உங்கள் வருகைக்கு நன்றி

கண்களும் பாதுகாப்பும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்களும் பாதுகாப்பும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஸ்மார்ட் போன் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது

செவ்வாய், 4 ஜூன், 2013


"இளைஞர்களில் பெரும்பாலோர், தங்களிடம், ஸ்மார்ட் போன் இல்லாமல் போய்விடுமோ" என, மனதளவில் பயப்படுவதாக, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, சிஸ்கோ என்ற பிரபல தொலைத் தொடர்பு நிறுவனம்,  30 வயதுக்கு கீழ் உள்ள , 3,800 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், பெரும்பாலானவர்கள், ஸ்மார்ட் போனுக்கு அடிமை ஆகிவிட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, சிஸ்கோ முதன்மை தொழில்நுட்ப அலுவலர், கெவின் பிளாக் கூறியதாவது: ஸ்மார்ட் போனுக்கு அடிமையாகிவிட்ட பலர், ஒருவேளை அந்தபோன் தொலைந்து போய்விட்டால் தங்களால் எதுவுமே செய்யமுடியாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்.
அவர்களது ஆழ்மனதிலும் இந்த எண்ணம் நன்கு வேரூன்றிவிட்டதை எங்களால் உணரமுடிந்தது. ஸ்மார்ட் போன் இல்லாவிட்டால், தங்களது வாழ்க்கையே பறிபோய் விட்டதாக பலர் கருதுகின்றனர்.
நவீன யுகத்தின் கதாநாயகனாக உள்ள மொபைல் போன், "நோமோ போபியா" என்ற உளவியல் ரீதியிலான குறைபாட்டையும் மக்களிடையே ஏற்படுத்திவிட்டது. ஐந்து பேரில், ஒருவர் வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் போதே, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இவ்வாறு கெவின் பிளாக் கூறினார்.
காலையில் படுக்கையில் இருந்து எழுவது முதல், இரவு படுக்கப் போகும் வரை, தொலைபேசியே கதி என, ஏராளமான இளைஞர்கள் மாறிப்போயிருந்ததை இந்த ஆய்வு உறுதிபடுத்தியுள்ளது.
குயின்ஸ்லாந்தை சேர்ந்த, கம்ப்யூட்டர் பாதுகாப்பு துறையில் பணியாற்றி வரும், கைக்கேல் கார் க்ரெய்க் என்பவர் குறிப்பிடுகையில், "ஸ்மார்ட் போன் மீதான இந்த மோகம் பலரை பன்படுத்தியிருந்தாலும் ஏராளமானோரை முடக்கிப்போட்டுள்ளது என்பதுதான் நிதர்சனம்.
10 நிமிடத்திற்கு ஒரு முறை, இவர்கள், தங்களது மொபைல் போனில், இ-மெயில் வந்துள்ளதா என்பதை தொடர்ந்து சோதிப்பவர்களாக இருக்கின்றனர். இவ்வாறு நாள் ஒன்றுக்கு, 96 முறை இப்படி சோதிக்கின்றனர்" என்றார்.

Read more...

நம்மால் இதை விடவே முடியாதா ?

ஞாயிறு, 6 ஜனவரி, 2013


கண்கள் உலர்ந்து போதல்கண்களில் அரிப்புஎரிச்சல்சோர்வுதலைவலிபார்வைக் கோளாறு...
 இவையெல்லாம் கம்ப்யூட்டரில் அதிக நேரம் வேலை பார்ப்பதால் ஏற்படும் அறிகுறிகள். நிலத்தில் பாடுபடும் விவசாயி கூட நிலத்தைவிட்டு விட்டு வேறு வேலைக்குப் போய்விடலாம். ஆனால் கம்ப்யூட்டரை நாம் விடவே முடியாது போலிருக்கிறது.
 கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதை விட மோசமானதுகண்களைக் கெடுத்துக் கொண்டு கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பது. கண்ணும் கெடாமல்கம்ப்யூட்டரையும் விடாமல் இருக்க என்ன செய்வது?
 *  மானிட்டரை உங்கள் முகத்திலிருந்து 20 அங்குல தூரத்துக்கு அப்பால் வையுங்கள். மானிட்டர் 20 டிகிரி சாய்வாக இருக்கட்டும்.
 *   ஜன்னல் பக்கத்தில் மானிட்டர் இருந்தால் வெளி வெளிச்சமும்கம்ப்யூட்டர் மானிட்டர் வெளிச்சமும் கண்களைக் கூச வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
 *   கம்ப்யூட்டர் முன் அமர்ந்தால் கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். அதனால் கண்கள் உலர்ந்துவிடும். எனவே அவ்வப்போது கண்களை மூடித் திறங்கள்.
 *  20 - 20 - 20 விதியைக் கடைப்பிடியுங்கள். அதாவது 20 அங்குல தூரத்தில் மானிட்டர் இருக்க வேண்டும்.
 20 நிமிடத்துக்கு ஒருமுறை கம்ப்யூட்டர் மானிட்டரைப் பார்க்காமல் 20 வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
 *  எல்லாவற்றுக்கும் மேலாக ஃபாஸ்ட் ஃபுட்டை ஒரு பிடி பிடிக்காமல்கண்களுக்கு வளம் சேர்க்கும் உணவு வகைகளைச் சாப்பிடுங்கள்.

Read more...

க‌ண் வ‌லி‌ கவனம் தேவை

வெள்ளி, 2 நவம்பர், 2012


க‌ண் வ‌லி எ‌ன்பது ஒரு தொ‌ற்று ‌வியா‌தியாகு‌ம். க‌ண்க‌ள் ‌சிவ‌ந்து, க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியேறுவதே க‌ண்வ‌லி‌யி‌ன் அ‌றிகு‌றிக‌ள் ஆகும். க‌ண் இமை‌யி‌ன் ‌உ‌ள்புற‌ம் ஒரு உறு‌த்த‌ல் ஏ‌ற்படு‌ம். க‌ண்க‌ளி‌ல் இரு‌ந்து லேசாக வெ‌ள்ளை ‌நிற ‌திரவ‌ம் போ‌ன்று வெ‌ளியேறு‌ம்.   இதுவே க‌ண் வ‌லி‌யி‌ன் ஆர‌ம்பகால அ‌றிகு‌றிக‌ள் ஆகும். 

மேலு‌ம், க‌ண்க‌ளி‌ல் ‌நீ‌ர் வடித‌ல், தலைவ‌லி, தூ‌ங்‌கிய‌பி‌ன் க‌‌ண்‌வி‌ழி‌க்கு‌ம் போது க‌ண் இமைக‌ள் ஒ‌ட்டி‌க் கொ‌‌ள்ளுத‌ல், க‌ண்க‌ள் ‌சிவ‌ந்து போத‌ல், க‌ண்களை‌ச் சு‌ற்‌றியு‌ள்ள பகு‌திக‌ளி‌ல் ‌வீ‌க்க‌ம், க‌ண் எ‌ரி‌ச்ச‌ல், ஒ‌ளியை‌ப் பா‌ர்‌‌க்கு‌ம் போது க‌ண் கூசுத‌ல் போ‌ன்றவை க‌ண் வ‌லி‌யி‌ன் அ‌றிகு‌றிகளாகு‌ம்.

க‌ண் வ‌லி எ‌ன்றது‌ம் ‌வீ‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம் பழைய க‌ண் மரு‌ந்துகளை எடு‌த்து‌ப் போ‌ட்டு‌க் கொள்ள கூடாது. கா‌ற்று மூலமாக க‌ண்க‌ளி‌ல் பா‌க்டீ‌ரியாவோ அ‌ல்லது வைரஸோ பர‌‌வியத‌ன் காரணமாகவே இ‌ந்த க‌ண் வ‌லி வருகிறது. க‌ண் வ‌லி ஏ‌ற்ப‌ட்டது‌ம் மரு‌த்துவரை அணு‌கி க‌ண்ணு‌க்கான மரு‌ந்‌தினை வா‌ங்‌கி பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். 

க‌ண் வ‌லி குணமாகு‌ம் வரை அந்த மருந்தினை  தொட‌ர்‌ந்து பய‌ன்படு‌த்துவது மிகவும் ந‌ல்லது. உ‌ங்க‌ள் க‌ண்களு‌க்கு ஏ‌ற்ற க‌ண்ணாடிகளை பொரு‌த்‌தி‌க் கொ‌ள்வது‌ம் ம‌ற்றவ‌ர்களு‌க்கு‌ப் பரவாம‌ல் தடு‌க்கு‌ம் வ‌ழியாகு‌ம். க‌ண் வ‌லி வ‌ந்‌திரு‌க்கு‌ம் போது, ஒருவ‌ர் தா‌ன் பய‌ன்படு‌த்து‌ம் பொரு‌ட்களை ம‌ற்றவ‌ரோடு ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள‌க் கூடாது. 

த‌னியாக சோ‌ப்பு, டவ‌ல் போ‌ன்றவ‌ற்றை‌ப் பய‌ன்படு‌த்த வே‌ண்டு‌ம். ஒ‌வ்வொரு முறை உ‌ங்க‌ள் க‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்த ‌பிறகு‌ம், கண்டிப்பாக கையை சோ‌ப்பு போ‌ட்டு‌க் கழுவ வே‌ண்டு‌ம்.   உ‌ங்க‌ள் க‌ண்களை‌த் துடை‌க்க வை‌த்‌திரு‌க்கு‌ம் து‌ணியை த‌‌னியாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌ம், அதனை ‌கிரு‌மி நா‌சி‌னி கொ‌ண்டு துவை‌ப்பது‌ம், பய‌ன்படு‌த்‌திய ‌பிறகு பா‌லி‌தீ‌ன் கவ‌ரு‌க்கு‌ள் வை‌த்து அதனை அ‌ப்புற‌ப்படு‌த்துவது‌ம் மிகவும் ‌சிற‌ந்தது. 

கண்களை கசக்கினால் ஒரு சிலருக்கு திருப்தி ஏற்படுவது போன்று இருக்கும். ஆனால் அப்படி கண்களை கசக்குவது கூடாது. க‌ண்களை க‌ச‌க்‌கினா‌ல் க‌ண் வ‌லி ‌தீ‌விரமாகு‌ம். க‌ண் ‌வீ‌க்க‌ம், தலை வ‌லி போ‌ன்றவை அ‌திகமாகு‌ம்.  

Read more...

கண் பார்வையை முற்றிலுமாக அழித்துவிடும்


கண் நரம்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்து, இறுதியில் கண் பார்வையை முற்றிலுமாக அழித்துவிடும் கிளொகோமா எனும் வியாதி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்தியாவில் பார்வைக் கோளாறுகளால் கண் பார்வையைப் பறிக்கும் இரண்டாவது பெரிய அச்சுறுத்தலாக கிளொகோமா உள்ளது என்று கூறும் கண் மருத்துவர்கள், இதனை ஆரம்ப நிலையில் கண்டு பிடித்து சிகிச்சையளித்தால் பார்வையைக் காப்பாற்றிவிடலாம் என்று கூறுகின்றனர்.
ஆனால் தங்கள் பார்வை மங்கி வருவதை பொதுவாக மக்கள் அறிவதில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணின் பார்வை நரம்புகளைத் தாக்கும் இந்த நோய் மிக மெதுவாக பரவுவதால், பாதிக்கும் மேற்பட்ட அளவிற்கு பார்வை மங்கும் நிலையிலேயே மருத்துவர்களை நாடுகிறார்கள் என்றும், இதனால் அவர்கள் இறுதிவரை சிகிச்சையிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர்.

சென்னையில் கண் மருத்துவத்தில் சிறந்து விளங்கிவரும் மருத்துவர்கள்  கிளொகோமாவை ஆரம்பத்தில் கண்டுபிடித்துவிட்டால் கண் பார்வையை காப்பாற்றிவிடலாம் என்று   கூறுகிறார்கள்.

தங்களுக்கு கிளோகோமா உள்ளது என்பதையே பலரும் அறிவதில்லை, அது நன்கு பரவிய பிறகுதான் அறிந்து கொண்டு மருத்துவத்திற்கு வருகின்றனர் என்று கூறும் மருத்துவர்கள், கிளொகோமாவை மெளனப் பார்வைக கொல்லி’ என்றுஅழைக்கிறார்கள்.

கிளோகோமாவி்ற்கு கண்ணில் மருந்தை விடுதல், கதிர் சிகிச்சை, அறுவை ஆகியன உள்ளது. ஆனால் இவையாவும் கிளோகோமா பரவாமல் தடுப்பதற்கான சிகிச்சையாக மட்டுமே உள்ளன. கிளோகோமா நன்கு பரவியவர்கள் குறித்த கால இடைவெளியில் கண் பார்வையை சோதித்துக் கொள்வது,தவறாமல் மருந்துகளை எடுத்துக் கொள்வது மிக அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கிளோகோமா என்று கூறி, அதற்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று கூறி பணம் கறக்கும் மருத்துவர்களும் உள்ளனர். என்வே கண் பார்வை சோதனையை நம்பத்தக்க, மிகச் சிறந்த மருத்துவமனைகளில் மட்டும் செய்துக்கொள்ள வேண்டும்.

Read more...

சிறுவர்கள் வாழ்வோடு விளையாடும் வீடியோ கேம்'

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வீடியோ கேம்' விளையாட்டுக்களில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினால் கண், மனநல பாதிப்புகளுக்கு ஆளாவர், என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பெருகி விட்ட நிலையில், சிறுவர்கள் வீடியோ கேம், கம்ப்யூட்டர், "டிவி'க்களில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். சில நேரங்களில் பெற்றோரை ஏமாற்றி, கம்ப்யூட்டர் மையங்களுக்கு சென்று வீடியோ விளையாட்டுக்கு அடிமையாகின்றனர். "பளிச்'சிடும் திரை முன்பு பலமணி நேரம் செலவிடுவதால் அவர்களின் கண்ணும், மனமும் பாதிப்படைகிறது. மதுரை அரவிந்த் கண்ஆஸ்பத்திரியின் குழந்தைகள் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் ஆர்.முரளிதர் கூறியதாவது:"டிவி', வீடியோ கேம்களில் ஈடுபடுவோர் கண்களை சிமிட்ட மறந்து போவார்கள். இதனால், கண்களில் அதிகம் நீர்வற்றிய நிலையில், அதிக சிரத்தை ஏற்பட்டு, உளைச்சல் ஏற்படும்.

தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதால், கண்கள் சிவந்து போகும். கண்களுக்கு களைப்பு ஏற்படும். இதனால், நேரம் வீணாவதுடன் தேவையின்றி கண்களுக்கு பாதிப்பை விலைக்கு வாங்குவதாக இருக்கும். கண்களில் பார்வை குறைவாக உள்ளவர்களை "மானிட்டர்'களின் முன் நெருங்கி அமர்ந்து ரசிப்பதை வைத்து கண்டு பிடிக்கலாம். இப்படி நெருங்கி அமர்ந்து ரசிப்பதால், மானிட்டர்களில் இருந்து வரும் ஒளி அதிகபட்சமாக "பளிச்'சிடுவதால் மாணவர்களின் கவனம் போகும். அவற்றில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சும் (எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன்) மூளைவரை பாதிப்பை ஏற்படுத்தலாம் என ஆய்வுகளை மேற்கொள்வோர் சந்தேகிக்கின்றனர்.

தரமான மொபைல்களில், வெளிப்படும் கதிர்வீச்சின் அளவை குறிப்பிட்டு இருப்பர். பல தயாரிப்புகளில் அவற்றை குறிப்பிடுவதில்லை. வீடியோ கேம்களில் ஆர்வம் காட்டும் சிறுவர்கள் இவற்றையெல்லாம் யோசிப்பதில்லை. பாதிப்பு ஏற்பட்ட பின்பே தெரியவரும். இதனால் சிறுவர்களிடம் மொபைல், "டிவி', வீடியோ போன்றவற்றை தரக்கூடாது. அவற்றை பயன்படுத்தும் அவசியம் இருந்தால், மானிட்டர்களில், ஒளியை கட்டுப்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும். இருட்டறையில் இருந்து அவற்றை பார்ப்பதை தவிர்த்து, வெளிச்சத்தில் இருந்தபடி பார்ப்பது கண்களுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியின் மனநல பிரிவு தலைமை பேராசிரியர் வி.ராமானுஜம் கூறியதாவது:வீடியோ கேம் விளையாடுவது, எந்நேரமும் "டிவி' முன் செலவிடுவது, போதைப் பழக்கத்தை போன்று நம்மை ஆக்கிரமித்து விடும். சிறுவர்கள் அவற்றிற்கு அடிமையாகி விட்டதையே குறிக்கும். இதனால் உடல், உள்ளத்தின் நலம் கெடும். படிப்பின் மீதான ஆர்வமும், கவனமும் கெடும். மொத்தத்தில் வாழ்க்கையே தொலைந்து போகலாம்.வீடியோ பழக்கத்தில் மூழ்கும் சிறுவர்கள் அதற்காக பெற்றோரை ஏமாற்றி பணம் பெறும் சூழ்நிலை உருவாகும். பின்னாளில் அது திருட்டு, மோசடி போன்ற தவறான வழிகாட்டுதலை ஏற்படுத்தும். மனதளவில் அதில் இருந்து மீளமுடியாமல் தவிப்பர். சுய கட்டுப்பாட்டை இழந்து போவர். பள்ளிக்கு போகாமல், போக்குக் காட்டிச் செல்வர். இவ்வாறு அவர் கூறினார். 

Read more...

கணினி, மொபைல் தூக்கத்தை குறைக்கிறதா ?

புதன், 11 ஜூலை, 2012


 மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மனிதன் தூங்கியதை விட தற்போது மிகக் குறைந்த அளவிற்கே தூங்குகிறான். இதற்குக் காரணம் மின்சாரம்தான் என்றால் அது மிகவும் தவறு. மனிதன் தனது வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டதுதான் குறைவான தூக்கத்திற்கு காரணமாகிறது.
அதேப்போல, கணினியில் அதிக நேரம் வேலை செய்வதாலும், செல்பேசியாலும் மனிதனின் தூக்கம் குறைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மனிதனின் தூக்கத்தை எந்த வகையிலும் கணினியோ, செல்போனோ குறைக்கவில்லை என்கிறது பல்வேறு ஆய்வு முடிவுகள்.
அதிக நேரம் கணினி முன்பு அமர்ந்து இணையத்தில் உலா வரும் மனிதன், அதன் மீதான ஆர்வத்தினால், நேரம் கழிவது தெரியாமல் இருந்து விடுவதுண்டு. அதுபோலவே, செல்பேசியில் பேசுவதாலும், இணையத்தைப் பயன்படுத்துவதாலும் அதிக நேரம் கண் விழித்திருப்பது நேரிடுகிறதேத் தவிர, அறிவியல் ரீதியாக செல்போனோ, கணினியோ மனிதனின் தூக்கத்தை விழுங்க வில்லை என்பதுதான் உண்மை என்கிறது ஆய்வுகள்.
குறிப்பிட்ட நேரம் வரை கணினியில் பணியாற்றிவிட்டு அல்லது இணையத்தில் உலாவிவிட்டு குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்திற்கு உறங்க சென்று விடும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அதேப்போலத்தான் செல்பேசியிலும், அதிக நேரம் பேசிக் கொண்டிராமல், அரட்டை அடிக்காமல் எப்போதும் நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்றுவிட்டால் தானாகவே அந்த நேரத்தில் தூக்கம் வந்து விடும்.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்கி, குறித்த நேரத்தில் எழுந்து பழகிவிட்டால், உறக்கத்திற்கு எந்த பாதிப்பும் வராது.

Read more...

கண்களும் கம்பியூட்டரும்

வியாழன், 12 ஏப்ரல், 2012


நம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.

1.
கம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ போர்டு மற்றும் டைப் செய்திட வைத்துள்ள அச்சடித்த தாள்களைச் சரியான இடங்களில் வைத்திட வேண்டும். உங்கள் கண்களிலிருந்து, கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு கை அளவு தூரத்தில் இருக்க வேண்டும். உங்கள் கண்கள் பார்வைக் கோட்டிற்கு 20டிகிரி கீழாக இருக்க வேண் டும். இதே போல கை மணிக்கட்டு மற்றும் கால்கள் இருக்கும் இடங்கள், வசதியாக, வலி எதுவும் ஏற்படுத்தா வண்ணம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

2.
ஒளி அமைப்பு: அறையில் ஒளி அமைப்பு பல நம் கண்களுக்கு பலவகையில் சோதனை களைத் தரும். அறை வெளிச்சமானது பரவலாக இருக்க வேண்டும். நேரடியாக உங்கள் மீதோ, கம்ப்யூட்டர் மீதோ பாயக் கூடாது. இதனால் ஒளி பிரதிபலிப்பு தடுக்கப் படும். அதற்கேற்ற வகையில் மானிட்டரின் வண்ணம் மற்றும் ஒளி தன்மை அமைக்கப்பட வேண்டும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், பிரதிபலிப்புகளைத் தடுக்கும் பூச்சுகளை உங்கள் கண்ணாடியில், கண் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அமைத்துக் கொள்ளலாம். எனவே கண் மருத்துவரிடம் செல்கையில், நாளொன்றுக்கு சராசரியாக எத்தனை மணி நேரம் கம்ப்யூட்டரில் பணி புரிவீர்கள் என்று கூறவும். இப்போது இந்த மருத்துவர்கள், அதற்கேற்ற வகையில் உங்கள் கண்ணாடியினை வடி வமைப்பார்கள்.

3. 20:20:20
விதி: மானிட்டர் திரையைத் தொடர்ந்து பார்த்தவாறே பணி புரிந்து கொண்டிருந்தால், அதிக பட்சம் ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், தலையைத் திருப்பி, வேறு வகை ஒளியில் பொருட் களைப் பார்க்க வேண்டும். நீங்கள் பார்க்கும் பொருளும் 20 அடி தூரத்தில் இருப்பது நல்லது. இதனால் உங்கள் கண்களின் பார்வை குவியும் தூரத்தில் மாறுதல் ஏற்படும். இது கண்களுக்கு புத்துணர்வைத் தரும்.
பொதுவாக நிமிடத்திற்கு ஒருமுறை நாம் 12 முறை சிமிட்டுகிறோம். ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், 5 முறை தான் சிமிட்டுகிறோம். இதனால் கண்களில் உலர் தன்மை ஏற்படுகிறது. எனவே கண்களை ஈரமாக்க தொடர்ந்து 20 முறை சிமிட்டவும்.
ஒரே இடத்தில், நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வதால், உடல் இயற்கைக்கு மாறான நிலையில் வலுக்கட்டாயாமாக அமைக்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு 20 நிமிட இடைவெளியில், எழுந்து 20 அடிகள் எடுத்து வைத்துப் பின் திரும்ப பணியாற்ற வரவும்.

4.
இதமான சூடு தேவை: கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில், கண்களில் சோர்வு ஏற்பட்டால், அமர்ந்து பணியைத் தொடங்கும் முன்னரும், பின்னர் அவ்வப்போதும், கரங்கள் இரண்டையும் இணைத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள். இளஞ்சூடு பரவிய பின்னர், அதனை கண்களில் ஒத்தி வைத்து எடுங்கள். இது ஒரு இதமான சூட்டைக் கண்களுக்குத் தரும். வெந்நீரில் நனைத்த துணியைக் கண் களில் ஒற்றி எடுப்பது போன்ற நிலையைக் கண்களுக்கு வழங்கவே இந்த ஆலோசனை. அப்படியே கரங்களைக் கொண்டு கண்களை 60 விநாடிகள் பொத்தி வையுங்கள். விநாடிகளை உங்கள் மனதிற்குள்ளாக எண்ணுங்கள். இதனால் புது உற்சாகம் கிடைக்கும்.

5.
தண்ணீர் கொண்டு அடித்தல்: இடை இடையே எழுந்து சென்று, கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

6.
தேயிலை பைகள்: பயன்படுத்திய இரண்டு தேயிலை பைகள், அல்லது அந்த அளவில் மென்மையான மடிக்கப்பட்ட நனைக்கப் பட்ட துணியை, அலுவலகத் திற்குச் செல்கை யில் பிரிஜ்ஜில் வைத்து செல்லவும். பின்னர், அங்கிருந்து வந்த வுடன், அதனை எடுத்து, கண்களின் மீது சில நிமிடங்கள் வைத்திருக்க வும். இது வேலை மிகுதியால், கண்களில் ஏற்படும் சிறிய வீக்கத்தினைக் கட்டுப்படுத்தும்.

7.
வைட்டமின்கள்: ஊட்டச்சத்து மிகவும் அவசியம். வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியன உள்ள உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளவும். கேரட், தக்காளி, பழங்கள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை நறுக்கி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று அவ்வப்போது சாப்பிடவும். 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets