உங்கள் வருகைக்கு நன்றி

மழை நீரை சேமிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மழை நீரை சேமிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மழைநீரை முறையாகச் சேமிப்போம்.

வியாழன், 2 ஜனவரி, 2020


நீருக்கான பதற்றம் எப்போதும் நம்மைத் துரத்திக்கொண்டிருக்கிறது. ஆனால், அபரிமிதமான நீர் எப்போதும் நம்மைத்தேடி வருகிறது. அதை அலட்சியம் செய்துவிட்டுதான் நாம் நீருக்காகத் திண்டாடுகிறோம்.
மழைநீரை முறையாகச் சேமித்தாலே நீர் பற்றாக்குறையை பெருமளவில் போக்கிவிடலாம். வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் பெருமளவு மழைநீர் ஒவ்வொரு முறையும் கடலில் கலந்து வீணாவது தொடர்கதையாகி விட்டது. மழை நீரை வீணாக்காமல் நிலத்தில் சேமித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். நீரின் தரமும் மேம்படும்.
மழை நீரை சேமிக்க நாம் எடுக்கும் சிறு முயற்சியும், மனித குலத்தை காக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டிடங்களில் உருவாக்கி பராமரிக்க வேண்டும். கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து, மழை நீரை தரைப் பகுதிக்கு கொண்டு செல்ல வசதியாக, மழை நீர் வடிகுழாயை அமைக்க வேண்டும்.

வடிகுழாய்க்கு அல்லது கட்டிடங்களின் அருகில் தரை பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்துக்குக் கசிவு நீர்க்குழி ஒன்றை செங்கல் கொண்டு அமைக்க வேண்டும். அதன்பின் குழியை கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லியை கொண்டு 1 மீட்டர் ஆழத்துக்கு நிரப்ப வேண்டும். மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை, வடிகுழாய் மூலம் கசிவு நீர்க்குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். முறையாக கசிவு நீர்க்குழி அமைத்தால், மொட்டை மாடியில் விழும் மழை நீரை நேரடியாக பூமிக்குள் ஊறச்செய்யலாம். கசிவு நீர்க்குழியை சிமெண்ட் மூடியால் மூட வேண்டும்.

கட்டிடம் அமைந்துள்ள இடம் களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். மழை நீரை சேமிக்க நீரூட்டல் கிணற்றை அமைக்கலாம். கட்டிட வளாகத்தில் பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளி கிணற்றையும் பயன்படுத்தலாம். கட்டிடத்தில் இருக்கும் மழை நீர் வடிகுழாய்களை இணைத்து கிணறு இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கே வடிகட்டும் தொட்டி அமைத்தால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை, வடிகுழாய் மூலம் பயன்பாட்டு கிணற்றில் செலுத்தி மழை நீரை ஊறச்செய்யலாம்.

இதுவரை மழை நீர் கட்டமைப்புகள் அமைக்கப்படாமல் இருந்தால், தாமதமின்றி அதை உருவாக்கி மழை நீரை சேமித்து நீர் வளத்தை பெருக்கலாம். 

Read more...

வீடு கட்டும் போது, கவனிக்க வேண்டியவை.

புதன், 20 ஜூன், 2018


5 முதல், 6 அடி வரை தோண்டி, தரமான கம்பிகளைப் பயன்படுத்தி, அடித்தளம் அமைப்பதால், உறுதியாக இருப்பதுடன், முதல், இரண்டாவது தளம் அமைக்கவும் வசதியாக இருக்கும்.தரையிலிருந்து சீலிங், 11 அடி உயரத்தில் அமைப்பதால், அறை குளிர்ச்சியாகவும், வீடு பெரியதாக இருப்பது போன்ற உணர்வையும் தரும். மேலும், சுவரின் மேல்புறத்தில் சிறு செவ்வக வடிவ, 'ஓப்பன்' வைத்தால், அதன் வழியாக வெப்பமும் வெளியேறிவிடும். இதுவே, 'ஏசி' பயன்படுத்துவோர், ஜன்னலுக்கு மேல், திறந்து மூடும் விதமாக, செவ்வக வடிவ ஓப்பன் வைக்கலாம்.சாலையின் லெவல், 'ஜீரோ'வாக இருந்தால், வீட்டு முகப்பு லெவல், 2 ஆகவும், கதவின் லெவல், 4 ஆகவும் இருக்க வேண்டும். இது, மழை, வெள்ளத்தின் போது, தண்ணீர் வீட்டுக்குள் வருவதை தடுக்கும். கதவை திறந்தவுடன் கதவு பக்கத்திலும்; படுக்கையறையில், கட்டிலுக்குப் பக்கவாட்டிலும், கதவுக்குப் பக்கத்திலும்; சமையலறையில் மீடியம் உயரத்திலும், 'ஸ்விட்ச் பாயின்ட்' வைக்க வேண்டும். 'ஷாக்' அடிக்காமல் இருக்க, 'ஆன்டி ஷாக் ஸ்விட்ச்' பயன்படுத்தலாம். ஸ்விட்சை சுற்றியும், அழுக்கை நீக்க, 'அப்பர் லீக்' ஷீட் ஒட்டலாம். ஜன்னலை, 5 அடி உயரம் வைப்பது நல்லது. படுக்கையறையில், 4 அடிக்கு, ௪ அடி அளவில், ஜன்னல் அமைக்கலாம். பால்கனியுடன் கூடிய படுக்கையறையில், 'ஸ்லைடு டோர்' போட்டு, இரண்டடுக்கு ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.பிக்சட் அலமாரி மற்றும் பீரோ, டிரெஸ்சிங் டேபிளையும் அமைப்பதால், சவுகரியமாக, தரமாக இருப்பதுடன், அதிக ஆண்டு உழைக்கும். வெளிர் நிறம், வெப்பத்தை ஈர்க்காது. எனவே, வீட்டிற்கு வெளியே, உள்ளே வெளிர் நிறத்திலும், படுக்கையறையில், அடர் பச்சை அல்லது அடர் நிறத்தில் பெயின்ட் செய்வதால், சீரான துாக்கத்தையும் ஊக்குவிக்கும்.மாடிப்படியை, 'ஆன்டி ஸ்கிட்' படிகளாக வடிவமைப்பதுடன், எட்டு படிக்கட்டுக்கு மேல், ஒரு சமதளத்தை வைத்து, படிக்கட்டு அமைக்கலாம். சமையலறையை காற்றோட்டத்துடன் அமைப்பதுடன், அங்கிருந்து பார்த்தால், வீட்டின் மற்ற பகுதிகளில் நடப்பது அனைத்தும் தெரிவது போல் வடிவமைக்க வேண்டும்.'சம்ப், வாட்டர் டேங்க், செப்டிங் டேங்க்' வைக்கும் போது, 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு டேங்குகளை வைப்பது நல்லது. கீழ் தளம் மட்டும் உள்ள வீட்டில், தண்ணீர் தொட்டியை படுக்கையறைக்கு மேல் வைப்பதால், அந்த அறை, குளிர்ச்சியாக இருக்கும். கழிப்பறையில், 'ஆன்டி ஸ்கிட்' டைல்ஸ் பயன்படுத்தலாம். இதை கழுவுவதும், பராமரிப்பதும் சுலபமாக இருக்கும்.

Read more...

தண்ணீர், தண்ணீர், தண்ணீர்

செவ்வாய், 18 ஜூலை, 2017

சாதாரணமான தண்ணீரில் மெக்னீசியம், கால்சியம், கார்பனேட், தாமிரம் போன்ற தாது பொருட்கள், இயற்கையாகவே கலந்துள்ளன. 'பேக்கேஜ்டு' குடிநீரில், சுத்திகரிப்புக்கு பின், இந்த தாதுப் பொருட்கள் எல்லாம் சேர்க்கப்படுகிறதா என்பது சந்தேகமே. மேலும், சுத்திகரிப்பு இயந்திர கருவியில் தண்ணீரை சுத்தப்படுத்தி கொண்டுவர, மூன்று மடங்குதண்ணீர் வீணாகிறது. வீட்டில் கிடைக்கும் ஆழ்துளை கிணறு தண்ணீர் அல்லது குழாய் தண்ணீரை, அப்படியே பருகலாம். ஆழ்துளை கிணறு தண்ணீர் உவர்ப்பாக இருந்தால், செப்பு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால், அதுவே நன்றாக சுத்திகரித்து விடும். அந்த நீரை மண்பானையில் ஊற்றி வைத்து குடித்தால், அதைவிட சுவையான, பாதுகாப்பான குடிநீர் எதுவுமில்லை. செப்பு பாத்திரம், மண்பானை இரண்டும் உலகிலேயே மிகச்சிறந்த சுத்திகரிப்பு கருவிகள்.அதேபோல், எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து, குடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நோய் பரவும் காலம், மழைக் காலங்களில் மட்டும் நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி பருகினால் போதும். மற்ற நாட்களில் சாதாரண தண்ணீரே போதும். இந்த காய்ச்சிய குடிநீரையும், வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. அதேநேரம், சென்னை போன்ற பெருநகரங்களில் நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த நீரை அப்படியே குடிக்கலாமா என்பது ஆய்வுக்குரியது. எனவே, அவர்கள், வீட்டிலேயே மூலிகை குடிநீர் தயார் செய்து பருகலாம். கேரளாவில் பெரும்பாலான இடங்களில், பதிமுகம் குடிநீரை தான், மக்கள் பருகுகின்றனர். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பதிமுகம் மரப்பட்டையை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து கொதிக்க வைத்து பருகலாம்.காய்ச்சும்போது தண்ணீர் ஊதா நிறத்தில் இருக்கும். இதை எல்லா காலத்திலும் எல்லாரும் பருகலாம். பதிமுகம், குடிநீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, இதய நோயாளிகள், கொழுப்பு பிரச்னை, இதய அடைப்பு உள்ளோருக்கு, பதிமுகம் நீர் மிகவும் நல்லது.கருங்காலி குடிநீரும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை நீர். கருங்காலி பட்டையுடன் வெட்டிவேர், ரத்த சந்தனம், விளாம் பிசின், கொத்தமல்லி, சீரகம் போன்ற மூலிகைகள் கலந்த கலவை கடைகளில் கிடைக்கிறது. இதை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி பருகுவதால் சளி, இருமல், தோல் மற்றும் ரத்தம் சம்பந்தமான வியாதிகள் குணமாகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு, கருங்காலி தண்ணீர் நல்லது.
இதுதவிர, சீரகத்தை லேசாக வறுத்து, தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, இளஞ்சூட்டில் அந்த நீரை பருகலாம். சீரக குடிநீர், செரிமான சுரப்பிகளை துாண்டி, நல்ல பசியை உண்டாக்கும். இந்த நீரைப் பருகுவதால் எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. உடலில் உள்ள வாயுக்களைக் கட்டுப்படுத்துகிறது. வயிறு சார்ந்த நோய்களைப் போக்குவதுடன், நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.


ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன்: 

Read more...

மழை நீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம்.

புதன், 21 மார்ச், 2012

 (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்குர்ஆன்:24:43)

தமிழ் நாட்டின் முன்னாள் முதன் மந்திரி ஒரு சட்டம் கொண்டு வந்தார். ஒவ்வொருவரும் கட்டாயமாக மழைநீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும். புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரைபடத்தில் காட்டினால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் அவர். அந்த உத்தரவினை மிகச் சிலரே ஆர்வம் காட்டினர்.  
அந்த உத்தரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக சென்னைவாசிகள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள். இந்த வேலை செய்து தந்தவர்களின் காட்டில் நல்ல பண மழை பெய்தது. ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத்தான் சென்றடைந்தது

மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது.

நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிரப்பி பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க்குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.


விளக்கப் படம் - மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் முறை
RainWaterHarvesting.jpg


சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள்கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும்,  தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும்,  தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால்இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்துஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போதுகடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.

 June Water Feature.jpg

இவைகள் தமக்குள்ளும்,  தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும்குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை,  தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரைநிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து,  கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிரமற்ற ஆண்டுகளில் பெய்த மழைசராசரியை விட குறைவாகவே இருந்தது.

ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும்கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர்கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும்கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான்மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும்,  தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால்அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறைஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.
 Water Rhapsody 007      Water Rhapsody 008

உதாரணமாகசில பகுதியில் மூன்று அடி ஆழத்திலும்,  சில பகுதியில் 60 அடி ஆழத்திலும்,  ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது.  மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரைமேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்துதங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால்கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகுமேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.
மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால்தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள்,  மழை நீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாகமேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி)ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாகமேல் நிலத்தடி நீரின் தன்மைகீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

வாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:

 


மழை நீரைநம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும்,  அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும்,  தமிழக மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்.
ஒவ்வொரு குடியிருப்பிலும்அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும்ஒரு கிணறு இருந்தால்அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோமூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.
இக்கிணறுகள்வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.
Rainwater Harvesting 

அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து,  இப்போது பயன்படுத்தாமல் இருந்தால்அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.
ஏனென்றால்அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில்மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்திநிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல்கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும்மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து,  தீர்ந்த பின்குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம்கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள்கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால்மேல் நிலத்தடி நீர்கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாகமேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள்கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.

Read more...

இன்று உலக தண்ணீர் தினம்


நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. பூ‌மி‌யி‌ல் 30 ‌விழு‌க்காடு ம‌ட்டுமே ‌நில‌ப்பர‌ப்பாகு‌ம். ‌மீத‌‌மிரு‌க்கு‌ம் 70 ‌விழு‌க்காடு‌ம் ‌நீ‌ர்பர‌ப்புதா‌ன். ஆனா‌ல், இ‌ன்று அ‌‌‌ந்த 30 ‌விழு‌க்கா‌ட்டி‌ல் வ‌சி‌க்கு‌ம் ம‌க்களு‌க்கு‌த் தேவையான ‌நீரை அ‌ளி‌க்கு‌ம் போ‌திய வச‌தியை பூ‌மி இழ‌ந்து வரு‌‌கிறது. அத‌ற்கு‌ம் ம‌னித இன‌ம்தா‌ன் காரண‌ம் எ‌ன்பது மறு‌க்க முடியாத உ‌ண்மை.

1993ஆ‌ம் ஆ‌ண்டு முத‌ல் மா‌ர்‌ச் மாத‌ம் 22ஆ‌ம் தே‌தியை உலக த‌ண்‌‌ணீ‌ர் ‌தினமாக அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு இ‌ன்று வரை கொ‌ண்டாடி‌த்தா‌ன் வ‌ரு‌கிறோ‌ம். ஆனா‌ல் ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் உல‌கி‌ன் பல கோடி ம‌க்க‌ள் த‌ண்‌ணீ‌ரி‌ன்‌றி ‌தி‌ண்டாடி வரு‌ம் ‌நிலையு‌ம் எ‌ந்த வகை‌யிலு‌ம் அகல‌வி‌ல்லை.

ம‌க்க‌ள் தொகை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே இரு‌க்க, அவ‌ர்களு‌க்கு‌த் தேவையான குடி‌நீ‌ர் தேவையு‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. தேவையை பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய முடியாத ‌நிலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் ‌நீரை‌க் குடி‌க்கு‌ம் ‌நிலை‌க்கு பல பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள ம‌க்க‌ள் த‌ள்ள‌ப்ப‌‌ட்டு‌ள்ளன‌ர். அத‌ன் ‌விளைவு கடுமையான நோ‌ய்க‌ள்.

 மு‌‌ந்தைய கால‌த்‌தி‌ல் கோடை‌க் கால‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டா‌ல் ‌வீ‌ட்டு‌க்கு வெ‌ளியே பானையோ அ‌ல்லது ஒரு பா‌த்‌திரமோ வை‌த்து அ‌தி‌ல் ‌நீ‌ர் ‌நிர‌ப்‌பி வை‌ப்பா‌ர்க‌ள். வ‌ழி‌யி‌ல் செ‌ல்வோ‌ர் அ‌ந்த ‌நீரை‌க் கு‌டி‌த்து தாக‌ம் ‌தீ‌‌ர்‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் எ‌ன்ற ந‌ல்ல நோ‌க்க‌த்தோடு. ஆனா‌ல் அதுபோன‌ற்தொரு கா‌ட்‌சியை த‌ற்போது நா‌ம் எ‌ங்காவது பா‌ர்‌க்க இயலுமா?

காண முடியு‌ம், வாச‌லி‌ல் குட‌ங்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் அவை ‌நீ‌ர் ‌நிர‌ம்‌பி அ‌ல்ல, ‌நீ‌ர் ‌நிர‌ப்ப, எ‌ப்போதாவது வரு‌ம் குழா‌ய் ‌நீரு‌க்கு‌ம், குடி‌நீ‌ர் லா‌ரி‌க்காகவு‌ம் கா‌த்‌திரு‌க்கு‌ம் குட‌ங்க‌ள் அவை.

முத‌லி‌ல் எடு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் எ‌ன்ன தெ‌ரியுமா? ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டு‌ம், த‌ற்போது எ‌த்தனை குள‌ங்க‌ள் இரு‌ந்த இட‌த்‌தி‌ல் அடு‌க்கு மாடி‌க் குடி‌யிரு‌ப்புக‌ள் க‌ட்ட‌ப்ப‌ட்டு‌ள்ளன, ஏ‌ரிக‌ள் இரு‌ந்த இட‌ங்க‌ள் எ‌த்தனை கால‌னிக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. அ‌ங்கே தே‌ங்‌கி ‌நி‌ற்க வே‌ண்டிய ‌நீ‌ர் எ‌ங்கே செ‌ன்று ‌நி‌ற்கு‌ம்? ‌நினை‌த்து‌ப் பா‌ர்‌த்ததா ம‌னித சமூக‌ம்? ‌நீ‌ர் இரு‌ந்த இட‌த்தை கா‌லி செ‌ய்து ‌வி‌ட்டு அ‌ங்கே நா‌ம் குடிபோனோ‌ம். த‌ற்போது குடி‌நீ‌ர் இ‌ல்லை எ‌ன்று அலை‌ந்து கொ‌ண்டிரு‌ப்பது‌ம் நா‌ம்தா‌ன்.

70 ‌
விழு‌க்காடு பர‌ப்பளவு ‌‌நீ‌ர் இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் 97.5 ‌விழு‌க்காடு க‌ட‌லி‌ல் இரு‌க்கு‌ம் உ‌ப்பு ‌நீ‌ர்தா‌ன். ‌மீது‌ம் 2.5 ‌விழு‌க்காடு அள‌வி‌ற்கு‌த்தா‌ன் ‌நில‌த்தடி ‌நீ‌ர் உ‌ள்ளது. இ‌தி‌லு‌ம் துருவ‌ப் பகு‌திக‌ளி‌ல் ப‌னி‌ப்பாறைகளாகவு‌ம், ப‌னி‌த்தரையாகவு‌ம் மா‌றி‌ப் போ‌யிரு‌க்‌கிறது எ‌ஞ்‌சியு‌ள்ள 0.26 ‌விழு‌க்காடு ‌நீரை‌த்தா‌ன் உலக ம‌க்க‌ள் அனைவரு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல்தா‌ன், ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்' கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

 
நில‌த்தடி ‌நீரை‌ப் பாதுகா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் ஆதார‌ங்களை கா‌க்க வே‌ண்டியது‌ம், ‌நீ‌ர் மாசுபடாம‌ல் இரு‌க்க வே‌ண்டிய நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டியது‌ம் ம‌னித சமுதாய‌த்‌தி‌ன் கடமையா‌கிறது.

இப்போது, உலகில் உள்ள 80 நாடுகளில் 40 சதவீத மக்கள் சரிவர தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர். 110 கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். இப்படியே போனால், இன்னும் சில நூற்றாண்டுகளில் உலகமே பாலைவனமாக மாறிவிடும். மக்க‌ள், குடி‌நீரு‌க்காக ஒருவரை ஒருவ‌ர் கொ‌ன்று‌ப் போடு‌ம் நிலைதான் ஏற்படும்.

எனவே, உலக தண்ணீர் தினமான இன்றைய நாளில், தண்ணீரை மாசு படுத்தாமல், உயிர் போல் காப்போம் என்ற உறுதி மொழியை மனதில் ஏந்தி, அதனை நிறைவேற்ற பாடுபடுவோம்.

தண்ணீர்த்துளிகள்

* உலகளவில் ஒவ்வொரு நாளும், தூய்மையற்ற குடிநீரைப் பருகுவதன் மூலம் 25ஆயிரம் பேர் இறப்பதாக, ஐ.நா., சுற்றுப்புற திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

* நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு ஒரு லிட்டருக்கு 0.75 முதல் 1.5 மில்லிகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும்.

* 
இந்தியாவின் நகர்ப்புறங்களில் சராசரியாக 64 சதவீத மக்களுக்கே, வீட்டுச் சேவை இணைப்புகள் மற்றும் பொது குடிநீர் நிலைகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.

* 
நபர் ஒருவருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்பது தேசிய இலக்கு. ஆனால் நகரங்களுக்கு ஏற்ப 37 முதல் 298 லிட்டர் வரை வழங்கப்படும் அளவு மாறுபடுகிறது.

* 
பழுதான சேவை இணைப்புகள், குழாய்கள், மீட்டர் இணைப்புக் கோளாறுகளால் 70 சதவீத தண்ணீர் வீணாகிறது.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets