உங்கள் வருகைக்கு நன்றி

இஸ்லாத்தில் மட்டுமே தீர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாத்தில் மட்டுமே தீர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

'இவர்தாண்டா அவர்'

வெள்ளி, 17 மே, 2013


அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது, கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்த புகாரி ஏழாவது பாகம் யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர்.
 இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது.
ஆமாம்..! அவர் உரையின் படி... நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..?
அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால் அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..!
ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷா அல்லாஹ்.
'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும் மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!]
  PJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்... 
எத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று..! ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெயில்- இது ஏனோ, எனது குடும்பத்து உறுப்பினர் நோய்வாய்ப்பட்டது போன்ற ஒரு சோகத்தை என்னுள் ஏற்படுத்துகிறது. காரணம், நான் மட்டுமல்ல... 'குர்ஆன் ஹதீஸ் மட்டுமே தனது வாழ்வியல் மார்க்கம், என்று யாரெல்லாம் எனது தலைமுறையில் வாழ தலைப்பட்டனரோ, அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்வினுள்ளும் மார்க்க ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் மவுலவி சகோ.பீஜே' என்று கூறினால் அது மிகை அல்லதான்..!
நான் பிறந்த இடமான, பாபநாசம்-பண்டாரவாடையில், இமாம் அபூ ஹனிபா ரஹ் அவர்களை பழிக்கும் கொடியவராக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் இவர். பின்னர், நான் படித்து வளர்ந்த இடமான, அதிராம்பட்டினத்தில்... இமாம் ஷாஃபி ரஹ் அவர்களை அவமானப்படுத்தும் இஸ்லாத்தின் வில்லனாக மீண்டும் எனக்கு சொல்லப்பட்டவர் இவர். ஊருக்கு நாலு பேர், இப்படி 'நஜாத்துக்காரன்' என்று இருந்த அக்காலத்திய அவரின் ஆதராவளர்களை 'அஞ்சாம் மதஹப்'காரர்கள் என்று சொல்லி, பள்ளியின் வாசலில், 'நான்கு மதஹபுகளில் ஒருவரையாவது பின்பற்றாதவருக்கு இப்பள்ளியில் அனுமதி இல்லை' என்று பலகை மாட்டி... பள்ளியை விட்டு, தள்ளிவைத்து... இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக எனக்கு காட்டப்பட்ட போது... அத்தோடு 'வேண்டாம்பா இந்த விரோதிகள் சகவாசம்' என்று மெய்யாலுமே மூடத்தனமாக நான் நம்பி... என்பதுகளின் இறுதியில் இவர்களை வெறுத்து ஒதுங்கி விட்டேன்.
ஆனால்.... அதே ஆண்டுகளில்... வெறும் 2\ MP மட்டுமே வைத்து இருந்த பாஜக, பாபர் மஸ்ஜிதை இடிக்கும் ஓட்டுப்பொறுக்கி அஜன்டாவை கையில் எடுத்தவுடன்... 88 MPக்களுடன் ஆளுங்கட்சி கூட்டணி என்றாகி... மீண்டும் பாபர் மஸ்ஜித் இடிப்பு ரத யாத்திரை மூலம் 120 MP க்களுடன் வலுவான எதிர்க்கட்சியாகி... 'கரசேவை' என்ற சட்டத்துக்கு எதிரான மறைமுக பயங்கரவாதம் செய்து பாபர் மஸ்ஜிதை இடித்தனர். ஆனால், இதன் பிறகு... ராமர் கோவில் கட்டும் ஆர்வத்திலிருந்து அவர்களின் ஆதரவாளர்களை ஆட்சிக்கு வந்தவுடன் அதுபற்றி பார்ப்போம்... என்று திசை திருப்பி... ஹிந்துத்துவா வெறியூட்டப்பட்ட மக்களை தக்க வைப்பதற்கு பாஜக எடுத்த... அடுத்த அரசியல் ஓட்டுப்பொறுக்கி ஆயுதம் தான் 'பொது சிவில் சட்டம்'. இது எந்த அளவு முட்டாள்த்தனமானது என்று இப்போது எல்லாருக்கும் தெரியும். அப்போது, இதுபற்றி அந்த அளவு விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. மிகச்சிலருக்கே இருந்தது. அதனால்தான் அவர்களுக்கு 161 அப்புறம் 182 சீட் எல்லாம் வந்தது.
இந்நிலையில் ஒருநாள் (1993 /94 என்று நியாபகம்) அதிராம்பட்டினத்தில் ஒரு சம்பவம் நடந்தது. செக்கடிப்பள்ளி எதிரே வற்றி இருந்த செக்கடி குளத்திடலில் மவுலவி பீஜே வின் பொதுக்கூட்டம். மேடை லைட் எல்லாம் முதல் நாளே போட்டு விட்டார்கள். ஊர் முழுக்க போஸ்டர். 'PJ பேசுகிறார்' என்று. 'என்ன பேசுகிறார்... எதைப்பற்றி பேசுகிறார்' என்பதெல்லாம் யாருக்கு வேணும்...? 'அதெப்படி நம்ம எதிரி நம்ம இடத்துக்கு வந்து பேசலாம்...?' அவ்ளோதான் மேட்டர்.
விளைவு...? எல்லா போஸ்டரும் கிழிக்கப்பட்டது. அடுத்தநாள், காலையில்... பரபரப்பான தகவல் பஸ் ஸ்டாண்டில் நியூஸ் பேப்பர் வாங்கும்போது நண்பர்களால் பரிமாறப்பட்டது. அதாவது... PJ மீட்டிங்கிற்காக போடப்பட்டு இருந்த மேடை உடைக்கப்பட்டு... கீற்று பிய்த்து எறியப்பட்டு... மைக் செட் லைட் எல்லாம் நொறுக்கப்பட்டு... சொற்பொழிவு இன்று நடத்த முடியாத அளவுக்கு ஆக்கப்பட்டு விட்டது என்ற நியூஸ்..!
'இந்த இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பேச்சு காதில் விழாத பாதுகாப்பான(?) தூரத்தில்தான் இருக்கேன் நான்' என்ற நிம்மதியான எண்ணத்தில் இருந்த எனக்கு... வந்தே விட்டது அவரின் உரை எனது காதுக்குள்..! இது எப்படி..? ஆமாம்.! அந்த மீட்டிங் கேன்சல் ஆகவில்லை..! இடம் தான் கேன்சல் ஆகியது. எனவே, மீட்டிங் எங்கள் வீட்டு அருகே இருந்த 'சாரா கல்யாண மண்டபத்தில்' மாற்றப்பட்டு அங்கே நடந்தது. நான் என்னதான் காதை பொத்திக்கொண்டு இருந்தாலும்... வீதி எங்கும் கட்டப்பட்ட ஸ்பீக்கர்கள் மூலம் எனது செவிப்பறையை தட்டி எனது சிந்தைக்குள் சென்ற அவர் சொன்ன விஷயம் இதுதான்...........
"நான் என்ன, இவர்களை எதிர்த்தா பேச வந்துள்ளேன்..? நான் எதுக்கு இங்கே வந்து இருக்கேன்... எதைப்பற்றி பேச வந்து இருக்கேன்... இதுகூட தெரியாமல்... இப்படி மேடையை கலைத்து இடைஞ்சல் செய்தால் இதுக்கு என்ன அர்த்தம்..? நாளை பேப்பரில் நம்ம எதிரிகள்... என்ன எழுதுவாங்க தெரியுமா..? 'அதிராம்பட்டினத்தில் முஸ்லிம்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்த்து பேச வந்தவரின் மேடை உடைத்து சட்டத்துக்கு தம் ஆதரவை தெரிவித்தனர்.' இப்படி ஒரு அவப்பெயர் உங்கள் ஊருக்கு தேவையா...? நமக்குள் இருக்கும் மார்க்கம் பற்றிய வேறுபாட்டையா காரணமாக சொல்வார்கள்..? நான் என்ன சொல்றேன்னு புரியுதா..?" என்றார்.
அதுதான்... நான் அவர் விஷயத்தில் யோசிக்க ஆரம்பித்ததன் முதல் படி. அந்த பேச்சை முழுதாக செவி தாழ்த்தி சொற்பொழிவை கேட்க ஆரம்பித்தேன். 'அடடே... நல்லாத்தானே பேசுறார். நேர்மையான கேள்விகள்தானே இவை. எவ்ளோ பெரிய விஷயம் சொல்ல வந்து இருக்கார்..! ஒருவேளை மக்கள் இவர் மேலே சொல்றது தப்பா இருக்குமோ..? என்று நினைத்துக்கொண்டு... அத்தோடு அவரை மறந்தும் விட்டேன்..! காரணம், எனக்கு கொடுக்கப்பட்டு இருந்த ஆரம்பகால இன்புட் அவரை அந்நியராக்கி வைத்திருந்தது. ஆனால், இரண்டு நாள் கழித்து... அவர் சொன்ன மாதிரித்தான் தினமலரில் பெட்டி செய்தியாக ஓர் ஓரத்தில் வந்தது. "பொது சிவில் சட்டம் : அதிரை முஸ்லிம்கள் ஆதரவு". :-)
இதேகாலகட்டத்தில்... பல வருடங்களாக மத்ஹப் சட்டங்களை படித்து (ஃபிக்ஹின் கலைக்களஞ்சியம் : ஹனபி & ஷாபி) அதில் உள்ள குளறுபடிகளை கண்டு நெருடலாக இருந்து... 'ஒரே விஷயத்தில், ஹனபி ஒன்றாக ஷாபி வேறாக இருந்த மசாயில்களில் எது மார்க்க ரீதியில் நபி ஸல் அவர்களின் சரியான செயலாக இருக்கும்' என்று குழம்பி தத்தளித்துக்கொண்டு இருந்து... 'இரண்டுமே சரிதான் தம்பி' என்ற பதிலை இருவரிடமும் பெற்று... 'அப்படின்னா... இரண்டில் எது சிறந்ததோ அதை மட்டும் நான் எடுத்து இரண்டிலிருந்தும் மிக்ஸ் பண்ணி பின்பற்றலாமா' என்றாலும் கூடாதாம்... ஏதாவது ஒன்னை மட்டுமே பின்பற்றனுமாம்... இறுதியில்... அந்த மதஹப் சட்டங்களில் இது நிச்சயம் பிழையானவையாகத்தான் இருக்கும் என்று சுயமாக சிந்தித்து ஒவ்வொன்றாய் வெறுத்து... (உதாரணம்:- திருட செல்லுவதற்கு முன்னர் திருடன் ஓதவேண்டிய துவா) அடுத்து எப்படி, எந்தப்பக்கம் செல்வது, என்ன செய்வது, என்று குர்ஆன் தர்ஜுமாவை மட்டும் படித்துக்கொண்டு இருந்தபோதுதான்...
தூத்துக்குடியில் நான் டிவி வாங்கிய பிறகு... (அதற்கு முன்னர் எங்கள் வீட்டில் டிவி இல்லை) ஒருநாள், விஜய் டிவியில் ஒருவரின் சொற்பொழிவை எதேச்சையாக 'பார்க்கும்' வாய்ப்பு ஏற்பட்டது. 'அடடே... எல்லாம் சரியா சொல்றாரே..! மத்ஹபில் தப்பா இருக்கும் இது... உண்மையில் இப்படி இருந்தால் நல்லா இருக்குமே என்று நாம் நினைச்ச படியே நம்ம மார்க்கத்திலும் முன்னமேயே இருக்கே...' என்று வியப்போடும் மனநிறைவுடனும் நன்றியுணர்வோடும் அவரைப்பார்த்துக்கொண்டு இருந்த போதுதான்... நண்பன் அதிரை ஹாரிஸ் சொன்னான்... 'இவர்தாண்டா அவர்' என்று..!
அதற்கு முன்னர் 13 வருடங்களாக அவரை பண்டாரவாடையில் 'ஜெய்லாவுதின்' என்றும், அதிரையில் 'PJ' என்றும் அறிந்திருந்த நான் அன்றுதான்... அவரை 'மவுலவி P.ஜைனுல்ஆபிதீன் உலவி' இவர்தானா என்று பரவசத்துடன் பார்த்தேன். அவரது ஆய்வுத்திறனும் அரபிப்புலமையும் பேச்சாற்றலும் அவர்மீது எனக்கு ஒருவித மதிப்பும் மரியாதையும் ஏற்படுத்தியது. அதேநேரம், 'இவரையா இத்தனை காலம் நாம் நம்மைவிட்டு தள்ளி வைத்து நம்மை நாமே பாழ்படுத்திக்கொண்டோம்..?' என்று உள்ளுக்குள் துணுக்குற்றேன்.
இஸ்லாமிய மார்க்கம் தொடர்பாக மத்ஹப் காரர்களின் பேச்சை கேட்காது இருந்து சுயமாக ஆராய வேண்டும் என்ற கொள்கையில் இருந்த நான்... 'இவரை மட்டும் சுயமாக ஆராயாமல்.. இவ்வளவு காலம் அவர்கள் பேச்சை கேட்டு எப்படி விலகி ஓடினேன்' என்று என்னை நானே அவமானத்தால் நொந்து கொண்டேன்.
சகோ.பிஜேவின் சொற்பொழிவுகள், ஆய்வுகள், கேள்வி- பதில்கள் போன்றவற்றை, 'இவர் ஒரு சிறந்த இமாம்' என்று நான் அறிந்த ஸ்பிக் நகர் பள்ளியின் சுன்னத் ஜமாஅத் மவுலவியிடம் சொல்லி விவாத்தித்த போது... 'மவுலவி பிஜே சொல்றதுதான் சரி' என்று ஏறக்குறைய எல்லா விஷயத்திலும் அவரை சப்போர்ட் பண்ணியது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
அப்படியாக, ஓரிரு வருடம் கழித்து, குடந்தை-மேலக்காவேரியில் ஒரு மேடை சொற்பொழிவில்... சகோ.மவுலவி பிஜே அவர்களை நேரில் சந்தித்து சலாம் சொல்லி அருகருகே மேலக்காவேரி பள்ளியில் இஷா தொழுத அன்று (2002) அவர் மூலமாக அல்லாஹ் தந்த உத்வேகம்தான் புஹாரி ஹதீஸ் ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் என்னை வாங்க வைத்தது. அன்று அவர் கூட்டத்தில், 'யார் யாரிடம் ஏதாவது ஒரு குர்ஆன் தர்ஜுமா உள்ளது, கைதூக்குங்கள்' என்றார். நான் உட்பட ஏராளமானோர் கை தூக்கினோம். 'மாஷாஅல்லாஹ்' என்றவர், 'வாங்காதவர்கள் யார் என்று கேட்டு இருக்கனுமோ' என்று கூறி விட்டு.. அடுத்து, 'இம்மாதம் வெளிவந்த புகாரி ஏழாவது பாகம் யாரிடம் உள்ளது..?' என்றார்..? எவரிடமும் இல்லை. 'சரி, மற்ற ஆறு பாகம் உள்ளவர்கள்..?' எவரிடமும் இல்லை. இப்படியே குறைத்து குறைத்து வந்து 'ஒரு பாகமாவது யாரிடம் உள்ளது..?' என கேட்க ஒரு சிலர் மட்டும் கை தூக்கினர்.
இந்த மாதிரியான மோசமான நிலையிலா நாம் இருக்கிறோம்... என்று அவருக்கு வந்த நியாமான வருத்தத்தில்... முன்வரிசையில் அமர்ந்து இருந்த நான் வெட்கி தலைகுனியும் அளவுக்கு அடுத்து அவரின் உரை என்னை மிகவும் பாதித்தது. ஆமாம்..! அவர் உரையின் படி... நான் சினிமாவுக்கு செலவழித்துள்ளேன். காமிக்ஸ், நாவல், விகடன், குமுதம், தினதந்தி, தினமணி, தி ஹிந்து, எக்ஸ்ப்ரஸ்... என்று எதற்கெல்லாமோ... எவ்வளவோ செலவு செய்து உள்ளேனே..! அந்த பணத்தில் எழென்ன... எழுநூறு பாகம் நான் வாங்கி இருக்கலாமே..! ஏன் எனக்கு வாங்க மனம் வரவில்லை..? மறுமைக்காக வாழும் எண்ணம் எனக்கு இல்லையா..? மார்க்கத்தை அறியும் ஆவல் எனக்கு இல்லையா..? இதுபோல யாராவது வந்து எதயாவது மார்க்கம் என்று சொன்னால், 'சொல்பவர் சொல்வது சரியா' என்று எப்படி நான் உரசிப்பார்ப்பது..?
அதே ஊட்டத்தில்... அடுத்த நாளே... குடந்தையில் அலைந்து புஹாரி கிடைக்காமல்... தஞ்சாவூர் ஹாஜியார் புக் டிப்போ சென்று ஏழு வால்யுமையும் ஒரே நேரத்தில் வாங்கி தூக்க முடியாமல் தூக்கி வந்தேன். அடுத்து, முஸ்லிம், திர்மிதி என்று என்னை சரியான பாதையில் இவரின் இந்த மனதை தொட்ட உரை மூலம் என்னை சரியான பாதையில் பயணிக்கவைத்த இறைவனுக்கே புகழனைத்தும்.
மேலும், விஜய், விண், மூன் மீடியா சிடிக்கள், ஆன்லைன் பிஜே தளம், DAN தமிழ், இமயம் வாயிலாக... அவரால் நிறைய மார்க்க விஷயங்களில் நான் விளக்கம் பெற்றிருக்கிறேன். அதெல்லாம் நான் குழம்பி வேறு எப்பக்கம் செல்வது என்று முட்டு சந்தில் திக்கு முக்காடி திசை அறியாமல் நின்ற விஷயங்கள். அல்ஹம்துலில்லாஹ். எனக்கு பல விளக்கங்களை ஊட்டின அவரது உரைகளும் எழுத்துக்களும்.
அப்போதெல்லாம்... அவற்றில், அவர் அடிக்கடி சொல்லும் அறிவுரையில் எனக்கு மிகவும் பிடித்தது யாதெனில்... "நான் சொல்கிறேன் என்பதால் அப்படியே நம்பி பின்பற்றாமல், நீங்களும் கற்று ஆய்வு செய்து சரிபார்த்து விட்டு விளங்கி பின்பற்றுங்கள்" என்பதே..! ஒருவர் மார்க்க விஷயத்தில் முனைந்து கஷ்டப்பட்டு பல நாட்கள் பல நூல்களை ஆய்வு செய்த பின்னரும், இப்படியும் சொல்ல ஒரு கர்வமற்ற மனப்பக்குவம் வேண்டுமே. மாஷா அல்லாஹ்.
இப்படி, என்னைப்போல... எண்ணற்றோர் சரியான இஸ்லாமிய பாதையை தேர்ந்தெடுக்க அவர் ஒரு கருவியாக இருக்கிறார். தமிழ்கூறும் நல்லுலகிற்கு, அவர் ஓர் இஸ்லாமிய சொத்து.
கடந்த 27 வருடங்களாக அவரின் இந்த அயராத மார்க்க உழைப்புக்கு உரிய நற்கூலியை வல்ல அல்லாஹ் அவருக்கு ஈருலகிலும் வழங்கி அவரை மகிழ்விக்கவும், அவரின் அளப்பரிய தொண்டுகள் மேலும் பலருக்கு சென்றடைந்து இன்னும் எண்ணற்றோர் பயன்பெறவும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நோயை அடியோடு முற்றிலுமாக நீக்கி அருளி, இன்னும் பல்லாண்டுகள் அவருக்கு நல்வாழ்வினை தந்து, மார்க்க பிரச்சார அழைப்பு பணியில் இன்னும் சிறப்பாக ஈடுபட அவருக்கு உடலளவிலும் & மன அளவிலும் பெரும் ஆரோக்கியமும் ஊக்கமும் தந்தருளவும்... அவரின் பாவங்களை மன்னிக்கவும், இருகரம் ஏந்தி வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன். யா அல்லாஹ், எனது துவாவை ஏற்றுக்கொள்வாயாக..! ஆமீன்.
source: முஹம்மத் ஆஷிக் citizen of the world

Read more...

வாழ்ந்த வீட்டுக்கும், வாழப்போற வீட்டுக்கும் பெருமையாம்.!

சனி, 3 நவம்பர், 2012


பெண்களின் உயரிய குணத்தைதங்கத்தோடு ஒப்பிட்டு, "பத்தரை மாற்று பெண்என கூறியதாலோ என்னவோபெண்களையும்தங்கத்தையும் பிரிக்க முடியவில்லை. அழகுப் பெண்ணைக் கூட, "தங்கம்போல ஜொலிக்கிறாள் என்று வர்ணிக்கிறோம். இன்னும் ஒரு படி மேலே போனால்குழந்தைகளை சாப்பிட வைக்கும் போது, "என் தங்கம்... என் வைரம்...என "விலை மதிப்பில்லாமல்கொஞ்சி சாப்பிட   வைக்கிறோம். நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாலும்ஏழைஎளியோருக்கு எட்டாத பொருளாய்விலையில் வானத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது தங்கம். வசதியில்லாதவர்கள் கூடதிருமணத்தின் போது காதுமூக்குக்காவது நகை வேணும் என மாப்பிள்ளை வீட்டார் வெட்கமில்லாமல் பெண்வீட்டாரிடம் எதிர்பார்க்கின்றனர்.
நடுத்தர வர்க்கத்தினரின்,  "தங்கக்கனவுகொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து கொண்டிருக்கிறது. அங்கத்தில் தங்கம் அணிவதன் மீதான பெண்களின் மோகம் தீரும் வரைதங்கம் தனது விலையிலிருந்து குறையாது.  என்று தீரும் தங்கத்தின் மீதான மோகம்?'   

புன்னகை இருந்தால் போதும்எந்நகையும் வேண்டாம்.
நகை வேண்டாம்ன்னு சொன்னாலும்கழுத்தில் செயின் அணியச் சொல்லி வீட்டில் கட்டாயப்படுத்துகின்றனர். செயின் போடலைனா, "இவ ஒண்ணுமில்லாதவ'ன்னு மத்தவங்க பேசுவாங்களாம். பெண்ணை எவ்வளவு படிக்க வச்சீங்கன்னு யாரும் கேக்கறதில்ல. எவ்வளவு நகை போட்டீங்கனு தான் கேக்குறாங்க.
என்னவோ பெண்கள் மட்டும் தான் நகை அணிவதாக சொல்றீங்க. ஆம்பிளைகள் கழுத்தில் ரெண்டு செயின்கையில் அகலமான பிரேஸ்லெட்பெரிய மோதிரங்கள் அணிந்துநடமாடும் நகைக்கடையா வர்றாங்களே. அவங்களுக்கும் தான் நகையின் மீது மோகம் இருக்கிறது.( இஸ்லாத்தில் ஆண்கள் தங்கம் அனிவது தடை செய்யப் பட்டுள்ளது}
தங்கத்தின் மீதான மோகம் என்றுமே தீராது. நகை இருந்தால் தான் சமுதாயத்தில் மதிக்கப்படுகின்றனர். அந்தக் காலத்தில் அழகுக்காக நகையணிந்தனர். தற்காலத்தில் அந்தஸ்துக்காக தங்கம் அணிய வேண்டியுள்ளது. நகையணிந்தால் தான் வாழ்ந்த வீட்டுக்கும்வாழப்போற வீட்டுக்கும்   பெருமையாம்.
ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும்கைகாதுகழுத்தில் தங்கநகை அணிந்தால் கூடுதல் அழகாக இருப்பாள். பெண்களை அழகுபடுத்துவது தங்கம் தான். வீட்டு விசேஷம்விழாக் காலங்களில் நகையணிந்து வந்தால் தான் மதிப்பும்மரியாதையும் கிடைக்கும் என்ற எழுதப் படாத சட்டம் இருப்பதால் தங்கத்தின் மோகம்பாடாய்ப்--படுத்துகிறது..
  .
நகையணிந்தால் மதிப்புமரியாதை கிடைக்கும். பாதுகாப்பு இருக்குமாநகைக்காக எத்தனை பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இத்தனை லட்ச ரூபாய்பெண் பெயரில் "டிபாசிட்செய்கிறோம் என்று சொல்ல வேண்டும். அப்போது தான் உண்மையிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.


Read more...

ஆண் பெண் நட்பு ஆபத்தானது!

வெள்ளி, 21 செப்டம்பர், 2012


* முந்தைய காலங்களில் பெண்கள் ஆண்களிடம் பேசுதையே தவறு என்று இருந்த காலம் மாறி விட்டது. பருவ பெண்கள் எங்கு பார்த்தாலும் தனது பாய்பிரண்ட் என்று சொல்லி கொண்டு உலா வருகின்றனர் தியேட்டர், பீச், பார்க், பேருந்து நிலையம், ரயில் நிலையம் இன்னும் சொல்லிகொண்டே போகலாம் அந்த அளவிற்கு பெருகிவிட்டத ஆண், பெண்பழக்கங்கள். 

* சில பெண்கள் ஆண் நண்பர்கள் இல்லை என்றும் ஆண்கள் பெண் நண்பர்கள் இல்லை என்றும் வருந்தவும் செய்கின்றனர். ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. பள்ளி கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. 


ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம். பருவப் பெண்களும் பெற்றோருக்குத் தெரியாமல் ஆண் நண்பர்களுடன் வெளியில் சுற்றக்கூடாது. 


* ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவதையும் தவிர்க்க வேண்டும். பரிசுகள் பெறுவதும், போட்டோ எடுத்துக் கொள்வதும் எப்போது வேண்டுமானாலும் பிரச்சினையை உருவாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். 


* ஜாலியாக இருப்போம் என்று பழகுவதும், உடல் ரீதியாக அத்துமீறலை அனுமதிப்பதும் இறுதியில் உங்களுக்குத்தான் ஆபத்தை கொண்டுவரும் என்பதை மனதில் வையுங்கள். 


* ஆசையை தெரிவித்து நெருங்கும் ஆண்களிடம் பக்குவமாகப் பேசி தவிர்த்து விடுங்கள். நமது லட்சியம் இதுவல்ல என்பதை விளக்கிவிட்டு விலகிச் செல்லுங்கள். 


* தேவையில்லாமல் தொடர்ந்து வரும் ஆண்களைப் பற்றியும், தொல்லை கொடுப்பவர்களை பற்றியும் பெற்றோரிடமும், பொறுப்புக்குரியவர்களிடமும் சொல்லி வையுங்கள். பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

Read more...

தன் உயிரை விடவும் தயாராகி விடுவது ஏன் ?

ஞாயிறு, 24 ஜூன், 2012


பணம்... பணம்! இதற்காகவே பாடு படுகின்றனர் மக்கள். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நகர்புறங்களுக்கு வந்து விடுகின்றனர் கிராமவாசிகள். எப்படியாவது பணம் சேர்த்து, குடும்பத்துக்கு கொடுத்து விட வேண்டும் என்று விரும்பு கின்றனர். இதற்காக, தன் உயிரை விடவும் தயாராகி விடுவதுண்டு. ஒருவர் விமானத்தில் பயணம் செய்கிறார்... "விமானம் விபத்துக்குள்ளானால், அது உங்களுக்கு ஆபத்தில்லையா?' என்று கேட்டால், "விபத்தில் நான் போய் விட்டாலும், குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கிடைக்குமே...' என்கிறார். 
ராணுவத்தில் சேர்ந்து கண் காணாத இடத்துக்கு போகிறார் ஒருவர்... "ராணுவத்தில் உயிருக்குக் கூட ஆபத்து வருமே?' என்றால், "அதனால் என்ன? குடும்பத்துக்கு பணம் வருமே...' என் கிறார். எப்படியும் பண ஆசை விடுவதில்லை. ஒருவன், தலையில் பண மூட்டை, ஒரு கையில் குழந்தை, ஒரு கையில் மனைவி, இப்படியாக ஒரு ஆற்றைக் கடக்க முயன்றான். ஆற்றில் வெள்ளம்; அவனால் ஆற்றை கடக்க முடியவில்லை.
அவனை பார்த்து, "உன்னிடம் உள்ளதை விட்டு விட்டால், ஆற்றை கடக்கலாம்...' என்றார் ஆற்றங் கரையில் இருந்த பெரியவர் ஒருவர். உடன் அவன் கையில் பிடித்திருந்த குழந்தையை விட்டு விட்டான். அது ஆற்றோடு போய் விட்டது; அப்படியும் அவனால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. கைப்பிடித் திருந்த மனைவியையும் விட்டு விட்டான். அப்படியும் ஆற்றை கடக்க முடியவில்லை அவனால். பெரியவர், "உன் தலையில் உள்ள மூட்டையையும் விட்டு விடு...' என்றார். அதற்கு அவன், "அது மட்டும் முடியாது. அது, நான் கஷ்டப் பட்டு சேர்த்து வைத்த பணம். அதை நான் எப்படி விட முடியும்...' என்று சொல்லி, தலையில் பண மூட்டையுடன் ஆற்றைக் கடக்க முயன்றான்.
ஆற்று வெள்ளம் அவனையும், பண மூட்டை யுடன் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதாவது மனைவி, பிள்ளைகள் போனாலும் பரவாயில்லை; பணம் மட்டும் போகக் கூடாது. இப்படி ஒரு பண ஆசை. இந்தப் பணம் எத்தனை நாள் இவனோடு இருக்கப் போகிறது? இவன் தான் எத்தனை நாள் இந்தப் பணத்தோடு இருக்கப் போகிறான். என்றாவது ஒரு நாள், இவனும் இருக்கப் போவதில்லை; பணமும் இருக்கப் போவதில்லை. 
வாழ்க்கையே நிரந்தரமில்லாத போது, பணமோ, மனைவி - மக்களோ என்ன சாசு வதம்? என்றும் இருப்பவன் இறைவன் ஒருவன் மட்டும்தான். பணம், மனைவி - மக்களை நம்பி, அவர்கள் மீது அன்பும், பாசமும் வைப்பதைவிட, இறைவனை அதிகமாக நேசிக்க வேண்டும். என்றும் உள்ள இறைவனுக்கு பயந்து அவன்  ஏவியவைகளை செயல் படுத்தி மக்கள் மீது அன்பு வைக்கலாமே! அது தான் கிடையாது. பணத்தின் மீது தான் ஆசை. பணம் எத்தனை நாட்களுக்கு காப்பாற்றும்? ஏமாந்தால் திருடன் கொண்டு போய் விடலாம். இறந்தால் உறவினர் பங்கு போட்டுக் கொள்வர். பின் இவனுக்கு என்று எது உள்ளது?  இறைவனை வழிபட்டால் போதும்! அவன், அவனது துன்பங்களை போக்கி, நல்வழி காட்டி நற்கதி அடையச் செய்வான்; அது தானே முக்கியம். யோசிக்க வேண்டும்!

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets