூன்றும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான திறனை அதிகரிக்க, 'பைன் மோட்டார் திறன்' பயிற்சி என்று ஒன்று உண்டு. இதை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தினால், கவனிக்கும் திறன் அதிகரிக்கும்; கையெழுத்தும் அழகாகும். ஒன்றரை வயதில் இருந்தே, இப்பயிற்சி தரலாம். வீட்டில் சின்னச் சின்ன பயிற்சிகள் கொடுப்பதன் மூலமே, குழந்தைகளிடம் இத்திறனை அதிகரிக்கலாம். பானை அல்லது பக்கெட்டிலிருந்து கைகளில் தண்ணீர் அள்ளி, அதிகம் சிந்தாமல் அருகிலிருக்கும் வாட்டர் பாட்டில்களில் ஊற்றி நிரப்ப, பயிற்சி வழங்கலாம். இதனால், குழந்தைகளின் கை விரல்கள் வலுப்பெறும்; கவனத்திறனும் அதிகரிக்கும். குழந்தைகளின் உடையில் இருக்கும் பட்டன்களை, அவர்களே போட, பயிற்சி கொடுக்கலாம். முட்டைகளை வைக்கும் பெட்டியில், ஒவ்வொரு குழியிலும் ஒவ்வொரு நிறத்தை பெயின்ட் செய்து, குழந்தைகளிடம் பல நிறங்களில் பந்துகளை கொடுத்து, அந்தந்த நிற குழிகளில் நிரப்ப சொல்லலாம். பந்துகளுக்கு பதில், கூழாங்கற்களில் பெயின்ட் செய்தும் பயன்படுத்தலாம். பல்வேறு நிறமுடைய உருளை வடிவ வற்றல்களை வாங்கி கொடுத்து, நுாலில் கோர்க்கவும், நிறங்களை கற்கும் வயது எனில், குறிப்பிட்ட நிறத்தை சொல்லியும், கோர்க்க சொல்லலாம். இதனால், குழந்தைகள் எந்த பொருளையும் இறுக்கமாக பிடிக்கும் திறனை பெறுவர்; இது, நாளடைவில் அவர்கள் பென்சில், பேனாவை எளிதாக பிடித்து எழுத உதவும். இதுதவிர, நிறங்களையும் நினைவில் கொள்வர். வெவ்வேறு வண்ணங்களை குழந்தைகளின் விரலில் தடவி, ஒரு தாளில், அவர்களின் விரல்களை அச்சு வைக்க சொல்லலாம். 2 வயதுக்கு மேற்பட்டோர் எனில், விரல் அச்சுகளின் மூலம் வெவ்வேறு உருவங்களை உருவாக்க சொல்லலாம். இதனால், அவர்களின் கை தசைகள் வலுவடையும்; கற்பனைத்திறனும் விரியும். சீனா களிமண்ணில், அவர்களுக்கு பிடித்த உருவங்களை செய்ய சொல்லலாம் ஒன்றரை வயதுக்கு பின், 'க்ரேயான்ஸ், சாக்பீஸ்' கொடுத்து, கிறுக்க பழக்க வேண்டும். குழந்தையின் கைகளில், மொபைல் போன் கொடுப்பதை தவிர்த்து, உண்டியலில் சில்லரை நாணயங்களை போட செய்தல், பூப்பறிக்க கற்று கொடுத்தல், போன்ற பயிற்சிகளை, பள்ளியில் சேர்ப்பதற்கு முன் வழங்கினால், அவர்களின் அறிவுத்திறன் பல மடங்கு மேம்படும்.

குழந்தைகள் நல மருத்துவர், பழனிராஜ்:

Read more...

குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு

திங்கள், 21 ஜனவரி, 2019


குழந்தைக்கு சாப்பிட, நடக்க கற்றுத் தருவதைப் போலவே, தோல்விகளை சந்திக்கவும் கற்றுக் கொடுங்கள். உதா ரணமாக, குழந்தை சாக்லெட் கேட்டால், அன்பாக, ‘நாளைக்கு வாங்கித் தர்றேன்..என்று சொல்லுங்கள். குழந்தை இப்பவே வேணும்..என்று அழுதாலும், ‘நாளைதான்என்று தெளிவாகச் சொல்லுங்கள். உங்களிடம் உறுதியில்லாவிட்டால், அதன் பிடிவாதம் அதிகரிக்கவே செய்யும்.
குழந்தை கேட்பதற்கு, வீட்டில் உள்ள அனைவருமே ஒரே பதிலை சொல்ல வேண்டும். அப்பா தர மாட்டேங்கறாரா? நான் வாங்கித் தர்றேன்டீ என் செல்லம்என்று சொன்னால், குழந்தைக்குக் குளிர் விட்டு விடும்.
குழந்தை அழுது, புரண்டு, ஆர்ப் பாட்டம் செய்தால், எரிச்சலோ கோபமோ கொள்ளக் கூடாது. பரிதாபப்படவும் கூடாது. அதை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். தன்னை யாரும் கவனிக்க வில்லை என்பது தெரிந்ததும், குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, இயல்பாகி விடும்.
குழந்தை உங்களிடம் கேட்கிற பொருள் அதற்குத் தேவையா.. இல்லையா.. என்பதை முடிவு செய்யவேண்டியது குழந்தை அல்ல.. நீங்கள்தான்!
சேட்டை செய்கிற உங்கள் குழந்தையை, இதே விஷமத்தை பக்கத்து வீட்டுக் குழந்தை செய்தால், எப்படி உணர்வீர்களோ, அதே கண்ணோட்டத்தோடு ji பாருங்கள். அப்போதுதான் உங்களால் சரியான முடிவை எடுக்க முடியும்.
பிடிவாதம், குழந்தைகளின் இயல்பான குணம்தான்!என்று நினைக்கிற எவரையுமே உலுக்கிப் போட்டுவிடக் கூடியது, நம் வாசகி ஒருவர் எழுதியிருந்த இந்த சம்பவம்..
எங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரே பையன் என்பதால், அவன் என்ன கேட்டாலும் உடனடியாக வாங்கிக் கொடுத்து விடுவார்கள். அவன் பிடிவாதமும் வீம்பும் தெரு முழுக்க பிரசித்தம்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருநாள்.. அப்போது அவன் ஏழாவது படித்துக் கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து வந்தவன், அவன் அப்பாவிடம் நண்பர்களுடன் சினிமாவுக்குப் போக காசு கேட்டான். இது என்ன புதுப் பழக்கம்?’ என்று முதன்முறையாகக் கண்டித்தவர், பணம் தர மறுத்து விட்டு வெளியில் சென்றுவிட, ஒரு கெரசின் டின்னுடன் அழுது கொண்டே தடதடவென மொட்டை மாடிக்குப் போன அந்தப் பாவிப் பையன்.. தனக்குத் தானே தீ வைத்து.. ப்ச்.. பரிதாபம்!
தங்கள் அருமை புத்திரன், ‘ஐயோ.. எரியுதே..என்று அலறி அலறி, செத்துப்போன துக்கத்தைத் தாள முடியாமல், இன்றளவும் நடை பிணமாகவே வாழ்கிறார்கள் அந்தப் பெற்றவர்கள்..
- என்று அந்தக் கடிதம் சொன்ன விஷயத்தின் உக்கிரத்தை நம்மால் தாளவே முடியவில்லை.
இந்தக் காலத்து குழந்தைகள் சென்ஸிடிவ்ஆக இருக்கிறார்களா? அல்லது பெற்றவர்களுக்கு பிள்ளைகளை வளர்க்கத் தெரியவில்லையா?’ என்கிற அந்த வாசகியின் கேள்வியுடன், சென்னையைச் சேர்ந்த பிரபல குழந் தைகள் மனநல நிபுணர் ஜெயந்தினியை சந்தித்தோம்.
‘‘குழந்தைகள் பிடிவாதம் பிடிக்கிற விஷயத்தில், பெற்றவர்கள்தான் முதல் குற்றவாளிகள்!’’ என்றவர், பெற்றோர் செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டினார்.
‘‘நான் சில அம்மாக்களை சந்தித்திருக்கிறேன். இவன் ஒரு விஷயத்தை நினைச் சுட்டான்னா, அழுது, அடம் பிடிச்சாவது சாதிச்சிடுவான்.. அப்பிடியே எங்கப்பா மாதிரி..என்றும், ‘நான் பசங்களுக்கு எதையுமே இல்லைனு சொல்றதில்லை. அந்தக் காலத்துல நாமதான் கஷ்டப்பட்டு வளர்ந்தோம். பசங்களுக்குக் கஷ்டம் தெரியக் கூடாது..என்றும் பெருமையுடன் சொல்வார்கள். இப்படி.. வெற்றுத் தாள் போல எதையும் ஏற்கத் தயாராக இருக்கிற குழந்தையின் மனதில், தான் நினைத்தது எல்லாம் நடக்கும் என்கிற எண்ணத்தை விதைத்து, அவர்கள் மனம் முழுக்க பிடிவாதத்தை இறைக்கிற தவறைச் செய்கிறவர்கள் பெற்றவர்கள் தான்! பெற்றோர் தங்கள் குழந்தையின் மீது உள்ள பாசத்தை வெளிப்படுத்தத்தான், இப்படி அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள். உண்மையில், குழந்தையின் மீது பாசமும் அக்கறையும் இருக்கிறவர்கள், இப்படி நடந்து கொள்ளக் கூடாது..’’ என்றவர், அது ஏன் என்பதையும் விவரித்தார்.
‘‘குழந்தைக்கு நோஎன்கிற வார்த்தையை அழுத்தம் திருத்தமாகச் சொல்லாத வரையில், பெற்றோரின் எந்தக் கஷ்டமுமே குழந்தைக்குத் தெரியாது. அதோடு, ‘நமக்குச் செய்யவேண்டியது பெற்றவர்களான இவர்களின் கடமை.. செய்கிறார்கள்என்று டேக்கன் ஃபார் கிரான்டட்ஆக.. அதாவது.. தனக்கு சாதகமாகத்தான் குழந்தை எடுத்துக் கொள்ளுமே தவிர, ‘நம் மேல் எத்தனை பிரியம் இவர்களுக்குஎன்றெல்லாம் நினைக்கவே நினைக்காது.
மாறாக, ‘இந்தப் பொருளோட விலை ரொம்ப ஜாஸ்தி. அம்மா கிட்ட அவ்வளவு பணம் இல்ல..என்பது போன்ற உண்மையான காரணங்களை எடுத்துச் சொல்லவேண்டும். அப்போதுதான், குழந்தைக்கு பணத்தின் அருமையும், பெற்றோரின் அருமையும் தெரியும்.
எந்தக் குழந்தைக்கு கேட்டதெல்லாம் மிக எளிதாகக் கிடைத்து விடுகிறதோ.. அந்தக் குழந்தை, மனதைரியம் குறைந்ததாகவும், தோல்வியை தாங்கிக் கொள்கிற சக்தி இல்லாததாகவும்தான் வளருகிறது. இப்படிப்பட்ட குழந்தைகள்தான், தான் நினைத்த ஏதோ சிறு ஒரு விஷயத்தை அடைய முடியாவிட்டால்கூட மனம் உடைந்துபோய் வாழ்வில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் இழக்கத் தொடங்கி விடுகிறார்கள்’’ என்றவர், குழந்தைகளின் பிடிவாதம் எந்தக் கட்டத்தில் ஆபத்தானது என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார்.
‘‘பொதுவாக, பிடிவாதம் பிடிப்பது குழந்தை யின் இயல்புதான். ஏதோ ஒரு பொருளுக் காகவோ, என்றைக்கோ ஒருநாளோ பிடிவாதம் பிடிக்கிற குழந்தையை நினைத்து, பெற்றோர் பயப்படத் தேவையில்லை. அந்தப் பழக்கம் குழந்தை வளர வளர சரியாகிவிடும். ஆனால், குழந்தை எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும்போதுதான் அது திருத்தப்பட வேண்டிய பிரச்னையாகிறது.
சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுது அடம்பிடிப்பது, கீழே விழுந்து புரள்வது, கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது.. என்று அதகளம் செய்து வளரும் குழந்தைகள், விளையாட்டில் சிறு தோல்வி யைக் கூடத் தாங்க முடியாமல், உடன் விளையாடும் குழந்தைகளை அடிப்பது, கிள்ளுவது, கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடு வார்கள். காலப்போக்கில் தனக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் பெற்றோரைக்கூட மதிக்க மாட்டார்கள்!’’ என்றவர், முடிவாக சொன்னது ஒவ்வொரு பெற்றோருக்குமான எச்சரிக்கை..
‘‘பொதுவாகவே, வாழ்வில் தவறான முடிவு எடுக்கும் பெரும் பான்மையானவர்கள், அதிக பிடிவாத குணமுடையவர்கள்தான். அனுசரித்துப் போகாமல், தான் நினைத்ததுதான் நடக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறவர்கள், தொழிலில் மட்டுமல்ல.. திருமண வாழ்க்கையிலும் தோல்வியையே அடைகிறார்கள். தானும் வாழாமல், தன்னைச் சார்ந்தவர்களையும் வாழவிடாமல், பிரச்னைக் குரிய நபர்களாகவே மாறிப் போகிறார்கள்’’.
டாக்டர் ஜெயந்தினி கொடுத்த பிராக்டிகல் டிப்ஸ்’..

Read more...

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்துக்கு அடிமையாகும் குழந்தைகள்

திங்கள், 24 செப்டம்பர், 2018

இயற்கையின் மீது பிடிப்பு உண்டாகும்!

சிறு குழந்தைகளை, திரையரங்குகள் மாதிரியான, கூட்டம் மிகுந்த இடங்களுக்கு அழைத்துச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அங்கிருக்கும் சத்தம் மற்றும் மனித நெருக்கடி குழந்தைகளுக்கு அசவுகரியத்தை அளிக்கும். மேலும், குழந்தைகளுக்கு நோய் தொற்று  ஏற்படும் அபாயம் உண்டாக வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமல்ல, 'ஐஸ்கிரீம், சிப்ஸ்' உள்ளிட்டவற்றை பெற்றோர் சாப்பிடும் போது, இதைப் பார்க்கும் குழந்தையும், அதன் வாசத்தில் கிறங்க ஆரம்பிக்கும்; 'எனக்கும் வேணும்' என, நாக்கை நீட்டி கேட்கும். பெற்றோரும், குழந்தையின் நாக்கில் ஐஸ்கிரீமைத் தடவுவது, சிப்சை துாளாக்கி வாயில் திணிப்பது உள்ளிட்ட வேலைகளை செய்வர். இது போன்ற உணவுகளை சிறுவயதிலேயே சுவைக்கும் குழந்தைகள், கொஞ்சம் கொஞ்சமாக அதற்கு அடிமையாகி விடுவர். விளைவு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்துக்கு வழிவகுக்கும்.
திரையரங்கிற்கு பதிலாக, சிறு வயது முதலே குழந்தைகளை,  பிரார்த்தனைக் கூடங்களுக்கு அழைத்துச் செல்வதால், அங்கிருக்கும் நல் அதிர்வுகள், குழந்தைகளை மேம்படுத்தும்; அவர்களை மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைக்கும்.
அதுமட்டுமல்லாமல், சினிமா உள்ளிட்ட, வெளியிடங்களுக்கு அழைத்துச் சென்றால் மட்டுமே, குழந்தைகளுக்கு அனுபவம் கிடைக்கும் என்ற தவறான எண்ணம், பெற்றோர் மத்தியில் இருக்கிறது.  ஆனால், உண்மை அதுவல்ல! வீட்டின் மொட்டை மாடியில், குழந்தைகளை உங்களின் கண்காணிப்பிலேயே விளையாட வைக்கலாம். 
இப்படி, மொட்டை மாடியில் குழந்தைகள் சிறிது நேரம், தங்களின் நேரத்தை செலவிடும் போது, ஆகாயம், பறவைகள்  உள்ளிட்டவற்றைப் பார்த்து ரசிப்பர்; இயற்கையின் மீது ஒருவித பிடிப்பு உண்டாகும். மாசு அதிகம் இல்லாத காலை நேரத்தில், வானிலையும் சிறப்பாக இருக்கும் போது, குழந்தைகளை அழைத்து, காலாற ஒரு நடை போகலாம்.
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை குழந்தைகள், இதன் மூலம் தெரிந்து கொள்வர். பரந்து விரிந்த இந்த உலகம் குறித்த புரிதல், அவர்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக வர ஆரம்பிக்கும்!

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets