உங்கள் வருகைக்கு நன்றி

மன அழுத்தம் குறைய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மன அழுத்தம் குறைய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நகம் கடிப்பது மனநிலை பாதிப்பு?

புதன், 3 ஜூலை, 2013


நம்மூரில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க பரிந்துரையும் செய்துள்ளனர். உலகம் முழுவதும் பல லட்சம் பேர் நகம் கடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். நகம் கடிப்பது மட்டுமல்ல, கையை அடிக்கடி கழுவுவது, முடியை பிடித்து இழுத்து கொண்டே இருப்பது ஆகியவையும் மனநல பாதிப் பின் வெளிப்பாடுதான். காரணமில்லாத அச்சம், தவறான எண்ணங்கள் மனதில் எழுவதால் சிலர் இதுபோல செய்கின்றனர்.
 
இதை மனநல பாதிப்பில் சேர்க்கலாம் என அமெரிக்க மனநல சங்கத்தை சேர்ந்த நிபுணர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.  எப்போதாவது நகம் கடிப்பவர்கள் கூட மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறிவிட முடியாது. இந்த பழக்கத்தால் வலி ஏற்படும் அளவுக்கு ஒருவர் நடந்துகொண்டால் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கருதலாம் என்று கலிபோர்னியா பல்கலைக்கழக மனோ தத்துவவியல் வல்லுநர் கரோல் மேத்யூஸ் தெரிவித்தார்.நகம் கடிப்பதால் நோய் தொற்று ஏற்பட்டு அடிக்கடி சளி பிடித்தல், சுகவீனம் ஏற்படுகிறது.

Read more...

மன இறுக்கத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

திங்கள், 3 ஜூன், 2013

வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.

தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும், மனதை அமைதிப்படுத்த, தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது.

மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். சில நோய்களும் மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நோயின் தாக்கம், நோயின் பக்க விளைவுகள் போன்றவற்றால் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம் இருக்காது. எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலை வலி, வயிற்று வலி, கோபம் போன்றவை ஏற்படுவதாக உணர்வோம்.

மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது. மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்தான் எளிதில் போதைப் பொருளுக்கு அடிமையாதல், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, தற்கொலை முயற்சி, சூழ்நிலையை தவிர்க்க ஓடிப்போதல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் போன்றவை நிகழ்கிறது.

மன இறுக்கத்தைத் தவிர்க்க  பிரச்சனைகள் ஏற்படும் போது அதை மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது.

Read more...

மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது.

சனி, 4 மே, 2013

வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும், மனதை அமைதிப்படுத்த, தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது.

மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். சில நோய்களும் மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோயின் தாக்கம், நோயின் பக்க விளைவுகள் போன்றவற்றால் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம் இருக்காது.

எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலை வலி, வயிற்று வலி, கோபம் போன்றவை ஏற்படுவதாக உணர்வோம். மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது.

மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்தான் எளிதில் போதைப் பொருளுக்கு அடிமையாதல், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, தற்கொலை முயற்சி, சூழ்நிலையை தவிர்க்க ஓடிப்போதல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் போன்றவை நிகழ்கிறது. மன இறுக்கத்தைத் தவிர்க்க  பிரச்சனைகள் ஏற்படும் போது அதை மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது. 

Read more...

கம்பியூட்டரால் இஞைர்களை பாதிக்கும் மனஅழுத்தம்!

திங்கள், 31 டிசம்பர், 2012


இணையதளத்தில் சதா உட்கார்ந்து பொழுது போக்குவது என்பது இளைஞர்களுக்கு பிடித்த விஷயம். ஆனால்அப்படி செய்வது மன அழுத்தத்தை கொடுக்கும் என்று ஆய்வு கூறுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள லாசேன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டாக்டர். பியரி ஆன்ட்ரூ மிசௌட் மற்றும் இவரது குழுவினர் இது தொடர்பான ஆய்வு நடத்தினர். 16 முதல் 20 வயதுக்கு உட்பட்ட 7,200 வாலிபர்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர்.

ஆய்வில், ‘தினமும் 2 மணி நேரத்திற்கு மேலாக இணையதளம் பயன்படுத்தினால் அது அதிக இணையதள பயன்பாடு. வாரம் முழுவதும் தினமும் 2 மணி நேரம் என்ற அளவில் பயன்டுத்தினால் அது வழக்கமான பயன்பாடு. வழக்கமான பயன்பாட்டில் இருப்பவர்களை காட்டிலும் அதிக பயன்பாட்டில் இருப்பவர்கள் அல்லது பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்துடன் காணப்படுகின்றனர். ஆண்களில் அதிக பயன்பாட்டில் இருப்பவர்கள் மற்றும் பயன்படுத்தாதவர்கள் பட்டியலில் 3ல் 1 பங்கினர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பெண்களில் அதிகம் பயன்படுத்துபவர்களில் 86 சதவீதம் பேர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

இணையதளம் அதிகளவில் பயன்படுத்துபவர்களுக்கு உடல் ரீதியாக சில குறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக இணையதள பயன்பாட்டாளர்களில் 18 சதவீதம் பேர் உடல் பருமனானவர்கள். இது வழக்கமான பயன்பாட்டாளர்களில் 12 சதவீதமாக உள்ளது. இணையதளம் அதிகம் பயன்படுத்தும் பெண்களில் 59 சதவீதம் பேர் தூக்கத்தை இழக்கின்றனர். இவர்கள் இப்படி மதிப்பிடஇணையதளமே பயன்படுத்தாதவர்கள் சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி இருப்பவர்களாக கருதப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

Read more...

வெளியிடங்களில் அதிக நேரம் செலவிட்டால் ?

திங்கள், 10 டிசம்பர், 2012


உடல்பருமனுக்கு மட்டுமல்ல, மன உளைச்சல், மன அழுத்தம் போன்ற பாதிப்புகளுக்கும் வாக்கிங் சரியான தீர்வு என்கிறது லேட்டஸ்ட் ஆராய்ச்சி.
மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் போன்றவை வருவதற்கான காரணங்கள், அவற்றை தவிர்க்கும் வழிகள் குறித்து இங்கிலாந்தின் எக்சிடர் பல்கலை மற்றும் ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலை இணைந்து பேராசிரியர் அட்ரியன் டெய்லர் தலைமையில் சமீபத்தில் ஆய்வு நடத்தின. மனஉளைச்சல் பாதிப்பில் இருந்த 341 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்கள் நிறைய நடக்குமாறு கூறப்பட்டது. இதில், அவர்களது மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவை கணிசமாக குறைந்திருந்தது. ஆய்வு பற்றி அட்ரியன் மேலும் கூறியதாவது: சராசரியாக 10,ல் ஒருவர் தனது வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறார். உடற்பயிற்சி, மனதை அடக்கும் யோகா, தியானம் போன்றவற்றால் மன கோளாறுகளை கட்டுப்படுத்த முடியும். அதே நேரம், கடுமையான உடற்பயிற்சி மூலமாக கிடைக்கும் பலன், நடைபயிற்சி மூலமாகவே கிடைத்துவிடுகிறது. இது செலவு இல்லாத, அதிகம் சிரமம் இல்லாத பயிற்சி. எவ்வளவு நேரம்,
எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? வெளியில் நடக்க வேண்டுமா, வீட்டுக்குள் நடக்கலாமா? என்ற சந்தேகங்களை தீர்க்க தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனாலும், முடிந்தவரை நடப்பது நல்லது. இவ்வாறு அட்ரியன் கூறினார். இங்கிலாந்தை சேர்ந்த மைண்ட்அறக்கட்டளை நிறுவனம் மனநலம் தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் நிர்வாகி பால் பார்மர் கூறும்போது, வெளியிடங்களில் அதிக நேரம் செலவிட்டால், மன அழுத்தம் குறையும். உங்களுக்கு ஏற்ற உடற்பயிற்சி ஒன்றை தேர்வு செய்து, அதை திறந்தவெளியில் செய்வது நல்ல பலனை தரும். நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலை செய்வது, நீச்சல் அடிப்பது ஆகியவற்றைக்கூட தேர்ந்தெடுக்கலாம். பலருடன் சேர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடும்போது சமூக இணைப்பு பலமாகிறது. பிரச்னைகள், குறைகளை மனம் விட்டு பேச வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.

Read more...

எதையுமே மனதிற்குள் வைத்துக்கொள்ளாதீர்கள்

வியாழன், 29 நவம்பர், 2012


வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். தொடர்ந்து அடுத்தடுத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் போதும், ஒரே நாளில் பல்வேறு சூழ்நிலைகளைக் கையாள வேண்டிய நிலையில் இருக்கும்போதும், மனதை அமைதிப்படுத்த, தனக்கென செலவழிக்க சில நிமிட நேரங்கள் கூட கிடைக்காத நிலையில்தான் மன இறுக்கம் ஏற்படுகிறது.

மன இறுக்கத்திற்கு மற்றுமொரு முக்கியக் காரணம், பிரச்சினையை, மன அழுத்தத்தை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளாததும் ஆகும். சில நோய்களும் மன இறுக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோயின் தாக்கம், நோயின் பக்க விளைவுகள் போன்றவற்றால் மன இறுக்கம் ஏற்படுகிறது. மன இறுக்கம் ஏற்படும்போது எதிலும் மனம் ஒன்றிச் செயல்பட முடியாது. எதிலும் ஆர்வம் இருக்காது.

எல்லோர் மீதும் எரிந்து விழுவோம். தலை வலி, வயிற்று வலி, கோபம் போன்றவை ஏற்படுவதாக உணர்வோம். மன இறுக்கத்தால் இதயம் மறைமுகமாக பாதிக்கப்படுகிறது.

மன இறுக்கத்தில் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள்தான் எளிதில் போதைப் பொருளுக்கு அடிமையாதல், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, தற்கொலை முயற்சி, சூழ்நிலையை தவிர்க்க ஓடிப்போதல், தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ளுதல் போன்றவை நிகழ்கிறது. மன இறுக்கத்தைத் தவிர்க்க  பிரச்சனைகள் ஏற்படும் போது அதை மனதிற்குள் வைத்துக்கொள்ளாமல் யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொண்டால் நல்லது.

 

Read more...

மன அழுத்தத்திலேயே உழல்வதும், சோம்பேறியாக இருப்பதும் நியாயப்படுத்தப் படுவதில்லை.

வியாழன், 1 நவம்பர், 2012


முந்தைய தலைமுறைகளைச் சார்ந்தவர்கள் ஒரு பதவியில் பணியில் சேர்ந்தால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட ஆண்டுகள் அதே நிறுவனத்தில் பணி புரிந்தது சாதாரணமான ஒன்றாக இருந்தது. உலக அளவில் கம்ப்யூட்டர் துறை சார்ந்த இன்பர்மேஷன் டெக்னாலஜி (ஐ.டி.,) துறையின் வளர்ச்சியும், இதன் உடன் விளைவாக ஐ.டி.இ.எஸ்., எனப்படும் ஐ.டி., எனேபிள்டு சர்வீஸஸ் துறைகளின் வளர்ச்சியும் வேலை வாய்ப்பு சந்தையின் ஒட்டு மொத்த தன்மையையே புரட்டிப் போட்டுள்ளது எனலாம்.
அட்ரிஷன், கட்டாய விடுவிப்பு, பணி நீக்கம் போன்ற தாக்குதல்கள்தான் இன்றைய நவீன வேலை வாய்ப்பு சந்தையில் அதிகம் பேசப்படும் வார்த்தைகளாக மாறி உள்ளன. இவற்றில் கட்டாயப் பணி நீக்கத்திற்கு உள்ளாகும் நபர்களின் மன ரீதியாக ஏற்படும் அழுத்தம் பெரும் சுமையாக மாறிவிடுகிறது.
சுயமாக பல்வேறு முயற்சிகளைச் செய்தால் ஒழிய இந்த நிலையிலிருந்து மீள்வது பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. எனவே வேலை இல்லாதோர் மற்றும் வேலை இழந்தோருக்கு ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய நான்கு உத்திகளை மென்எக்ஸ்எஸ்பி இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் சாராம்சம்..
உங்களை நீங்களே தேற்றிக் கொள்ள வேண்டும்: 
ஒரு லேஆப்பின் காரணமாக உங்களுக்கு பணி இழப்பு ஏற்படும் போது உங்களை நீங்கள் இரண்டு விதமாகத் தேற்றிக் கொள்வது தேவை. முதலாவது, நீங்கள்தான் இது போன்ற நிலைக்கு முதலில் தள்ளப்பட்டவர் அல்ல. அதே போல், இப்படி வேலை நீக்கம் பெறும் இறுதி நபரும் நீங்கள் அல்ல.
உங்களுக்குள் ஏதாவது பிரச்னைகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்யுங்கள்: 
ஒரு வேலை இழப்பு ஏற்படுவதற்கு உங்கள் பணியில் நீங்கள் ஏதாவது ஒரு தவறைச் செய்வது ஒரு முக்கிய காரணமாக் இருந்திருக்கலாம். லே ஆப் என்பதை ஒரு நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் முயற்சி என்று பழி போட்டு அந்த வேலை இழப்பிற்கு காரணமான நமது தவறைப் பூசி மெழுகுவது நமக்கு நல்லதை தராது. ஒரு வேளை நமது தவறு இதற்கான முக்கிய காரணமாக இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் அந்தத் தவறு நிகழாமல் இருப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும்.
இறுக்கங்களில் இருந்து விடுபடக் கற்றுக் கொள்ளுங்கள்: 
ஒரு வேலை உங்களிடமிருந்து பறிக்கப்படும் போது உள்ளபடியே நீங்கள் அதற்கான காரணங்கள் குறித்த நினைவுகளில் அடிக்கடி ஈடுபடுவீர்கள். இதன் இறுதி நிலை உங்கள் மன அழுத்தத்தில் தான் கொண்டு விடும் என்பதை உணருங்கள். எனவே உங்கள் மன இறுக்கத்தை எப்படிக் கட்டுக்குள் வைத்திருப்பது என்ற வழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள்.
தொழுகை, துஆ, புத்தங்களைப் படிப்பது, நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்பது, விளையாடுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் மன இறுக்கங்களைக் குறைத்துக் கொள்ள முடியும். சில சமயங்களில் உங்கள் நண்பர்களும், உறவினர்களும்கூட இந்த விஷயத்தில் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள் என்பதை உணருங்கள்.
புதிய வேலையைத் தேடத் துவங்குங்கள்: 
பணி பறிப்பினால் பாதிக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக நீங்கள் மன அழுத்தத்திலேயே உழல்வதும், சோம்பேறியாக இருப்பதும் நியாயப்படுத்தப் படுவதில்லை. வேலை இழந்த நிலையில் வீட்டில் உட்கார்ந்தே இருப்பதை விட்டுவிட்டு உங்கள் பணி அனுபவத்தில் நீங்கள் கற்ற புதிய திறன்களையும் இணைத்த புதிய ரெஸ்யூமைத் தயார் செய்து, புதிய வேலைக்கான முயற்சிகளில் இறங்குவதுதான் உங்கள் எதிர்காலம் புதிதாக மலர வழி வகுக்கும் என்பதை உணருங்கள்.
இங்கே சொல்லப்பட்ட விஷயங்கள் ஒரு மாதிரிதான். ஆனால் இதன் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு இப்போதே செயலில் இறங்கி வெற்றி பெற முயற்சி செய்யுங்கள்.

Read more...

மன அழுத்தமா? அதற்கு இதுதான் முக்கிய காரணம்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012


நீங்கள் எப்பொழுதும் சோர்வாக காணப்படுகின்றீர்களா? கண்களின் கீழ் கருவளையம் ஏற்படுகிறதா? அஜீரண கோளாரால் அவதியுருகிறிர்களா? இதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான்.
சமீபத்திய ஆய்வில், ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில்  17% பேர் தூங்க முடியாமல் தவிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதனால் மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்பட காரணம் என்று உளவியல் ரிதியாக கண்டறியப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இரவில் வேலை செய்தல் இதற்கு முக்கிய காரணம். இரவு நேரங்களில் வேலை செய்வதால் ஒருவரின் பழக்க வழக்கம் முற்றிலும் மாறுபடுகின்றது. இதனால் உடல் அதை ஏற்க மறுக்கின்றது. எனவே பக்க விளைவுகள் அதிகம் ஏற்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் அதிக நேரம் டிவி பார்ப்பது, செல்பேசியில் அதிக நேரம் உரையாடுவது, இணையதளத்தில் கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றை தொடர்வதால் மன அழுத்தம் சுலபமாக பற்றுகிறது. சரியான தூக்கமின்மையால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மறுநாள் முழுவதும் மனச்சோர்வு, மன அழுத்தம், எந்த செயலிலும் ஆர்வமின்மை போன்ற மாற்றங்கள் ஏற்படுகின்றது.
சரியான உணவு பழக்கம், போதுமான தூக்கம் சரியான முறையில் இருந்தால் மட்டுமே நம் அன்றாட கடமைகளை சரிவர பின்பற்ற முடியும்.

Read more...

இந்த குழநதை செய்த பாவம் என்ன?

புதன், 25 ஜூலை, 2012

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 4 வயது குழந்தையை அத்தை, மாமா ஆகியோர் அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. வியாசர்பாடியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி அன்னை சத்தியா நகர் 5வது தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (30). இவரது மனைவி மும்தாஜ் (26). தம்பதிக்கு மகன் முபாரக் அலி (6), மகள் ப்ரானா (4). நேற்று முன்தினம் தம்பதி வேலைக்கு போகும்போது மகள் ப்ரானாவை அருகில் வசிக்கும் தங்கை ஷகிலா வீட்டில் தமீம் அன்சாரி விட்டு சென்றார். மாலை குழந்தையை கூப்பிட சென்றபோது குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது. இந்த நிலையில் ப்ரானாவை சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்து சடலத்தை எடுத்து செல்லுமாறு கூறியுள்ளார். 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper 
இதற்கு சம்மதிக்காத ஷகிலா, குழந்தையை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார். அங்கு குழந்தையை கொண்டு சென்றபோது சுடுகாட்டில் இருந்த ஊழியர், குழந்தையின் உடலில் காயம் இருந்ததால் சந்தேகப்பட்டு இறப்பு சான்றிதழ் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்தவர்கள் மழுப்பலான பதில் கூறியதால் எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மயானத்திற்கு விரைந்து வந்து ப்ரானாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் குழந்தை அடித்து, துன்புறுத்தி கொலை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து ஷகிலா, அவரது கணவர் சலீம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறிவந்த தம்பதி, பின்னர் ப்ரானாவை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டனர். இது குறித்து போலீசார் கூறும்போது, சம்பவத்தன்று ஷகிலா வீட்டில் குழந்தை ப்ரானா தூங்கிக்கொண்டிருந்தது. அப்போது சலீம், ஷகிலா ஆகியோர் உல்லாசமாக இருந்துள்ளனர். தூக்கத் தில் எழுந்த குழந்தை அழுது கொண்டே ஷகிலா அருகில் வந்தது. இதில் ஆத்திரம் அடைந்த ஷகிலா, அருகில் கிடந்த பருப்பு கடையும் மத்தால் குழந்தை முகத்தில் அடித்துள்ளார். இதில் ப்ரானா உதடு கிழிந்து ரத்தம் கொட்டியது. பிறகு குழந்தையின் மார்பில் சலீம் எட்டி உதைத்துள்ளார். இதில் மயங்கி கீழே விழுந்த குழந்தை இறந்தது என்றனர். கைதான சலீம், ஷகிலா ஆகியோரை போலீசார் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Read more...

மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம்

வெள்ளி, 29 ஜூன், 2012


மன அழுத்தம் ஒருவருக்கு பல நோய்களை கொண்டு வருகிறது. 60 சதவீத மனித வியாதிகளுக்கு மன அழுத்தமே காரணம் என்று அமெரிக்க மெடிக்கல் அசோஷியேஷன் கண்டுபிடித்துள்ளது. இதனால் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மன அழுத்தத்தால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள்தலைவலிமயக்கம்பயம்எரிச்சல்கோபம்பீதிஏ.டி.டி.,/ஏ.டி.எச்.டி.நோய் ஆகியவை ஏற்படுகின்றன. பற்களை கடிக்கும்போது தாடை பாதிக்கப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தல்பக்கவாதம்இதயநோய்கள்ரத்தஅழுத்தம்நீரிழிவு நோய் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. செரிமானப் பிரச்னைவயிற்று எரிச்சல்அடி வயிற்று வலிகுடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகரித்துஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது.உடல் எடை அதிகரித்துஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது. தசை இறுக்கம்நார்த் திசுக்கட்டிவலி ஆகியவை கால்களில் ஏற்படுகின்றன. மனஅழுத்தத்தால் தற்கொலை எண்ணம்போதைப் பொருட்களுக்கு அடிமையாதல்புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாதல்விபரீத எண்ணம்விபரீத பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மைபழக்கவழக்கத்தில் மாற்றம்உணர்வுப்பூர்வமாக மாற்றம்நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்ஆஸ்துமாஅல்சர்சத்துக் குறைபாடு,டென்ஷன்பதட்டம்பிரமை மற்றும் பல நோய்களையும் மனஅழுத்தம் கொண்டு வருகிறது. இயந்திர வாழ்க்கையில் மன அழுத்தம் சாதாரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தத்தை போக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

முதல்படிசிறு பிரச்னைகளுக்கு கூட பெரிய அளவில் கவலைப்படுவதே மன அழுத்தத்துக்கான முதல்படி. மன அழுத்தத்தால் உடல்வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மைமுயற்சிசக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.

நல்லவர்களையும் முட்டாளாக்கும்மன அழுத்தம்நல்ல அறிவு படைத்தவர்களையும்பழக்கவழக்கம்நடை,உடைபாவனைகளில் முட்டாள்களாக காட்டு கிறது. ஒருவருக்கு உடலளவிலும்மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள்நண்பர்களிடமிருந்து பிரியும் நிலை உண்டாகிறது.

உணர்வற்ற மனிதனாக்கும்மனித உணர்வில்பாதிப்பை உண்டு பண்ணுகிறது. தேவையில்லாத இடங்களில்,தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக் காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில்மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது.

எவ்வாறு கட்டுப்படுத்துவதுஅவசர உலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர் களுக்கும் ஏற்படுகிறது. என்ன பிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழக வேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல்அதை சரி செய்ய வேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில்அதையே நினைத்து கவலை கொள்ளக் கூடாது.

உடனே சரிசெய்யுங்கள்பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போதுஎண்ணத்தை மாற்ற முற்படுங்கள். நண்பர் களுடன் மனம்விட்டு பேசுங்கள். இதனால் அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சியோகா மற்றும் தியானம் ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள்சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.

மாறும் இதயத்துடிப்புசாதாரண மனநிலையில் இதயத்துடிப்பு எப்படியிருக்கும்மனஅழுத்தத்தின் போது எப்படியிருக்கும் என்பதை இந்த வரைபடம் காட்டுகிறது. சாதாரண மனநிலையில் இதயத்துடிப்பும் சீராக இருக்கிறது. மனஅழுத்தத்தின் போது இதயத்துடிப்பு வெவ்வேறு நிலைகளுக்கு மாறுகிறது. பயம்பதட்டம்கோபம் ஆகியவை ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டு எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகிறது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets