உங்கள் வருகைக்கு நன்றி

நல்ல பண்புகளை வளர்ப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நல்ல பண்புகளை வளர்ப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

முயற்சிகளை பெற்றோர்தான் எடுக்க வேண்டும்,

வெள்ளி, 16 அக்டோபர், 2015

வீடியோ கேம்ஸ்' விளையாடும்போது,  இமைகளை மூடாமல் தொடர்ந்து கம்ப்யூட்டர், "டிவி'க்களை பார்க்கும்போது, கருவிழி முன்னால் ஈரப்பசை காய்ந்து விடும். இதனால் கண் சிவந்து, உறுத்தல் அதிகரிக்கும். கூர்மையாக பார்க்கும்போது, தலைவலி ஏற்படும். ஆர்வம் காரணமாக படிப்பு உட்பட மற்ற விஷயங்களில் கவனசிதறல் ஏற்படும்.  உடல் உழைப்பில்லாமல், ஒரே இடத்தில் நாள் முழுவதும் கம்ப்யூட்டர் முன் உட்காருவதால்,  உடல் பருமன் ஏற்படுகிறது. தவிர

எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட தின்பண்டங்களை சாப்பிடுவதாலும் உடல் பருமன் அதிகரிக்கும். இதனால், 

பித்தப்பையில் கல், கால் மூட்டு தேய்மானம், சிறுவயதிலேயே சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம், கொழுப்பு சத்து அதிகரிப்பு  ஏற்படும். இதுபோன்ற காரணங்களால், 30 வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, தினமும் 4 கி.மீ., தூரம் நடப்பதும், ஓடி விளையாடும் விளையாட்டுகளில் ஈடுபடுவதும் நல்லது.


"
வீடியோ கேம்ஸ்' ஒரு போதை! 
மாணவர்களுக்கு தொலைநோக்கு பார்வை, பொதுஅறிவு, ஆளுமை தன்மை போன்றவற்றை வளர்ப்பதற்காகவே கோடை பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. ஆனால் இன்று அறிவுசார்ந்த நூல்களை படிப்பதில்லை. விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை. எந்நேரமும் "வீடியோகேம்ஸில்' கவனம் இருப்பதால், மனநலம் மட்டுமல்ல, உடல்நலமும் பாதிக்கும். இது ஒரு வகை போதை. நண்பர்களுடன் பழகி, விளையாடினால்தான் ஒழுக்கம், ஆளுமை தன்மை போன்றவற்றை கற்க முடியும். விடுமுறை நாட்களில் விளையாட்டு மைதானத்திற்கு வரவேண்டும். இயற்கை, சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். அதைவிடுத்து, 4 சுவர்கள், ஒரு கம்ப்யூட்டர்தான் உலகம் என இருந்துவிடாமல் இருக்க, தேவையான 

Read more...

இந்த வயசுல இவங்க மட்டும்தானா ?

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

டாக்டர்! நாங்க நாலு பேரும், கொஞ்ச நாளைக்கு முன்னால, கேரளா போய் "ஜாலியா' இருந்துட்டு வந்தோம்; இப்போ, எங்களுக்குப் பயமா இருக்கு சார், எங்களுக்கு எச்.ஐ.வி., டெஸ்ட் பண்ணணும் ''

வார்த்தையை முடிப்பதற்குள் சொன்னவனை ஓங்கி அறைந்தார் அந்த டாக்டர்; மற்ற மூன்று பேரும் ஓரடி பின் வாங்கினர். காரணம், அவர்கள் நால்வரும் கோவையிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள். நகரின் முக்கிய மருத்துவமனையில் பணியாற்றும் பாலியல் மருத்துவரின் அறையில் நடந்தது இந்த நிகழ்வு. இதற்கு மேல்தான் காத்திருக்கிறது அதிர்ச்சி.மாணவர்கள் ஏதோ பயத்தில் வந்திருக்கின்றனர் என்று நினைத்து, அவர்களை பரிசோதித்துப் பார்த்த போது, அவர்களில் ஒரு மாணவனுக்கு எச்.ஐ.வி., பாசிட்டிவ் என்று தெரியவந்தது.""எத்தனையோ எச்.ஐ.வி., பேஷன்ட்களுக்கு நான் "ட்ரீட்மென்ட்' கொடுத்திருக்கேன். இந்த வயசுல, இப்பிடி வந்து நின்ன பசங்க இவங்க மட்டும்தான். நம்ம கலாச்சாரமும், வாழ்க்கை முறையும் எங்கே போகுதுன்னு நினைச்சப்ப, எனக்கு நாலு நாளா தூக்கமே வரலை,'' என்று முடித்தார் அந்த டாக்டர்.
தனியார் பள்ளிகளில் படிக்கும் மேல் தட்டு மாணவர்கள் பலரிடம், அதி நவீன மொபைல் போன்கள் சர்வ சாதாரணமாகப் புழங்குகின்றன. அவற்றில், அதிவேக இன்டர்நெட் இணைப்பும் கிடைக்கிறது. இல்லாவிட்டால், இன்டர்நெட்டில் இருந்து அவர்களே, இறக்கி வைத்துக்கொள்கின்றனர். காசைக் கொட்டுவதற்கு, இவர்களின் பெற்றோர் தயங்குவதே இல்லை. இந்த வாழ்க்கை முறைதான், இந்த மாணவர்களை மரணத்தின் விளிம்பு வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது. கலாசாரத்தின் ஆணிவேர்களில் அமிலத்தை ஊற்றும் இந்த தகவல் தொடர்பு சாதனங்கள், தேசத்தின் வளர்ச்சிக்கு உதவுவதற்குப் பதிலாக, இந்த தேசத்தின் நாளைய மன்னர்களுக்கு சவக்குழிகளை வெட்டிக் கொண்டிருக்கின்றன. பல மாதங்களாக ஆபாச படங்களை காட்சிகளாகப் பார்த்துப் பழகி, அதற்கு அடிமையாகி விட்ட நிலையில்தான், இந்த மாணவர்கள் அடுத்த கட்ட முயற்சிக்குப் போயிருக்கின்றனர். இவர்களைப் போலவே, இன்றைக்கு ஏராளமான மாணவர்கள் பிரவுசிங் சென்டர்களுக்குள் புகுந்து, வாழ்வுக்கான அழிவைத் தேடிக் கொள்கின்றனர். விளையாட்டாக "வீடியோ கேம்ஸ்'களை மட்டுமே ரசித்த பள்ளி மாணவர்கள், ஆபாச வலைதளங்களையும் அடிக்கடி நலம் விசாரிக்கின்றனர். சர்வதேச அளவில் மென்பொருள் உருவாக்கத்தில் சாதனை படைத்து இந்திய இளைய சமுதாயம்தான், மற்றொரு புறத்தில் இப்படி ஆபாசங்களில் அழிந்து போவது வேதனைக்குரிய விஷயம்.மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல்.பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகளும் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம். குறிப்பாக, பிரவுசிங் சென்டர்களுக்கு எந்தவித கண்காணிப்பும் இல்லை. விபசாரத்தில் பள்ளி மாணவர்கள் கூட பாதிக்கப்படும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய இந்திய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது.ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும். இந்நிலையில், இலவச லேப்-டாப்களை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. அப்போது, நிலைமை இன்னமும் விபரீதமாகிவிடும். எனவே, மாணவர்கள் தேவையில்லாத வலைத்தளங்களுக்குள் நுழையும்போது, இணைப்பு கிடைக்காதவாறு செய்ய வேண்டும்; மெமரி கார்டு, பென்டிரைவ் கூடாது. வளர் இளம் பருவத்திலுள்ள குழந்தைகள் லேப்-டாப், மொபைல் போனுடன் அதிக நேரம் செலவிடுகிறார்களா என கண்காணித்து மாற்றம் கொண்டு வர பெற்றோர் முயற்சிக்க வேண்டும்.
ஆபாச படங்களை மெமரி கார்டுகளில் டவுன்லோடு செய்து தர தடை விதிக்க வேண்டும். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை வேண்டும். குறிப்பிட்ட வலைத்தளங்களையும் கண்காணித்து தடை விதிக்க வேண்டும் என்பது உளவியல் நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

பால்வினை நோய் சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகையில், "தற்போது 12 வயது நிரம்பாத மாணவர்கள் கூட, ஆபாச படங்களை பார்ப்பது மட்டுமின்றி செயல்ரீதியாகவும் முயற்சிக்கும் அவலம் உள்ளது. பலரும் ஆபாசபடங்களுக்கு அடிமையாகிவிட்டு தவறு செய்வது அதிகரித்து வருகிறது; பயம் மற்றும் சந்தேகம் காரணமாக எச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்க வருகின்றனர். மாதந்தோறும் 30 வயதுக்குள் உள்ள இளைஞர்கள் குறைந்தபட்சமாக 15 பேராவது என்னிடம் பரிசோதனைக்கு வருகின்றனர். இதேநிலை நீடித்தால், ஆரோக்கியமான இளைஞர்களை பார்க்கவே முடியாது' என்றார்.

கோவையை சேர்ந்த மனநல டாக்டர் சீனிவாசன் கூறுகையில், ""முன்பு குறிப்பிட்ட காட்சிகள் எழுத்து, போட்டோ வடிவில் மட்டுமே பார்க்க முடிந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக நேரிடையாக பார்க்கும் நிலை தற்போதுள்ளது. ஊடகங்களால் ஆபாச காட்சிகள் சாதாரணமாகி விட்டன; இது தவறானது, கூடாது என்ற மனநிலை மாறிவிட்டது. படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும். ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்,''  


Read more...

திரையில் பார்ப்பதை மாணவர்கள், யதார்த்தத்தில் பிரதிபலிக்கின்றனர்.

சனி, 7 செப்டம்பர், 2013


கல்லூரி மாணவர்கள், ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் செய்திகள், சமீபகாலமாக அதிகளவில் வெளியாகின்றன. இந்த வன்முறைக்கு பின்னணியில் அரசியல் கட்சிகள் இருப்ப தாக, "மோதல்' மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான மோதல்களுக்கு, "பஸ் ரூட்' பிரச்னையே தொடக்கப் புள்ளியாக உள்ளது. குறிப்பிட்ட பேருந்து வழித்தடத்தில் செல்லும் கல்லூரி மாணவர்கள், பேருந்தில் "கானா' பாடி செல்வது வழக்கம்.அப்போது, மற்றகல்லூரி மாணவர்களை தரம் தாழ்த்தி, தங்கள் கல்லூரியின் புகழை பாடுவர். இதனால், அந்த பேருந்தில் இருக்கும் மற்ற கல்லூரி மாணவர்களுடன் கை கலப்பு ஏற்படுகிறது. அதே போல, ஒரே பேருந்தில், வெவ்வேறு கல்லூரி மாணவர்கள் செல்லும் போது, குறிப்பிட்ட கல்லூரி மாணவியரை கிண்டல் செய்யும் போது, மோதல் ஏற்படுகிறது.
குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள்; தங்கள் கல்லூரியிலும், மற்ற கல்லூரிகளிலும், தங்கள் "பஸ் ரூட்டின்' பலத்தை காட்ட வேண்டும் என்பதற்காக, நண்பர்களையும், அந்தந்த பகுதியில் வசிக்கும் அரசியல் சார்புடையவர்களையும் தங்களோடு இணைத்துக் கொள்கின்றனர். இதனால், இரண்டு தரப்பு மாணவர்களுக்கும் இடையே பிரச்னை வரும் போது, அந்தந்த மாணவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பவர்கள், கல்லூரி மாணவர்கள் போர்வையில், ஆயுதங்களோடு மோதலில் ஈடுபடுகின்றனர். மோதல் முற்றும் போது, கல்லூரி மாணவர்களையும் ஆயுதம் எடுக்க அவர்களே ஊக்கம் கொடுக்கின்றனர்.
எந்த பேருந்து வழித்தடத்தில், அதிக மாணவர்கள் பயணிக்கின்றனரோ, அவர்களே கல்லூரிதேர்தலில், வேட்பாளர்களை நிறுத்துவர்.தேர்தலில் வெற்றி பெறுபவர்களுக்கு, வெகுஜன அரசியல் கட்சிகளில், பொறுப்பும், நிதியும் வழங்கப்படுவதால், கல்லூரி தேர்தல், பொதுத்தேர்தலுக்கு இணையான வகையில் நடக்கிறது. மாணவர் தேர்தல் நடப்ப தற்கு நான்கு மாதங்களுக்கு முன், அரசியல் கட்சிகள், வேட்பாளர்களுக்கு ஆள் மற்றும் பண பலத்தை வழங்கி, ஒட்டுமொத்த தேர்தல் செலவையும் ஏற்றுக் கொள்கின்றன. அரசியல் கட்சிகளின் பின்புலம் இருப்பதால், ஏற்கனவே, "வானளாவிய' சுதந்திரம் பெற்ற மாணவர்கள், எதையும் துணிந்து செய்யும் தைரியத்திற்கு வந்து விடுகின்றனர்.
மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதிக் கொள்வது குறித்து,  மாநில கல்லூரி மாணவர் கூறியதாவது:
ஒரு ஏரியாவுக்கும், அடுத்த ஏரியாவுக்கும் பிரச்னை வருகிற போது, எப்படி ஆயுதங்களுடன் சண்டை போடுகிறார்களோ, அது போலவே, நாங்களும் சண்டை போடுகிறோம். கல்லூரி மாணவர்கள், ஆயுதங்களுடன் சண்டை போடுவது எப்போதும் நடக்கும். சமீபகாலமாக, ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிடுவதால், பொதுமக்கள் புதிதாக பார்க்கின்றனர். மற்றபடி இதெல்லாம் சாதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.

அதே கல்லூரியை சேர்ந்த மற்றொரு மாணவர் கூறுகையில், ""எங்கள் "பஸ் ரூட்' மாணவர் பாதிக்கப்பட்டால், அது ரூட்டில் வரும் அனைத்து மாணவர்களின் மானப் பிரச்னை. அதனால், ஆயுதங்களுடன் மோதுகிறோம். போலீசார் எங்களை கைது செய்தாலும், பெரும்பாலும், எதிர்காலம் கருதி, வழக்கு பதிவு செய்வதில்லை. அதனால் தைரியமாக, மோதலில் ஈடுபடுவோம்,'' என்றார்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வகைவன்முறை அதிகரித்து வந்ததை அடுத்து, அப்போதய சென்னை போலீஸ் கமிஷனர், அனைத்து கல்லூரி களின் முதல்வர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளை அழைத்து ஆலோசனை கேட்டனர்.முதல்வர்களும் கண்ணீர் வடித்தபடி, மாணவர்களின் லீலைகளை எடுத்துக் கூறினர். உடனே, அன்றைய கமிஷனர், "பஸ் டே"யால் பல பிரச்னைகள் வருவதை கருதி, "பஸ் டே'க்கு தடை விதித்தார்.அதன் பிறகு, கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். சிறிது நாள் தொடர்ந்த நடவடிக்கை, பின்னர் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.மாணவர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்திருந்தால், இப்படி சாலையில் மோத மாட்டார்கள் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
வன்முறை கலாசாரம் குறித்து, உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா கூறியதாவது: 
மாணவர்களின் இந்த நிலைக்கு சினிமாவே காரணம். எதையும் பசுமரத்தாணி போல் உள்வாங்கும் பருவத்தில் இருப்பதால், சினிமா முன்வைப்பதை அப்படியே உள்வாங்கிக் கொள்கின்றனர். கல்லூரி மாணவர் என்றால், திமிராக திரிய வேண்டும்; கட்டாயம் காதலி இருக்க வேண்டும்; எதற்கும் கட்டுப்படாமல் இருக்க வேண்டும் என, சினிமா காட்டுகிறது. திரையில் பார்ப்பதை மாணவர்கள், யதார்த்தத்தில் பிரதிபலிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நாளுக்கு நாள், கல்லூரி மாணவர்கள் பற்றிய கவலை, பெற்றோர்களிடம் குறைந்து வருகிறது. இந்த இரண்டும்மாறினால், மாணவர்களிடம் மாற்றம் வரும்.இவ்வாறு அவர் கூறினார்.  

Read more...

மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை.

புதன், 3 ஜூலை, 2013


ம.பி., மாநில தலைநகர் போபாலில் கடந்த 1984ம் ஆண்டு யூனியர் கார்பைடு நிறுவனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக விஷவாயு கசிவு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவ்வாறு இந்த கோர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 17 வயது மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர்,

யூனியன் கார்பைடு ஆலை அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் வசித்து வந்தது முகமது அலி குவாய்சர் குடும்பம். 17 வயதான குவாய்சர் ஒரு மாற்றுத்திறனாளி மாணவர். போபால் விஷவாயு சம்பவம் நடந்த போது அவரது முழு குடும்பமும் இதில் பாதிக்கப்பட்டது. குவாய்சரின் தாய் இந்த சம்பவத்தில் இறந்து போனார். மற்றவர்கள் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளி என்ற காரணத்தால் குவாய்சர் முன்னுரிமை கொடுத்து மீட்கப்பட்டார். தனது தாய் இந்த சம்பவத்தில் இறந்துவிட்டார் என்பதையறிந்த குவாய்சர், தான் ஒரு டாக்டராகி தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தீர்மானித்தார்.

எனினும் அவருக்கு டாக்டர் படிப்பு அவ்வளவு எளிதாக இருக்க வில்லை. இலவசமாக மருத்துவம் படிப்பதற்காக நடத்தப்படும் தேர்வில் இரண்டு முறை தோல்விடைந்த அவர், மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். மாற்றுத்திறனாளிகளுக்கு என தனி கோட்டா இல்லாத நிலையில், பொதுப்பிரிவில் அவர் இந்த சாதனையை செய்துள்ளார். பின்னர் எம்.பி.பி.எஸ்., முடித்த குவாய்சர் முதலில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தார். பின்னர் இங்கு பணிபுரிந்தால் தன்னால் விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய இயலாது எனக்கருதி, அப்பதவியை ராஜினாமா செய்து விட்டு, விஷவாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் சம்பாவனா டிரஸ்ட் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார்.

நீங்கள் பணம் தான் வேண்டும் என விரும்பினால் அது உங்களுக்குள் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆனால் மனிதர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பினால் பணம் ஒரு விஷயமே இல்லை. அதனால் தான் பணம் அதிகம் வரும் அரசு டாக்டர் வேலையை விட்டு விட்டு விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இங்கு பணிபுரிகிறேன்" என்கிறார் முகமது அலி குவாய்சர்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets