உங்கள் வருகைக்கு நன்றி

இறைவனின் அதிசய படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இறைவனின் அதிசய படைப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இறைவா நீ அழகிய படைப்பாளன்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2019


பொதுவாகவே, உமிழ் நீரை பார்த்தால், அனைவருக்கும் அருவருப்பு வரும். ஆனால், ஒரு நாளுக்கு, 0.75 - 1.5 லிட்டர் வரை, வாயில் உமிழ் நீர் சுரக்கிறது. ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதும் சுரக்கும் உமிழ் நீரை வைத்து, இரண்டு நீச்சல் குளத்தை நிரப்பலாம்.
* உடல் முழுவதும், ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பது, ரத்த சிவப்பணுக்கள். இவை, நரம்பு வழியாக, ஒரு முறை உடல் முழுவதும் சுற்றி வர, ஒரு நிமிஷம் போதும்

* பெரும்பாலும் அனைவருக்கும் கறுப்பு நிறத்தில் தான், கருவிழி இருக்கும். என்ன தான் கறுப்பாக இருந்தாலும், பிறக்கும்போது, நீல நிறத்தில் தான் இருக்கும். வெளிச்சத்தில் இருக்கிற, புற ஊதா ஒளிக்கற்றை தான், குழந்தைகளின் கண்ணுக்கான நிறத்தை கொண்டு வரும்

* நம் கை, கால்களில் நகம் வெட்டின மாதிரி இருக்கும்; கொஞ்ச நாளிலேயே வளர்ந்துவிடும். ஆனால், வேரிலிருந்து முழுமையாக நகம் வளர, கிட்டத்தட்ட ஆறு மாதம் ஆகும்

* பொதுவாகவே, அனைவருக்கும் அடிக்கடி தோல் உரியும். வாழ்நாள் முழுவதும், உடம்பிலிருந்து மொத்தமாக உரிந்து விழும் தோலின் எடை, கிட்டத்தட்ட, 18 கிலோ

* உடலில் மிக நீளமான உறுப்பு, தோல் தான். நன்றாக வளர்ந்த ஆணின் தோலை முழுதாக நீட்டி அளந்தால், 20 அடிக்கு வரும்

* நம் சிறுநீரகத்தில், 1 மில்லியன், அதாவது,10 லட்சம், 'பில்டர்'கள் உள்ளன. சிறுநீரகத்தால், ஒரு நிமிஷத்துக்கு, 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்தம் செய்ய முடியும்

* பெண்களின் கருப்பையில், ஐந்து லட்சம் கருமுட்டைகள் உருவாகும்; ஆனால், 400 முட்டைகளுக்கு தான், குழந்தையாக உருவாக வாய்ப்பு கிடைக்கும்

* நம் மேல் வரும், வியர்வை நாற்றம், ஒவ்வொருவரின் அடையாளம். இரட்டையர்களைத் தவிர, உலகத்தில் அனைவருக்கும், இந்த நாற்றம் மாறுபடுமாம்

* நம் உடலில் ஐந்து லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. இந்த வியர்வை சுரப்பிகள் ஒவ்வொன்றும், தினமும், 400 மி.லி., வியர்வையை சுரக்கின்றன 

* சுற்றுப்புறத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும், 90 சதவீத விபரங்கள், பார்வை மூலமாக தான் கிடைக்கிறது

* உங்களுக்கு நீங்களே, 'கிச்சு கிச்சு' மூட்ட முடியாது

* ஒரு பவுண்ட், அதாவது, 454 கிராம், சிமென்ட் கான்கிரீட், அதே எடையிலான மனித எலும்பு என, இரண்டையும் வைத்து சோதனை செய்யபட்டது. அதில், மனித எலும்பு, கான்கிரீட்டை விட, நான்கு மடங்கு வலுவானது என, நிரூபணமாகி உள்ளது

* எதையாவது சுவைக்க வேண்டுமெனில், அந்த பொருள், முதலில், உமிழ் நீரில் கரைய வேண்டும். இல்லையெனில், நம்மால் சுவையை உணர முடியாது 

* சராசரியாக, ஒரு ஆண், ஒரு நாளைக்கு, 10 மில்லியன், அதாவது, 1 கோடி, விந்தணுவை உற்பத்தி செய்ய முடியும் 

* மனிதர்கள், வெப்ப ரத்த உயிரிகள் என்பது, அனைவருக்கும் தெரியும். நம் உடல், 36.5 முதல் 37.5 டிகிரி செல்ஷியஸ், வெப்ப நிலையை தாங்கும். உடல் வெப்பத்தை வைத்து, 3.5 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்க, 30 வினாடி போதும்

* நாம் எவ்வளவு உயரமாக இருந்தாலும், துாங்கும்போது, 1 செ.மீ., உயரம் குறைந்து விடுவோம். காரணம், நம் முதுகெலும்பில் உள்ள குறுத்தெலும்புகள், துாங்கும்போது சுருங்கி விடும்.

Read more...

மூளையை ஆரோக்கியத்திற்கான வழிகள்.

புதன், 27 ஜூன், 2018


மனிதன் வளர வளர, மூளையும் வளரும். ஆனால், 45 வயது முதல், மூளை தன் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் துவங்கும்.கருத்தரித்த நான்காவது வாரத்திலேயே, குழந்தையின் மூளை வளர துவங்கி விடும். அப்போது, தாய் ஆரோக்கியமான சூழலில் இருந்தால், குழந்தைக்கு மூளை குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம்.கருவுற்ற நான்காவது வாரத்தில், நிமிடத்திற்கு 2.50 லட்சம் நரம்பணுக்கள் குழந்தையின் உடலில் உருவாகின்றன. இவ்வாறு, நமக்கு தேவையான அனைத்து நரம்பணுக்களும், பிறப்பதற்கு முன்பே உருவாகி விடும். குறைப்பிரசவத்தால் மூளை வளர்ச்சி தடைபட வாய்ப்புள்ளதால், பிற்காலத்தில் மூளை சார்ந்த பல பிரச்னை வர வாய்ப்புள்ளது.குழந்தையின் மூளை, ஆறு வயதுக்குள்ளேயே, 95 சதவீத வளர்ச்சியை எட்டி விடும். இந்த பருவத்தில் மூளை மிகவும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும். குழந்தை பருவத்தில், மூளை தனக்கு தேவையானதை விட, இரண்டு மடங்கு நியூரான்களை உற்பத்தி செய்யும். 20 வயதாகும் போது, மூளை நன்றாக வளர்ந்து விடும். அதனால், மூளையில் உள்ள வரிப் பள்ளங்கள் விரிவடையும். 20 - 90 வயது வரை, மூளை அதன் எடையிலிருந்து, 5 - 10 சதவீதத்தை இழக்கிறது.நம் மூளையின் உச்சக்கட்ட செயல்திறன், 22 வயதில் துவங்கி, ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளே நீடிக்கும். அதன்பின், ஞாபக சக்தி, பணி ஒருங்கிணைப்பு திறன், திட்டமிடல் திறன் குறைந்து விடும்.மேலும், 45 - 49 வயதுக்குள் ஆண்களும், பெண்களும், 3.6 சதவீத மூளைத்திறனை இழந்து விடுகின்றனர். அதன்பின், காரணத்தை ஆராயும் திறன், புரிந்து கொள்ளும் திறன், ஞாபகசக்தி ஆகியவை, வெகுவாக குறைய துவங்கும்.வயதான பருவத்தில், நாம் தொடர்ச்சியாக மூளையின் செல்களை இழந்தபடியே இருப்போம். நரம்பணுக்களில் செய்திகளை கடத்தும் பகுதியான, 'டெண்ட்ரைட்ஸ்' அதிக அளவில் சிதைவடையும். 65 - 70 வயதுக்குள் ஆண்களுக்கு, 9.6 சதவீதமும், பெண்களுக்கு, 7.4 சதவீதமும் மூளை இழப்பு ஏற்படும்.இதுதவிர, 80 வயதில், நம் மூளை சிறிது எடையை இழந்து, அளவிலும் சிறிது சுருங்கி விடும். மூளை சுருங்கு வதால், அறிவாற்றல் சார்ந்த திறமைகள் குறையும். வயதானவர்களுக்கு ஞாபக சக்திக்கு உதவும், 'ஹிப்போ காம்பஸ்' சுருங்குவதால், அவர்களுடைய நினைவாற்றல் குறைய துவங்கும்.தொடர்ந்து ஏதாவது படித்துக் கொண்டிருப்பது, மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவும். வாரத்தில் குறைந்தது மூன்று நாட்கள், தொடர்ந்து, 45 நிமிடம் நடப்பது, மூளைக்கு நல்லது. தினமும், எட்டு மணிநேரம் உறங்குவது, ஞாபக மறதி அபாயத்தை குறைக்கும்.உயர் ரத்த அழுத்தம், மூளை சுருங்குவதை வேகப்படுத்துவதுடன், மூளைத்திறன் குறைபாட்டுக்கும் வழிவகுக்கும் என்பதால், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

Read more...

திருக்குர்ஆன் கூறும் விந்துத்துளி அதிசயங்கள்

வியாழன், 11 ஏப்ரல், 2013


பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது உண்மை.

ஆகவே மனிதன், (தான்) எதிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்து பார்க்க வேண்டாமா?
குதித்து வெளியாகும் (ஒரு துளி) நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அது (ஆணின்) முதுகந் தண்டிற்கும் கடைசி நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளிப்படுகிறது.   (அல்-குர்ஆன்: 86:5-7)

(சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலி-ருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும் முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டு பிடித்தனர்.
இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன்(86:7) இந்தச் சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.)
வசனம் (075:037) "கருவறைக்குள் (செலுத்தப்பட்ட) விந்தின் ஒருதுளியாக மனிதன்ٍّ இருக்கவில்லையா?" என்று கேட்கும் குர்ஆன், வசனம் 86:06 இல் திரவம் என்று பொதுமையில் குறிப்பிடுகிறது!

விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை. விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை தான் விந்து என்பது. 

மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ளது. 

ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை. 

1 மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது. 

ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில்  இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே  அதன் உள்ளே சென்று கருவாகிறது.  

குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது. 
குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான். 

Read more...

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே "ஹீமோகுளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia)ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள "பிளேட்லட்அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி "பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் "பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

* 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?

24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

தலசீமியா என்பது தொற்று நோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.

மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன்(Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு."‘O' பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான்,‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு "யுனிவர்சல் டோனர்' என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் இருந்தால், குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் ABகுரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தைஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் - மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள்(Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ்ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணிபிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்)பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு‘Anti D‘’ என்று பெயர்.

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant - recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets