உங்கள் வருகைக்கு நன்றி

உணவுப் பொருட்களின் பயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உணவுப் பொருட்களின் பயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோதுமைப் புல்லின் பயன்கள்!

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு அருகம்புல் பரிந்துரைப்பர். அதற்கு இணையான மருத்துவ குணம் கொண்டதே கோதுமைப்புல். இதுகுறித்த விழிப்புணர்வு நம்மில் பலரிடம் இல்லை.அது என்னங்க கோதுமைப்புல் என கேட்கிறீர்களா?கோதுமைப்புல் சாற்றை இயற்கை மருத்துவர்கள் 'பச்சை ரத்தம்' என்கின்றனர். இதில், உடலுக்கு தேவையான 19 அமினோ அமிலங்கள், 92 தாதுக்கள் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம், விட்டமின்கள், புரோட்டீன்கள், என்சைம்கள் என, ஏராளமான சத்துக்கள் உள்ளன.செரிமானம், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் அதிகரித்தல், மலச்சிக்கலுக்கு தீர்வு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என இதன் பலன்கள் ஏராளம். எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பயன்படுத்தலாம். பெரிய மருத்துவ நிறுவனங்கள், உடல் பருமன் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் இதனை பொடியாக்கி, மருந்துகளில் பயன்படுத்தி வருகின்றனர் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோதுமையை சுத்தமான நீரில், 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். அதை, ஈரத்துணியில் இறுக்க முடிந்து தொங்க விட்டு, 12 மணி நேரம் கழித்து எடுத்தால் முளைக்கட்டி விடும். பூ தொட்டியிலோ, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாத்திரத்தில் சிறிது மண் இருந்தால் போட்டு லேசாக விதைத்தால், எட்டு நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சுவைக்காக சிறிது தேன் கலந்துகொள்ளலாம். இதுபோன்று வீட்டிலேயே விதைத்து தேவைக்கு ஏற்ப அறுவடை செய்து கொள்ளலாம்.

 

Read more...

வருமானம் தரும் கோதுமைப் புல் பொடி!

வெள்ளி, 31 டிசம்பர், 2021

வீட்டுத் தோட்டம் அமைத்து கொடுப்பது, பசுமைக் குடில் போட்டுத் தர்றது, பூங்கா உருவாக்குறது, சொட்டு நீர்ப் பாசனம் அமைப்பது என, பல வேலைகளைப் பார்த்தேன்.ஒரு கட்டத்தில், மனதில் வெறுப்பு ஏற்பட்டது. இந்த வருமானத்தை நம் ஊரிலேயே சம்பாதிக்கலாம் என தோன்றி, வேலையைத் துாக்கிப் போட்டு விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.இங்கு வந்ததும், விவசாயம் செய்யப் போறேன்னு சொன்னதும், வீட்டுல கொலை வெறியாகிட்டாங்க; நண்பர்கள், உறவினர்கள் எல்லாரும் கேலி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. எதையும் கண்டுக்காம என் முடிவில் தெளிவாக இருந்தேன்.திண்டுக்கல்லை விட்டு வெளியேறி, வட மாநிலங்களுக்குப் போயிட்டேன். ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்கிற மக்கள், கோதுமை ஜூஸ் குடிப்பதைப் பார்த்தேன்; அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவர்களிடம் விசாரித்ததில், நம் ஊரில் டீ குடிப்பது போல, அங்கு கோதுமைப் புல் ஜூஸ் குடிப்பது வழக்கம் என தெரிந்தது. உடனே அதைப் பற்றிய தகவலைத் தேட ஆரம்பித்ததில், அது உடம்பு ஆரோக்கியத்துக்கு நல்லது என்று தெரிந்தது.

இரண்டு கிலோ கோதுமை விதையுடன் திண்டுக்கல் திரும்பினேன். கோதுமைப் புல் வளர்த்து, அதைப் பொடி செய்து, பாட்டிலில் அடைத்து விற்கப் போறேன்னு சொன்னதும், மறுபடியும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. கோதுமைப் புல் சாகுபடி செய்வதில் முனைப்பாக இறங்கினேன். எங்களுக்குச் சொந்தமான, 50 சென்ட் நிலத்தை உழுது பாத்தி பாத்தியாகத் தயார் செய்தேன். ௧ கிலோ கோதுமையை விதைத்தால், 3 கிலோ புல் கிடைக்கும்.
அதை வெட்டி, காய வைத்து அரைத்து பொடியாக்கினால், 100 முதல் 150 கிராம் வரை கிடைக்கும். மறுபடியும் அந்தப் பொடியை காய வைத்து பாட்டிலில் அடைத்து, விற்பனைக்கு அனுப்புகிறேன்.தினமும், 30 முதல் 40 பாட்டில் வரை விற்பனையாகிறது. சராசரியாக, 30 பாட்டில் வீதம், 10 ஆயிரத்து 470 ரூபாய் வருமானம் கிடைக்கும். சில சமயம் விற்பனையாகாமலும் இருக்கும்.
அந்த வகையில் மாதக் கணக்குப் பார்த்தால், 20 நாட்களுக்கு, 2 லட்சத்து 9 ஆயிரத்து 400 ரூபாய் கிடைக்கும். அதில், செலவு 70 ஆயிரம் ரூபாய் ஆகி விடும். அதுபோக, 1 லட்சத்து 39 ஆயிரத்து 400 ரூபாய் லாபமாக கிடைக்கும்.நாம் அருகம்புல் ஜூஸ் குடிப்பது போல், வட மாநிலத்தில் கோதுமை புல் ஜூஸ் குடிப்பது நமக்கு லாபத்தை ஏற்படுத்துகிறது.தொடர்புக்கு:97878 87288

கோதுமைப் புல் வளர்த்து அதை அரைத்துப் பொடியாக்கி, 'அமேசான்' வாயிலாக விற்பனை செய்து வரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜ்குமார்:

Read more...

தயிரை விட மோர் நல்லதா?.

வெள்ளி, 18 செப்டம்பர், 2020

தயிர் நல்லதா, மோர் நல்லதா என்பதை கூறும், இயற்கை மருத்துவர், ஒய்.தீபா: பாலில் இருந்து கிடைத்தாலும், மோர், தயிருக்கு தனித்தனி குணாதிசயங்கள் உள்ளன. தயிரை, தண்ணீர் கலந்து, மோராக மாற்றும் போது, 'அல்கலைன்' உணவாக மாறுகிறது; எளிதாக ஜீரணமாகிறது. இரண்டும், ஒரே மாதிரியான ஊட்டச் சத்துகளையே கொண்டுள்ளன. ஆனால், கலோரி கணக்கு பார்த்தால், ௧௦௦ கிராம் தயிரில், ௯௦ கிராம் கலோரி இருக்கும்; ௧௦௦ கிராம் மோரில், ௪௦ கிராம் கலோரிகள் தான் இருக்கும். இரண்டிலும் கால்சியம் இருந்தாலும், தயிரை விட, மோரில் உள்ள கால்சியம் தான், உடல் கிரகித்துக் கொள்ள ஏதுவாக உள்ளது. மோரில், விட்டமின் பி ௧௨, ஜிங்க், புரதம் போன்றவை, உடலை வலுப்படுத்தும். தயிரில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளது. தயிர் சேர்த்த உணவுகளை, தினமும் உண்ணும் போது, செரிமான சக்தி வெகுவாகக் குறைந்து, உடலில் கபம் அதிகமாகும். கொழுப்பாக, உடலில் தங்கி விடும். தயிர் அதிகமாக எடுத்துக் கொண்டால், மலச்சிக்கல் கூட ஏற்படலாம். நாம் சாப்பிடும் உணவு, அமிலத் தன்மையோடு இருந்தாலும், நம் உடலில் உள்ள சோடியம், நாம் சாப்பிட்ட உணவை, அல்கலைனாக மாற்றும். அதிகமாக அமிலத் தன்மை உள்ள உணவை எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலில் உள்ள சோடியம் தீர்ந்து போகும். அப்போது, எலும்பில் சேர்ந்திருக்கும் கால்சியம் தான், நம் உணவை, அல்கலைனாக மாற்றும்; உடல் பலமற்று இருக்கும்.இதை சரி செய்ய, அதிகமாக மோர், காய்கறி, பழங்களை சாப்பிட வேண்டும். இதன் மூலம், அசிட்டிக்கை, அல்கலைனாக மாற்றக் கூடிய சோடியம், கால்சியம் உடலில் அதிகரிக்கும். தயிரை அதிகமாக எடுத்துக் கொண்டால், உடலானது, அசிட்டிக்காக மாறும். அதே நேரத்தில், மோர் அதிகம் சாப்பிட வேண்டும் என்பதற்காக, தயிரை புறக்கணிக்கக் கூடாது. எடுத்துக் கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். உணவுக்கு பின், மோர் எடுத்துக் கொள்வதால், செரிமான சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையில்லாத கெட்ட கொழுப்புகளை நீக்கும். உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், மோருக்குப் பதில், தயிரை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வெயில் நேரங்களில், தயிரை தவிர்த்து, மோர் அதிகமாக சாப்பிட வேண்டும். இந்த காலத்தில், நம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் குறையும். அப்போது மோர் குடிப்பதால், உடலில் நீர் வறட்சி ஏற்படாது; உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும். மோரில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித் தழை, உப்பு சேர்த்து அருந்தினால், அமிர்தமாக இருக்கும்; உடலுக்கும் மிக நல்லது; பசியின்மை சரியாகும்.

Read more...

உணவு தொழில்நுட்பமும், பால் வளத் தொழில்நுட்பமும்

வியாழன், 29 நவம்பர், 2018


திருவள்ளூர் மாவட்டம், அலமாதி - கொடுவேளி எனும் பகுதியில் இயங்கி வரும், உணவு மற்றும் பால் வளத் தொழில் நுட்ப கல்லுாரி முதல்வர், த.பாஸ்கரன்: 2006ல், நான்கு ஆண்டு, பி.டெக்., படிப்பில், உணவு தொழில்நுட்பமும், 2014 முதல், பால் வளத் தொழில்நுட்பமும் பயிற்றுவிக்கப்படுகிறது. மேலும், உணவுத் தொழில்நுட்பத் துறையில், எம்.டெக்., மற்றும் பிஎச்.டி., முதலிய ஆராய்ச்சி படிப்புகளும் உள்ளன.அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், 2008ல், இப்பட்டப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை வழங்கியது. தேசிய வேளாண் ஆராய்ச்சிப் படிப்புகளும் இங்கு உண்டு. செயல்வழிக் கற்றலுக் காக, பால், பழங்கள், காய்கறிகள் மற்றும் இறைச்சி பதப்படுத்தும் நிலையம், சாக்லேட் தயாரிக்கும் தொழில் மையம் உள்ளிட்ட, பல மையங்கள் இருக்கின்றன.பால் பதப்படுத்தும் நிலையத்தில், பாலைப் பதப்படுத்துவதோடு மட்டும் இல்லாமல், பாலேடு, வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், குல்பி, பன்னீர், பால்கோவா போன்ற பொருட்கள் செய்வதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. இறைச்சி பதப்படுத்தும் தொழில்நுட்பக் கூடத்தில், இறைச்சி யின் தன்மையை அறிவதற்கான சோதனைக்கூடம் உள்ளது. இறைச்சியை மதிப்புக் கூட்டும் முறைகளும் பயிற்றுவிக்கப்படுகின்றன.இங்கு செய்யப்படும் ஆராய்ச்சியின் விளைவாக உருவாகும் தொழில்நுட்பங்கள், சிறு, குறு தொழில் செய்வோருக்கு பயிற்சி மூலம் சென்றடைய வழி செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசுத் திட்டங்களில், உணவுத் தொழில் நுட்பத் துறையில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.இந்திய அரசின் பாரத அபிவிருத்தி திட்டத்தில், விவசாயி களுக்குப் பாலில் உள்ள கொழுப்புச் சத்து மற்றும் கொழுப்பு இல்லா மற்ற திடப் பொருட்கள் போன்றவற்றைக் கண்டறிவது குறித்த, விழிப்புணர்ச்சி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதுதவிர, இங்குள்ள சமுதாய மையத்தின் மூலமாக, நிலமற்ற விவசாயிகள், தங்கள் மாடுகளை இம்மையத்தில் வைத்துப் பராமரித்துக் கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.மாணவர்கள் இறுதி ஆண்டுப் படிப்பின் போது, உணவுப் பொருட்களைத் தயாரித்து, பல்கலைக்கழக விற்பனை மையத்தில் விற்பனை செய்து, 'அனுபவக் கற்றல்' திட்டத்தில் லாபம் ஈட்டுகின்றனர். இதனால், தன்னம்பிக்கையுடன் தொழில் முனைவோராக உருவாக வாய்ப்புக் கிடைக்கிறது.இத்தகைய சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டி, 2017ல், கல்வி - தொழில் துறை இணைப்புக்கான விருதை, அகில இந்திய தொழில் நுட்பக் கழகம் வழங்கியுள்ளது.மேலும் விபரங்களை, உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லுாரி, அலமாதி - கொடுவேளி, சென்னை - 52 என்ற முகவரியிலும், 044 - 27680214/15 ஆகிய தொலைபேசி எண்களிலும் அறியலாம்.

Read more...

சிறுதானிய தொழில்கள்

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

பெங்களூரில் சிறுதானிய பிசினசில் கலக்கும் தோழிகளில் ஒருவரான லதா: சென்னையை சேர்ந்தவள் நான். சி.ஏ., முடித்து, கணவரின் பணி காரணமாக பெங்களூரில் குடியேறினோம். சேலம் மாவட்டம் மோகனுாருக்குப் போனோம். அங்கே, சத்தான சிறுதானியங்கள் மலிவாகக் கிடைப்பதைப் பார்த்தேன். அப்போதுதான், நாங்கள் ரெண்டு பேரும் சேர்ந்து, ஒரு பிசினஸ் ஐடியாவை யோசித்தோம். சிறுதானியங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கி, பெங்களூரில் விற்க முடிவெடுத்தோம். இப்போது, தினமும், 300 லிட்டர் மாவு விற்கும் அளவுக்கு, எங்கள் தொழில் வளர்ந்துள்ளது. எங்களின் இணையதளம், 'டெய்லி நிஞ்சா' மூலமும், 'மொபைல் ஆப்' மூலமாகவும், மாவுகளைப் பெறலாம். இப்போது பெங்களூரு நகரில் உள்ள பிரபலமான ஆர்கானிக் கடைகள், பெரிய கேட்டரிங் நிறுவனங்கள் என, பலரும் எங்களிடம் மாவு வகைகள் வாங்குகின்றனர். அடுத்ததாக, முழுக்க முழுக்கப் பெண்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தி, தமிழகத்திலும் களம் இறங்க உள்ளோம். செல்வலட்சுமி: விவசாயியான என் அப்பா மூலமாக, சிறுதானியங்களை வாங்கி, முதல் கட்டமாக, எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்போர், குடும்ப நண்பர், உறவினர்களுக்கு விற்பனை செய்தோம். ஆனால், சிறுதானியங்களை எப்படி சமைப்பது என தெரியவில்லை. 'இட்லி, தோசைக்கான மாவாக கிடைத்தால் நன்றாக இருக்குமே' என, இளம் அம்மாக்களும், பணிபுரியும் பெண்களும் கேட்க, வீட்டில் இருந்த கிரைண்டரில் நாங்களே தானியங்களை மாவாக அரைத்து விற்க ஆரம்பித்தோம். நிறைய பேர் வாங்கினர். அவர்களிடம் கருத்து கேட்டு, மாவை மெருகேற்றி, வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப விற்பனை செய்யும் வித்தையைக் கற்றோம்.சில மாதங்களிலேயே மாவு அரைக்கத் தனி யூனிட் துவங்கி, பெரிய கிரைண்டர்களை வாங்கி தொழிலை விரிவுபடுத்தினோம். 
ஆரம்ப நாட்களில் வேலையாட்கள் சரியாக அமையாத சூழலில், மாவு அரைத்து, பொங்கிப் புளிக்க வைத்து, பாக்கெட்டுகளில் நிரப்பி, காலை, 4:00 மணிக்கெல்லாம் வாடிக்கையாளர்களின் வீடுகளில் டெலிவரி செய்வது வரை படித்து விட்டோம்.

Read more...

மாதுளையில் நன்மைகள்

சனி, 16 ஜூலை, 2016


மாதுளை பழங்களில் இரும்பு, சர்க்கரை சுண்ணாம்பு, பாஸ்பரஸ் மற்றும் அனைத்து வகையான தாது உப்புக்களும், உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாகிறது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. 

அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. மாதுளம் பழத்தில் பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்சியம்,இரும்பு ஆகிய தாது பொருட்கள், வைட்டமின்கள் பி,சி ஆகியவை சிறிதளவு உள்ளன. 

கால்சியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவி புரிகிறது. மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. 

இது ரத்த உற்பத்திக்கும், ரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உகந்தது. அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பித்த நோய்கள், வறட்டு இருமல், வயிறு, குடல் புண்கள் (அல்சர்) குணமாகும். மேலும், ஈரல், இதயம் வலுவாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

Read more...

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

  1. அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
  2. நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
  3. கடுக்காய் பவுடர் :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
  4. வில்வம் பவுடர் :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
  5. அமுக்கலா பவுடர் :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
  6. சிறுகுறிஞான் பவுடர் :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
  7. நவால் பவுடர் :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
  8. வல்லாரை பவுடர் :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
  9. தூதுவளை பவுடர் :- நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.
  10. துளசி பவுடர் :- மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.
  11. ஆவரம்பூ பவுடர் :- இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.
  12. கண்டங்கத்திரி பவுடர் :- மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.
  13. ரோஜாபூ பவுடர் :- இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.
  14. ஓரிதழ் தாமரை பவுடர் :- ஆண்மை குறைபாடு, மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளைபடுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா
  15. ஜாதிக்காய் பவுடர் :- நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.
  16. திப்பிலி பவுடர் :- உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.
  17. வெந்தய பவுடர் :- வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
  18. நிலவாகை பவுடர் :- மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.
  19. நாயுருவி பவுடர் :- உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.
  20. கறிவேப்பிலை பவுடர் :- கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.
  21. வேப்பிலை பவுடர் :- குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.
  22. திரிபலா பவுடர் :- வயிற்றுபுண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.
  23. அதிமதுரம் பவுடர் :- தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.
  24. துத்தி இலை பவுடர் :- உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.
  25. செம்பருத்திபூ பவுடர் :- அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.
  26. கரிசலாங்கண்ணி பவுடர் :- காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.
  27. சிறியாநங்கை பவுடர் :- அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.
  28. கீழாநெல்லி பவுடர் :- மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.
  29. முடக்கத்தான் பவுடர் :- மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது.
  30. கோரைகிழங்கு பவுடர் :- தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.
  31. குப்பைமேனி பவுடர் :- சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.
  32. பொன்னாங்கண்ணி பவுடர் :- உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.
  33. முருஙகைவிதை பவுடர் :- ஆண்மை சக்தி கூடும்.
  34. லவங்கபட்டை பவுடர் :- கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.
  35. வாதநாராயணன் பவுடர் :- பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.
  36. பாகற்காய் பவுட்ர் :- குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
  37. வாழைத்தண்டு பவுடர் :- சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.
  38. மணத்தக்காளி பவுடர் :- குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.
  39. சித்தரத்தை பவுடர் :- சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.
  40. பொடுதலை பவுடர் :- பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.
  41. சுக்கு பவுடர் :- ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.
  42. ஆடாதொடை பவுடர் :- சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.
  43. கருஞ்சீரகப்பவுடர் :- சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.
  44. வெட்டி வேர் பவுடர் :- நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.
  45. வெள்ளருக்கு பவுடர் :- இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.
  46. நன்னாரி பவுடர் :- உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.
  47. நெருஞ்சில் பவுடர் :- சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.
  48. பிரசவ சாமான் பவுடர் :- பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.
  49. கஸ்தூரி மஞ்சள் பவுடர் :- தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.
  50. பூலாங்கிழங்கு பவுடர் :- குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.
  51. வசம்பு பவுடர் :- பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.
  52. சோற்று கற்றாலை பவுடர் :- உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.
  53. மருதாணி பவுடர் :- கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.
  54. கருவேலம்பட்டை பவுடர் :- பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

Top of Form


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets