உங்கள் வருகைக்கு நன்றி

வாழ்க்கை பாடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை பாடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால்

ஞாயிறு, 29 நவம்பர், 2020

 

வாழ்வில் சாதனைகளைப் படைத்திட ஒருவருக்கு புத்திசாலித்தனம் மட்டும் போதும் என்று நம்பிவந்த எண்ணம் இன்று பொய்த்து, உணர்வுசார் நுண்ணறிவு அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.

 

மென் திறன், பேச்சு திறன் என்ற திறன்களுக்கு மத்தியில் இன்று தனிப்பட்ட வாழ்விலும் சரி தொழில் வாழ்விலும் சரி, உணர்வுசார் நுண்ணறிவு நம் வெற்றிக்கும், சந்தோஷத்திற்கும் முதன்மையாக விளங்குகிறது. சாதாரணமாக எல்லோருக்கும் மகிழ்ச்சி துக்கம், கோபம், பயம் , பொறாமை, அன்பு, பாசம், சினம், ஆசை, பொறாமை, வெறுப்பு, விரக்தி, கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம்,எரிச்சல், சலிப்பு, மன உளைச்சல், அவநம்பிக்கை, தனிமை, வலி என்று பல்வேறு உணர்ச்சிகள் இருக்கும். அது அளவிற்கு மீறி வெளிப்படும் போது நம்மையும், நம் சுற்றத்தாரையும் பாதிக்கும் சூழ்நிலையை நாம் தினமும் பார்க்கிறோம்.

 

மன அழுத்தம்

 

உணர்ச்சிகளை கட்டுபடுத்தாததால் தேவையற்ற மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். மன அழுத்தத்தின் பொழுது நம் நாவும், செயல்பாடுகளும் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. அதன் விளைவாக பேசும் பேச்சும், நடவடிக்கைகளும் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. மன அழுத்தத்தின் பொழுது நாம் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் ஆக்கபூர்வமாக இருப்பதில்லை. ஆகையால் நம் வெற்றிக்கும், அமைதியான வாழ்விற்கும் உணர்வுசார் நுண்ணறிவு பெரிய பாலமாக அமைகிறது. அதை உணர்ந்து, அறிந்து செயல் பட்டால் வாழ்வில் வெற்றியை அடைவோம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. உணர்ச்சி நுண்ணறிவை எளிமையான முறையில் விளக்க முடியும். உணர்ச்சி நுண்ணறிவை நம்மிலும் மற்றவர்களிடமும் உள்ள உணர்ச்சிகளை அடையாளம் கண்டு புரிந்து கொள்ளும் திறன் என வரையறுக்கலாம்

 

உணர்ச்சி நுண்ணறிவு

 

உணர்ச்சி நுண்ணறிவு என்பது உணர்ச்சி புரிதலைப் பயன்படுத்தி முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. உணர்ச்சி நுண்ணறிவில் உணர்ச்சிகளை உணர்வது, பகுத்தறிவது, புரிந்துகொள்வது, நிர்வகிப்பது என நிலைகள் உள்ளன. கடந்த காலங்களில் உணர்ச்சிகளும் புத்திசாலித்தனமும் ஒன்றுக்கொன்று எதிர்ப்பாகவே கருதப்பட்டன. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகளில், உணர்ச்சி நுண்ணறிவு முழுமையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பாதையில் நம்மை வழிநடத்த முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது, உணர்ச்சிபூர்வமான மேற்கோள்(EQ) ஏன் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது? அதிக உணர்ச்சி நுண்ணறிவு (EI) உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும், சிறந்த சம்பளத்தைப் பெறுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

 

மேம்படுத்துவது எப்படி

 

1.நீங்கள் அனைவரிடமும் எவ்வாறு நடந்துகொள்கிறீர்கள் என்பதைக் கவனியுங்கள்

2.துக்கம், பயம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்

3.மன அழுத்த சூழ்நிலைகளுக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள் என்பதை ஆராயுங்கள்

4.தோல்வி உணர்வை விரட்டுங்கள்.

5.உங்கள் பணிச்சூழலில் இருப்பவர்கள் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை உணருங்கள்

6.தன்னம்பிக்கை ஊட்டும் விஷயங்களை பற்றி யோசிக்கவோ பேசவோ பழகுங்கள்

7.உங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்கிறீர்களா என்று யோசியுங்கள்

8.உங்கள் செயல்கள் மற்றவர்களை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆராயுங்கள்

9.&' கோபம் நம்மை ஆக்கிரமிப்பு செய்யாமல் கட்டுக்குள்வைத்திருங்கள்

10.உணர்ச்சிவசப்பட்டு எதையும் கூறவோ, செய்யவோ வேண்டாம்

11.ஏமாற்றத்தை தாங்கி கொள்ளும் மனப்பக்குவத்தை வளருங்கள்

12.தியானம் செய்து பழகுங்கள்.

13.எவரிடமும் உங்கள் வெறுப்பை காட்டாதீர்கள்

14.மன நிலையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.

15.சுய மதிப்பீடு செய்யுங்கள்.

 

பணி இடத்தில் சாதிக்க

 

நெருங்கியவர்கள் செய்யும் செயல்களால் நம் மனம் நொறுங்கி போகும். அந்த சமயத்தில் எதையும் யோசிக்காமல் நாம் எடுக்கும் முடிவுகள் அந்த உறவை அறவே அழிக்கும். அவர்கள் என் அப்படி நடந்து கொண்டார்கள், காரணம் இருக்கும் என்று நாம் யோசிக்க கற்று கொண்டால் அந்த முடிவை தவிர்க்கலாம். எல்லோருக்கும் அவர்கள் செயல்களுக்கு ஒரு காரணம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதை அவர்களிடம் பேசினால் நியாயமாக தோன்றும். உணர்ச்சி நுண்ணறிவு மதிப்புமிக்க திறமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

 

பயிற்சி மூலம் மேம்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்ற திறமையும் இதுதான். பணியிடத்தில் பலங்களையும் பலவீனங்களையும் அடையாளம் காணுங்கள். சக ஊழியர் உங்களை எரிச்சலடையச் செய்யலாம் அல்லது உங்கள் முதலாளி கடினமான பணியைத் தரக்கூடும். நீங்கள் எதிர்வினையாற்றுவதற்கு முன், இவை தற்காலிகமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பணியிடத்தில் பிடித்த விஷயங்களில் மனதை செலுத்துங்கள். முடிவுகளை எடுப்பதற்கு முன் சிந்தியுங்கள். மற்றவர்கள் சொல்ல வருவதை பொறுமையோடு கேட்க பழகுங்கள்.

 

சொற்களற்ற தகவல்தொடர்புக்கு கவனம் செலுத்துங்கள். ஒருவர் தங்கள் உடல் மொழி மூலம் அனுப்பும் சமிக்ஞைகள் அவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நிறைய தெரிவிக்க முடியும். அலுவலக அரசியலில் இறங்குவதைத் தவிர்க்கவும்.பணி இடமாக இருந்தாலும் நம் தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், பிறரோடு இணைந்து செயல்பட்டு, பிறரைப் பாராட்டி, குறைகளை ஏற்றுக் கொண்டு, நம் உணர்ச்சி நுண்ணறிவைப் பயன்படுத்துவதின் மூலமாக வாழ்வில் வெற்றி மீது வெற்றிகளை குவிக்கலாம்.

 

-முனைவர் உஷா ஈஸ்வரன், தனித்திறன் மேம்பாட்டு ஆலோசகர்

 

Read more...

கவனமாக செலவு செய்யுங்கள்.

வெள்ளி, 25 செப்டம்பர், 2020

பணம் சம்பாதிப்பது செலவு செய்யத்தான். ஆனாலும் எந்த ஒரு பொருளையும் தேவை இருந்தால் மட்டும் வாங்குங்கள்.

மக்கள் சமீப காலமாக அதிக அளவில் ரெஸ்டாரண்ட்டுக்கு போய் சாப்பிடுதல், மால்கள் மற்றும் பொழுதுபோக்கும் இடங்களில் தேவையற்ற செலவுகளை யோசிக்காமல் செய்வதை பார்க்கிறேன். பல திரையரங்குகளில் ஒரு டப்பா பாப்கார்ன் மனசாட்சியே இல்லாமல் நூறு ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் பலர் க்யூவில் நின்று வாங்கி பிள்ளைகளுக்கு தருகிறார்கள்.

முன்பெல்லாம் வருடத்திற்கு ஒரு முறை பொருட்காட்சி திடலில் மட்டும் சற்று செலவு செய்யும் தமிழ் குடும்பங்கள் இப்போது மாதத்தில் பல நாட்கள் இப்படி இஷ்டத்திற்கு வீண் செலவு செய்வது சாதாரனமாகிவிட்டது.

நடுத்தர குடும்பங்கள் ஏதோ நாளையோடு சரவணா ஸ்டோர்ஸ் போன்ற பெரும் கடைகள் மூடப்படுவதைப்போல என்னாளும் போய் அலைமோதுகிறார்கள்.

இதே போல துணி கடைகள், நகை கடைகள், விளம்பரத்தால் தூண்டில் போடும் ஆன்லைன் நிறுவங்கள் என நடுத்தர மக்களின் சேமிக்கும் பழக்கத்தை குழிதோண்டி புதைக்க பல வர்த்தக முதலைகள் வாயயை பிளந்து கொண்டு காத்திருக்கின்றன.

தேவைக்காக பொருள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது போலும். 
இப்பொதெல்லாம் ஏதாவது வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் பல சமயம் முட்டாள் தனமாக செலவு செய்வது ஒரு ஃபேஷனாக ஆகிவிட்டது.

வெறும் டம்பத்திற்க்காக ஆடம்பர செலவு செய்வதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணங்கள். பெற்றோரின் ஆயுட்கால சேமிப்பை மணமக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த வகையிலும் பயன்படாத வகையில் செலவு செய்வதற்கே திருமணங்கள் நடத்தப்படுகின்றதோ எனும் ஐயம் நமக்கு ஏற்படுகிறது.

"இப்பொதெல்லாம் வருமானம் அதிகம் ஸார் அதனால செலவு செஞ்சா தப்பில்ல" என்ற கருத்தும் பரவி வருவது மிக தவறானது மட்டுமல்ல ஆபத்தானதும் கூட.

சில ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட கடும் பொருளாதார சரிவின் போது இந்தியாவில் அதன் தாக்கம் மிக குறைவாகவே இருந்தது. காரணம், நமது நாட்டின் மிக பெரிய எண்ணிக்கையிலான நடுத்தர வர்கதின் சேமிப்பாகும்.

நுகர்வோர் கலாச்சாரம் வரம்பு மீறும் போது, க்ரெடிட் கார்ட் தரும் போலி தைரியத்தின் காரணமாக செலவுகள் எல்லை தாண்டும்போது நம் பொருளதாரத்தின் அடித்தளம் அசைவுகாணும், பலவீனம் அடையும்.

எனவே, அடுத்த முறை நீங்கள் ஒரு செலவை மேற்கொள்ளும் முன் அதன் அவசியத்தை கொஞ்சம் யோசித்து; அப்பொருளை நீங்கள் அதன் தேவை கருதி வாங்குகிறீர்களா அல்லது அதனை சும்மா விரும்புவதால், வேண்டும் என நினைப்பதால் வாங்குகிறீர்களா என்று வாங்குமுன் சற்று தயக்கம் காட்டுங்கள். உங்கள் முடிவு மாறலாம். அப்போது உங்கள் பணம் உங்களிடமே, உங்கள் உண்மையான தேவைக்காக பத்திரமாக இருக்கும். அது நீங்கள் உழைத்து ஈட்டியது. மறந்து விடாதீர்கள். 

 

Read more...

உங்­கள் வாழ்க்­கை வழுக்காமல் இருக்க.

வியாழன், 17 செப்டம்பர், 2020

உங்­கள் வாழ்க்­கையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான பல­வி­த­மான தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டி­ருக்­க­லாம். இவற்­றோடு, உங்­கள் நிதி வாழ்க்­கையை மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­கான உறு­தி­மொ­ழி­க­ளை­யும் சேர்த்­துக்­கொள்­ள­லாம். அந்த வகை­யில், உங்­கள் சேமிப்பை அதி­க­மாக்கி, நிதி வளத்தை பெருக்கி கொள்ள உத­வக்­கூ­டிய எளிய வழி­களை பார்க்­க­லாம்.



கடனைகவனி


கடன் சுமையை குறைப்­பது என்­பது உங்­கள் தீர்­மா­ன­மாக இருக்­கட்­டும். கிரெ­டிட் கார்டு பயன்­ப­டுத்­து­வர் எனில், நிலு­வை­யில் உள்ள தொகையை செலுத்­து­வ­தில் கவ­னம் செலுத்த வேண்­டும். கடனை அடைக்­க­வில்லை எனில், உங்­கள் பணத்தை இழக்­கி­றீர்­கள் என பொருள். அதிக வட்டி கடனை முத­லில் அடைக்கவேண்­டும்.


வாங்குவதில்கவனம்


உங்கள் ஷாப்பிங் பழக்கத்தை கட்டுப்படுத்துங்கள். தேவையில்லாத பொருட்களை வாங்குவது மற்றும் பார்த்தவுடன் பொருட்களை வாங்குவது வீண் செலவை ஏற்படுத்தும். முன்கூட்டியே திட்டமிட்டு தேவையான பொருட்களை மட்டுமே வாங்குவதன் மூலம்
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மிச்சமாக்கலாம்.


பணத்­தின் பாதை


உங்­கள் பணத்தை எதற்­காக எல்­லாம் செல­விட்டு கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்­பதை தெளி­வாக 
உணர்ந்­தி­ருக்­கி­றீர்­களா? அதே போல எங்­கெல்­லாம் முத­லீடு செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­ப­தி­லும் தெளிவு வேண்­டும். இந்த விபரங்­களை எல்­லாம் குறித்து வைப்­பது, கையில் உள்ள பணத்தை சிறந்த முறை­யில் திட்­ட­மிட உத­வும்.


சேமிப்­பும் முத­லீ­டும்


மாதந்­தோ­றும் குறிப்­பிட்ட தொகையை சேமித்து வையுங்­கள். ஆனால் இந்த தொகை சேமிப்பு 
கணக்­கில் முடங்கி விடா­மல் பார்த்­துக்­கொள்­ளுங்­கள். சேமித்த பணத்தை சரி­யான சாத­னங்­களில் முத­லீடு செய்­வ­தன் மூலம் அதிக பலன் பெற­லாம். உங்­கள் நிதி இலக்­கு­க­ளுக்கு ஏற்ற முத­லீட்டு வாய்ப்பை தேர்வு செய்­யுங்­கள்.


சேமிப்­பின் பலன்


சேமிப்­பது அவ­சி­ய­மா­னது என்­றா­லும், அதற்­காக செலவே செய்­யா­மல் இருக்க வேண்­டும் என்­றில்லை. உங்­க­ளுக்கு பல­னை­யும், மதிப்­பை­யும் தரக்­கூ­டிய செல­வில் ஈடு­ப­டு­வ­தில் தவ­றில்லை. கட­னை­யும், செல­வை­யும் கட்­டுப்­ப­டுத்தி, சரி­யான வகை­யில் முத­லீட்­டை­யும் மேற்­கொண்­டி­ருந்­தால், விருப்­ப­மான செல­வு­க­ளி­லும் ஈடு­ப­ட­லாம். அது வாழ்க்­கையை வள­மாக்­கும்.

Read more...

குழந்தை வளர்ப்பு.

வெள்ளி, 20 டிசம்பர், 2019


வீட்டின் சின்னச்சின்ன வேலைகளில், குழந்தைகளை ஈடுபடுத்துவதால், அவர்களின் ஆற்றல் மேம்படு.,  குழந்தை கள், 2 வயதாக இருக்கும் போது, தட்டில் இருக்கும் சாப்பாட்டை எடுத்து தாங்களே சாப்பிட துவங்குவர். பெற்றோர் போல, ஆபிஸ் கிளம்புவது, சமைப்பது என, நடிக்கத் துவங்குவர். குழந்தைக்கு, 3 வயதானதும், கழிவறைக்கு தானே சென்று வர பழக்க வேண்டும். 4 வயதானதும், கழிவறையை சுத்தப்படுத்த, அந்தக் குழந்தையை பழக்க வேண்டும். இப்படியே, 5 வயது குழந்தை, பள்ளிக்கூட பை மற்றும் சாப்பாட்டு கூடையை மறக்காமல் எடுத்து வர வைக்க வேண்டும்.நன்கு நடமாட, பேச, வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் தெரிய துவங்கிய குழந்தைகளுக்கு, வீட்டின் சின்னச்சின்ன வேலைகளை செய்ய கொடுக்கலாம். உதாரணமாக, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது; சாப்பிட உணவு தட்டை எடுத்து வருவது; ஷூ பாலிஷ் போடுவது; விடுமுறை நாட்களில், வீட்டின் சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது என்பன போன்ற வேலைகளை செய்ய சொல்லலாம்.எனினும், சமையல் அறையில் நேரடியாக ஈடுபடுத்துவது, துணிகளை இஸ்திரி போடுவது போன்ற கடினமான பணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்தவே கூடாது. மாறாக, மீன் வளர்த்தல், பறவை, நாய்க்குட்டி, பூஞ்செடிகள் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளச் செய்யுங்கள். இவ்வாறு அவர்கள் வேலை செய்யும் போது, அவற்றில் குறைகளை காண்பிக்காமல், இன்னும் சிறப்பாக செய்வது எப்படி என்பதை, பக்குவமாக சொல்லிக் கொடுங்கள். முடிந்த வரை, மொபைல் போன்கள், கணினி விளையாட்டுகள், தொலைக்காட்சி போன்றவற்றில், அவர்களின் ஆர்வம் செல்லாத வகையில், பெற்றோர் கவனித்துக் கொள்ள வேண்டும்.இதனால், எந்தச் சூழ்நிலை என்றாலும், தன்னைத் தானே பராமரித்துக் கொள்ளும் மனப் பக்குவம், திறமை குழந்தைகளுக்கு வந்து விடும். இதற்கு, பெற் றோரின் ஒத்துழைப்பும், அரவணைப்பும் குழந்தைகளுக்கு அவசியம்.அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில், 'அன்றாட வீட்டு வேலைகளில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பது தவறு. அவ்வாறு செய்தால், குழந்தைகளின் திறன் குறைய வாய்ப்பு உள்ளது. மன தைரியம், வெற்றி, தோல்விகளை பகுத்தறியும் பக்குவம், உடனிருப்போருடன் உறவாடும் உளவியல் தன்மை போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்' என்கிறது.வீடு என்றால், வேலைகளை எல்லாரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை, குழந்தைகளுக்கும் உணர்த்துங்கள்!
நாகர்கோவில்குழந்தைகள் டாக்டர் ஷபி:

Read more...

பள்ளி செல்லும் குழந்தை அடம்பிடிக்க காரணமும், அதற்கான தீர்வும்.

புதன், 27 ஜூன், 2018


சில குழந்தைகள், பள்ளிக்கு கிளம்பும் முன், வயிறு வலிக்கிறது அல்லது உடம்பு சரியில்லை எனக் கூறி, லீவு போட்டதும், ப்ரீயாகி, ஜாலி மூடுக்கு மாறி விடுவர்.மீண்டும் மறுநாள் காலை, பள்ளி செல்லும் போது இப்பிரச்னை தொடர்ந்தால், குழந்தையுடன் உட்கார்ந்து பேசுங்கள். அவர்கள் பேச வாய்ப்பு கொடுத்து, காது கொடுத்து கேளுங்கள். வீட்டில் பேச தயங்கும் குழந்தைகளை, வெளியே அழைத்து சென்று, பிரச்னையை கேட்டு அறிந்து களையுங்கள். இன்றைய பெற்றோரில் பலர், குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் பெயரில், தொடர்ச்சியாக பாடம் எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர்களை குற்றம் சொல்லி வந்தால், பிரச்னை பெரிதாகுமே தவிர, தீர்வு கிடைக்காது.குழந்தைகளை, மிரட்டியோ, அதட்டியோ அல்லது அடித்தோ பள்ளிக்கு அனுப்பினாலும், பள்ளியில் நாட்டம் இல்லாமல் போய்விடும். இப்படி அனுப்பும்போது, அது, பெற்றோர் - குழந்தை இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தும்.சில குழந்தைகளுக்கு, உண்மையிலேயே உடம்பில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். இதை உறுதிப்படுத்த, மருத்துவரிடம் அழைத்து சென்று அவர், 'எந்த பிரச்னையும் இல்லை' என்றால், குழந்தையிடம் நெருக்கம் காட்டி, பிரச்னையை கண்டறியுங்கள்.பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தையை, தொடர்ச்சியாக கண்காணியுங்கள். குறிப்பாக, அவர்களுக்கு பயம் மற்றும் பதற்றம் ஏற்படுவது போல் தோன்றினால், முறையான கவுன்சிலிங் தர வேண்டும்.இன்று சில பெற்றோர், தங்கள் குழந்தைகள் பள்ளி செல்ல மறுத் தால், ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் சரியில்லை என, அனுமானித்து விடுகின்றனர். இதுதவிர, படிப்பில் பிரச்னை, கேலிப் பிரச்னை மற்ற மாணவர்களிடம் சண்டை எனவும் இருக்கலாம். அதை சரியான முறையில் ஆராய்ந்து, சிந்தித்து செயல்படுங்கள்.குறிப்பாக, பெற்றோர் பள்ளி சென்று, ஆசிரியரிடம் பேச வேண் டும். ஒரு கூட்டு முயற்சியால், குழந்தையை இந்தப் பிரச்னையில் இருந்து சரி செய்யலாம்.உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் இருக்கும்போது, 'டிவி' பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்ட விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. மீறி பயன்படுத்தினால், அது அவர்களை மேலும் வீட்டோடு இருக்க வழி வகுக்கும்.நல்ல பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லாமல் தொடர்ச்சியாக இருந்து, ஒரு நாள் பள்ளி சென்று வரும்போது, அவர்களுக்குப் பிடித்த உணவை வீட்டில் செய்து கொடுங்கள். தொடர்ச்சியாக பள்ளிக்குச் சென்று வந்தால், சிறு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.மேலே கூறியவற்றை பெற்றோர் கடைபிடித்தாலே, குழந்தையின் பிரச்னை நிச்சயம் சரியாகும். தேவையெனில், மனநல நிபுணரை கலந்தாலோசிக்கலாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets