உங்கள் வருகைக்கு நன்றி

வாழ நினைத்தால் வாழலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ நினைத்தால் வாழலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாட்டுக் கோழிகளை வளர்ப்பு.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020


சென்னை ஆலப்பாக்கத்தில், தன் வீட்டின் மொட்டை மாடியில், நாட்டுக் கோழிகளை வளர்த்து, கூடுதல் வருமானம் பார்த்து வரும், சினிமா ஒளிப்பதிவாளர் ராஜேந்திரன்: புதுக்கோட்டை மாவட்டம், கல்லுார் என்ற ஊர் தான் பூர்வீகம். சிறு வயது முதல், இயற்கை மீது ஆர்வம் அதிகம். சினிமா படப்பிடிப்புகளுக்காக வெளியிடங்களுக்குச் செல்லும் போது, அங்கிருக்கும் விவசாயிகளை சந்தித்து பேசுவேன். ரசாயன விவசாயத்தின் தீங்கையும், இயற்கை விவசாயத்தின் தேவையையும் நன்கு உணர்ந்துள்ளேன்.ஒரு கட்டத்தில், இயற்கை விவசாயம் மீதான ஆர்வத்தால், சினிமாவிலிருந்து விலகி, இயற்கை அங்காடி நடத்தினேன். ஆறு ஆண்டுகளுக்கு முன், வீட்டின் மொட்டை மாடியில், நாட்டுக் கோழி வளர்க்க முடிவு செய்து, கடக்நாத் கோழி குஞ்சுகளை வாங்கினேன்.
துவக்கத்தில், எங்கள் தேவைக்கு போக, மீதமிருந்த முட்டைகளை, பக்கத்தில் இருப்பவர்களிடம் விற்று வந்தோம். கொஞ்சம் கொஞ்சமாக கோழிகள் எண்ணிக்கை பெருகி விட்டன. இப்போது, ஏழு சேவல்களும், 43 பெட்டை கோழிகளும் உள்ளன. தினமும், 20 முட்டைகள் கிடைக்கும். அவற்றில் பாதியை விற்று விடுவோம்; மீதியை குஞ்சு பொரிக்க வைத்துக் கொள்கிறோம்.எங்கள் வீட்டு மாடி, 800 சதுர அடி கொண்டது. 200 கோழிகளை தாராளமாக வளர்க்கலாம். 3 அடி தடுப்புச் சுவருக்கு மேலே, 3 அடிக்கு நிழல் வலையை ஏற்படுத்தி, கோழிகள் பறந்து போகாமல் பார்த்துக் கொள்கிறோம். பெரும்பாலும், என் மனைவி தான், இந்த கோழிகளை பராமரிக்கிறார். தினமும் காலை, மாலையில், அரை மணி நேரம், கோழிகளை பார்த்துக் கொள்வோம். மற்ற நேரங்களில் அவை, தானாக சுற்றித் திரியும்.கோழிகளுக்கு மூலிகைகள் கலந்த சாதம், வாழைத்தண்டு, அரிசி, கம்பு, சோளம், கோதுமை தவிடு, வெங்காயத் தோல், காய்கறி கழிவுகளை உணவாக கொடுப்போம். வாரம் இரண்டு நாட்கள், மொட்டை மாடியை சுத்தம் செய்வோம். கோழி கழிவுகளை, எங்கள் தோட்டத்திற்கு உரமாகவும், கேட்பவர்களுக்கும் விற்று விடுகிறோம்.கோழி முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிக்க, 'இன்குபேட்டர்' கருவியை பயன்படுத்துகிறோம். இயற்கை முறையில், எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல், இந்த கோழிகள் வளர்வதால், இதன் முட்டைகள் மற்றும் கோழிகளுக்கு கிராக்கி உள்ளது. கடக்நாத் கோழி முட்டையை, 30 ரூபாய்க்கும், சிறுவிடை கோழி முட்டையை, 20 ரூபாய்க்கும் விற்கிறோம். இவை தவிர, கோழிகளையும் விற்கிறோம். ஒரு கோழி மூலம், ஆண்டுக்கு, 70 - 100 கோழிகளை உருவாக்கலாம். செலவுகள் தவிர்த்து, மாதத்திற்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கிறது. ஓய்வு நேரத்தை பயனுள்ள விதத்தில் கழிப்பதோடு, நிலையான வருமானமும் கிடைக்கிறது!

Read more...

புதன், 20 மார்ச், 2019


வான்கோழி வளர்ப்பில் வருமானம் ஈட்டி வரும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, சாலமன்: கல்லுாரி படிப்பை முடித்து, அப்பாவுக்கு ஓய்வு கொடுத்து, 4 ஏக்கரில், நெல், நிலக்கடலை என, சாகுபடி செய்து வந்தேன். அதே நேரத்தில், தரிசு நிலத்தில் நாட்டுக் கோழிகளை வளர்த்து, முட்டைகளை உற்பத்தி செய்ய நினைத்தேன்.அதற்காக, பல பண்ணைகளை பார்த்த போது தான், வான்கோழி பற்றி தெரிந்தது. தமிழகத்தில் அந்தளவு வான்கோழி பண்ணைகள் இல்லாததால், இதில் இறங்க முடிவு செய்தேன். அண்ணனுடன் சேர்ந்து, தரிசு நிலத்தை சீர்ப்படுத்தி, வான்கோழி பண்ணை ஆரம்பித்தோம்.ஆரம்பத்தில், ஒரு மாதமான, 550 வான்கோழி குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்தோம். ஒரு மாத குஞ்சுகளை வாங்கினால், இறப்புகள் அதிகமாக இருக்காது. ஐந்தாறு மாதம் வளர்ந்தவுடன், ஆண் வான்கோழிகளை குறிப்பிட்ட அளவில் மட்டும் வைத்து, 300 வான்கோழிகளை விற்பனை செய்தோம். 15 கோழிகள், சண்டை மற்றும் வெப்பம் தாங்காமல் இறந்தன.இப்போது, 200 பெட்டை, 35 ஆண் வான்கோழிகள் உள்ளன. அத்துடன், 35 நிகோபாரி கோழிகளையும் வளர்த்து வருகிறோம்.வான் கோழிகள் எட்டு மாதத்தில், முட்டையிட ஆரம்பிக்கும். 30 மணி நேரத்துக்கு ஒருமுறை என, ஒரு வான்கோழியிலிருந்து, ஆண்டுக்கு, 60 முட்டை கிடைக்கும். இந்த முட்டைகளுக்கு, விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கிறது.வான்கோழிகள் பொதுவாக அடை காப்பதில்லை என்பதால், 'இன்குபேட்டர்' கருவியில், முட்டைகளை வைத்து, குஞ்சுகளை வளர்க்க உள்ளோம். இரண்டாம் ஆண்டு கிடைக்கும் முட்டைகளுக்கு, குஞ்சு பொரிப்பு திறன் குறைவாக இருக்கும். எனவே, இந்த தாய்க்கோழிகளை, ஓராண்டு கழித்து, விற்பனை செய்து விடுவோம்.வான் கோழிகளுக்கு, 4 கிலோ சமச்சீர் உணவு கொடுத்தால், 1 கிலோ அதிகரிக்கும் என்பர். அதன்படி, தினமும் காலை, மக்காச்சோளம், தவிடு, அரிசி, கருவாட்டு துாளும்; மதியம், 'கோ-4, கோ5, சூப்பர் நேப்பியர்' மற்றும் அரைக்கீரை, பாலக்கீரை என, பசுந்தீவனங்களை கொடுக்கிறோம். மாலையில் மேய்ச்சலுக்கு அனுப்புவோம்.கொட்டகையில் எப்போதும் தண்ணீர் இருக்கும், தாகம் எடுக்கும் கோழிகள் தேவையான அளவு குடித்துக் கொள்ளும்.இறைச்சி மற்றும் முட்டை வாயிலாக, 2.49 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. இதில், குஞ்சுகள் வாங்கியது, தீவனம், மருத்துவச் செலவு போக, 1.55 லட்ச ரூபாய் லாபம் கிடைத்துள்ளது.இப்போது, எங்களிடம் இருக்கும் வான் கோழிகளின் மதிப்பு, கிட்டத்தட்ட, 3 லட்ச ரூபாய்க்கு இருக்கும். இன்னும் ஓராண்டில், இந்த வான்கோழிகள் மூலமாக முட்டைகள் கிடைக்கும். அதெல்லாம் அப்படியே லாபம் தான்.தொடர்புக்கு: 89394 39480

Read more...

'எம்.ஆட்டோ'

ஞாயிறு, 17 மார்ச், 2019


ஆட்டோ ஓட்டும் பெண்கள்!

மக்கள் ஆட்டோ' தலைமை நிர்வாகி, யாஸ்மின்: 2013ல், நிறுவனர் மன்சூர் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, 'நம்ம ஆட்டோ' என்ற பெயரில், ஒரு சேவையை துவக்கினர். 

ஒருசில காரணங்களால், நண்பர்களைப் பிரிந்து, 'மக்கள் ஆட்டோ' என்ற பெயரில், புதிய நிறுவனத்தை துவங்கினார், மன்சூர் அலிகான். தொழில்நுட்பம், மொபைல் உபயோகத்திற்கு ஏற்றது  போல், 'எம்.ஆட்டோ' என, சுருக்கமாக வைத்துள்ளோம்.  எங்களுடைய முக்கிய குறிக்கோள், பெண்களுக்கு அதிகாரம், முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே. 2014-ல், வாழ்வாதாரமற்ற,
10
பெண்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, ஆட்டோ ஓட்டுனர் ஆக்கினோம். இன்னும் பல பெண்களைஎம்.ஆட்டோவில்
இணைத்து, அவர்களுக்கு, இந்த, 10 பெண்களை பயிற்சி அளிக்க வைத்தோம். தற்போது, 330 பெண்கள், ஆட்டோ ஓட்டுனராகி உள்ளனர்.
ஆட்டோவை, நாங்கள் வாங்கிக் கொடுப்பதில்லை. பயிற்சி பெற்றவுடன் ஆட்டோ வாங்குவதற்கான நிதி வசதி ஏற்பாடு செய்து, 'ஷ்யூரிட்டி'யும் கொடுத்து வாங்க, உதவி செய்வோம்.  அடுத்த கட்ட திட்டமாக, திருநங்கையருக்கும் பயிற்சி அளித்து ஆட்டோ ஓட்டுனராகவோ, அலுவலக டெலி காலிங் வேலைக்கோ அமர்த்தி, அவர்களுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளோம். வாடிக்கையாளரின்n நம்பிக்கை தன்மையை பெற, 'பானிக் பட்டன்' என்ற வசதியை உருவாக்கி உள்ளோம்.
வாடிக்கையாளர்கள் இந்த பட்டனை அழுத்தினால், உடனே எங்களுக்கு தகவல் வந்துஉங்களுக்கான உதவி செய்யப்படும். இந்த பட்டன், ஆட்டோ மற்றும் மொபைலில் எம்.ஆட்டோ, 'ஆப்' பிலும் இருக் கும்.
பெண்களுக்கு, பெண் டிரைவர் வேண்டுமென்றால், இந்த, 'ஆப்'பில் தேர்வு செய்து கொள்ளலாம். 'ஸ்மார்ட் போன்' இல்லாதவர்களுக்காக, தொலைபேசி மையமும் உள்ளது.  சென்னை, மதுரை, திருச்சியில் இச்சேவை உள்ளது. திருநெல்வேலியில் இப்போது தான் துவங்கி உள்ளோம்.
பெண் ஓட்டுனர்களுக்கென, பாதுகாப்பு நெறிமுறை, தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஓட்டுனர்களுக்கு பசி இருக்கக் கூடாது.
அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், அரிசியோ அல்லது அவர்களுக்கு தேவையான ஒரு சில பொருட்களையோ அவர்களது நடத்தை, ஈடுபாட்டை பொறுத்து வாங்கித் தருகிறோம். மொபைலில் எம்.ஆட்டோ, 'ஆப்' பிலும் இருக்கும்.

பெண்களுக்கு, பெண் டிரைவர் வேண்டுமென்றால், இந்த, 'ஆப்'பில் தேர்வு செய்து கொள்ளலாம். 'ஸ்மார்ட் போன்' இல்லாதவர்களுக்காக, தொலைபேசி மையமும் உள்ளது. 

சென்னை, மதுரை, திருச்சியில் இச்சேவை உள்ளது. திருநெல்வேலியில் இப்போது தான் துவங்கி உள்ளோம்.
பெண் ஓட்டுனர்களுக்கென, பாதுகாப்பு நெறிமுறை, தற்காப்பு பயிற்சியும் அளிக்கப்படுகின்றன. ஓட்டுனர்களுக்கு பசி இருக்கக் கூடாது.
அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும், அரிசியோ அல்லது அவர்களுக்கு தேவையான ஒரு சில பொருட்களையோ அவர்களது நடத்தை, ஈடுபாட்டை பொறுத்து வாங்கித் தருகிறோம்.

Read more...

'சாக்லேட் பொக்கே' தயாரிப்புத் தொழில்

ஞாயிறு, 2 டிசம்பர், 2018


 'சாக்லேட் பொக்கே' தயாரிப்பதை முழு நேர தொழிலாக்கி, லாபம் ஈட்டி வரும், சென்னையைச் சேர்ந்த மாலதி: சிறு வயது முதலே, கலைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் அதிகம். திருமணத்திற்குப் பின், வீட்டில் இருந்தே வேலை பார்க்க நினைத்தேன். அதன்படி, கலைப் பொருட்கள் மற்றும் நகைகள் செய்து, விற்று வந்தேன்.என் குழந்தைகளுக்காக, வீட்டிலேயே சாக்லேட் செய்து வந்த நான், விழாக்கள், விசேஷங்களுக்கு, அதை பரிசாக கொடுக்க ஆரம்பித்தேன். இதையே கொஞ்சம் வித்தியாசமாக செய்ய நினைத்ததில், 'சாக்லேட் பொக்கே' யோசனை வரவே, உடனே களத்தில் இறங்கினேன்!பயிற்சிக்குச் செல்லாமல், ஒரு பொக்கே வாங்கி, அதை எப்படி செய்துள்ளனர் என, பிரித்து பார்த்தேன். பிறகு, என்னென்ன வகைகளில் வித்தியாசமாக செய்யலாம் என, பல கடைகளில் இருந்த மாடல்களை பார்த்துக் கற்றுக் கொண்டேன். ஒரு விசேஷத்துக்கு, நான் செய்த சாக்லேட் பொக்கேயை பரிசாக கொடுத்தேன். அதுவே, இப்போது தொழிலாக மாறிவிட்டது.பொதுவாகவே, சாக்லேட்டில், 'கோக்கோ'வை தான், அனைவரும் அதிகமாக சேர்ப்பர். ஆனால் நான், 'நட்ஸ்' வகைகளை தான் அதிகமாக சேர்த்து செய்வேன். ஆரோக்கியமும், சுவையும் உடையது, நட்ஸ் என்பதால், நான் செய்த சாக்லேட், அனைவருக்கும் பிடித்து போனது.வெறும் காகிதப்பூ பொக்கே, நமக்கு பயன் தராது; அசல் பூக்களில் செய்யும் பொக்கே, குறிப்பிட்ட நேரத்துக்கு பின் வாடிவிடும் என்பதால், அதனாலும் பயனில்லை. ஆனால், 'சாக்லேட் பொக்கே'வைப் பொருத்தவரை, 'வேஸ்ட்' இருக்காது! அதனால், தொடர்ந்து எனக்கு, 'ஆர்டர்கள்' வர ஆரம்பித்தன. சில கடைகளிலும் கேட்டனர்.'இதை செய்வது குறித்து, எங்களுக்கு பயிற்சி தர முடியுமா...' என, பலர் கேட்க, வகுப்பும் எடுத்தேன். அதன் மூலமாக வந்த, 'ஆர்டர்'களையும் செய்து கொடுத்தேன். இதனால் என்னிடம் பயிற்சி எடுத்தவர்களுக்கும், நல்ல வருமானம் கிடைத்து வருகிறது!இது தவிர, இப்போது, கலைப் பொருட்களையும் செய்து கொடுக்கிறேன். நகை செய்வது மற்றும் கோடை வகுப்பும் எடுக்கிறேன். இவை எல்லாவற்றுக்கும் அரசு சான்றிதழ்கள் வாங்கி, ஒரு, 'பிராண்ட்' ஆக மாற்ற முயற்சி செய்து வருகிறேன். என் எதிர்கால திட்டமே, இதன் மூலம், பெண்கள் பலருக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, அவர்களின் வருமானத்துக்கு வழி செய்வது தான்!தொடர்புக்கு: 98407 08153

Read more...

ஊதுவத்தி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி

புதன், 31 அக்டோபர், 2018


ஊதுவத்தி, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி தயாரித்து விற்பனை செய்து வரும், மதுரையைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் விஜயலட்சுமி: ஊதுவத்திக்கு ஏழு வகையான மூலப் பொருட்கள் தேவை. அனைத்தும், 'கெமிக்கல்' விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும். குறைந்தபட்சம் கிலோ அளவுக்குத் தான் கொடுப்பர்.பெரும்பாலும் இந்த மூலப் பொருட்களை, தரம் வாரியாகப் பிரித்து வைத்திருப்பர்; அதற்கேற்ப விலையும் வேறுபடும். பிசினசாகச் செய்ய விரும்புவோர், தரமான பொருட்களைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஊதுவத்திகளிலும், 'கோல்டு, சில்வர்' என, 'கிளிட்டர்' கலர்கள் வந்துவிட்டன.அதேபோல், ஒரே ஒரு, 'சென்ட்டை' மட்டும் உபயோகித்து செய்யலாம்; ஒன்றுக்கு மேலான, 'சென்ட்' வகைகளைக் கலந்தும் செய்யலாம். இப்போது ஆயிரக்கணக்கான, 'சென்ட்' வகைகள் வந்துவிட்டன. மல்லிகை, மரிக்கொழுந்து, 'சென்ட்'டுகளின் விலை கொஞ்சம் அதிகம். 2 கிலோ ஊதுவத்திகள் செய்ய, 120 - 150 ரூபாய் வரை முதலீடு தேவை. குச்சிகளின் எண்ணிக்கையையும் இதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.'கம்ப்யூட்டர்' சாம்பிராணிக்கு, 10 வகையான மூலப் பொருட்கள் தேவை. வாசனை எதுவும் கலக்க மாட்டோம். சாம்பிராணியின் வாசம் தான், இதில் ஸ்பெஷல். மூலிகைகள் கலந்த, 'கம்ப்யூட்டர்' சாம்பிராணி தான், இப்போது, 'ட்ரெண்டில்' இருக்கிறது. உதாரணத்துக்கு வேப்பிலை, துளசி என, நம் தேவைக்கேற்ப மூலிகைகளைக் கலந்து செய்யலாம்; இதற்கு, 120 ரூபாய் முதலீடு தேலைப்படும்.விரல் தடிமன் அளவு கம்ப்யூட்டர் சாம்பிராணிக்கான, 'மோல்டு'கள் கடைகளில் கிடைக்கும். 'கப்' வடிவ மோல்டு வேண்டுமானால், பட்டறையில் ஆர்டர் கொடுத்து செய்து தான் வாங்க வேண்டும். ஊதுவத்திகளைப் பொறுத்தவரை, போடுகிற முதலீட்டைப் போல, இரு மடங்கு லாபம் எடுக்க முடியும்.'சென்ட்' கலக்காமல் வெறும் ஊதுவத்திகளை மட்டும் தயாரித்து, மொத்த வியாபாரக் கடைகளுக்கு விற்பனைக்கு கொடுக்கும் வாய்ப்பும் உண்டு. 'கம்ப்யூட்டர்' சாம்பிராணியில், இரு மடங்கு லாபம் கிடைக்கும். சாதாரண சாம்பிராணியா, மூலிகை கலந்த ஸ்பெஷல் சாம்பிராணியா என்பதைப் பொறுத்து, விலையில் மாற்றம் செய்யலாம். அட்டைப் பெட்டிகளில் அடுக்கி, சாம்பிராணியை ஏற்றிவைக்கும் குட்டித் தட்டு போன்றவற்றுடன் கொடுக்கலாம். வெறுமனே சாம்பிராணிகளை, 'கவரில் பேக்' செய்தும், கடைகளில் மொத்தமாகக் கொடுக்கலாம்.நாம் வாங்கும் சாம்பிராணி, சில நேரம் ஏற்றி வைத்ததும் உதிர்ந்து போவதைப் பார்த்திருப்போம். கலவை நுணுக்கம் தெரியாமல் செய்யும் போது தான் அப்படி ஏற்படும். அதற்கும், வாசனை போகாமல் இருப்பதற்கான, சூட்சுமங்கள் பயிற்சியில் கற்றுத் தரப்படும். சென்னை மற்றும் மதுரையில், ஒரே நாள் பயிற்சியாக, 800 ரூபாய் கட்டணத்தில், ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி தயாரிக்க கற்றுக் கொடுக்கிறேன்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets