உங்கள் வருகைக்கு நன்றி

முயற்சி செய்தால் படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முயற்சி செய்தால் படிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சென்னை பல்கலை, தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது.

புதன், 4 ஜூலை, 2018

பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சென்னை பல்கலை சார்பில்தனியார் கல்லுாரிகளில் இலவச கல்வி வழங்கப்படுகிறது. இந்த திட்டம், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் வழிகாட்டும் வகையில், சென்னை பல்கலை நடத்தும், இலவச மாணவர் சேர்க்கை, எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.பல்கலையின் பெரும் முயற்சியால், 80க்கும் மேற்பட்ட முன்னணி
கல்லுாரிகள், இலவச கல்வி திட்டத்தில் மாணவர்களை சேர்க்க முன்
வந்துள்ளன.சென்னை பல்கலையின் துணைவேந்தர் துரைசாமி, பதிவாளர் சீனிவாசன் மேற்பார்வையில், பேராசிரியர் ஜோதி சிவஞானம் தலைமையிலான இலவச மாணவர் சேர்க்கை கமிட்டியினர், இலவச திட்டத்துக்கு மாணவர்களை தேர்வு செய்கின்றனர். இந்த திட்டத்தில், 2017ம் ஆண்டில், 200 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இந்த ஆண்டு, 600 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு, ஜூன், 29 முதல், சென்னை பல்கலையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் தேர்வு நடந்து வருகிறது. நேர்முகத் தேர்வு முடிந்து, இந்த வார இறுதியில் இலவச கல்விக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், மூன்று ஆண்டுகளும், கல்விக் கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டண சுமையை, அவர்கள் படிக்கும் அந்தந்த தனியார் கல்லுாரிகளே ஏற்றுக்கொள்கின்றன.மற்ற பல்கலைகளும், இந்த திட்டத்தை, தங்கள்இணைப்பு கல்லுாரிகளில் செயல்படுத்தினால், மாநிலம் முழுவதும், பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெறும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், தரமான உயர் கல்வியை இலவசமாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் திரும்ப கிடைக்கும் : இலவசக் கல்வி திட்டத்தில், லயோலா கல்லுாரி, ஸ்டெல்லா மேரீஸ், விவேகானந்தா, எத்திராஜ், டி.ஜி.வைஷ்ணவா, குருநானக், ஏ.எம்.ஜெயின் என, முன்னணி கல்லுாரிகளில், பி.காம்., - பி.எஸ்சி., என, முன்னணி படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த திட்டத்தில் தேர்வாகும் மாணவர், ஏற்கனவே ஒரு கல்லுாரியில், ஒரு பாடப்பிரிவில் சேர்ந்திருந்தால், அவர் இலவச கல்வி திட்டத்தில் தேர்வாகும் போது, அந்த கல்லுாரி இடத்தைவிரும்பினால் அவருக்கு ஒதுக்கப்படும். அந்தகல்லுாரியில், அவர் செலுத்திய கட்டணமும் திரும்ப வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

'வெளிப்படைத்தன்மை' : இலவசக் கல்வி திட்டத்தில், மிக வெளிப்படைத் தன்மையுடன், எந்த சிபாரிசுக்கும் இடமின்றி, மாணவர்களை தேர்வு செய்கிறோம். அதனால், இந்த திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாங்கள் நிர்ணயித்துள்ள தகுதிக்கு உரியவர்களே, பெரும்பாலும் விண்ணப்பிக்கின்றனர். மற்ற வசதியுள்ள மாணவர்கள், தாங்களாகவே விண்ணப்பிப்பதில்லை. இந்த திட்டத்தின் வெற்றிக்கு அதுவும் முக்கிய காரணம்

துரைசாமி, துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழகம்

Read more...

வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க.!

வெள்ளி, 28 செப்டம்பர், 2012


சென்னை ஆவடி, காமராஜர் நகரை சேர்ந்த சிவசங்கர் பார்க் டவுனில், ஒரு பாத்திரக் கடையில் கூலித் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். இவரின் மூத்த மகன் தேவேந்திரன். விடுமுறை காலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்து, தன் கடும் உழைப்பால் இன்று டாக்டராகி இருக்கிறார். சினிமாவில் ஒரு பாடல் முடிவதற்குள் கோடீஸ்வரனாகும் காட்சிகள் வரும். ஆனால், தேவேந்திரனின் கதை நீண்ட கால கடும் உழைப்பில் உருவான ஒன்று. அது சினிமாவுக்கு பொருந்தாத கதை. "எங்க வீட்டு சூழ்நிலை எனக்கு நல்லா தெரியும். அப்பா கொண்டு வரும் பணத்துல, குடும்பத்தை நடத்துறதே ரொம்ப கஷ்டம். இதுல நான் என்னோட படிப்புக்காக அப்பாவ தொல்லைப்படுத்த விரும்பல. பத்தாவது வரைக்கும் வீட்டுல படிக்க வச்சாங்க. அதுக்கு மேல படிக்க வைக்க முடியாதுன்னு வீட்டுல சொல்லிட்டாங்க. அதனால பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்த உடனே, நான் அப்பா கூட வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்' என்றார் தேவேந்திரன்.

வேலைக்கு போக ஆரம்பித்தாலும், அவருடைய படிப்பு ஆர்வம் குறையவில்லை, "அதுல வருகிற வருமானத்தை வச்சு பிளஸ் 1 வகுப்பு படிக்கலாம்னு நெனச்சிருந்தேன். ரிசல்ட்டு வந்துச்சு, நான் பள்ளிக்கூடத்தில் முதல் மார்க் வாங்கிருந்தேன். அதனால பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு கல்விச் செலவை அந்த பள்ளிக்கூடமே ஏத்துக்குச்சு. ஒரு வழியா என் படிப்பால, எங்க குடும்பத்துக்கு எந்த ஒரு சிரமமும் இல்லாத மாதிரி ஆகிருச்சு. அதனால ஓரளவுக்கு என்னோட தம்பியை நிம்மதியா படிக்க வச்சாங்க' என்று சொல்கிறார். "நான் பிளஸ் 2 தேர்வில், 1,160 மார்க் வாங்கி, ஸ்கூல்ல முதலிடம் வந்தேன். அதுக்கு பிறகு தான் எனக்கு பிரச்னைகளே ஆரம்பிச்சது' என, தன் சாதனை பயணத்திற்கு, "பிரேக்' போட்டார் தேவேந்திரன். பள்ளியில் முதல் மதிப்பெண் வாங்கிய தேவேந்திரனுக்கு, மேற்படிப்பு விண்ணப்பத்திற்குக் கூட, அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தான் உதவி இருக்கிறார்.

நுழைவுத்தேர்வு இருந்த அந்த காலக்கட்டத்தில், 300 மதிப்பெண்ணுக்கு 297.75 மதிப்பெண்கள் பெற்று, மருத்துவப் படிப்பு படிப்பதற்கு தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஆனால், கல்லூரி நுழைவுக்கட்டணம் கட்டுவதற்கு கூட, பணமின்றி பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும், தனி மனிதர்களிடமும், உதவி கேட்டு கிடைக்காததால், எம்.ஜி.ஆர்., அறக்கட்டளையில் கல்விச் செலவிற்காக விண்ணப்பித்திருக்கிறார். செய்தித்தாள்களின் வழியாக, தேவேந்திரனின் நிலைமை அறிந்த எம்.ஜி.ஆர்., அறக்கட்டளை அவருடைய கல்விச் செலவு முழுமையும் ஏற்றுக் கொண்டது. தேவேந்திரனின் கஷ்டத்தை உணர்ந்த பல பேர், அவருக்கு உதவி செய்ய முன் வந்தனர். அந்த உதவிகளை எல்லாம் தன்னை போல, படிப்பிற்காக கஷ்டப்படும் சக நண்பர்களுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று, தேவேந்திரன் எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பில் முதுகலை படிப்பதற்கு, நுழைவுத்தேர்வு எழுத சத்திஸ்கர் சென்று வந்திருக்கிறார். "மேற்படிப்பு படிப்பதற்கு நிறைய செலவாகுமே, எப்படி சமாளிக்க போறீங்க' என கேட்டால், அவரிடமிருந்து நம்பிக்கையுடன் வந்து விழுகிறது பதில், "மருத்துவ மேல்படிப்பு எல்லாத்துக்கும் அரசு ஊக்கத் தொகை கொடுக்கும். அதனால எனக்கு எந்த கவலையும் இல்ல. என் வாழ்க்கையில நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்து சொல்றேன். கல்வி தான் என் எல்லா முன்னேற்றத்திற்கும் காரணம். வறுமையை காரணம் காட்டி யாரும் படிப்ப பாதியில நிறுத்திடாதீங்க. உங்கக்கிட்ட இருக்கிற வறுமையை விரட்டனும்னா கல்வியால தான் அது முடியும்!'

Read more...

வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் தேர்வு செய்யும் விஷயங்களால் வருகிறது.

செவ்வாய், 12 ஜூன், 2012


'லட்சியக் கனவை அடையும் வகையில் படிக்க வேண்டும்பிளஸ் வரை மதிப்பெண் பெறுவதற்காக படித்து வந்திருப்பீர்கள். இனி மதிப்பெண் பெறுவதற்கு படிப்பதுடன்நாம் என்ன படிக்கிறோம் என்பதை புரிந்து கொண்டும் படிக்க வேண்டும். பிளஸ் வரை படிப்பில் இருந்த அழுத்தத்தை போக்குவதற்காக கல்லூரிக்கு வந்த முதல் ஆண்டில் வால் தனம் செய்வதும்இறுதி ஆண்டுசெய்வது புரியாமல் விழிப்பதும் பலரின் வழக்கமாக இருக்கிறது. படிக்கும்போது எதற்குஏன் என கேள்வி கேட்டு படிக்க பழகுங்கள்.
கடினமான பாடங்களை சவாலாக எடுத்துக் கொண்டு படியுங்கள். ஒரு போதும் ஊக்கத்தை கைவிட்டு விடாதீர்கள். நமக்கு நாமே தரும் உள் ஊக்கத்துடன்மற்றவர்கள் தரும்  ஊக்கத்தையும் நாம் பெற வேண்டும். படிக்கும் பாடத்தை பகுத்தறிந்து படிக்க பழக வேண்டும். நமது பாடத்தில் சாதனையாளராகும் வகையில் படிக்க வேண்டும். எதையும் புரியாமல் படிக்காதீர்கள். ஆசிரியர் நடத்துவதை புரிந்து கொள்ளுங்கள். தெரியாதவற்றை அவரிடமே கேளுங்கள். உங்கள் லட்சியக் கனவு எதுவோ அதை அடையும் வகையிலான படிப்புகளை தேர்வு செய்து அதற்கேற்ப படிக்க வேண்டும். நம் லட்சியம் எது என்பதை துணிச்சலாக வெளியில் சொல்லும் அளவுக்கு நம் செயல்பாடுகள் இருக்க வேண்டும். சரியான பாடத்தை தேர்ந்தெடுத்து விட்டால் அதன் பிறகு நம் லட்சியத்தை அடைவது எளிது. மாணவர்களும்பெற்றோர்களும் கல்லூரிக்குச் சென்றுஅங்கு படிக்கும் மாணவர்களை சந்தித்துஅங்குள்ள வசதிகள்வேலைவாய்ப்பு குறித்து கேட்டு அறிய வேண்டும்,

ஒரு பெரிய கூட்டத்தில் ஒருவராக இருக்கப் போகிறோமாதனித்துவம் வாய்ந்த குழுவில் ஒருவராக இருக்கப் போகிறோமா என்பது முற்றிலும் உங்கள் கையில் தான் உள்ளது. வாழ்க்கையில் வெற்றி என்பது நாம் தேர்வு செய்யும் விஷயங்களால் வருகிறது. நம்முடைய அப்பாஅம்மா என்னவாக இருக்கின்றனர்எந்த பள்ளியில் படித்தோம் என்பதன் மூலம் நமது வெற்றி அமைவதில்லை.

நமக்குள் உள்ள திறமைகள் மூலமாகவே நம்முடைய வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு உறுதியான மனப்பான்மை வேண்டும். ஒரு விஷயத்தில் மிகுந்த ஆவல் இருந்தால்உங்களால் அந்த விஷயத்தை கண்டிப்பாக வெற்றிகரமாக முடிக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார்நமக்கு கனவு என்பது எது என்றே தெரியாமல் உள்ளது. தூக்கத்தில் வருவது அல்ல கனவுதூங்க விடாமல் செய்வது தான் கனவு. நாம் தேர்ந்தெடுக்கும் விஷயத்தை முடிக்க வேண்டும் என்ற உறுதி வேண்டும். கடின உழைப்பும் மிகவும் அவசியம். கடின உழைப்பும்அதிர்ஷ்டமும் சேர்ந்து தான் வரும்.  
எந்த படிப்பை தேர்வு செய்யலாம்எதற்கு நல்ல வேலைவாய்ப்பு   ஐ.டி.துறை 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது. சிவில்மெக்கானிக்கல்பேஷன் டிசைன் என எந்த படிப்பை படித்திருந்தாலும்ஐ.டி.கம்பெனியில் வேலைக்கு எடுக்கின்றனர். மாணவர்களும்பெற்றோரும் கல்லூரிக்குச் சென்றுஅங்கு படிக்கும் மாணவர்களை சந்தித்துஅங்குள்ள வசதிகள்வேலைவாய்ப்பு குறித்து கேட்டு அறிய வேண்டும்.
மாணவர்கள் குறைந்த வாய்ப்புகளும்அதிக போட்டியும் உள்ள பிரிவுகளை தேர்ந்தெடுக்கக் கூடாது. அதிக வாய்ப்புகளும்குறைந்த போட்டியும் உள்ள துறைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில்சைபர் செக்யூரிட்டிடேட்டா ஸ்டோரேஜ் ஆகிய பிரிவுகளில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இ.சி.இ.படிப்பில்ஆர்.எப்.ஐ.டி.மொபைல் டெக்னாலஜிசர்பேஸ் மவுன்டிங் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளில் வாய்ப்புகள் நிறைய உள்ளன. நாடு முழுவதும் மின்சார பற்றாக்குறை நிலவுவதால்எலக்ட்ரிக்கல் பாடம் உள்ள இ.இ.இ.படித்தால்நல்ல வாய்ப்புகள் உள்ளன. சிவில் படிப்பில் கடல்சார் பாடம்நிலநடுக்கம் குறித்த பிரிவுகளுக்கும்மெக்கானிக்கல் படிப்பில் வெல்டிங்பைப்பிங்தெர்மல் எனர்ஜி ஆகிய பிரிவுகளுக்கும் வரவேற்பு உள்ளது. ஏப்ரல்மேஜூன்ஜூலை ஆகிய நான்கு மாதங்களில் மாணவர்கள்செய்தித்தாள் வாசித்தல்பொது அறிவுஆங்கில மொழித் திறன் உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
படித்தால் 100 சதவீத வேலை வாய்ப்பு உள்ளவை மெரைன் இன்ஜினியரிங்நாட்டிக்கல் சயின்ஸ் ஆகிய கடல்சார் படிப்புகள். இத்துறையில் எட்டு மாதம் கடலில் வேலை செய்தால்நான்கு மாதம் வீட்டில் இருக்கலாம்.  

Read more...

விமானியாக ஆசைப்படுகிறீர்களா

புதன், 11 ஜனவரி, 2012


பறப்பதை விரும்பாத மனிதன் ஆபூர்வம். அதிலும் விமான பைலட் பணியானது சமூகத்தில் மதிப்புவாய்ந்த ஒன்று. தான் ஒரு பைலட்டாக வர வேண்டும் என்று விரும்பும் இளைஞர்கள் நாட்டில் அதிகம் உள்ளனர்.
ஆனாலும், அதற்கான தெளிவான வழிமுறைகள் தெரியாததால் பலரின் பைலட் லட்சியங்கள் நிறைவேறுவதில்லை. அதற்கான தகுதிகள் மற்றும் வகைகள் பற்றி இக்கட்டுரை அலசுகிறது.
அடிப்படைத் தகுதிகள்
* பள்ளி மேல்நிலைப் படிப்பில் கணிதம், இயற்பியல் போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில், குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
* தனியார் பைலட் உரிமம் பெற குறைந்தபட்சம் உங்களுக்கு 16 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதேசமயம், கமர்ஷியல் பைலட் உரிமம் பெற 17 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
* உங்களது ஒரு கண்ணில் பார்வை மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். பொதுவான மருத்துவ மொழியில், இது 6/6 கண்பார்வை என்று அழைக்கப்படுகிறது. இன்னொரு கண்ணில் 6/9 என்ற அளவில் குறைபாடு இருக்கலாம். ஆனால் இது 6/6 என்ற நிலைக்கு சரிசெய்யப்பட வேண்டும்.
* பொதுவான உடற்தகுதி என்பது கட்டாயம் தேவை. வழக்கமான வாழ்க்கை முறையை பாதிக்கும் எந்த வியாதியும் உங்களுக்கு இருக்கக்கூடாது.
மாணவர் பைலட் உரிமம்
* ஏர் ரெகுலேஷன்ஸ், ஏவியேஷன் மெட்டியோராலஜி மற்றும் ஏர் நேவிகேஷன் மற்றும் ஏர் டெக்னிக்கல் ஆகியவைக் குறித்த தியரி நிலையிலான எழுத்துத் தேர்வை நீங்கள் எழுதித் தேற வேண்டும்.
* சிவில் ஏவியேஷன் தலைமை இயக்குநரால் பணியமர்த்தப்பட்ட மருத்துவர்களிடம், உடற்தகுதிச் சான்றுகளைப் பெற்றிருக்க வேண்டும். டெல்லியிலுள்ள ஏர் போர்ஸ் சென்ட்ரல் மெடிக்கல் எஸ்டப்லிஷ்மென்ட் மற்றும் பெங்களூரிலுள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் ஏவியேஷன் மெடிசின் என்ற 2 அமைப்புகள்தான் இதுதொடர்பான மருத்துவ தகுதிச் சான்றிதழை வழங்குவதற்கு உரிமைப் பெற்றவை.
* நீங்கள் செக்யூரிட்டி கிளியரன்ஸ் பெறுவதும் கட்டாயம்.
* வாய்வழித் தேர்வு மற்றும் திறனாய்வு தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளிலும் நீங்கள் கலந்துகொள்ள வேண்டியிருக்கும்.
* மருத்துவ தகுதிகள் மற்றும் தேர்வுகளில் தேர்ச்சி ஆகிய இரண்டையும் நீங்கள் பெற்றுவிட்டால், உங்களுக்கு மாணவர் பைலட் உரிமம் கிடைத்துவிடும்.
தனியார் பைலட் உரிமம்
* மாணவர் பைலட் உரிமத்தைப் பெற்றபிறகு, ஒரு இன்ஸ்ட்ரக்டர் ஒதுக்கப்பட்டு, உங்களுக்கு பறத்தல் பற்றிய பயிற்சிகள் வழங்கப்படும். பறத்தலின் அடிப்படைகள் பற்றி உங்களுக்கு கற்றுத்தரப்படும் மற்றும் உங்களுடன் விமானத்தில் இன்ஸ்ட்ரக்டரும் வருவார்.
* இன்ஸ்ட்ரக்டருடன் சேர்ந்து 15 மணிநேரங்கள் பறந்த பின்பு, நீங்கள் தனியாக பறக்க(நாட்டின் எல்லையைத் தாண்டுவது உட்பட) அனுமதிக்கப்படுவீர்கள்.
* தனியார் பைலட் லைசன்ஸ் பெறுவதற்கு, நீங்கள் 60 மணிநேரங்கள் பறந்திருக்க வேண்டும். இதில், 20 மணிநேரங்கள் தனியாகவும், 5 மணிநேரங்கள் நாடு தாண்டிய வான்வெளியிலும் பறந்திருக்க வேண்டும்.
* ஏர் ரெகுலேஷன்ஸ், ஏவியேஷன் மெட்டியோராலஜி, ஏர் நேவிகேஷன், ஏர்கிராப்ட் இன்ஜின்ஸ் மற்றும் சீமேன்ஷிப் ஆகியவைத் தொடர்பான எழுத்துத் தேர்வுகளில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்.
* உடல் தகுதிக்கான சான்றிதழை ஏஎப்சிஎம்இ அல்லது ஐஏஎம் ஆகிய அமைப்புகளிடமிருந்து பெற வேண்டும்.
* நீங்கள் குறைந்தபட்சம் 17 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
* இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் கூடிய 12ம் வகுப்பை நீங்கள் முடித்திருக்க வேண்டும்.
கமர்ஷியல் பைலட் உரிமம்
* இந்த வகை உரிமம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
* இந்த உரிமத்தைப் பெற ஒருவருக்கு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
* இந்தவகை உரிமத்தைப் பெற நீங்கள் குறைந்தது 250 மணி நேரங்கள் பறந்திருக்க வேண்டும். இதில், 150 மணிநேரங்கள் தனியாகவும், 25 மணிநேரங்கள் நாட்டு எல்லைக்கு வெளியிலும், 10 மணிநேரங்கள் இன்ஸ்ட்ரூமென்ட் முறையிலும்(ஒரு பைலட், ஆகாயத்தைப் பார்க்காமலும், வெளி உதவியைப் பெறாமலும், முற்றிலும் விமானத்தின் உபகரணங்களை மட்டுமே துணையாகக் கொண்டு பறத்தலே இந்த வகையாகும்), 5 மணிநேரங்கள் இரவிலும் பறந்திருக்க வேண்டும்.
* மேலும், ஏசிஎப்எம்இ அல்லது ஐஏஎம் போன்ற அமைப்புகளிடமிருந்து மருத்துவ தகுதி சான்றிதழ் பெறுதல், ஏர் ரெகுலேஷன், ஏவியேஷன் மெட்டியோராலஜி, ஏர் நேவிகேஷன், டெக்னிக்கல் மற்றும் பிளானிங் ஆகிய அம்சங்களில் எழுத்துத் தேர்வை எழுதுதல் போன்றவை இந்த செயல்பாட்டில் அடங்கும்.
* 15 மணிநேர தனியான பறத்தலுடன், மொத்தம் 40 மணிநேரங்கள் பறந்திருந்தால், நீங்கள் தனியார் ஹெலிகாப்டர் உரிமத்தைப் பெற முடியும். அடிப்படை ஏவியேஷன் பாடங்களைப் பற்றிய எழுத்துத் தேர்வையும் இதற்காக எழுத வேண்டும்.
* கமர்ஷியல் ஹெலிகாப்டர் உரிமத்தைப் பெற, உங்களுக்கு 60 மணிநேர விமானப் பறத்தல் பயிற்சி வேண்டும் மற்றும் தேவையான எழுத்துத் தேர்வையும் எழுதியிருக்க வேண்டும்.
* ஹெலிகாப்டர் பைலட்டுகளை பொது மற்றும் தனியார் கார்பரேட் நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகள் ஆகியவை பணிக்கு அமர்த்துகின்றன.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets