உங்கள் வருகைக்கு நன்றி

தூக்கத்தின் பயன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தூக்கத்தின் பயன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கம்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019


சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, காதலோ... மனிதன் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்வுக்கும், மூளை நரம்பில் நடக்கும் ரசாயன மாற்றங்களே காரணம். அந்த உணர்வுகள், மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நேர்மறை உணர்வுகள், மனதையும், உடலையும் இலகுவாக்கி, உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எதிர்மறை உணர்வுகளோ, மன அழுத்தத்தை கொடுத்து, உடல் நலன், மனநலனை பாதிக்கும்.'ஒரு நாளில்  வாய்விட்டு சிரிப்பதுடன், நகைச்சுவை உணர்வுடனும் இருப்பவர்களுக்கு, அன்று இரவு நிம்மதியான உறக்கம் வரும்' என்கிறது ஆய்வு. அதேபோல், எப்போதும் அதிக பதற்றத்துடன் இருப்பவர்களுக்கு, இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும் என்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.-சோகத்தை, அழுகை அல்லது பிறரிடம் பேசுவதன் மூலம் வெளிப்படுத்தாமல் தேக்கி வைத் தால், உடலுக்குள் அது தேங்கி, மன அழுத்தத்துக்கான ரசாயன மாற்றங்களை அதிகரிக்கும். மன அழுத்தத்துக்கு உள்ளாகும் பலருக்கு உடல் வலி, கழுத்துவலி, சோர்வு ஆகிய அறிகுறி இருக்கும்.'அதிகமாக கோபப்படுபவர்கள், தினமும் சண்டை போடுபவர்கள், அதிகமாக வாக்கு வாதம் செய்பவர்களுக்கு, பொதுவாக, நோய் குணமாவதற்கான திறன், உடலில் குறைவாக இருக்கும்' என, ஆய்வுகளில் கண்டறியப்பட்டுஇருக்கிறது. ஒருவரின் அன்பை உணரும்போது, மகிழ்ச்சிக்கான, 'ஹார்மோன்' உடலில் அதிகரிக்கும். அப்போது, மூளை உள்ளிட்ட பிற உடலுறுப்புகளின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்; உடலும், மனமும் எப்போதும் விழிப்புணர்வுடனும் இருக்கும்.ஏதோ காரணத்துக்காக தீவிர பயத்துக்கு உள்ளானவர்களுக்கு, உடலில் தானாகவே மன அழுத்தத்துக்கான ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கும். இது, கல்லீரல், இதயம், சிறுநீரகத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தும். அதனால், அந்தந்த உறுப்புகள் சார்ந்த நோய் ஏற்படவும், ஏற்கனவே இருக்கும் நோய் தீவிரமாகவும் வாய்ப்பு அதிகம்.ஒரு நாளை எடுத்து கொண்டால், அன்று முழுக்க மகிழ்ச்சியாகவோ அல்லது துக்கமாகவோ இருப்போம் என்று கூற முடியாது. காலையில் மகிழ்ச்சியாகவும், மதியம் சோகத்திலும், மாலையில் பயத் திலும் சிக்கி தவிக்கலாம். நேர்மறை உணர்வுகள் மட்டுமன்றி, எதிர்மறை உணர்வுகளும் அவ்வப்போது வந்து போவது, மனித உடலில் அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வே. ஆனால், எதிர்மறை உணர்வுகளின் அளவு அதிகரித்தாலோ, அவை நீடித்தாலோ தான் பிரச்னைகள் துவங்கும். எனவே, எத்தகைய எதிர் மறை உணர்வுகளையும் நீடிக்கவிட வேண்டாம்.

Read more...

ஆரோக்கியம் தான் சொத்து

வியாழன், 20 ஜூலை, 2017

உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுத்தால் அது ஆரோக்கியம் நிறைந்த சொத்தாக மாறுகிறது! தினமும் ஒரு வகை கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கீரை சாப்பிட்டவுடன் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். 

இரும்புச்சத்து, தாது உப்புக்கள், கால்சியம் நிறைந்து இருப்பதால் உடல் சீராக இயங்க கீரை வகைகள் உதவும். எலும்புகள் உறுதிப்படும். புதிதாக பறிக்கும் கீரைகளை அதற்கு தகுந்தபடி உடனேயே பொரியல் வைத்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும். 

நோய் அண்டாது. குழந்தைகளை எல்லாவிதமான காய்கறிகளையும் உண்ணப் பழக்க வேண்டும். வயதானவர்கள் நீர்ச்சத்து, நார்ச்சத்து அடங்கி உள்ள அவரைக்காய், புடலங்காய், பூசணி, பீன்ஸ், வாழைத்தண்டு, கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். 

தினமும் இரண்டு விதமான காய்கறிகள் சேர்த்து கொண்டால் உடலுக்கு நல்லது. பாதாம், முந்திரி, வேர்க்கடலை, பிஸ்தா, அக்ரூட் போன்ற பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்வது அவசியம். மொத்த பருப்பு வகைகளையும் கலந்து அதில் தினமும் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி அளவில் சாப்பிடவேண்டும். 

இதனால் உடல் எடையும் கூடும். குழந்தைகளின் உடல் உறுதியாகும். சருமம் பொலிவடையும். முளைவிட்ட பயறு வகைகளில் நீர்ச்சத்து, வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளன. கூடவே ரிபோபிளேவின் பி காம்பிளக்ஸ் வைட்டமின்கள், இரும்பு சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். 

அப்படியே சாப்பிடாமல் வெந்நீரில் போட்டு லேசாக வேகவைத்து சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலத்தை கொடுக்கும். தினமும் 50 கிராம் அளவுக்கு முளை விட்ட தானியத்தை எடுத்துக் கொள்ளவேண்டும். உணவில் எண்ணெயை அளவோடு சேர்த்து கொண்டால் ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும். 

எண்ணெய் பொருட்களை அதிகமாக சாப்பிட்டால் உடலுக்கு தேவையில்லாத கொலஸ்டிரால் உருவாகி பல நோய்களை உண்டுபண்ணும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயறு வகைகள் தேவை. அதே நேரத்தில் அதை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும். தினமும் 50 முதல் 75 கிராம் வரை சாப்பிடலாம்.

டென்ஷன்' ஏன் ?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இன்று 'டென்ஷன்... டென்ஷன்' என்று தவித்துப் புலம்பிக் கொண்டே இருக்கிறார்கள். நவீன வாழ்க்கை முறை தந்த விரும்பத்தகாத பரிசுகளுள் ஒன்று இந்த 'டென்ஷன்' எனப்படும் மனஉளைச்சல்’. முன்பு எப்போதாவது என்று இருந்த டென்ஷன், பிறகு அவ்வப்போது ஆகி, இன்று அடிக்கடி என்றாகிவிட்டது.

மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட நெருக்கடி இது. இதிலிருந்து நவீன மனிதனால் முற்றிலும் விடுபட முடியாது. ஆனால் டென்ஷனை மேலாண்மை செய்ய முடியும். அதற்கு, டென்ஷன் என்றால் என்ன என்பதைப் பார்க்க வேண்டும்...

டென்ஷன் என்பது ஒரு பொருளின் இறுக்கத்தைக் குறிக்கும். உலகில் சில பொருள்கள் இயல்பில் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும். உலோகங்கள், மரங்கள், கற்கள் போன்றவை அப்படி இறுக்கமாக இருந்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். காகிதம், நூல், செடி கொடி போன்றவை நெகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்க்கலாம்.

சில பொருட்கள் இரண்டு அம்சங்களும் கொண்டவை. எடுத்துக்காட்டு, களிமண் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள். பொருளியல் பண்புகளான இவை, நம் உடலுக்கும் பொருந்தும். நமது உடல் இறுகு பொருள்களும், நெகிழ் பொருள்களும் கலந்த கலவை. எலும்பு, தசை நார், தோல், ரத்தக் குழாய் ஆகியவற்றின் கூட்டுப்படைப்புதான் நம் உடம்பு.

இவற்றில் சில, நெகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும். சில, இறுக்கமாக இருக்க வேண்டும். நெகிழ்ச்சி உறுப்புகள் இறுகக் கூடாது. அதேபோல் இறுகு உறுப்புகள் நெகிழக் கூடாது. எலும்பு நெகிழ்ந்தால் எலும்புருக்கி நோயாகவும், ரத்தக்குழாய் இறுகினால் ரத்த அழுத்தமாகவும் ஆகும்.

இந்தப் பண்பு மனதுக்கும் பொருந்தும். நமது மனம் இளகியும், இறுகியும் இருக்க வேண்டும். நோக்கத்துக்கு ஏற்ப அது அமையும். பசி, தாகம் எடுக்கும்போதும், உறக்கம், பாலுணர்வு உந்தும் போதும் மனம் இறுகிவிடும். ஒற்றைக் குறிக்கோள் என்றால் மனம் இறுகத்தான் வேண்டும். மாறாக, எதை உண்பது, எங்கே படுப்பது எனும் போது இளக வேண்டும்.

விலங்குகள் அப்படித் தான் வாழ்கின்றன. அதனால் அவற்றுக்கு இயற்கையாகவே இறுகுதன்மை உள்ளது. இது ஆபத்தில்லாதது. மனிதனிடம் செயற்கை இறுகுதன்மையே அதி கமாக உள்ளது. இதைத்தான் சாப்பிட வேண்டும், இங்கேதான் படுக்க வேண்டும் என்ற எண்ணம் பல ஆண்களிடம் மிகுதியாக இருக்கிறது.

அப்படி அமையாதபோது டென்ஷன் ஆகிறான். எனவே டென்ஷன் என்பது நாமாக ஏற்படுத்திக் கொள்வது. அப்படி ஏற்படுத்திக்கொள்ள சமூகமே கற்றுக்கொடுக்கிறது. ஓர் எண்ணத்தைச் செயல்படுத்த விடாமல் சில எண்ணங்கள் அல்லது சூழல் நெருக்கும்போது டென்ஷன் ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள்.

ஒன்று, அந்த எண்ணத்தின் மீது நாம் ஏற்படுத்திக்கொள்கிற அதீத ஆவல். மற்றொன்று, சூழலுக்கு ஏற்ப எண்ணத்தை மாற்றிக்கொள்ள இயலாமை. குறிப்பிட்ட நேரத்துக்குள் கொடுத்த வேலையை செய்ய முடியாமல் போனாலோ, எடுத்த பணியை முடிக்காமல் போனாலோ நிச்சயம் டென்ஷன் தான்.

யாரேனும் நமக்கு ஒத்துப்போகவில்லை என்றாலும் டென்ஷன் ஏற்படும். அச்சூழலுக்கு, இரு மனங்களின் நெகிழ்ச்சிக் குறைபாடே காரணமாகும். ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு டென்ஷன் பட்டியல் கட்டாயம் இருக்கும். அவற்றை நாம் முழுவதும் போக்கவோ, புறக்கணிக்கவோ முடியாது.

மாறாக, அவற்றால் அதிக பாதிப்பு ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளலாம். நேரத்தை திட்டமிடுவது போன்றவை டென்ஷனை தவிர்க்கும். நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்கிற டென்ஷன்களை தவிர்த்தாலே, பெரும்பாலும் நிம்மதி தான்! 


Read more...

மனிதனின் வயிறு,

புதன், 19 ஜூலை, 2017

மனித இனம். பேணிப் பராமரிக்கக்கூடிய மனிதனின் வயிறு, இப்போது குப்பைத்தொட்டியாக மாறி வருகிறது. இதிலிருந்து மீண்டும் அழகான  உடலையும், நல்ல ஆரோக்கியத்தையும், சிறப்பான வாழ்க்கையையும் பெறவே, இந்த சில அருமையான வழிகள்...
1 உடற்பயிற்சிக் கூடம்
வீட்டுக்கு அருகாமையில் உள்ள நல்ல உடற்பயிற்சிக் கூடத்தில் உடனடியாகச் சேருங்கள். குறைந்தது தினமும் 45 நிமிடங்கள், வாரம் 4 நாட்கள்  பயிற்சி மேற்கொள்வதால் அதிக கொழுப்பை நீக்கலாம். அதோடு, தேவைக்கு அதிகமாக உடலில் தங்கி யுள்ள உணவுச் சேர்க்கையை எரித்து (Reduce  or Burn Extra  Calories) பயன் பெறலாம். பட்டினியாக - ஒருவேளை அல்லது இருவேளை சாப்பிடாமல் இருந்து எடை குறைக்க எண்ணுவது  மடமையே. தசைகள் வலுவிழந்து உங்கள் உடலை மேலும் வாட்டி விடும் (An empty stomach can  lead to muscle loss).
2
ஆரோக்கிய உணவு 
நம் முன்னோர் கூறியபடி Eat breakfast like a king, lunch like a prince and dinner like a  pauper என்பதைப் பின்பற்றுங்கள். அனைத்து வகை  தானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள், பால், முட்டை, இறைச்சி, கோழி, மீன் என அனைத்தும் கலந்த  சரிவிகித உணவு (Balanced Diet)    எடுத்துக்கொள்வது அவசியம். அதிக அளவு அரிசி, மைதா வேண்டாம். சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள், எண்ணெயில் வறுத்தெடுத்த  பண்டங்கள், ஐஸ்க்ரீம், குளிர்பானங்களை குறைப்பது அல்லது சேர்க்காமலே இருப்பது நல்லது. 3 வேளை மூக்குப்பிடிக்கச் சாப்பிடுபவராக இருப்பின், அதையே 5 வேளைகளுக்கு சிறிது சிறிதாக சாப்பிடக் கற்றுக் கொள்வது ஆரோக்கியத்துக்கு  உத்தமம். 
3. நிறைய தண்ணீர் 
உங்களின் எடையை சீராக வைத்துக்கொள்வதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இது உடலை சுத்தப்படுத்தும் பணியையும் செய்கிறது.

4.
எலும்புகளுக்குகால்சியம்
அதிக உழைப்பின் காரணமாக எலும்புகளின் சக்தி குறையத் தொடங்கும். அதனால் மருத்துவர் ஆலோசனையுடன் நேரடியாகவோ, உணவிலோ  கால்சியம் எடுத்துக்கொள்வது எலும்புகளின் உறுதிக்கு அவசியம். எலும்புகள் உறுதி இல்லை எனில் தசைகள் வலிமை இழந்து, அவ்வப்போது பல பாகங்களில் தசைப்பிடிப்பு உண்டாகும். 

5
ஆழ்ந்த உறக்கம்

தூக்கமின்மையே இதயம், கிட்னி சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, பருமன், மன அழுத்தம் போன்ற பலவிதமான அபாயகரமான பிரச்னைகளுக்கு  மூலகாரணம். நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் சிறந்த தியானத்துக்குச் சமமாகும். நல்ல உறக்கத்தால் உடல் உறுப்புகள் ஓய்வு பெறுகின்றன. ரத்த  நாளங்கள் அமைதி அடைகின்றன. நீண்ட ஆயுளுக்கும், உடல் உறுதிக்கும் உத்தரவாதம் அளிக்கும் அருமையான டாக்டரே - ஆழ்ந்த நிம்மதியான  உறக்கம்!

Read more...

கணினி, மொபைல் தூக்கத்தை குறைக்கிறதா ?

புதன், 11 ஜூலை, 2012


 மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மனிதன் தூங்கியதை விட தற்போது மிகக் குறைந்த அளவிற்கே தூங்குகிறான். இதற்குக் காரணம் மின்சாரம்தான் என்றால் அது மிகவும் தவறு. மனிதன் தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டதுதான் குறைவான தூக்கத்திற்கு காரணமாகிறது.
அதேப்போல, கணினியில் அதிக நேரம் வேலை செய்வதாலும், செல்பேசியாலும் மனிதனின் தூக்கம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மனிதனின் தூக்கத்தை எந்த வகையிலும் கணினியோ, செல்போனோ குறைக்கவில்லை என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள்.
அதிக நேரம் கணினி முன்பு அமர்ந்து இணையத்தில் உலா வரும் மனிதன், அதன் மீதான ஆர்வத்தினால், நேரம் கழிவது தெரியாமல் இருந்து விடுவதுண்டு. அதுபோலவே, செல்பேசியில் பேசுவதாலும், இணையத்தைப் பயன்படுத்துவதாலும் அதிக நேரம் கண் விழித்திருப்பது நேரிடுகிறதேத் தவிர, அறிவியல் ரீதியாக செல்போனோ, கணினியோ மனிதனின் தூக்கத்தை விழுங்க வில்லை என்பதுதான் உண்மை என்கிறது ஆய்வுகள்.
குறிப்பிட்ட நேரம் வரை கணினியில் பணியாற்றிவிட்டு அல்லது இணையத்தில் உலாவிவிட்டு குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்திற்கு உறங்க சென்று விடும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அதேப்போலத்தான் செல்பேசியிலும், அதிக நேரம் பேசிக் கொண்டிராமல், அரட்டை அடிக்காமல் எப்போதும் நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்றுவிட்டால் தானாகவே அந்த நேரத்தில் தூக்கம் வந்து விடும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி, குறித்த நேரத்தில் எழுந்து பழகிவிட்டால், உறக்கத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

Read more...

ஆரோக்கியமாக வாழ அற்புதமான வழிகள்

திங்கள், 4 ஜூன், 2012




நல்ல பழக்க வழக்கங்களும், உணவுக் கட்டுப்பாடும் உடலை நலமாக வைத்துக் கொள்ளும் வழிகளாகும். நோய் வந்த பிறகு சிகிச்சை எடுத்து நோயை குணப்படுத்திக் கொள்வதை விட, நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளைக் கடைபிடிப்பது நல்லது.
அதற்கான சில யோசனைகள்..
1. கையை கழுவுதுல் : பொதுவாக கையை கைழுவும் பழக்கம் என்பது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான அடிப்படை விஷயமாகும். வெளியில் சென்று வந்தாலும், சாப்பிடும் முன்பும், கழிவறையை பயன்படுத்தியப் பிறகும் கைகளை நன்கு கழுவ வேண்டும்.
2. சத்துணவு : சத்துள்ள உணவை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றை அதிகமாக சாப்பிடலாம்.
3. உடற்பயிற்சி : நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவை உடலை ஆரோக்கியமாக வைப்பதற்கான முக்கிய அம்சங்களாகும். எந்த உடல் உழைப்பும் இல்லாமல், வெறும் சாப்பிடுவது, உறங்குவது என்று இருந்தால் உடல் மாமிச மலையாகிவிடும்.
4. உறக்கம் : உடலுக்குத் தேவையான சக்தியை எவ்வாறு உணவின் மூலம் பெறுகிறோமோ அதுபோல ஓய்வை உறக்கத்தின் மூலம் பெறுகிறோம். எனவே அன்றாடம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி அதிகாலையில் எழுந்து அன்றையப் பணிகளைத் துவக்குவது நல்லது. ஒவ்வொரு மனிதனுக்கும் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
5. உண்ணாமல் இருப்பது : தினமும் 3 அல்லது 4 வேளை சாப்பிட்டு வயிறை எப்போதும் இயக்கத்திலேயே வைத்திராமல், வாரத்தில் அல்லது குறைந்தபட்சம் மாதத்தில் ஒரு முறையாவது ஒரு வேளை உணவை தவிர்த்துவிடுவது வயிற்றுக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Read more...

அன்றைய பொழுதிற்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க,

செவ்வாய், 6 மார்ச், 2012


அதிகாலை 3 மணிக்கு முழிப்பு வந்துடுது. அதற்கப்புறம் தூக்கமே வரமாட்டேங்குது. சும்மாதான் படுத்திருக்கிறேன்'' "சீக்கிரம் படுத்தாலும் நல்லா தூக்கம் வர பனிரெண்டு மணிக்கு மேலாகுது'' "நல்லா தூங்கி ரொம்ப நாள் ஆகுது'' "எவ்வளவு லேட்டா படுத்தாலும் காலையில கரெக்டா அஞ்சு மணிக்கு மேல தூங்க முடியலை'' இப்படி பலவிதமான புலம்பல்களுடனும், உடல் உபாதையுடனும், உடல் அலைச்சலுடனும், மன உளைச்சலுடனும் உலகில் பாதிப்பேர் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு காரணத்தினால் சரியான தூக்கம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இருட்டு வெளிச்சம், இன்பம் துன்பம், கஷ்டம் நஷ்டம், நன்மை தீமை, சந்தர்ப்பம், சூழ்நிலை இவைகளோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது. அதே மாதிரி நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் வருகின்ற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் `இன்ஸாம்னியா' என்று சொல்வதுண்டு.

தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையை கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக் கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம், மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கமின்மையை உண்டுபண்ணும்.

தூக்கத்தை வரவழைக்க பலபேர் பலவிதமாக முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுவை அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். மது, அது எந்த வகையாக இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்ததானாலும் சரி, ஆரம்பத்தில் அது ஒரு தூக்கத்தை உண்டு பண்ணும் பொருள் தான். ஆனால் மதுவுக்கு அடிமையாகி விட்டால் அது நிம்மதியான தூக்கத்தை தராது.

முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்து விடும் தன்மையுடையது மது. மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்து விடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க வயதானவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்க வழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதாவது லைட்டுகளும், பல்புகளும் கண்டுபிடிக்கப்பட்ட 19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு செயற்கை வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை என்றாகிவிட்டது.

செயற்கை வெளிச்சங்கள் அதிகமாக வராத காலங்களில், அதாவது நம் தாத்தா பாட்டி காலத்தில் சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள். ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும் பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின்னிரவில் கண்கள் சுற்றும் தூக்கமும் (ஆர்.இ.எம். தூக்கம்) இவர்களுக்கு இருக்கும்.

தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை. இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம். இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை பிசியாக வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.

ஆனால் ஓரளவு தான் மூளை ஓய்வு எடுத்துக்கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை ரொம்ப பிசியாகி விடுகிறது. அன்றைய பொழுதிற்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி உடம்பை ரெடியாக மூளை வைத்திருக்கிறது.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets