உங்கள் வருகைக்கு நன்றி

உடற்பயிற்சியின் நன்மைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உடற்பயிற்சியின் நன்மைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விழுவதை சாதாரமாக நினைக்க வேண்டாம்.

திங்கள், 23 டிசம்பர், 2019


கீழே விழுவது என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும், எந்த வயதிலும் ஏற்படுகிற சாதாரணமான ஒரு நிகழ்வு.
வயது ஆக ஆக கீழே விழும் சம்பவங்களும், அதனால் ஏற்படும் காயங்களும் அதிகரிக்கும். 65 வயதுக்கு மேலானவர்கள் இப்படி கீழே விழுந்து அடிபட்டுக் கொள்வதால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடும். கீழே விழுவதால் தலையில் அடிபடுவது, தோள்பட்டை மற்றும் கைகளில் முறிவு, முதுகெலும்பில் முறிவு போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வயதானவர்கள் கீழே விழுவதில் சில விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டும். கீழே விழுந்து விடுவோமோ என்ற பயம் அவர்களுக்கு அதிகம் இருக்கும். அதையும் மீறி விழுந்தவர்களுக்கு பலமான காயங்கள் ஏற்படலாம். அதற்கான சிகிச்சைக்காக பல மாதங்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டி வரலாம்.
கீழே விழுந்து அடிபட்டுக் கொள்பவர்களில் 65 வயதை கடந்த முதியவர்களே அதிகம். தவறி கீழே விழுபவர்களின் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. அவர்களில் பெண்களே அதிகம். இடுப்பெலும்பு முறிவு ஏற்படும் நபர்கள் பெரும்பாலும் அதிலிருந்து முழுமையாக விடுபடுவது இல்லை. பலரும் அதற்கு பிறகு நடக்க முடியாமல் முடங்கிப் போகின்றனர். இன்னும் சிலருக்கு கைத்தடி அல்லது வாக்கர் உதவியின்றி நடமாடுவது சிரமமாகிறது. சில நேரங்களில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள் ஒரு வருடத்துக்குள் உயிரிழக்கவும் நேரிடுகிறது.

எனவே கீழே விழும் வாய்ப்பை அதிகரிப்பதில் முதுமைக்கு முக்கிய பங்கு உண்டு. பார்வைத் திறன் குறைவது, உடலில் சக்தியே இல்லாமல் இருப்பது போல் உணர்வது போன்றவை இயல்பு. இவை எல்லாமே விழுவதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பவை.

உடல் இயக்கம் இல்லாமை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை போன்றவை உடலின் சமநிலையை பெரிய அளவில் பாதிக்கும். எலும்பு மற்றும் தசைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். புகை மற்றும் மது பழக்கங்கமும் எலும்புகளின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் பாதிப்பவை. குறிப்பாக மதுப்பழக்கம் ஒருவரது நிலைத்தன்மையை பெரிதும் பாதித்து கீழே விழும் வாய்ப்புகளை பல மடங்கு அதிகரிக்கும்.

வழுவழுப்பான தரை, ஈரமான தரை, வெளிச்சமற்ற வீடு, கால்களுக்கு சரியான பிடிமானத்தை தராத காலணிகள், நடமாடும் இடங்களில் இடறி விழும் அளவுக்கு பொருட்களை அடைத்து வைப்பதால் முதியவர்கள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே தவறி விழுகிறார்கள். மாடி படிகளில் ஏறி இறங்கும்போதும், சமையலறையில் வேலை பார்க்கும்போதும், குளியலறை மற்றும் கழிவறைகளிலும் இவர்கள் கீழே விழுவது அதிகமாக நடக்கிறது.


Read more...

உடலில் ஏற்படும் ஒவ்வொரு சத்தத்துக்கும் ஒரு காரணம் இருக்கு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2019


நம் உடலில் ஏற்படும் ஒவ்வொரு சத்தத்துக்கும், ஒரு காரணம் இருக்கும். எனவே, அவற்றை அலட்சியப் படுத்த கூடாது. மார்பு பகுதியில் விசில் ஒலிப்பது போன்ற சத்தம் கேட்கும். மூச்சுக் குழாயில் தற்காலிகமாக தசை சுருக்கம் ஏற்பட்டு, அடைப்பு ஏற்படுவதே, இதற்கு காரணம்.இதில், முதல் மற்றும் இரண்டு நிலைகள், மருத்துவர்கள் பரிசோதிக்கும்போது மட்டுமே சத்தம் கேட்கும். மூன்றாம் நிலை, அமைதியான புறச்சூழலிலும், நான்காம் நிலையில், நன்றாகவும் சத்தம் கேட்கும். சுவாசக் கோளாறு, ஆஸ்துமா பாதிப்புகளால் இது ஏற்படும். உடனடியாக சிகிச்சை எடுப்பது நல்லது.சிலருக்கு அடிக்கடியும், அதிக சத்தத்தோடும், தொடர்ச்சியாகவும் ஏப்பம் வரும். எண்ணெயில் சமைத்த, வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால், வயிற்றின் மேற்பகுதியில் வாயு உண்டாகி, இது ஏற்படுகிறது. எண்ணெயில் பொரித்த உணவு சாப்பிடுவதை குறைத்தால், இதில் இருந்து தப்பலாம். பாதாம், முந்திரி, பிஸ்தாவை அளவுக்கதிகமாக சாப்பிட்டால், வாயு தொல்லை ஏற்பட்டு, வயிற்றில், 'கடமுட' சத்தமும், வாயுவும் அடிக்கடி வெளியேறும் என்பதால், அளவாக சாப்பிடுவது நல்லது. வயதானவர்களில் சிலருக்கு, கால்களை மடக்கி, நீட்டும்போது, மூட்டுகளில், 'க்ளிக் க்ளிக்' என சத்தம் கேட்கும். முறையான உடற்பயிற்சியும், தேவைப்பட்டால் மூட்டுகளுக்கான திரவத்தை செயற்கையாக செலுத்தியும் சரிசெய்யலாம்.கழுத்து வீக்கம் மற்றும் உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, துாங்கும்போது மூச்சுக்குழாய் சுருங்கிவிடும். அதனால், நுரையீரலுக்கு போதிய ஆக்சிஜன் செல்லாமல், சற்று அழுத்தமாக மூச்சுவிடுவதால், குறட்டை சத்தமாக வெளியே வரும். இதற்கென உள்ள, 'பைபேப்' கருவியை, துாங்கும்போது வாயில் பொருத்தினால், குறட்டை சத்தம் வராது. தேவைப்பட்டால், அறுவை சிகிச்சை செய்தும் சரிசெய்யலாம்.சிலருக்கு காதுகளில் வித்தியாசமான ஒலி கேட்கும். இதற்கு, மொபைல் போனை அதிக சத்தமாக பயன்படுத்துவது, 'ஹெட்போனில்' அதிக சத்தமாக பாடல் கேட்பதை தவிர்க்க வேண்டும். யாரோ பேசுவது, கூப்பிடுவது போல சத்தம் கேட்டால், அது, மனநலம் சார்ந்த பாதிப்பாக இருக்கும் என்பதால், மனநல மருத்துவரிடம் செல்வது நல்லது. துாங்கும்போது சிலர், 'நறநற'வென பற்களை கடிப்பர். மூளை தொடர்பான பாதிப்பு இருந்தால், இந்த பிரச்னை வரலாம். மன நல பாதிப்புகளாலும் ஒரு சிலருக்கு, பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கலாம். அதற்கான சிகிச்சை மேற்கொண்டால், இதில் இருந்து விடுபடலாம்.

Read more...

குளிர்காலத்தில் ஏற்படும் தசைப்பிடிப்பு

திங்கள், 21 ஜனவரி, 2019


உடல் குளிர்ச்சியடையும் போதும், இந்த தசைப்பிடிப்புகள் ஏற்படும். இது, பெரும்பாலும் இரவில் துாங்கும்போது ஏற்படும். இதை, 'ஒரக்கலிக்கிறது' மற்றும்'இழுத்துப்பிடிக்கு' என்றும் கூறுவர்.
இந்த தசைப் பிடிப்பு ஏற்படும்போது, கால்களை அசைக்க முடியாத நிலையும் உண்டாகும்.
குளிர்காலத்தில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். நாம் குடிக்கும் நீரின் அளவு, நம் உடலுக்குப் போதாத போதும், உடலில் உள்ள, 'பொட்டாசியம், சோடியம்' அளவு குறையும்போதும், முறையற்ற நிலையில் படுத்து துாங்கும் போதும், தசைப்பிடிப்பு ஏற்படலாம்.
சில வகையான மருந்து, மாத்திரை சாப்பிடுவதன் பக்கவிளைவாக, உதாரணமாக, மன நல பிரச்னை, கருகலைப்பு மற்றும் 'ஸ்டீராய்டு' மருந்துகளாலும் தசைப்பிடிப்பு வரலாம்.

இதை தடுக்க, தினமும் துாங்கச் செல்லும் முன், ஒரு பக்கெட்டில் சூடான நீர் ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி அளவு, 'மெக்னீசியம் சல்பேட்' அல்லதுவீட்டில் இருக்கும் கல்லுப்பை போட வேண்டும்.
அந்தத் தண்ணீரில் கெண்டைக்கால் தசை மூழ்கும்படி, சில நிமிடம் வைத்திருக்க வேண்டும். இது, இரவில் ஏற்படும் தசைப்பிடிப்பு வராமல் தடுக்கும். தவிர, நிம்மதியான துாக்கத்துக்கும் வழிவகுக்கும்.தினமும், எதாவது ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இது தசைப்பிடிப்பு, மூட்டுவாதம் வராமல் தடுக்கும்.இதுதவிர, பொட்டாசியம் நிறைந்த உணவுகளான புரோக்கோலி, உருளைக்கிழங்கு சாப்பிடலாம். வாய்வு அதிகமாக இருப்பவர்கள்,  உருளைக்கிழங்கை    தவிர்க்கலாம்.
மதிய வேளையில் இளநீர் குடிக்கலாம். இளநீர் கிடைக்காதவர்கள், ஒரு டம்ளர் தண்ணீரில், அரை எலுமிச்சையை ஊற வைத்து, அதில் வெல்லம், புதினா, சிறிதளவு உப்பு சேர்த்துக் குடிக்கலாம். இது, தசைப்பிடிப்பு வராமல் தடுப்பதுடன், உடலுக்கு சக்தியும் தருவதால், பல நோய்கள் வராமல் தடுக்கும்.வைட்டமின், 'டி மற்றும் இ' குறைபாடும் காரணம் என்பதால், காலை நேர மிதமான வெயிலில், 15 நிமிடம் நிற்கலாம். நான்கு பாதாம், இரண்டு பேரீச்சை, உலர்ந்த திராட்சை சிறிதளவு, இவற்றை தினமும் சாப்பிடலாம். அடிக்கடிஏற்படும் தசைப்பிடிப்பு என்றால், பருத்தித் துணியை சூடான தண்ணீரில்நனைத்து அல்லது 'ஹாட் வாட்டர் பேக்'கை ஒத்தடம் கொடுக்கலாம். திடீரென ஏற்படும் தசைப்பிடிப்பு மற்றும் குறிப்பிட்ட தசைக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்போது அல்லது தொடர்ந்து செய்யும் வேலையால் ஏற்படும் தசைப்பிடிப்புக்கு, 'ஐஸ் பேக்' அல்லது பருத்தித் துணியில் ஐஸ்கட்டிகளை போட்டு, ஒத்தடம் கொடுக்கலாம்.மேலும், தசைப்பிடிப்பு இருக்கும் இடத்தில் லேசாக அழுத்தம் தரலாம். விளையாட்டு வீரர்கள் செய்வதைப் போல், கால்களை நீட்டி மடக்கலாம்.

சென்னை, காவேரி மருத்துவமனையைச் சேர்ந்த, முதியோர் சிறப்பு நல மருத்துவர், என்.லட்சுமிபதி ரமேஷ் மற்றும், அண்ணா சித்த மருத்துவமனையை சேர்ந்த, யோகா, இயற்கை மருத்துவர்,  ஒய்.தீபா:

Read more...

உடற்பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.

புதன், 31 அக்டோபர், 2018


முதியவர்களுக்கான உடற்பயிற்சி பற்றி கூறும், டாக்டர் வ.செ.நடராஜன்: உடலை உறுதியாக்கி, நோயிலிருந்து நம்மை மீட்கும் சக்தி, உடற்பயிற்சிக்கு உண்டு. குழந்தை முதல், முதியோர் வரை அனைவருக்கும் உடற்பயிற்சி அவசியம். அதிலும், முதுமை பருவத்தில் வரும் பல நோய்களை விரட்டும் சக்தி, உடற்பயிற்சியால் மட்டுமே சாத்தியம்.உடற்பயிற்சி செய்வதால், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பு, உடற்பருமனை குறைக்கிறது; நிம்மதியான, ஆழ்ந்த உறக்கத்தை தருகிறது. மாரடைப்பு வருவதை தடுப்பதுடன், எலும்பை வலிமை பெறச் செய்கிறது; மலச்சிக்கலை தடுக்கிறது. வலுவிழக்கும் சதைகளை உறுதி பெறச் செய்கிறது; தள்ளாடும் நடையை சீராக்க உதவுகிறது; மன நலத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.முதியவர்கள், தங்கள் உடல் நலம், பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையை மனதில் கொண்டு, உடற்பயிற்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். வேகமாக நடத்தல், சைக்கிள் ஓட்டுவது, நீந்துவது, வீட்டிற்குள்ளேயே விளையாடுவது போன்ற உடற்பயிற்சியை செய்யலாம். தினமும், 3 - 5 கி.மீ., நடப்பது நல்லது அல்லது 45 நிமிடங்கள் வரை, உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து, 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், இடைவெளி விட்டு, உடற்பயிற்சி செய்யலாம். நடக்க முடியாத நிலையில் உள்ளவர்கள் கைத்தடி, வாக்கரை உபயோகப்படுத்தி, நடைபயிற்சி செய்யலாம்.உணவு உட்கொள்வதற்கு முன்பே, உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலையில் திறந்த வெளியில் உடற்பயிற்சி செய்வது நல்லது. பெண்கள் வீட்டிலேயே உட்கார்ந்தபடி, தரையில் படுத்த படி செய்யலாம். கண் பார்வை குறைஉள்ளவர்கள், பக்கவாதம் மற்றும் மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இருக்கையிலேயே, உடம்பின் மேற்பகுதிக்கு மட்டும் உடற்பயிற்சி செய்வது நல்லது.தொடர்ந்து படுத்துக் கிடப்பவர்களுக்கு, படுக்கை புண், நெஞ்சில் சளி கட்டுதல், எலும்பு வலிமை இழத்தல், மலச்சிக்கல், மனச்சோர்வு போன்றவை வரலாம். இதை தடுக்க, தினமும் காலையிலும், மாலையிலும் பிறர் உதவியுடன், சிறிது நேரமாவது வீட்டிற்குள்ளேயே நடப்பது அவசியம். உடல் ரீதியாக தொல்லை, சற்று அதிகமாக இருந்தால், இயன்முறை சிகிச்சை நிபுணரின் உதவியுடன், உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.முதுமைக்கு ஏற்ற, 'டானிக்' உடற்பயிற்சியே. செலவுகள் ஏதுமில்லை; பக்கவிளைவும் இல்லை. ஆனால், பலன்கள் ஏராளம். அதை தினமும் கடைபிடித்து, முதுமைக்கு விடை கொடுங்கள். நம்மை நோயின்றி நிம்மதியாக வைத்திருக்கும்.

Read more...

மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யலாமா ?

வெள்ளி, 5 அக்டோபர், 2018


ஒவ்வொரு பெண்ணுக்கும், மாதவிடாய் நேர வலிகள் வேறுபட்டவை. அன்றாட வேலைகளை கூடச் செய் முடியாத அளவுக்கு இருக்கும்; அந்த நாட்களில் ஓய்வெடுப்பதும், சத்துமிக்க உணவை சாப்பிடுவதும் அவசியம். மூளையிலிருந்து உறுப்புகளுக்கு செய்திகளை எடுத்துச் செல்லும் வேதிப்பொருட்களான, 'ஹார்மோன்' மாற்றங்களால், மாதவிடாய் காலத்தில், உடல் பாரமாக இருப்பதாக உணர்வர். இந்த வேதிப் பொருட்களின் சமநிலையற்ற தன்மையால், மனநிலையில் சில மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு கவலை உணர்வு மேலோங்கி இருக்கும். சிலர் அதிக கோபத்துடனும், பதற்றத்துடனும் காணப்படுவர். மார்பகங்கள் வீங்கியிருப்பது போல தோன்றும்; வலியும் ஏற்படும். மேல் வயிறு பெரிதானது போல தோன்றும். அடிவயிறு பகுதியில் இழுத்துப் பிடிப்பது போன்ற வலி ஏற்படும். இந்த சிரமங்களால், மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்யக் கூடாது என, பெண்கள் நினைக்கின்றனர். ஆனால், அப்போது சில உடற்பயிற்சிகளை செய்வது, நல்ல பலன் களை கொடுக்கும்.சாதாரணமாக, சைக்கிள் ஓட்டுவது நல்ல பயற்சி. அதுவும், 'ஜிம்'மில் ஒரே இடத்தில் அமர்ந்தபடி சைக்கிள் ஓட்டுவதால், தொடைப்பகுதி வலிமை அடையும். கைகளுக்கான பயிற்சிகளையும் செய்யலாம். 'கார்டியோ' உடற்பயிற்சிகளில் வகைப்படுத்தப்பட்டிருக்கும், 'சைக்கிளிங், ட்ரெட்மில்'லில் ஓடுவது போன்றவற்றை, 20 முதல், 40 நிமிடங்கள் வரை செய்யலாம். நடைபயிற்சியும், மிதமான ஓட்டமும் கூட உதவும். சிலருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருக்கலாம். எனவே, வயிற்றுக்கான பயிற்சிகளை தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் உடற்பயிற்சிகள் செய்வதால், மூளையில், ஒருவித அமிலம் சுரந்து, வலியை உணரும் சக்தி குறையும்; ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், மாதவிடாய் கால ரத்தப் போக்கு அதிகரிக்காது. ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், தசைகள் வலிமையடைந்து, மாதவிடாய் காலச் சோர்வு குறைந்து, புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணரலாம்.
சுகப்பிரசவமாக இருந்தால், குழந்தை பிறந்த மூன்றாவது நாளில் இருந்தும், சிசேரியன் என்றால், ஒரு வாரம் கழித்தும், உடற்பயிற்சிகள் செய்யலாம். உடல் செயல்பாட்டுகளின் அடிப்படையில், காலை வேளை தான், உடற்பயிற்சிக்கு ஏற்றது. சில பெண்களுக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில், காலை நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள், மாலையில் உடற்பயிற்சி செய்யலாம்.

பிசியோதெரபிஸ்ட், ரம்யா செந்தில்குமார்


Read more...

நீண்ட நேரம் அமர்ந்தே இருப்பதால்,

புதன், 4 ஜூலை, 2018


முதுகில் உள்ள தசைகளுக்கு இயக்கம் இல்லாமல் போகிறது. ஆகையால், முதுகில் உள்ள தசைகள் செயல் இழந்து, இறுக்கமற்றதாக மாறிவிடுகிறது. இதனால், முதுகுத்தண்டு மற்றும் தண்டுவடத்தில் வளைவு ஏற்படு கிறது. முதுகில் உள்ள நரம்பு சேதம் அடைவதால், கால்களுக்கு செல்லும் நரம்பில் பிரச்னை ஏற்பட்டு, மூட்டு வலி, கண்டைச்சதை வலி, தொடை வலி ஏற்படும்.இப்படி நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால், தோலோடு ஒட்டியிருக்கக் கூடிய தசைகள் தளர்வதால், 'யூரிட்டர்' எனக்கூடிய சிறுநீர்ப்பைக்கு, சிறுநீரை அனுப்பக்கூடிய குழாய், நேராக இல்லாமல் வளைய ஆரம்பிக்கும். இதனால், சிறுநீரகப் பிரச்னை, சிறுநீர்க்கல் போன்றவை ஏற்படும். மேலும், 30 வயதுக்குக் கீழ் உள்ள இளைஞர்களுக்கு, வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை உண்டாக்குகிறது. இளம்பெண்கள் எனில், கருப்பையில் உள்ள குழாய்களுக்கு, ரத்தம் செல்வதில் தடை ஏற்படுகிறது.இதுதவிர, மன மகிழ்ச்சியை தரக்கூடிய, 'எண்டார்பின்' என்ற ஹார்மோன் சுரப்பு குறைகிறது. இதனால், இளம் வயதிலேயே முதுமையுடன், பல நோய்களும் வந்து விடுகின்றன. ஒரு நாளைக்கு ஒவ்வொருவரும், ஆறு முறையாவது சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீர்ப் பையின் கொள்ள ளவான, 300 - 600 மி.லி., அளவுக்கு, நீர் சிறுநீர் பையை அடையும் அளவுக்கு டீ, காபி, ஜூஸ் அல்லது நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கச் செல்லும் முன், குறைந்தது, 50 முறையாவது நின்ற இடத்தில் இருந்து குதிக்க வேண்டும். இது, சிறுநீர் பையை சீராக செயல்பட வைப்ப துடன், தசைகளையும் வலுப்படுத்தும், சிறுநீரை, சிறுநீர் பைக்கு கொண்டு வரும் குழாயும் நேராகும். மேலும், இவ்வாறு அதிக நேரம் அமர்ந்து இருப்போருக்கு, உடலில் உள்ள கழிவுகள் சரிவர வெளியேறாமல் உடலில் ஆங்காங்கே தங்கியிருக்கும். அதை அகற்றவும் இந்த முறை உதவுகிறது. அலுவலகத்தில் உள்ளோர் கழிவறைக்கு வெளியில் உள்ள இடத்தில் கூட, இதை செய்யலாம்.இதுதவிர, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எழுந்து நடப்பதுடன், 'ஸ்கிப்பிங்' செய்வது போன்று குதிக்கவும். இப்படி செய்வதால், வேலைப்பளுவில் இருந்து மனம் விடுபடும். உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி தரும். குதிக்க முடியாத சூழலில் இருப்போர், உதைப்பது போல் கால்களை ஆட்ட வேண்டும். கைகளை ஆட்ட வேண்டும். மணிக்கட்டை சுழற்றலாம். இதன் மூலம், 'எண்டார்பின்' ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கலாம்; இது, உடலுக்கு வரும் கெடுதலைப் போக்கும்.நீண்ட நேரம் அமர்ந்து இருப்பதால், உடல் உழைப்பு குறைவாக இருக்கும் என்பதால், குறைந்த அளவு கொழுப்புள்ள உணவு சாப்பிடலாம். நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், உடலில் உள்ள கழிவை அகற்றுவதோடு, சிறுநீரகப் பிரச்னைகளில் இருந்து காக்கும்.


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets