உங்கள் வருகைக்கு நன்றி

ஏணிப்படிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏணிப்படிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திட்டமிட்டு செய்ததால் வெற்றி,

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுகா, விண்ணமங்கலம் கிராமத்தில், ஒருங்கிணைந்த விவசாய பண்ணை நடத்துவது பற்றி ஜெகன் வின்சென்ட்: அமெரிக்கா வில், மென்பொருள் துறையில், வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். அங்கே, கொஞ்ச விவசாய நிலத்தில், நிறைய லாபத்தை விவசாயிகள் பார்த்தனர். குறிப்பாக, சிறிய இடத்தில், மீன் குட்டை போட்டு, அதில் மீன் வளர்ப்பர்; அதன் மேல் தொட்டிகள் கட்டி, செடிகள், பயிர்களை வளர்ப்பர்.இது போன்ற விவசாயத்தை, 'அக்வாபோனிக்ஸ்' என்றும், 'ஹைட்ரோபோனிக்ஸ்' என்றும் அழைக்கின்றனர். 2003ல், நாடு திரும்பியதும், இந்த, 1.25 ஏக்கர் இடத்தை வாங்கி, நவீன விவசாயம் செய்யத்

துவங்கினேன்.முதலில், 1 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட, மீன் தொட்டி அமைத்தேன். அதன்மேல், கான்கிரீட் இணைப்புகளை ஏற்படுத்தி, அதில் சிறிய தொட்டிகள், பிளாஸ்டிக் வாளிகளில் செடிகள், பூக்கள், பயிர்களை வளர்க்கத் துவங்கினேன்.அப்படியே படிப்படியாக, மீன் தொட்டியின் அளவை, 70 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது போல, அதன் மேல் உள்ள வாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரித்து உள்ளேன். மேலும், உயர் மட்டத்தில் வளரும் செடிகள், கொடிகள் போன்ற வற்றை வளர்த்து, அதன் மூலம் காய்கறிகளை பயிரிடுகிறேன்.
கட்லா, ரோகு, மிர்கால், திலேப்பியா என, ஒன்பது வகையான மீன்களை வளர்க்கிறேன். அது போல, தக்காளி, கத்தரி, மிளகாய் போன்ற காய்கறிகளையும் பயிரிடுகிறேன். தரையில் கிடைக்கும் மகசூலை விட, பக்கெட்டில் வளரும் செடிகள் மூலம், கூடுதல் மகசூல் கிடைக்கிறது.
இதில் பல நன்மைகள் உண்டு. ஒரு பக்கெட்டில் வளரும் செடியில் நோய் தாக்கினால், அந்த பக்கெட்டை மட்டும் அப்புறப்படுத்தி வைத்து விட முடிகிறது; இதனால், பிற செடிகளுக்கு நோய் பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
இது போன்ற, பல நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நல்ல விளைச்சல் மட்டும் லாபம் சம்பாதிக்கிறேன். இந்த பண்ணையை துவக்க, இதுவரை, 35 லட்சம் ரூபாய் வரை, செலவு செய்து உள்ளேன். ஆனால், ஆண்டுதோறும், அந்த தொகையை விட, அதிக லாபம்
சம்பாதிக்கிறேன்.ஆண்டிற்கு, 30 டன் மீன் கிடைக்கிறது. இதிலிருந்து மட்டுமே, 54 லட்ச ரூபாய் கிடைக்குது. அது போல, மாதம், 3 டன் காய்கறிகளும் உற்பத்தியாகின்றன. அந்த லாபம் தனி. இது போக, கடக்நாத் கோழிகளையும் வளர்க்கிறேன்.
இப்படி ஒவ்வொன்றையும் திட்டமிட்டு செய்வதால், 7 ஏக்கர் நிலத்தில் கிடைக்கும், விளைச்சல் மற்றும் லாபத்தை, 1.25 ஏக்கரில் எடுக்கிறேன்!

Read more...

யூடியூப்பில் பணம் சம்பாதிப்பது எப்படி?

திங்கள், 28 செப்டம்பர், 2020

சமீபகால இளைஞர்களின் சுலபமான வேலைகளில் யூடியூப் சேனல் உருவாக்கமும் ஒன்று. மாடித்தோட்டம் அமைப்பது, செடி வளர்ப்பு முறைகள், சினிமா விமர்சனம், சமையல் குறிப்புகள், ஆடல்-பாடல்-நாடக பயிற்சிகள், மென்பொருள் மொழி வகுப்புகள், தொழில்வாய்ப்பு பயிற்சிகள், மீன்பிடி தொழில்நுட்பங்கள், படகு வாழ்க்கை முறைகள், கட்டிட வடிவமைப்பு திட்டங்கள், செல்லப்பிராணி வளர்ப்பு ஆலோசனைகள், மலிவு விலை சந்தை ரவுண்ட்அப், சுற்றுலா தலங்கள்.... என எத்தனையோ தலைப்புகளில், யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அதில் தினந்தோறும் புதுப்புது வீடியோக்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. விருப்பமான காட்சிகளை நம் கண்முன் கொண்டு வருவதால், மக்களும் அதை ரசிக்கிறார்கள். யூடியூப் சேனல்களை சப்ஸ்கிரைப் செய்கிறார்கள். இதனால் நமக்கு லாபம்தான், யூடியூப் சேனல் நடத்துபவர்களுக்கும் லாபம்தான்.


ஆமாங்க....! யூடியூப் வீடியோக்களின் தரத்தை பொறுத்து, அதை பதிவேற்றிய, உருவாக்கிய சேனல்களுக்கு யூடியூப்பில் இருந்து வெகுமதி கொடுக்கப்படும். அதனால்தான், இளைஞர் பட்டாளம் கேமராவையும், மைக்கையும் கையில் ஏந்தியவாறு, சாலைகளில் உலா வருகிறார்கள். பிராங்க் கலாட்டா, கணவன்-மனைவி அன்பு சண்டைகள், குடும்ப உறவுகளின் பிரம்மாண்ட விழாக்கள், பாட்டி வைத்தியம், கிராமத்து சமையல், குழந்தைகளின் சுட்டித்தனம் என ரொம்ப எதார்த்தமான விஷயங்களை எல்லாம், வீடியோவாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள்.

இதுபோல உங்களுக்கும் திறமை இருந்து, யூடியூப் சேனல் ஆரம்பிக்க ஆசை இருந்தால், இந்த கட்டுரை உதவியாக இருக்கும். படியுங்கள். யூடியூப்பில் சம்பாதியுங்கள்.

*
எப்படி சேனல் உருவாக்குவது?

யூடியூப்பில் உங்களுக்கு என தனிப்பட்ட கணக்கை உருவாக்கவேண்டும். டிரெண்டிங்கான பெயர்களை யூடியூப் சேனலுக்கு சூட்டினால், வெகு விரைவாகவே பிரபலமாகலாம். யூடியூப் சேனல் பெயர், வீடியோக்களில் தோன்றும் நபர்கள், பகிரும் கருத்துக்கள்... இவற்றை அடையாளமாக வைத்தே, சேனலின் வளர்ச்சி இருக்கும். ஒரே நாளில் பணக்காரனாக ஆகலாம் என்றெல்லாம் கனவு காணாதீர்கள்! ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் சம்பாதிக்கலாம், அது நீங்கள் பகிரும் வீடியோவைப் பொறுத்தது.

*
எதை வீடியோவாக மாற்றுவது?

எந்த வீடியோவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அது நீங்களே உருவாக்கிய சொந்த வீடியோவாக இருக்க வேண்டும். வீடியோக்கள் குறைந்தது ஒரு நிமிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த கேமராவை அல்லது சிறந்த எடிட்டிங் மென்பொருள் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். ஒரு கேமரா எடுங்கள், உங்களுக்கு விருப்பமானதை எல்லாம் படம் பிடியுங்கள். நாய்க்குட்டி, பூனைக்குட்டி, குழந்தை செய்யும் சேட்டை, மனைவி செய்யும் சமையல், மிமிக்ரி, நடனம், பாட்டு, இசை என எதை வேண்டுமானாலும் வீடியோவாக உருவாக்கலாம்.

*
மக்களிடம் கொண்டு சேர்ப்பது எப்படி?

யூடியூப் சேனலை பிரபலப்படுத்த நினைத்தால், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களின் வழியே பிரபலப்படுத்தலாம். சமூக வலைத் தளங்களில் உலா வரும் உங்கள் வீடியோக்களையும், யூடியூப் சேனல் பற்றிய தகவல்களையும் பார்த்து மக்கள், உங்கள் யூடியூப் கணக்கை பின் தொடர வாய்ப்பிருக்கிறது. எத்தனை நபர்கள் உங்களை பின் தொடர்கிறார்களோ, அதற்கு ஏற்ப பணம் உங்கள் வங்கி கணக்கில் வந்து சேரும்.

*
எப்படி பணம் பெறுவது?

யூடியூப்பின் பக்கத்தில் எனது சேனல்என்பதைக் கிளிக் செய்தால் இதற்கான வழிமுறைகள் தோன்றும். அதில் மோனெட்டைசேஷன் என்ற வசதி இருக்கும். அதை ஆக்டிவேட் செய்தால் உங்கள் வீடியோக்களைப் பொறுத்து விளம்பரம் தெரியும். அதில் கிடைக்கும் வருமானத்தை நீங்கள் பெறுவதற்கு ஆட்சென்ஸ்என்ற கணக்கு இருக்க வேண்டும். ஆட்சென்ஸ்கணக்கு இல்லையென்றாலும் பரவாயில்லை. யூடியூப் சேனலுக்காகவே புதிய கணக்கு தொடங்கி, அதில் பணம் பெறலாம்.

*
எதை பதிவேற்றக்கூடாது?

வர்த்தக உரிமம் இல்லாத வீடியோக்கள், ஆடியோக்களை பயன்படுத்தக்கூடாது. கவர்ச்சியான காட்சிகள், கருத்துகளை தவிர்க்கவேண்டும். ஏற்கனவே யூடியூப்பில் இருக்கும் வீடியோவை பதிவிறக்கம் செய்து, அதை புதிய பெயரில் உங்கள் கணக்கில் பதிவேற்றக்கூடாது. அதேபோல பிறர் பாடுவது, ஆடுவது, நடிப்பது, விளையாடுவது ஆகியவற்றை அவர் அனுமதியின்றி வீடியோவாக எடுத்து, பதிவேற்றுவதையும் தவிர்க்கவேண்டும்.

*
எப்போது பணம் கிடைக்கும்?

பணம் சம்பாதிக்க ஆரம்பிக்க, குறைந்தது பத்தாயிரம் பார்வையாளர்கள் உங்கள் வீடியோவை பார்க்கவேண்டும். பல்வேறு விளம்பரங்கள் மூலம் தான் நீங்கள் பணம் சம் பாதிக்க முடியும். மேலும் உங்கள் சேனலில் உள்ள அனலிட்டிக்ஸ் விருப்பத்தை சொடுக்கவும். மதிப்பிடப்பட்ட வருவாய்கள் உங்களுக்கு கிடைக்கும். அனலிட்டிக்ஸை பொறுத்தவரை வீடியோ பார்வைகள், புள்ளிவிவரங்கள் மற்றும் பலவற்றை இங்கே பார்க்கலாம். நீங்கள் எத்தனை வீடியோக்கள் அப்லோடு செய்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்களுக்கு பணம் கிடைக்கும். மிகக் குறைந்த வீடியோ மட்டுமே அப்லோட் செய்திருந்தால் அதற்கேற்ற வருமானம்தான் கிடைக்கும்.

*
எதில் உஷாராக இருக்கவேண்டும்?

பதிவேற்ற இருக்கும் வீடியோவுக்கு எந்த காரணம் கொண்டும் யூடியூப் தரும் ஆடியோ ஸ்வேப் வசதியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அந்த ஆடியோ ஸ்வேப் வசதியைப் பயன்படுத்தும் வீடியோவுக்கு காட்டப்படும் விளம்பரங்களுக்கான வருமானம் உங்கள் கணக்கில் வந்து சேராது. மாறாக அது கூகிள் கணக்கில்தான் போய் சேரும்.

*
பணம் அதிகமாக சம்பாதிக்கும் விஷயங்கள் எவை?

சமையல் குறிப்புகள், தொழில்நுட்ப விஷயங்கள், திரை விமர்சனங்கள், வீடியோ டுடோரியல்கள், அழகு குறிப்புகள், மிமிக்ரி, சுற்றுலா தல வீடியோக்கள், பாடல்கள், இசைக் கோர்வைகள், வீடியோ ப்ளாக்கிங், அனிமேஷன் முயற்சிகள் போன்றவை அதிகமாக பணம் சம்பாதிக்க பயன்படும்.

Read more...

தன்னிடமுள்ள திறமையை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

உலகில் நிறைய சந்தர்ப்பங்கள் கொட்டி கிடக்கின்றன. தன்னிடமுள்ள திறமையை உணர்ந்து அதை வளர்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ள பெண் தொழில் முனைவோரில் இவருக்கும் ஓர் இடமுண்டு. நான்கு தையல் மெஷின்களுடன் துவங்கிய நிறுவனம், இவர் பொறுப்பு ஏற்றதற்கு பின் முன்னணி இடத்தை பிடித்ததற்கு இவரது பின்னணியும் காரணம். புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வரும் மதுரை 'மைக்ரோ பைன் குளோத்திங்' இணை நிர்வாக இயக்குனர் சுபா. பிறந்தது நெல்லை. அங்கு தான் எம்.ஏ., ஆங்கில இலக்கியம். கணவர் பிரபாகரன் மதுரைக்காரர்.

குழந்தைகள் வளர்ந்த பிறகு வீட்டில் சும்மா இருப்பதைவிட, ஏதாவது செய்யலாம் என கணவரிடம் தெரிவித்த போது, சிறிய அளவில் ரெடிமேட் யூனிட் துவக்க முடிவானது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு நான்கு தையல் மெஷின்களை வைத்து ஆண்களுக்கான பிரத்யேகமாக சர்ட் தயாரிப்பை துவக்கினார். புதிய மாடல்களில் வெளியான தயாரிப்புகளுக்கு வரவேற்பு கிட்டியது. சிறிது சிறிதாக விரிவுபடுத்த இந்தளவு வளர்ச்சியை எட்டியுள்ளார்..

தரம் மற்றும் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரிக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். பெரிய நிறுவனங்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன் வரை சர்ட் தயாரித்து கொடுத்தோம். அவர்களிடமிருந்து தரத்தை கற்று கொண்டேன். தற்போது எங்கள் தயாரிப்புகள் அவர்களுக்கு இணையாக எல்லா இடங்களிலும் கிடைக்கிறது.

பெண்கள் வேலைக்கு வருகின்றனர். முதலில் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தி, சொந்தக்காலில் நிற்கும் எண்ணத்தை உருவாக்கி விடுவேன். நிறுவனத்தில் தொழிலாளியாக யாரையும் கருதுவதில்லை. இங்கு வந்தவர்கள் சந்தோஷமாக தொழில் கற்று பணிபுரிகின்றனர்.

முதலில் தன்னை தானே அறிந்து கொள்ள வேண்டும். உலகில் நிறைய சந்தர்ப்பங்கள் கொட்டி கிடக்கின்றன. தன்னிடமுள்ள திறமையை உணர்ந்து அதை வளர்த்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக தொழிலில் ஆர்வம் இருந்தால், அத்துறை சார்ந்த உபகரணங்களை கையாளலாம், அதை உற்பத்தி செய்யலாம், வாங்கி விற்கலாம். நான் இந்தளவுக்கு சாதிக்க கணவர் பிரபாகரன் தரும் ஒத்துழைப்பு தான் காரணம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருப்பதாக சொல்வர். ஆனால் என் வெற்றிக்கு பின்னால் என் கணவரும் குடும்பத்தினரும் உள்ளனர் என்கிறார்.



Read more...

"பிராக்டிகல் அட்வைஸ் மழை'

செவ்வாய், 14 ஜனவரி, 2014

அநேகமாக நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒன்றிரண்டு "டர்னிங் பாயின்ட்'களாவது நிச்சயம் இருக்கும். தினமும் ஒரேமாதிரி பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கும். திடீரென்று ஒருநாள் யாராவது நமக்கு ஒரு நல்ல அறிவுரையைச் சொல்லியிருப்பார்கள். அதைப் பின்பற்றி நடந்தவுடன் நம்முடைய உலகமே தலைகீழாக மாறியிருக்கும். இல்லையாஇந்த விஷயம் நமக்கு மட்டுமில்லைபெரிய நட்சத்திரங்கள்பிரபலங்கள்வெற்றியாளர்கள், சாதனையாளர்கள் எல்லோருக்கும் பொருந்தும். அவர்களுடைய வெற்றிப் பயணத்தையும் ஒரு சின்ன அறிவுரை திசைமாற்றியிருக்கும். பிரபலங்கள் வழங்கிய இந்த "பிராக்டிகல் அட்வைஸ் மழை'யிலிருந்துஉங்களுக்காகச் சில துளிகள் இங்கே:

வாழ்க்கை என்பது சமையல் குறிப்பு அல்ல. இதற்குப் பிறகு இதைச் செய்யவேண்டும், இவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்றெல்லாம் யாரும் விதிமுறை போட்டுவைக்கவில்லை. நீங்கள் எந்தக் கட்டாயங்களையும் பின்பற்றவேண்டியதில்லை. ரிலாக்ஸ்ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவியுங்கள்வாழ்க்கையின்போக்கில் மிதந்து செல்லுங்கள்.
உங்களுக்கு ஒரு விஷயம் தேவை என்றால் அதை நேரடியாகக் கேட்கத் தயங்காதீர்கள். அப்படிக் கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்தால்கூச்சப்பட்டால் வேலை நடக்காது. நீங்கள் எதைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்ஏன்இந்த விஷயத்தை நீங்களே கூர்மையாக ஆராய்ந்து பாருங்கள். அதனைத் தாண்டுங்கள். அதற்காக, "நான் பயமே இல்லாமல் வாழ்வேன்என்று ஆரம்பித்துவிடாதீர்கள். பயம் நல்லது. பல சமயங்களில் அதுதான் உங்களைச் சரியான பாதையில் நகர்த்திச்செல்கிறது.
பிரச்சனைகளைப் பார்த்துப் பயப்படாதீர்கள்அவை மாறுவேஷத்தில் வரும் வாய்ப்புகள்!
முயற்சி தவறிவிட்டதாசறுக்கிக் கீழே விழுந்துவிட்டீர்களாதப்பில்லைமறுபடி எழுந்து நிற்காவிட்டால்தான் தப்பு. எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதுஎன்று புலம்பாதீர்கள். எல்லோருக்கும் அப்படித்தான் நடக்கிறது. டென்ஷனை விட்டு முன்னே போகிற வழியைத் தேடுங்கள். எது சுலபமாக இருக்கிறதோ அதைச் செய்யாதீர்கள்எது சரியோ அதைச் செய்யுங்கள்.

Read more...

உண்மையை சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?

புதன், 30 அக்டோபர், 2013

இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 20 விழுக்காட்டினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.  
 இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் 1947ஆம் ஆண்டு 32 வயதாக இருந்தது. அது 2011ஆம் ஆண்டு 63.4 ஆக உயர்ந்தது. இதில் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 7.1 விழுக்காடாக உள்ளது.
இதேபோல் வரும் 2050ஆம் ஆண்டுக்குள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை 326 விழுக்காடாகவும், 80 வயதிற்கு மேற்பட்ட முதியோரின் எண்ணிக்கை 700 விழுக்காடாகவும் உயரும் வாய்ப்புள்ளது என்றும் அந்த ஆய்வின் முடிவு தெரிவிக்கிறது.
தற்போது 1.71 கோடி பேர் மனநோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். வரும் காலங்களில் இந்த எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்றவாறு மருத்துவமனை வசதிகளும், பணியாளர்களின் தேவைகளும் அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முதியவர்கள் மனநலம் பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடும்பத்தினரின் அரவணைப்பு இல்லாததே! பெற்று வளர்த்த பிள்ளைகளே தங்களைப் புறக்கணிக்கும்போது பெற்றவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? அந்த வேதனையின் உச்சமே மன இறுக்கமாகி மன நோயாக மாறுகிறது என்று மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
"அன்னையையும் பிதாவையும்வும் பாரமாகக் கருதுகிற இளைய தலைமுறையை என்னென்பது? பத்து மாதம் சுமந்து பெற்ற தாயின் வயிற்றில் இருந்தபோது அவள் பாரமாகக் கருதியிருந்தால் இன்று நாம் பூமியில் பிறந்திருக்க முடியுமா? இதை எண்ணிப் பார்க்க இளைய தலைமுறைக்கு நேரமில்லை.
விலங்குகளின் குட்டிகள் நடக்கத் தொடங்கியதும் தாயை விட்டுப் பிரிந்து விடுகின்றன; பறவைக் குஞ்சுகள் சிறகு முளைத்ததும் தாயை விட்டு பறந்து விடுகின்றன. மனிதர்களும் அப்படியிருந்தால் பகுத்தறிவு பெற்று என்ன பயன்? நமக்கும், விலங்குகளுக்கும் வேறுபாடு என்ன?
"முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்பார்கள். பழுத்த மட்டையைப் பார்த்து பச்சை மட்டை சிரித்ததாம். எவ்வளவு காலத்துக்கு இளமை இப்படியே இருக்கப் போகிறது? எல்லாருமே முதுமையை நோக்கியே பயணம் செய்கிறோம். இதுதான் உண்மை. இந்த உண்மையை சிந்தித்துப் பார்க்க நேரம் இல்லையா? மனம் இல்லையா?
"ஒரு தாய் 10 குழந்தைகளைப் பேணி வளர்க்கலாம்; 10 குழந்தைகள் ஒரு தாயைப் பேணுவது அரிது' என்பது சீனப் பழமொழி. "அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்றார் ஒளவைப் பிராட்டி. அருமையான காரியங்களைச் செயல்படுத்துவதே அறிவுடைய மனிதர்களின் அடையாளம். அந்த அடையாளங்களை இழந்து விட்டு வாழ்வதால் பயன் என்ன?
பிள்ளைகளைப் பெற்று வளர்த்து படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு பல பெற்றோர்கள் தனிமையில் தனி வீட்டில் தவிக்கின்றனர். பணம் இருந்தும் உதவிக்கு ஆளில்லை; உறவுக்கும் யாருமில்லை; உபசரிப்புக்கும் யாருமில்லை. இதனைத் தெரிந்து கொண்ட திருடர்கள் அவர்களது பணத்துக்காகப படுகொலை செய்யும் பரிதாபப் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கே இருக்கிறது மனிதநேயம்?
திருவள்ளுவர் கூறியது போல உறுப்புகளால் மட்டும் ஒருவர் மனிதராக மாட்டார். கூர்மையான அறிவு பெற்றிருந்த போதும் மனிதப் பண்பு இல்லாதவர்கள் மரங்களைப் போன்றே மதிக்கப்படுவர்.
அரம்போலும் கூர்மைய ரேணும் மரம்போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர் என்று குறள் கூறுகிறது.
காயை விடக் கனி சுவையானது. இளைஞர்களைவிட முதியவர்கள் அறிவோடு அனுபவமும் வாய்க்கப் பெற்றவர்கள். இந்த மூத்தவர்களின் அறிவையும், அனுபவத்தையும் இளைய தலைமுறை பயன்படுத்திக் கொள்வது அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும். வீட்டுக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் பயன்படும்.
இளைஞர்களின் ஆற்றலும், முதியவர்களின் அனுபவமும் இணைந்து செயல்படும்போதுதான் ஒரு நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறும். ஆனால், இங்கே ஆட்சியிலும், அரசியல் கட்சிகளிலும் மூத்தவர்களின் ஆதிக்கமே கொடிகட்டிப் பறக்கிறது.
இளைஞர்களும், மாணவர்களும் அவர்களுக்கு எடுபிடிகளாகவும், ஏணியாகவுமே பயன்படுத்தப்படுகின்றனர். இந்த கெடுபிடிகளால் ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் வெறுப்படைந்து ஒதுங்கி விடுகின்றனர்.
இங்கு நடப்பது "மக்களாட்சி' என்று கூறப்பட்டாலும் வாரிசு அரசியலே தலைதூக்கி நிற்கிறது. தலைவர்கள் தங்கள் வாரிசுகளையே கட்சியிலும், ஆட்சியிலும் புகுத்திடும் போக்கே எங்கும் காணப்படுகிறது. மக்களாட்சி என்ற பெயரில் மன்னர் ஆட்சியே. இங்கே இளைஞர்களுக்கும். மூத்தவர்களுக்கும் இட்டு நிரப்ப முடியாத இடைவெளி.
"எல்லாரும் இந்நாட்டு மன்னர்' என்பதும், "மக்கள் குரலே மகேசன் குரல்' என்பதும் இங்கே பேச்சளவில்தான்.
சமுதாயத்தில் இளைஞர்கள் மூத்தவர்களை மதிப்பதில்லை. அரசியலில் முதியவர்கள் இளைஞர்களை மதிப்பதில்லை. இந்தப் போக்கு நல்லதில்லை.
மூத்த குடிமக்களைப் போற்றிக் காக்கும் பொறுப்பு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, அரசாங்கத்திற்கும் இருக்கிறது. உழைத்து ஓய்வு பெற்றவர்களை இறுதிவரை காக்கும் கடமையிலிருந்து அரசுகள் பின்வாங்கக் கூடாது.
நாம் நம் முன்னோரை நேசிக்கவே தயங்குகிறோம்; மூத்தோரை ஆதரிக்கவே யோசிக்கிறோம். இன்று நம் சமுதாயம் இருக்கும் நிலையில் ஒரு மனிதனுக்கு முதுமை என்பது வரமா அல்லது சாபமா? 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets