உங்கள் வருகைக்கு நன்றி

நோய்களும் நிவாரணமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோய்களும் நிவாரணமும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கோதுமைப் புல்லின் பயன்கள்!

ஞாயிறு, 23 ஜனவரி, 2022

இயற்கை மருத்துவத்தில் பல நோய்களுக்கு அருகம்புல் பரிந்துரைப்பர். அதற்கு இணையான மருத்துவ குணம் கொண்டதே கோதுமைப்புல். இதுகுறித்த விழிப்புணர்வு நம்மில் பலரிடம் இல்லை.அது என்னங்க கோதுமைப்புல் என கேட்கிறீர்களா?கோதுமைப்புல் சாற்றை இயற்கை மருத்துவர்கள் 'பச்சை ரத்தம்' என்கின்றனர். இதில், உடலுக்கு தேவையான 19 அமினோ அமிலங்கள், 92 தாதுக்கள் உள்ளன. கால்சியம், இரும்பு சத்து, மக்னீசியம், விட்டமின்கள், புரோட்டீன்கள், என்சைம்கள் என, ஏராளமான சத்துக்கள் உள்ளன.செரிமானம், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஹீமோகுளோபின் அதிகரித்தல், மலச்சிக்கலுக்கு தீர்வு, சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் என இதன் பலன்கள் ஏராளம். எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பயன்படுத்தலாம். பெரிய மருத்துவ நிறுவனங்கள், உடல் பருமன் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் இதனை பொடியாக்கி, மருந்துகளில் பயன்படுத்தி வருகின்றனர் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோதுமையை சுத்தமான நீரில், 12 மணி நேரம் ஊற வைத்து வடிகட்ட வேண்டும். அதை, ஈரத்துணியில் இறுக்க முடிந்து தொங்க விட்டு, 12 மணி நேரம் கழித்து எடுத்தால் முளைக்கட்டி விடும். பூ தொட்டியிலோ, வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பாத்திரத்தில் சிறிது மண் இருந்தால் போட்டு லேசாக விதைத்தால், எட்டு நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும். அதை அரைத்து காலையில் வெறும் வயிற்றில் பருக வேண்டும். சுவைக்காக சிறிது தேன் கலந்துகொள்ளலாம். இதுபோன்று வீட்டிலேயே விதைத்து தேவைக்கு ஏற்ப அறுவடை செய்து கொள்ளலாம்.

 

Read more...

மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கம்.

வெள்ளி, 12 ஏப்ரல், 2019


சோகமோ, மகிழ்ச்சியோ, கோபமோ, காதலோ... மனிதன் வெளிப்படுத்தும் ஒவ்வோர் உணர்வுக்கும், மூளை நரம்பில் நடக்கும் ரசாயன மாற்றங்களே காரணம். அந்த உணர்வுகள், மனநலத்தில் மட்டுமல்ல, உடல்நலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.நேர்மறை உணர்வுகள், மனதையும், உடலையும் இலகுவாக்கி, உடலுறுப்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எதிர்மறை உணர்வுகளோ, மன அழுத்தத்தை கொடுத்து, உடல் நலன், மனநலனை பாதிக்கும்.'ஒரு நாளில்  வாய்விட்டு சிரிப்பதுடன், நகைச்சுவை உணர்வுடனும் இருப்பவர்களுக்கு, அன்று இரவு நிம்மதியான உறக்கம் வரும்' என்கிறது ஆய்வு. அதேபோல், எப்போதும் அதிக பதற்றத்துடன் இருப்பவர்களுக்கு, இதயத் துடிப்பும் அதிகமாக இருக்கும் என்பதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.-சோகத்தை, அழுகை அல்லது பிறரிடம் பேசுவதன் மூலம் வெளிப்படுத்தாமல் தேக்கி வைத் தால், உடலுக்குள் அது தேங்கி, மன அழுத்தத்துக்கான ரசாயன மாற்றங்களை அதிகரிக்கும். மன அழுத்தத்துக்கு உள்ளாகும் பலருக்கு உடல் வலி, கழுத்துவலி, சோர்வு ஆகிய அறிகுறி இருக்கும்.'அதிகமாக கோபப்படுபவர்கள், தினமும் சண்டை போடுபவர்கள், அதிகமாக வாக்கு வாதம் செய்பவர்களுக்கு, பொதுவாக, நோய் குணமாவதற்கான திறன், உடலில் குறைவாக இருக்கும்' என, ஆய்வுகளில் கண்டறியப்பட்டுஇருக்கிறது. ஒருவரின் அன்பை உணரும்போது, மகிழ்ச்சிக்கான, 'ஹார்மோன்' உடலில் அதிகரிக்கும். அப்போது, மூளை உள்ளிட்ட பிற உடலுறுப்புகளின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்; உடலும், மனமும் எப்போதும் விழிப்புணர்வுடனும் இருக்கும்.ஏதோ காரணத்துக்காக தீவிர பயத்துக்கு உள்ளானவர்களுக்கு, உடலில் தானாகவே மன அழுத்தத்துக்கான ஹார்மோனின் உற்பத்தி அதிகரிக்கும். இது, கல்லீரல், இதயம், சிறுநீரகத்தில் தாக்கத்தை வெளிப்படுத்தும். அதனால், அந்தந்த உறுப்புகள் சார்ந்த நோய் ஏற்படவும், ஏற்கனவே இருக்கும் நோய் தீவிரமாகவும் வாய்ப்பு அதிகம்.ஒரு நாளை எடுத்து கொண்டால், அன்று முழுக்க மகிழ்ச்சியாகவோ அல்லது துக்கமாகவோ இருப்போம் என்று கூற முடியாது. காலையில் மகிழ்ச்சியாகவும், மதியம் சோகத்திலும், மாலையில் பயத் திலும் சிக்கி தவிக்கலாம். நேர்மறை உணர்வுகள் மட்டுமன்றி, எதிர்மறை உணர்வுகளும் அவ்வப்போது வந்து போவது, மனித உடலில் அன்றாடம் நடக்கும் சாதாரண நிகழ்வே. ஆனால், எதிர்மறை உணர்வுகளின் அளவு அதிகரித்தாலோ, அவை நீடித்தாலோ தான் பிரச்னைகள் துவங்கும். எனவே, எத்தகைய எதிர் மறை உணர்வுகளையும் நீடிக்கவிட வேண்டாம்.

Read more...

தமிழக அரசின் புத்தாண்டு பரிசு !.

செவ்வாய், 31 டிசம்பர், 2013

பொதுமக்கள் தாங்கள் இருப்பிடத்தில் இருந்தே, மருத்துவ ஆலோசனை பெறும் வகையில், புதிய மருத்துவ சேவை திட்டம், '104' என்ற போன் இணைப்பு எண்ணில், துவக்கப்பட்டுள்ளது. இதில், 104 என்ற இந்த போன் எண்ணில் தொடர்பு கொண்டால், டாக்டர்கள் குழு, தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும். தமிழகத்தில், அவசர கால, ஆம்புலன்ஸ் வசதிக்கு, '108' என்ற போன் எண்ணில் தகவல் தெரிவித்தால், உடனடியாக, ஆம்புலன்ஸ் வாகனம் வீடு வந்து சேரும். இந்தச் சேவைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, '104' என்ற போன் எண்ணில் தொடர்பு கொண்டால், முதலுதவி சிகிச்சை, மருத்துவ ஆலோசனைகள் தரும் புதிய சேவைத் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, புத்தாண்டு பரிசாக, இச்சேவையை துவக்கியுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 1.2 கோடி ரூபாய் அரசு நிதி அளிக்கிறது. இத்திட்டமும், அவசர கால, '108' ஆம்புலன்ஸ் திட்டத்தை, செயல்படுத்தும், 'ஜிவிகே' நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், '104' என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, உடல்நல பாதிப்பு குறித்து தெரிவித்தால், நோயின் தன்மைக்கேற்ப, டாக்டர்கள் மருத்துவ ஆலோசனை தருவர். முதலுதவி ஆலோசனை மட்டுமின்றி, எந்த மாதிரியான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும், தெரிவிப்பர். கர்ப்ப கால பிரச்னைகள், மாதவிடாய், மார்பக புற்றுநோய் குறி?த்து பெண்கள் பேசினால், விளக்கம் அளிக்க, பெண் டாக்டர்களும் உள்ளனர். மன அழுத்தம், மன சிதைவால் தற்கொலை முயற்சிக்கு செல்வோர், '104' போன் எண்ணை டயல் செய்தால், 'கவுன்சிலிங்' தரப்படும்.

Read more...

சிசேரியன் பிரசவத்தில் இருந்து எப்படி தப்பிக்கலாம்?

திங்கள், 20 மே, 2013


கடந்த ஐந்து ஆண்டுகளை விட தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்கிறது ஒரு புள்ளிவிபரம். இதற்குக் காரணம் சுகப்பிரசவத்தை விட சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணம் தீவிரமடைந்து வருவதே காரணம்.
பிரசவ வலி என்பது ஒவ்வொரு பெண்ணும் உணரவேண்டிய ஒன்று. இது பெண்ணிற்கு ஏற்படும் உச்சக்கட்டவலி. மாதவிடாய் காலத்தில் வலிப்பதைப் போல இல்லாமல் அதீத வலியுடன் உயிர்போய் உயிர் வரும். அதனால்தான் பிரசவத்தை மறுஜென்மம் என்கின்றனர். இந்த வலிகளை பொறுக்க முடியாமல் அஞ்சியே பெரும்பாலான பெண்கள் சிசேரியன் பிரசவத்தை பிரும்புகின்றனர்.
பிரசவவலி என்பது அதிகபட்சம் 12 மணிநேரம் தான், அதனை பொறுத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியாய் நடமாடலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் வலிக்கு பயந்து சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்கள் அதற்கான பின் விளைவுகளை அனுபவிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். சிசேரியன் பிரசவத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சிலருக்கு கை, கால் வீக்கம் வருவது இயல்புதான். இவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பு எடுத்து அதை சட்டியில் வறுத்து வெடிக்கும் போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடிக்கலாம் இது கால் வீக்கத்தை குறைக்கும்.
கர்பினிகள் தங்கள் கர்ப்பகாலத்தில் உடலுக்கு குடைச்சல் தரும் வாய்வு உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. முக்கியமாக வாழைக்காய், உருளைக்கிழங்கு, இறால்மீன் போன்றவைகளை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும்.
மூன்றாவது மாதம் தொடங்கி பிரசவ காலம் வரை வெந்தையக்கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வலி வகுக்கும். 5 வது மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீர் எடுத்து அதில் சிறிதளவு வெண்ணெய் கலந்து மதியம் நேரத்தில் சாப்பிடலாம். கர்ப்பகாலம் முதல் பிரசவகாலம் வரைக்கும் சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து முருங்கைக் கீரை சூப் வைத்து சாப்பிடலாம் இதனால் பிரசவம் சுலபமாகும்.
பிரசவ நாள் நெருங்கும் சமயத்தில் சிலருக்கு அடிக்கடி வயிறு வலி வரும். அப்பொழுது வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்த கசாயம் வைத்து சாப்பிடலாம். சாதாரண வலி என்றால் நின்றுவிடும். அதே பிரசவ வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு என்கின்றனர் நிபுணர்கள்.

Read more...

மாரடைப்பை தவிர்க்கும் வழிகள்

சனி, 4 மே, 2013


* நீரிழிவு நோய் உடையவர்கள் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது.

* சரியான சர்க்கரையின் அளவு: சாப்பிடுவதற்கு முன்பு: 70-லிருந்து 110 மி.கி./ டெ.லி வரை சாப்பிட்ட இரண்டு மணிகளுக்குப் பிறகு: 100-லிருந்து 140 மி.கி./ டெ.லி. வரை.

* அதிக எடை உள்ளவராயின் உடல் எடையை கட்டுக்குள் வைத்தல்.

* கொழுப்பு சத்தின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும்.மொத்த கொழுப்பின் அளவு 200-க்கும் குறைவாக இருப்பது நல்லது.கெட்ட கொழுப்பின் அளவு 130-ம் குறைவாக இருப்பது நல்லது. நல்ல கொழுப்பின் அளவு 35-க்கு மேல் இருப்பது நல்லது.

* புகைப்பிடித்தலை அறவே நிறுத்தி விட வேண்டுëம்.புகைப்பதை விடுவதுடன் மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதையும் தவிர்த்தல் வேண்டும்.

* மன அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். மன அழுத்தத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் சிலவற்றை அதாவது  யோகா, தியானம், இசை, சிரிப்பு பயிற்சி மற்றும் நண்பர்கள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

* தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சிகளை மேற்கொள்வது சிறந்தது. இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி பெட்டி முன் அமரும் நேரத்தை விட விளையாடும் நேரம் மிக மிகக்குறைவு. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட செய்ய வேண்டும். சிறார்கள் கொழு கொழு என்று இருப்பது நல்லதல்ல. தினமும் குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை உடல் பயிற்சி மற்றும் வேகமான நடை பயிற்சிகளை (அல்லது மெதுவாக ஓடுதல், நீந்துதல், மிதிவண்டி பயிற்சி) மேற்கொள்ள வேண்டும்.

* சமச்சீரான, நல்ல ஆரோக்கியமான உணவு முறைகள் தேவை. உணவை மருந்தைபோல் சாப்பிட்டால் பின்னாளில் மருந்தை உணவாக சாப்பிட வேண்டியது இல்லை.

*கொழுப்பு குறைந்த, உப்பு குறைந்த, எண்ணை குறைந்த, பழங்கள் நிறைந்த, பச்சை காய்கறிகள் உணவே ஆரோக்கியமானது.

* மஞ்சள் கரு இல்லாத முட்டை, வேகவைத்த மீன், தோல் உரித்த கோழி அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.மேலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Read more...

பெருங்குடலை பத்திரமா பாத்துக்கங்க!

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012


நாம் உண்ணும் உணவுகள் சத்துக்களாக கிரகிக்கப்பட்ட பின்னர் தேவையில்லாத கழிவுகள் தினசரி வெளியேற்றப்படுகின்றன. இந்த கழிவுகளை நித்தம் அகற்றப் படவேண்டும் இல்லையெனில் அவை விஷமாகி நம் உடம்பையே பதம் பார்த்து விடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதனால்தான் நித்தம் கழித்தல் அவசியம் என்கின்றனர் அவர்கள்.
சுத்தம் சுகம் தரும். இது சுற்றுப்புறத்திற்கு மட்டும் அல்லஎமது உடலுக்கும் உள்ளும் புறமும் மிக மிக அவசியம். உடலை வெளிப்புறம் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்கிறோமோஅவ்வாறே உட்புறத்திலும் கழிவுகள் சிரமமாக அகற்றப்படுமாயின் 95% நாம் நோய்த்தொற்று என்ற அபாயத்திலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
21ம் நூற்றாண்டில் வாழும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு விஞ்ஞானத்திலும் மருத்துவத்திலேயும் முன்னேற்றம் கண்டிருக்கின்றோமோ அதைவிட அதிவேகமாய் நோய்களும் முன்னேற்றம் அடைந்துள்ளன என்பது கசப்பான உண்மையாகும்.நமது உடலிலுள்ள கழிவுகள் வியர்வைசிறுநீர்மலம் என்பனவற்றின் மூலம் அகற்றப்படுகின்றது. ஆயினும் முக்கியமான பெரும் நோய்களுக்கு காரணியாயிருப்பது பெருங்குடலில் அகற்றப்படாதிருக்கும் மலமும்அதனால் உருவாகும் டாக்ஸின் எனப்படும் நச்சுப் பொருளுமே ஆகும். டாக்ஸினால் நம் உடம்பில் உள்ள பல்வேறு பொருட்களும் படிப்படியாக பாதிப்பிற்குள்ளாகின்றன.
உடம்பின் ஒவ்வொரு பகுதியையும் டாக்ஸின் பாதிக்கும் போது ஏற்படும் நச்சுத்தன்மையால் நமது ஆயுட்காலம் குறையும் வாய்ப்பு ஏற்படுகின்றது. இளமையிலேயே முதுமைத் தன்மைமூட்டுப்பிடிப்புகளும் நோவும்வெளிறிய கண்கள்,வெளிறிய தோல்மந்தமான செயற்பாடுகள் என நமது அன்றாட வாழ்க்கையிலிருந்து நாம் விடுபடுகின்றோம்.
உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுவது இயற்கையாகவே நடைபெற வேண்டும். நம்மை பாதுகாக்க ஓய்வின்றி உழைக்கும் நம் பெருங்குடலை நாம் பத்திரமாக வைத்திருக்க வேண்டுமெனில் அதற்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.
உண்ணும் உணவை சரியான நேரத்தில் சரியான அளவில் உண்ணவேண்டும். நன்றாக மென்று அரைத்து சாப்பிடவேண்டும். நாம் உண்ணும் உணவு தேவையான சத்துகள் அடங்கியதும்நார்ப்பொருட்கள் அடங்கியதுமான உணவாக இருக்கவேண்டும்.
கண்ட எண்ணெயில் செய்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. தரமான பொருட்களை மட்டுமேமேலும் நன்மை தரும் பாக்டீரியாக்களை அழிக்கக் கூடிய ரசாயனங்கள்நிறமூட்டிகள்சுவையூட்டிகள் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும். எனவே கழிவுதானே என்ற அலட்சியமாக இருக்காமல் தினசரி கழிவகற்றல் மூலம் உடலை இளமையாகவும் நோயற்றும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

 

Read more...

மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம்

வெள்ளி, 29 ஜூன், 2012


மன அழுத்தம் ஒருவருக்கு பல நோய்களை கொண்டு வருகிறது. 60 சதவீத மனித வியாதிகளுக்கு மன அழுத்தமே காரணம் என்று அமெரிக்க மெடிக்கல் அசோஷியேஷன் கண்டுபிடித்துள்ளது. இதனால் மன அழுத்தத்தை தவிர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

மன அழுத்தத்தால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகள்தலைவலிமயக்கம்பயம்எரிச்சல்கோபம்பீதிஏ.டி.டி.,/ஏ.டி.எச்.டி.நோய் ஆகியவை ஏற்படுகின்றன. பற்களை கடிக்கும்போது தாடை பாதிக்கப்படுகிறது. இதயத்துடிப்பு அதிகரித்தல்பக்கவாதம்இதயநோய்கள்ரத்தஅழுத்தம்நீரிழிவு நோய் ஆகிய பாதிப்புகள் உண்டாகின்றன. செரிமானப் பிரச்னைவயிற்று எரிச்சல்அடி வயிற்று வலிகுடல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகரித்துஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது.உடல் எடை அதிகரித்துஒபிசிட்டி எனப்படும் உடற்பருமன் ஏற்படுகிறது. தசை இறுக்கம்நார்த் திசுக்கட்டிவலி ஆகியவை கால்களில் ஏற்படுகின்றன. மனஅழுத்தத்தால் தற்கொலை எண்ணம்போதைப் பொருட்களுக்கு அடிமையாதல்புகையிலைப் பொருட்களுக்கு அடிமையாதல்விபரீத எண்ணம்விபரீத பழக்கவழக்கங்கள் ஏற்படுகின்றன. தூக்கமின்மைபழக்கவழக்கத்தில் மாற்றம்உணர்வுப்பூர்வமாக மாற்றம்நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்ஆஸ்துமாஅல்சர்சத்துக் குறைபாடு,டென்ஷன்பதட்டம்பிரமை மற்றும் பல நோய்களையும் மனஅழுத்தம் கொண்டு வருகிறது. இயந்திர வாழ்க்கையில் மன அழுத்தம் சாதாரணமாக ஏற்படுகிறது. மன அழுத்தத்தை போக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

முதல்படிசிறு பிரச்னைகளுக்கு கூட பெரிய அளவில் கவலைப்படுவதே மன அழுத்தத்துக்கான முதல்படி. மன அழுத்தத்தால் உடல்வேதியியல் மாற்றத்துக்கு உள்ளாகிறது. இதனால் இளம் வயதிலேயே வயதான தோற்றம் ஏற்படும். ஒருவரின் தனித்தன்மைமுயற்சிசக்தி ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.

நல்லவர்களையும் முட்டாளாக்கும்மன அழுத்தம்நல்ல அறிவு படைத்தவர்களையும்பழக்கவழக்கம்நடை,உடைபாவனைகளில் முட்டாள்களாக காட்டு கிறது. ஒருவருக்கு உடலளவிலும்மனதளவிலும் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. உறவினர்கள்நண்பர்களிடமிருந்து பிரியும் நிலை உண்டாகிறது.

உணர்வற்ற மனிதனாக்கும்மனித உணர்வில்பாதிப்பை உண்டு பண்ணுகிறது. தேவையில்லாத இடங்களில்,தேவையற்ற உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கிறது. சமுதாயத்திலிருந்து ஒரு மனிதனை பிரித்துக் காட்டுகிறது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரி செய்யாவிடில்மனநோய் அளவுக்கு கொண்டு செல்கிறது.

எவ்வாறு கட்டுப்படுத்துவதுஅவசர உலகில் மனஅழுத்தம் எல்லா மனிதர் களுக்கும் ஏற்படுகிறது. என்ன பிரச்னையாக இருந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ளப் பழக வேண்டும். சிறு விஷயத்துக்கெல்லாம் கவலைப்படாமல்அதை சரி செய்ய வேண்டும். சரி செய்ய முடியாத பிரச்னை எனில்அதையே நினைத்து கவலை கொள்ளக் கூடாது.

உடனே சரிசெய்யுங்கள்பிரச்னை ஏற்பட்டு மன அழுத்தம் தோன்றும் போதுஎண்ணத்தை மாற்ற முற்படுங்கள். நண்பர் களுடன் மனம்விட்டு பேசுங்கள். இதனால் அழுத்தம் குறையும். எளிய உடற்பயிற்சியோகா மற்றும் தியானம் ஆகியவையே மனஅழுத் தத்துக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. வார இறுதி நாட்களில் புதிய இடங்கள்சுற்றுலாத் தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொண்டால் மனஅழுத்தத்தை மறந்து விடலாம்.

மாறும் இதயத்துடிப்புசாதாரண மனநிலையில் இதயத்துடிப்பு எப்படியிருக்கும்மனஅழுத்தத்தின் போது எப்படியிருக்கும் என்பதை இந்த வரைபடம் காட்டுகிறது. சாதாரண மனநிலையில் இதயத்துடிப்பும் சீராக இருக்கிறது. மனஅழுத்தத்தின் போது இதயத்துடிப்பு வெவ்வேறு நிலைகளுக்கு மாறுகிறது. பயம்பதட்டம்கோபம் ஆகியவை ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டு எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகிறது என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். 

Read more...

ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி


உடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது. நாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
ஹீமோகுளோபின் அதிகரிக்க வழிகள்

ஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக்கொண்டு அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள், காலையில் 6 மணிக்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.

மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்று விட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.  மாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள். இதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள். நாட்கள் காலை 6 மணி, மதியம் 12 மணி, மாலை 6 மணி.


1-வது நாள் 1, 1, 1, -3.

2-வது நாள் 2, 2, 2, = 6.

3-வது நாள் 3, 3, 3, = 9.

4-வது நாள் 4, 4, 4, = 12.

5-வது நாள் 4, 4, 4, = 12.

6-வது நாள் 4, 4, 4, = 12.

7-வது நாள் 3, 3, 3, = 9.

8-வது நாள் 2, 2, 2, = 6.

9-வது நாள் 1, 1, 1, = 3.

ஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள். தேவையானால் மறுபடியும் ஒரு தடவை பட்டியலில் குறிப்பிட்டபடி செய்து பாருங்கள். இப்பொழுது உங்கள் ரத்தத்தில் ஹீமோகுளோபின்கள் திருப்தியான அளவில் உயர்ந்து இருக்கும். இந்த ஹீமோகுளோபின் உயர்வு நமக்கு பல வியாதிகளை வராமல் தடுக்கும்.

உடலில் உற்சாகம் பெருகும். வலிவோடும், வனப்போடும் உடல் மிளிரும். இப்படி செய்து இருந்தும் கருப்பு திராட்சை ஊறிய நீர், ரத்தத்தில் கலந்து ஹீமோகுளோபின்கள் உருவாக காரணமாக இருக்கும் செலவு அதிகமில்லாத இந்த எளிய வழியால் உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்கலாம்.


Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets