உங்கள் வருகைக்கு நன்றி

தேர்வுகால ஆலோசனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வுகால ஆலோசனைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேர்வு எழுத போறீங்களா?.

வெள்ளி, 1 மார்ச், 2019


இடைவிடாமல் விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்களை விட, இடையிடையே ஓய்வு எடுத்து படிக்கும் மாணவர்களால் தான், அதிகம் ஞாபகம் வைத்திருக்க முடிகிறது...' என்கின்றனர், ஜப்பான், 'பிசியலாஜிக்கல் சயின்ஸ்' நிறுவன ஆராய்ச்சியாளர்கள்.
* துாக்கம் குறைந்தால், கற்றுக்கொள்ளும் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் திறன் போன்ற முக்கிய அம்சங்கள் பாதிக்கப்படும்.

* 'தேர்வு நேரத்தில், விடிய விடிய கண் விழித்து படிப்பது, தேர்வில் எதிர்மறையான பயனை கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது...' என, எச்சரிக்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

* மாணவர்களே... ஆண்டு இறுதி தேர்வில், சிறப்பான மதிப்பெண் பெற வேண்டுமா? தேர்வு நடைபெறும் வாரத்தில், 'போதுமான நேரம் துாங்கி எழுங்கள்...' என்கின்றனர்.

* தேர்வு சமயங்களில், இரவு, 8:00 மணி நேரம் ஆழ்ந்து துாங்கி எழுந்த மாணவர்கள், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருப்பது அமெரிக்காவின், 'பேய்லர்' பல்கலை கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* உடலின் நீர்சத்துக்கும், அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக, 'ஜியார்ஜிய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

* 'உடலில் நீர்ச்சத்து குறைந்தவர்களுக்கு, அடிக்கடி கவனச் சிதறல் ஏற்படுவதால், தேர்வு காலங்களில், தினசரி, தேவையான அளவு தண்ணீர் குடிக்க தவறாதீர். தேர்வுக்கு செல்லும் முன், ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து சென்றால், அது, மூளையில், 'ஆல்பா' அலைகளை அதிகரிக்க செய்து, நினைவாற்றல் குறையாமல் இருக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா... 'காலை உணவை தவிர்க்காதீர்... தேர்வு காலங்களில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் எளிமையானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும்... காலை உணவை தவிர்க்கும் மாணவர்களுக்கு, தேர்வு நேரத்தில், கவனச் சிதறல் ஏற்படும்...' என, கண்டறிந்துள்ளனர், இங்கிலாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.

* மேலும் சில குறிப்புகள்: மேலும், 'கீரை வகைகள், 'ஒமேகா - 3' சத்துள்ள பருப்பு வகைகள் சிகப்பு நிற காய்கறிகள், பெர்ரி மற்றும் ஆரஞ்சு பழங்கள் ஆகியவை மூளையை இளமையாக வைக்க உதவுகிறது...' என்கின்றனர்.

* எப்போதும் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து படிக்கவும். உங்கள் இடப்புறம், மின்விளக்கு இருக்கும்படி அமைப்பது நல்லது. நீங்கள் படிக்கும் இடத்தில், தேர்வு அட்டவணையை கண்ணில் படும்படி ஒட்டி வையுங்கள்

* தொடர்ந்து படிக்காமல், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று அமைதியாக, 10 நிமிடம் கண்களை மூடி, படித்ததை நினைவுபடுத்திய பின், மீண்டும் படிக்க ஆரம்பித்தால், மூளை சுறுசுறுப்பாகும். ஞாபகத்துக்கு வராத பகுதியை மறு வாசிப்பு செய்து, புதிய பகுதிக்கு சென்று படிக்கலாம்

* துாக்கம் வருவது போல் இருந்தால், தோப்புக்கரணம் போட்டால், துாக்கம் போய், மூளை சுறுசுறுப்பாகி விடும். தண்ணீரை சிறிது சிறிதாக பருகுவதால், அதிக சக்தி பெற முடியும் 

* அடிக்கடி மாதிரி தேர்வுகள் எழுதி பயிற்சி பெறுவது, எழுதும் வேகத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும்

* தேர்வு எழுத துவங்கும் முன், கேள்விகளை ஒருமுறைக்கு இருமுறை நன்கு படித்து, எதை எழுத போகிறீர்கள் என்பதை தீர்மானித்து, ஒரு பக்கத்திற்கு, 20 வரிகளாக, அழகான கையெழுத்துடன், தலைப்புகள் கொடுத்து, அடித்தல் திருத்தலின்றி எழுதவும்

* முக்கியமானவற்றிற்கு அடிக்கோடிட்டு, மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு தேவையான படங்கள், 'க்ராப்ட்' போன்றவற்றோடு, சரியான கேள்வி எண்ணுடன் எழுதவும்


பெண்களின் உணர்வுகளை புரிந்துக்கொள்வதை விட பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு என்று புரிபவனே சிறந்தவன் 

Read more...

உங்களது மதிப்பு மற்றும் தனித்திறனை ஒருபோதும் இழக்கக்கூடாது.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2013


கல்வி என்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல, வயது, கல்வி, பதவி வித்தியாசம் இல்லாமல் வாழ்நாள் முழுக்க அனைவருமே மேற்கொள்ள வேண்டிய தொடர் முயற்சி. காலங்காலமாக மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தத் தூண்டுகோலாகத் திகழ்ந்து வரும் அனைத்து ஆசிரியர்களும் என்றும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்.
பண்டைய இந்தியாவில் மன்னர்களும், சக்ரவர்த்திகளும் தங்களுக்குக் கல்வியும், ஞானமும் போதித்த குருவிற்கு மரியாதை கொடுப்பதைக் கெüரவமாகவும், பெருமையாகவும் கருதினர். ஆனால் தற்போது கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கு அவ்வித மரியாதை வழங்கப்படுவதில்லை என்பது துரதிருஷ்டமானதுதான்.
கல்வி மூலம் மாணவர்களின் அறிவாற்றல் மட்டுமன்றி, தைரியம், நேர்மை, மதிப்பு, கெüரவம், நற்குணங்கள் ஆகியவையும் மேம்படுத்தப்பட வேண்டும்.
வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு சோதனைகள், ஏமாற்றங்கள், பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். நாம் எதற்கும் லாயக்கில்லையோ என்றுகூட எண்ணத் தோன்றும்.
முகம் காட்டும் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறினாலும், பிரதிபலிக்கும் இயல்பை அது இழந்து விடுவதில்லை. அதுபோன்று எந்த நிலையிலும் உங்களது மதிப்பு மற்றும் தனித்திறனை ஒருபோதும் இழக்கக்கூடாது.
விளையாட்டை திறன் சோதிக்கும் போட்டியாகக் கருதாமல் தலைமைப்பண்பு, குழு ஒற்றுமை, ஒழுக்கம், தொடர் முயற்சி ஆகியவற்றை மேம்படுத்தும் சிறந்த பயிற்சியாகக் கருத வேண்டும்.

Read more...

பணம்,வசதிகள் இருக்கின்றன. ஆனால் அமைதி இல்லை ஏன்?.

திங்கள், 31 டிசம்பர், 2012


மாணவர்கள் படிக்கும் காலத்திலே இலக்கை நிர்ணயித்து, அவற்றை அடையும் முயற்சியில் ஈடுபட வேண்டும். முதல் வெற்றியே முழுமையான இலக்கை அடைவதில்லை; அது வெற்றியின் துவக்க நிலையாகும்.
வாழ்வில் புதுமை காண, ஒவ்வொருவரும் ஒரு லட்சியத்தை பெற்றிருக்க வேண்டும். இளமையில் ஏற்படும் தவறு ஏற்றுக்கொள்ளக் கூடியது; அதே சமயத்தில் அவற்றை திருத்தி, எதிர்கொள்ளும் தன்மையும் தேவை. பல்வேறு புத்தகங்களை படித்தாலும், ஒவ்வொரு கருத்தையும் ஒவ்வொரு விதமாகத்தான் வெளிப்படுத்த முடியும்.
வகுப்பறைகளில் பெறப்பட்ட ஆக்கத்திறனை உரிய இடங்களில் வெளிப்படுத்த வேண்டும். திறமைகளை நீங்களே வளர்த்துக்கொள்ள  வேண்டுமே தவிர, பிறரால் உங்களுக்குள் திணிக்க முடியாது. அதற்காக உங்கள் பெற்றோர்களை குறை கூறக் கூடாது. புதுமைகள் காண சிந்திக்க துவங்க வேண்டும்.
பெயர் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே பணிபுரிவது என்றில்லாது, சிறிய நிறுவனங்களில் கிடைக்கும் வேலைகளை நல்முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கடின பயிற்சி மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்கும்.  
ஒய் திஸ் யூத் வெறி? - மீடியாவுக்கு பொறுப்பு வேண்டும்!
என்னாச்சு இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு? சமீபத்தில் செய்திகள் அனைத்தும் மனத்தைப் பிசைவதாகவே இருக்கின்றன.
பெற்றோர்கள் ஊருக்குப் போயிருக்கும் சமயத்தில், ஒரு மாணவன் தன் நண்பன் மூலமாக தன் வீட்டிலேயே 55 சவரன் நகைகளையும், 20 லட்சம் ரூபாயையும் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.
சென்னையில் ஒரு மாணவன் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்ணைத் தந்திரமாகப் பேசி, தனியாக வரவழைத்து, தன் நண்பர்களோடு சேர்ந்து கூட்டாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கி இருக்கிறான். பஸ்டேவைக் கொண்டாட அனுமதிக்காததால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மாணவர்கள் கலவரம்; கல்வீச்சு. இவற்றுக்கெல்லாம் உச்சக்கட்டமாக சென்னையில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், பட்டப்பகலில், வகுப்பறையில் தன் ஆசிரியரையே கத்தியால் சரமாரியாகக் குத்தி கொன்ற கொடூரம்.
இளைஞர் சமூகத்திற்கு ஏனிந்த வெறி?
இந்தக் குற்றங்களை எல்லாம் ஒரு போலீஸ் அதிகாரியாக, சட்டம் ஒழுங்கு பிரச்னையாக நான் பார்க்கவில்லை. நான் யாரையும் விரல் நீட்டிக் குற்றம் சாட்ட விரும்பவில்லை. நாம் அனைவருமே ஒரு விதத்தில் இத்தகைய சமூகச் சீர்கேட்டுக்குக் காரணம், என்று கனத்த சோகத்தோடு பேச ஆரம்பித்தார் தமிழகக் கூடுதல் காவல்துறை டைரக்டர் ஜெனரல் கே.ராதா கிருஷ்ணன்.
2002-ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற அகில உலகக் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் நான் கலந்து கொண்டேன். அங்கே சொற்பொழிவாற்றிய உலகப் புகழ்பெற்ற மனிதவளப் பயிற்சியாளர் ஸ்டீஃபன் கவி, அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருகின்றன. அமெரிக்கக் குடும்பங்களில் பணம் இருக்கிறது; வசதிகள் இருக்கின்றன. ஆனால் அமைதி இல்லை. காரணம் இங்கே குடும்பக் கட்டமைப்பு நிலை குலைந்து போய் விட்டது. இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என்று அமெரிக்காவின் நிலைமையைச் சுட்டிக் காட்டிவிட்டு, தொடர்ந்து, நாம் கிழக்கு நோக்கி, குறிப்பாக இந்தியாவைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் அங்கே காணப்படும் குடும்பக் கட்டமைப்பு என்கிறார். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. ஆனால் பத்தாண்டுகளில் இங்கே நிலைமை எப்படி மாறிவிட்டது?

ஒன்பதாம் வகுப்பு மாணவன் உணர்ச்சிவசப்பட்டு, கோபத்தில் தன் டீச்சரைக் குத்திக் கொல்லவில்லை; இரண்டு நாட்கள் கத்தியோடு தக்க தருணத்துக்காகக் காத்திருந்து கொலை செய்திருக்கிறான். இது சமூகத்துக்கு ஒரு அபாய மணி எச்சரிக்கை. பணத்தக்கும், அந்தஸ்துக்கும், வசதியான வாழ்க்கைக்கும் கொடுக்கப்படும் முக்கியத்துவம், ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாடான வாழ்க்கைக்கும் கொடுக்கப்படவில்லை.
கன்ஸ்யூமரிசம் என்ற வெள்ளம் சமூகத்தில் அனைவரையும் அடித்து இழுத்துச் செல்கிறது. மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மோசமான விஷயங்களை நாம் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறோம்.
பெற்றோர்களுக்குப் பணம் சம்பாதிக்கவே நேரம் சரியாக இருக்கிறது. அந்தப் பணத்தின் மூலமாக, குழந்தைகளுக்கு சந்தோஷத்தை அளித்தவிடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். அவர்களுக்கு நல்லொழுக்கத்தைச் சொல்லித் தரத் தவறிவிடுகிறார்கள். இது மிகவும் தவறு. அபாயமானது. அதன் விபரீத விளைவுகளைத்தான் இன்று சமூகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையைச் சீர் செய்வது சாத்தியமா என்று சந்தேகமாக உள்ளது.
ஒரு மாணவன், ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணி முதல் நான்கு மணி வரை சுறுசுறுப்பாக இருக்கும் பகல் பொழுதினை, பள்ளிக்கூடத்தில்தான் கழிக்கிறான். அவனைப் பொறுப்புள்ள குடிமகனாக உருவாக்குவதில் பள்ளிக்கு முக்கியமான பங்கு உண்டு. எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களிடம் எனக்கு இன்றும் பெரும் மரியாதை உண்டு. அவர்கள் முன்னால் உட்கார்ந்த பேசுவதற்கு எனக்குத் தயக்கமாக இருக்கும். பொதுவாக இன்று ஆசிரியர்களை மாணவர்கள் மதிப்பதில்லை. அதேபோல் என்னுடைய ஆசிரியர்களிடம் இருந்த கடமையுணர்வும், கனிவும், அன்பும் இன்று ஆசிரியர்களிடம் அரிதாகவே காணப்படுகின்றன.
பள்ளிக்கூடங்களில் பாடங்களை மட்டும் சொல்லிக் கொடுக்காமல், சாஃப்ட் ஸ்கில்ஸ் எனப்படும் படிப்புக்கும் அப்பாற்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வாழ்க்கையில் சவால்களை எதிர் கொள்ளும் வழிகளையும் சொல்லித்தர வேண்டும்.
மூன்றாவதாக இன்றைய சீரழிவுக்கு நான் மீடியாவை, குறிப்பாக சினிமாவைக் குற்றம்சாட்டுவேன். காவலர் பயிற்சிக் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குற்றங்கள் மலிய காரணம் குறித்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட ஒரு சினிமா இயக்குனர், நாங்கள் சினிமாவில் நல்ல கருத்தக்களைச் சொல்கிறோமே. அவற்றை எல்லாம் எடுத்துக் கொள்ளாமல், கெட்ட விஷயங்களை மட்டும் மக்கள் ஏன் எடுத்துக் கொள்கிறார்கள்? என்று விவாதித்தார். அதற்குப் பதிலளித்த ஒரு அதிகாரி ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் மொத்த பாலும் விஷமாகி விடுகிறது. ஆனால், ஒரு குடம் விஷத்தில் ஒரு துளி பால் கலந்தால், அது விஷமாகவே தான் இருக்கிறது என்றார்.
மனித வாழ்க்கையின் அங்கமான சில விஷயங்களை, சினிமாவில் காட்டும்போது இலை மறை காயாகத்தான் சொல்ல வேண்டும். சினிமாவில் எதற்காக இவ்வளவு வன்முறையைக் காட்ட வேண்டும்? புதுமை என்ற பெயரில் ஆபாசம் அதிகரித்த வருகிறது. சமூகச் சீரழிவுக்கு அவர்கள் காரணமாகலாமா?
குழந்தைகளின் மீது டி.வி. சேனங்களின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சோட்டா பீம் என்ற குழந்தை பீமன் தொடரில் குட்டி பீமன் கெட்டவர்களை பஞ்ச் கொடுப்பதைப் பார்த்து, எங்கள் உறவினர் ஒருவரது மூன்று வயது குழந்தை, வீட்டில் எல்லோரையும் முஷ்டியை மடக்கிக் குத்த ஆரம்பித்துவிட்டான். இந்த வீபரீதத்தைப் பார்த்த அவனது பெற்றோர்கள் தங்கள் வீட்டு கேபிளில் அந்த சேனலை அகற்றி, அவனை வழிக்குக் கொண்டு வந்தார்கள்.
எப்படி ஊழலை சட்டத்தின் மூலமாக மட்டுமே ஒழித்துவிட முடியாதோ, அதே போல இந்தச் சமூகச் சீரழிவையும் சட்டத்தின் மூலமாகச் சரி செய்து விட முடியாது. இப்போது மக்கள் மத்தியில் எப்படி ஊழலைப் பற்றி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதோ, அதேபோல சமூகச் சீரழிவு பற்றியும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும், பள்ளிக்கூடங்களும், இந்த சமூகமும், மீடியாவும் தங்கள் கடமையை உணர வேண்டும் என்று ராதா கிருஷ்ணன் ஐ.பி.எஸ். வலியுறுத்தினார்.

பள்ளிக்கூடம் என்ன செய்யும்? - கல்வியாளர் திருவள்ளூர் என்.சி.ஸ்ரீதரன்:
* இந்தச் சமூகத்தின் கொடூரங்கள் மாணவர்களைப் பாதிக்காதவாறு, அவர்களுக்குப் பாதுகாப்புக் கவசம் ஏற்படுத்தும் பொறுப்பு பள்ளிகளுக்கு இருக்கிறது. இதற்கு பெற்றோர்கள் பள்ளிகளோடு கைகோத்துச் செயல்பட வேண்டும்.

* வாழ்க்கையின் நெறிமுறைகளை எடுத்துச் சொல்லி, குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு, பெற்றோர்களுக்கு இருக்கிறது. மீண்டும் பள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகள் கொண்டுவரப்பட வேண்டும்.

* ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீது கொண்ட அக்கறை காரணமாக என்ன சொல்கிறார்கள் என்பதைவிட, அதை எப்படிச் சொல்கிறார்கள் என்பது ரொம்ப முக்கியம். இத்தகைய பயிற்சி ஆசிரியர்களுக்கு அளிக்கபட வேண்டும்.

*மாணவர்களை அடித்துத் திருத்துவதைவிட, அன்போடு எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதே சிறந்த முறை.


என்ன தீர்வு - பருவ வயதிதனர் சிறப்பு மருத்துவர் டாக்டர் யமுனா:
* பாடத்திட்டத்தில் வாழ்க்கைக்கு அவசியமான விஷயங்கள் இடம்பெற வேண்டும்.

* பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடல்களாக விளங்க வேண்டும்.

* பருவ வயதில், பிள்ளைகள் பெற்றோர்களின் அன்புக்கு ஏங்குகிறார்கள். அந்த வெற்றிடம் நிரப்பப் படாமல் போனால் விபரீதங்களைச் சந்திக்க நேரிடும்.

* டீன்-ஏஜ் குழந்தைகள் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான் முக்கியம்.

* குழந்தைகளின் நடத்தையில், நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

* பெற்றோர்கள் குழந்தைகளோடு குவாலிடி நேரம் செலவிடுவது மிகவும் அவசியம்.

* அன்னப்பறவை போல மீடியாக்களில் இருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்தக் கொள்ள, குழந்தைகளைப் பழக்கும் மீடியா லிட்ரசி தேவை.


சமூகத்தில் சினிமாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பெற்றோர்கள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; வன்முறைகள் உள்ள படத்தின் வெற்றிக்குப் பிறகு, சினிமாவில் வன்முறை ரொம்பவே அதிகரித்துவிட்டது. சமூகச் சீர்கேட்டுக்குத் துணைபோகிறவர்களைத் தண்டிக்கக் கடுமையான சட்டம் வேண்டும்.


நம் சமூகத்தின் வேல்யூ சிஸ்டம் பாதுகாக்கப்பட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக இருப்பதுதான் முதல் தேவை. இல்லாதுபோனால், நாளுக்கு நாள் நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.
-சாந்தி (குடும்பத்தலைவி)

Read more...

+2 பாடத்தைத் தேர்வு செய்வதில் தெளிவான முடிவை நீங்கள்தான் எடுக்க வேண்டும்

திங்கள், 11 ஜூன், 2012


பள்ளிப் பருவத்தில் முக்கியமான காலகட்டம் 10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப் பிறகு தேர்ந்தெடுக்கும் மேல்நிலைக் கல்விதான். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு இரு வாய்ப்புகளை அளிக்கிறது. முதலாவதாக பொதுக் கல்வி. இரண்டாவதாக தொழில்கல்வி. இதில் எதை தேர்வு செய்வது என்ற குழப்பம் மாணவர்களுக்கு இருக்கும். பொதுக் கல்வியில் கணிதம் சார்ந்த படிப்புகள்அறிவியல் சார்ந்த படிப்புகள்கணக்கு பதிவியல்வணிகவியல்வரலாறு சார்ந்தபொருளாதாரம் சார்ந்த படிப்புகள் என 28 வகையான பொதுப் பாடப் பிரிவுகள்உள்ளன.
பொதுக் கல்வியைத் தேர்வு செய்யும் மாணவர்கள்உயர்கல்வியில் பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டிருந்தால் அதற்கேற்ற பாடங்கள் எவை என்பதை அறிந்து சேர வேண்டும். பொதுவாககணிதம் சார்ந்த படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் பொறியியல் பட்டப் படிப்பு படிக்கச் செல்ல முடியும். அறிவியல்
சார்ந்த படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் மருத்துவம் சார்ந்த உயர்கல்வியைப் பெற முடியும்.
வணிகவியல் சார்ந்த படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள் இளங்கலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பை பெற முடியும். இன்றைய பெற்றோர் பலரும் இதில் மிகுந்த விழிப்புணர்வு கொண்டவர்களே! இருப்பினும் சில நேரங்களில் அவர்களுக்கும் தடுமாற்றம் ஏற்படுவதுண்டு. இத்தகைய சூழலில் தங்களுக்குத் தெரிந்த மேல்நிலைப் பள்ளி ஆசிரியரை அணுகி சரியான வழிகாட்டுதலைப் பெறலாம்.
தொழில்கல்விக்கு எதிர்காலம்
தொழில்கல்வி பயிலும் மாணவர்களுக்கும்கூட நல்ல எதிர்காலம் உண்டு. தொழில்கல்வியில் விவசாயம்,வணிகமும் வியாபாரமும்பொறியியலும் தொழில்நுட்பமும்சுகாதாரம்தையல் கலைகணினி அறிவியல் உள்ளிட்ட 12 வகையான தொழில்கல்வி பாடங்கள் உள்ளன. தொழில்கல்வி படிப்பும் பிளஸ் போல் இரு ஆண்டுகள் கால அளவுள்ளதுதான். இதைத் தொடர்ந்து இளங்கலை பட்டப் படிப்புபொறியியல் பட்டப்படிப்புவிவசாயம் சார்ந்த பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.
தொழில்கல்வியை முடித்துபொறியியல் பட்டப் படிப்பில் சேருவதெனில் பி.இ. மெக்கானிக்கல்,எலெக்ட்ரிக்கல்எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளில் சேரலாம். பொதுக் கல்வியை போன்றே தொழில்கல்வியை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இலவசமாகப் பெற முடியும். பாடப் புத்தகங்களும் இலவசம்.
பொதுக் கல்வியாதொழில்கல்வியாஎன்பதை இனி நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets