உங்கள் வருகைக்கு நன்றி

சர்க்கரை நோயாளிகளின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சர்க்கரை நோயாளிகளின் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சர்க்கரை அதிகரிக்க காரணம்

புதன், 19 ஜூலை, 2017

தவறான உணவுப் பழக்கங்களாலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 8 நகரங்களில் உள்ள 4000 சர்க்கரை நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
உணவு, மசாலா மற்றும் சர்க்கரை என்ற தலைப்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இதில், இந்தியர்கள் உட்கொள்ளும் சாதம், மாவுப் பொருட்கள் அல்லது உப்புமா என அனைத்து உணவுப் பொருட்களிலும் கார்போஹட்ரேட்களே அதிகம் நிறைந்துள்ளது, அதிக கலோரிகளை கொண்ட உணவுகள், குறைந்த அளவிலான நார்சத்து கொண்ட உணவுகளை உட்கொள்வதே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான இந்தியர்கள் தினமும் 48 சதவீதம் அரிசி பொருட்களை எடுத்துக் கொள்வதாகவும், வெள்ளை அரிசி, ரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிப்பதாகவும் சென்னைச் சேர்ந்த டாக்டர் வி.மோகன் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புறங்களில் உள்ள 10ல் 7 பேருக்கு தாங்கள் எதை, எந்த அளவில் உண்கிறோம் என்ற கவனம் சிறிதளவேனும் உள்ளது. இதனால் 60 சதவீதம் கார்போைஹட்ரேக்களை சேர்த்துக் கொள்கிறார்கள். மும்பைவாசிகள் 70 சதவீதமும், சென்னை வாசிகள் 84 சதவீதமும் தங்களின் உணவில் கார்போைஹட்ரேட்களை எடுத்துக் கொள்கின்றனராம்.

இந்தியர்களின் சர்க்கரை நோய் அதிகரிப்பிற்கு மற்றொரு முக்கிய காரணம், அவர்கள் உணவு உட்கொள்ள எடுத்துக் கொள்ளும் நேரம். பெரும்பாலான இந்தியர்கள் வேகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பதால் அவர்களின் கணையம் போதுமான அளவு இன்சுலீனை சுரப்பதில் சிரமப்படுகிறது. இதனால் அதிகப்படியாக சர்க்கரை ரத்தத்தில் கலக்கிறது என இந்திய சர்க்கரை நோய் கழகத்தின் தலைவர் டாக்டர்.ஷாஷன்க் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்திய சர்க்கரை நோயாளிகள் போதிய கால இடைவெளியில் உணவு எடுத்துக் கொள்வதில்லை என டாக்டர்.ஜோஷி தெரிவித்துள்ளார்.

ஆய்வு அடிப்படையில், தூங்கி எழுந்த பிறகு காலை உணவு எடுத்துக் கொள்ள மும்பைவாசிபேர் இரண்டே முக்கால் மணிநேரமும், ஐதராபாத் வாசிகள் 3 மணி நேரத்திற்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்வது தெரிய வந்துள்ளது. 80 சதவீதம் மக்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை உணவு உட்கொள்கிறார்களாம். முதலில் உட்கொண்ட உணவு முழுமையாக செரிப்பதற்குள் அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதும் இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் அதிகம் வருவதற்கு முக்கிய காரணம் என தெரிய வந்துள்ளது. விழாக்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அளவில்லாத உணவை எடுத்துக் கொள்வதும் இந்தியர்களுக்கு சர்க்கரை அதிகரிக்க காரணம் என ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள், பழங்கள்!.

திங்கள், 10 டிசம்பர், 2012


சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மை கீரைகளுக்கும் உண்டு. கறிவேப்பிலை, தூது வளைக்கீரை, அரைக்கீரை, முசுமுசுக்கைக் கீரை, வெந்தயக்கீரை, துத்திக் கீரை, முருங்கைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வல்லாரக்கீரை, கொத்தமல்லிக்கீரை.

இவற்றில் ஏதாவது ஒன்றை சூப் செய்து தினமும் 1 டம்ளர் வீதம் காலை அல்லது மாலை ஒருவேளை சாப்பிட்டு வரலாம், அல்லது இவற்றில் ஏதாவது ஒன்றை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோய்காரர்களுக்கு உகந்த பழங்கள்....

சாத்துக்குடி-1, ஆரஞ்சு-2, ஆப்பிள் (தோலுடன்)-1, கொய்யா (சிறிது)-2, பேரிக்காய் (சிறிது)-2, வெள்ளரிக்காய்-2, அன்னாசிப் பழம்-4 வளையங்கள், தர்பூசணி-1 துண்டு. மேற்சொன்ன பழங்களில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டுள்ள வகைகளில் தினமும் உண்ணலாம். உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் பசி அல்லது தாகம் எடுத்தால் வெள்ளரி, அரிசிப் பொரி, மோர் (கருவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம் கலந்தது) கோதுமை உப்புமா, அவித்த சுண்டல், சிறு பயறு, கொண்டைக் கடலை, கொள்ளு, தட்டைபயிறு இவற்றில் ஏதாவது ஒன்றை சாப்பிடலாம்.

எலுமிச்சை சாறு-200 மிலி, வாழைத்தண்டு சூப்-200 மிலி, அருகம்புல் சூப்-200 மிலி, நெல்லிக்காய் சாறு-100 மிலி, கொத்தமல்லி சூப்-100 மிலி, கறிவேப்பிலை சூப்-100 மிலி, இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் (ஒவ்வொரு நாள் ஒன்று) சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவது நல்லது. எண்ணையில் வறுக்கப்பட்ட அனைத்து அசைவ உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

முட்டை-1 (வெள்ளைக்கரு மட்டும்), மீன்-2 துண்டுகள், கோழிக்கறி-100 கிராம் (அவித்தது), மேற்கண்ட உணவுகளை முறையாக சாப்பிட்டும், தினமும் உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும், ஆசனமும் செய்து வந்தால் சர்க்கரை நோய் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

Read more...

உலக நீரிழிவு தினம். இந்நோய் குறித்து நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்!.

செவ்வாய், 13 நவம்பர், 2012

உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது. 
நாளை இந்த தினம் கடைப்பிடிக்கும் வேளையில், இந்நோய் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்...

இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், இதனால் பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளதால் குறைந்த வயதில் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.

நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை, இன்சுலினை நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கபடுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும். 2ம் வகை வயதான பின் வரும் நோய். இதை பெரும்பாலும் மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
முதலாம் வகை, சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் பீட்டா செல்கள் அழிக்கப்படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும்,

 இன்னும் சிலருக்கு இன்சுலினை வீரியம் உள்ளதாக வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளம் வயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்தவித தடுப்பும் உபயோகப்படாது. நீரிழிவில் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் இருந்து 10% பேர் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.


நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பாங்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருத்தல், அதிக உடல் இயக்கம் இல்லாதது போன்றவை இதற்கு காரணம்.

மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறை பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு. குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

நீரிழிவு நோய்க்கான மருந்து

முதலாம் வகை, நீரிழிவு நோய் உள்ளவர்கள் இன்சுலின் ஊசி அல்லது ஒரு பம்ப் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் வகை நோய் உள்ளவர்கள் உடற்பயிற்சி மூலம் எடையை குறைப்பதோடு சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இதை தவிர்த்து கொழுப்புச் சத்தை குறைக்கவும் மாத்திரை எடுத்து கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் 16% பேர் இன்சுலின் உபயோகிக்கிறார்கள். மற்றவர்களில் 54% பேர் மாத்திரைகளும் 17% பேர் இரண்டும் உபயோகிக்கிறார்கள். நீரிழிவு நோய் முதலாம் நிலையில் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு சாதாரணமானவர்களை விட அதிகமாக இருக்கும். ஆனால், அதே சமயம் இவர்களை நீரிழிவு நோய் உள்ளவர்கள் என்றும் சொல்ல முடியாது.

இவர்களுக்கு உணவு உண்பதற்கு முன் சர்க்கரை அளவு பாதிக்கப்பட்டிருக்கும். அதேபோல, இவர்களுக்கு முன் இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்து மறுநாள் காலை அளவு பார்க்கப்படும் போது சர்க்கரை அளவு 100,120 மில்லிகிராம்/ டெசிலிட்டர் இருக்கும். இது சாதாரணமானவர்களின் அளவை விட அதிகம்.
அமெரிக்காவில் பலரின் சர்க்கரை அளவை சரிபார்த்ததில் 4.1 கோடிக்கும் அதிகமானோருக்கு நீரிழிவு நோய்க்கான முதல் நிலை பாதிப்பு உள்ளது தெரியவந்திருக்கிறது. 2005ம் ஆண்டு மட்டும் 20 வயதுக்கும் மேலானவர்களில் 15 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிய வந்திருக்கிறது. 

இதய நோய், பக்கவாதம்

நீரிழிவு நோய் இருந்தால் இன்னும் பல நோய்கள் வரக்கூடும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களை விட 4 மடங்கு அதிகமாக இதய நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு பெறுகிறார்கள். இதில் இதய நோய், பக்கவாதம் வந்தபின் 65% பேர் இறக்கிறார்கள். நீரிழிவு நோய் உள்ளவர்களில் 75% பேருக்கு 130/90க்கு மேல் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருந்து உட்கொள்கிறார்கள்.

 20 வயதிலிருந்து 74 வயதுக்குள்ளான நீரிழிவு நோயாளிகள் கண் பார்வையை இழக்கிறார்கள். ஆண்டுக்கு 24,000 பேர் புதிதாக கண் பார்வை இழப்பதாக சொல்லப்படுகிறது. சிறுநீரக கோளாறு வரவும் நீரிழிவு நோய் முதல் காரணம் ஆகிறது. ஆண்டுக்கு 44% புதிய சிறுநீரக கோளாறு உள்ள நீரிழிவு நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள்.  2002ம் ஆண்டில் நீரிழிவு நோய் உள்ளவர்களில் 1,50,000க்கும் அதிகமானோர் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்து கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


 60 முதல் 70% வரையான நீரிழிவு நோய் உள்ளவர்கள் நரம்பு சம்பந்தமான நோய்களுக்கு உள்ளாகிறார்கள். கை கால் விரல்களில் உணர்ச்சி அற்றுப்போதல், உணவு செரிக்கும் சக்தி குறைவது போன்றவை ஏற்படுகின்றன. சிலருக்கு கால்கள் நீக்கபட வேண்டிய நிலைகூட வருகிறது. பற்களும் அதிகளவு பாதிக்கப்படுகிறது.  பெரும்பாலோருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோயே அதிகம் ஏற்படுகிறது என்பதால் சீரான உடற்பயிற்சி, உணவு கட்டுபாடு மூலம் நீரிழிவு நோயை தடுக்க முயற்சி செய்யலாம்.


''பிளாக் டீ'' குடித்தால்  நோய் கட்டுப்படுமாம்


''நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'' என்ற கூற்றை நாம் பலமுறை நினைவுகூர்ந்தாலும், அந்த குறைவற்ற செல்வத்தை பெறுவதில் நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம். நாள்தோறும் நிகழ்ந்து வரும் விஞ்ஞான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்ப, நோய்களும் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு தன்மைகளில் மாற்றமடைந்து வருகின்றன.


 மனிதகுலத்தில் எண்ணற்ற நோய்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டாலும், அதில் தலையாயதும், மனிதனின் உடலை சிறிது சிறிதாக அழிவுக்கு இட்டுச்செல்வதும் நீரிழிவு நோய்தான். அதனையொட்டி, பல ஆய்வுகள் உலக அளவில் நடத்தப்பட்டு, அன்றாடம் புதுபுது தகவல்கள் வெளியாகி வருகின்றன. 


அந்தவகையில், லண்டன் நகரில் நீரிழிவு குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாக் டீ அருந்தினால் நீரிழிவு ஒரளவு கட்டுப்படும் என்ற புதிய தகவல் வெளியாகிவுள்ளது. 
பிளாக் டீயில் இருக்கும் வேதியியல் பொருளுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 


இதனையும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் சாப்பிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மேல் சென்றால் அதுவும் ஆபத்தில் முடியும் என அவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகவே, நீரிழிவு நோயை கட்டுப்படுத்த இதனை ஓர் வழிமுறையாக எடுத்துக் கொண்டாலும், அதனை வராமல் தடுப்பதே நாம் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சமாகும்.

நீரிழிவுக்கு தீர்வு

சென்னை ராயபுரத்தில் அமைந்திருக்கும் எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மறைந்த பேரா. எம்.விஸ்வநாதன், 1954 ஆம் ஆண்டு இந்தியாவின் மூத்த நீரிழிவு நிபுணராக விளங்கியவரால் நிறுவப்பட்டது. 1971,ல், இது நீரிழிவு மருத்துவத்துக்கான சிறந்த மருத்துவமனையாகி விட்டது. எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மற்றும் நீரிழிவு ஆராய்ச்சி மையமானது நீரிழிவு ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சிக்கான உலக சுகாதார நிறுவன கூட்டு மையமாக ஜெனிவா, உலக சுகாதார நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளது. எம்.வி. நீரிழிவு மருத்துவமனை தென்சென்னை பகுதியில் மயிலாப்பூர்/பெருங்குடியில் 2 மையங்களை ஆரம்பித்துள்ளது 

மயிலாப்பூர்/பெருங்குடியில் அமைந்துள்ள எம்.வி. நீரிழிவு மருத்துவமனையானது பல்வேறு வசதிகள் மற்றும் பல்வேறு நீரிழிவு பரிசோதனைத் திட்டங்கள் மூலம் நீரிழிவு மக்களுக்கு தேவையானவற்றை வழங்கி வருகிறது. எங்கள் மயிலாப்பூர், பெருங்குடியில் மையம் அமைந்துள்ளது என்று மருத்துவமனையின் தலைவர் , தலைமை நீரிழிவு நிபுணர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், விஞி., றிலீ.ஞி., திஸிசிறி (லண்டன் , கிளாஸ்கோ) தெரிவித்தார். 

தென்இந்தியாவில் புகழ்பெற்ற 
டாக்டர் மோகன்தாஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையங்கள்

தென்னிந்தியாவில் டாக்டர் மோகன்தாஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மருத்துவமனை 13 இடங்களில் உள்ளன. சென்னை கோபாலபுரத்தில் தலைமை மையமும், பிற 5 இடங்களில் கிளைகள் செயல்படுகிறது. சென்னையில் 75 படுக்கை வசதி உள்ள மருத்துவமனை உள்ளது. இதில் உணவியல் ஆலோசனை, உடற்தகுதி ஆலோசனை, நீரிழிவு விழிப்புணர்வு சேவை, மன அழுத்தத்திற்கான ஆலோசனை, பிசியோதெரபி, பல் சிகிச்சை என நீரிழிவு கோளாறுகள் அனைத்திற்கும சிகிச்சை வசதிகள் உள்ளன. 

டாக்டர் வி.மோகன்தாஸ் கூறியதாவது:, 2,ம் வகை நீரிழிவு நோய் குழந்தைகளை தாக்குவதில்லை. 10 வயதுக்கு குறைவான குழந்தை அதிக உடல் பருமன், பார்வை மங்கல், அடிக்கடி நோய் தொற்று மற்றும் தீடீரென எடை குறைதல் இதன் அறிகுறியாகும். கழுத்து, அக்குள் பகுதிகளில் கறுப்பு வெல்வெட் நிற தோல் மாறுதல் இருந்தால் உடல் பருமனானவர்களுக்கு 2,ம் வகை நீரிழீவு முன்னதாகவே வரக்கூடும். டாக்டர்கள் அடங்கிய மருத்துவக்குழு மூலம் சமீபத்தில் அரிசி பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பிரௌன் அரிசியின் குணங்கள் நீரிழிவுக் கட்டுப்பாட்டில் பங்காற்றும் விதம் பற்றி கண்டுபிடிக்கப்பட்டது. 

Read more...

மக்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய்

திங்கள், 12 நவம்பர், 2012



நீரழிவு எனப்படும் சர்க்கரைநோய் மக்களை பாதிக்கக்கூடிய மிக முக்கியமான நோய் ஆகும். இந்த நோய் இல்லாத நாடுகளே இல்லை. எல்லா நாட்டு மக்களுக்கும் ஏற்படுகிறது. வளரும் நாடுகளில் நமது நாட்டில் இந்த நோயின் பாதிப்பு மிகுதியாக உள்ளது. இங்கு கோடி மக்கள் நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.       நீரிழிவு, மதுமேகம்,பிரமேகம், மிரமியம், சர்க்கரைநோய், சர்க்கரைவியாதி, டயாபடிக்,சுகர் ஆகிய அனைத்தும் இந்த நோயை குறிப்பிடும் பெயர்கள் ஆகும்.
நீரிழிவு நோய் என்பது நம் கணையத்தின் மீது படிந்துள்ள தேவையற்ற நவச்சார உப்பின் படிவமே ஆகும். மனிதனின் சிறுநீர் வெளியேற்றம் சராசரி 1500 மி.லி. அளவு அதற்கு மேல் வெளியேறும் பட்சத்தில் நீரழிவு நோயின் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன. பெற்றோர் இருவருக்கும் இந்த நோய் இருந்தால் சந்ததியினருக்கு 100 சதவீதம் வர வாய்ப்பு உள்ளது. இதனை மருத்துவ பரி சோதனைகள் மூலம் கண்டறியலாம்.
நீரழிவுக்கான அறிகுறிகள்
சமீபகாலமாக கூடுதலாக தாகம், பசி, நன்றாக உணவு உட்கொண்டாலும் உடல் மெலிவு, சோர்வு, கை கால் தளர்ச்சி,இரவு நேரங்களில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட நேரங்களில் சிறுநீர் கழிக்க நேரிடுதல், கண் பார்வையில் பார்வை குறைவு ஏற்படுதல், கால்களில் குறிப்பாக ஆறாத நீண்ட நாள் புண்,முன்பு போல் இல்லாமல் அடிக்கடி கை, கால் மரமரத்துபோதல்,சமீபகாலமாக தாம்பத்ய ஈடுபாடு குறைவு பசி உள்ள நேரத்தில் உணவு உட்கொள்ள இயலாத வகையில் வியர்வை,தலைசுற்றல், கை, கால் நடுக்கம் முதலிய அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு உள்ளது என அறியலாம்.
சர்க்கரை நோய்க்கு முழுமையான தீர்வு உண்டாஇல்லையா?
தீர்வு இல்லை?
சர்க்கரை நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் (அலோபதி) மருந்து இல்லை. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை சாப்பிட்டே ஆக வேண்டும். அப்போது தான் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அதோடு ஆண்டுக்கு ஆண்டு மருந்தின் அளவை கூட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறது ஆங்கில மருத்துவம். இதை மெய்ப்பிக்கும் விதமாக இந்திய அரசின் மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம்1940-ல் இயற்றப்பட்டு பின்னர் 1945, 1995-ல் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் ஷெட்யூல் - ஒ என்ற பிரிவின் கீழ் 51 வகை வியாதிகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வியாதிகள் ஆங்கில மருத்துவத்தின் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்த முடியும் என்றோ, மருந்துகளை கொண்டு குணப்படுத்திக் காட்டுகிறேன் என்றோ கூறுதல் கூடாது என்று எச்சரிக்கிறது.
“Drugs and cosmetics act 1940, 1945, 1995,    ‘Schedule J’ contains a list of 51 disease and ailments (by whatever name described) which a drug may not purport to prevent or cure or make claims to prevent or cure.”.”
ஆங்கில மருத்துவத்தின் மருந்துகள் இந்த 51 வகை நோய்களை குணப்படுத்த முடியாது என்கிறது மேற்கண்ட சட்டம். இந்த 51 நோய்களில் சர்க்கரை நோயானது 14வது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 1922 வரை நீரிழிவு நோய்க்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள், ஊசிகள் இல்லாமல் இருந்தது. 1922-ல் இன்சுலின் ஊசி கண்டுபிடிக்கப்பட்டது.1942-ல் நீரழிவு வியாதியுடன் இயல்பாக வாழ மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இருந்து மனிதன் நீரழிவோடும்,இன்சுலின் ஊசியோடும் மாத்திரைகளோடும் வாழ கற்றுக்கொண்டான்.
சர்க்கரை நோயால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
சர்க்கரை நோய் (அ) நீரழிவு நோய் என்று பொதுவாக சொல்லப்பட்டாலும் அது ஒரு நோய் அல்ல. ஒரு குறைதான். மற்ற நோய்களைப் போல் சர்க்கரை நோயின் தாக்கம் உடனடியாக வெளியே தெரிவதில்லை. வெளிப்படையாக எந்த அறிகுறியும் இருக்காது. நமக்கு ஏற்படும் காய்ச்சல், ஜலதோசம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவம் பார்க்கும் நாம் சர்க்கரை நோய் என்றால் மெத்தனம் காட்டுவதற்கு காரணம் வலியோ உடனடி அறிகுறியோ இல்லாததுதான். இதனால் பலர் சர்க்கரை நோயால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு இடமளித்து விடுகின்றனர். சர்க்கரை நோயை முற்ற விடுவதற்கு இதுதான் காரணம். சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால் நாளா வட்டத்தில் கண், சிறுநீரகம் இதயம், கால்கள் போன்ற முக்கிய உறுப்புக்களைப் பாதிக்கும்.
சர்க்கரை அளவு அதிகரிக்க காரணம்
ரத்தத்தில் உள்ள குளுகோûஸ சக்தியாக மாற்றுவதற்கான இன்சுலின் கணையத்தில் இருந்து சுரக்காதாலோ அல்லது குறைவாக சுரத்தாலோ அல்லது சுரந்த இன்சுலின் சரிவர வேலை செய்யவில்லையெனில் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாகிவிடுகிறது. இவ்வாறு ரத்தத்தில் கட்டுக்கடங்காமல் இருக்கும் குளுக்கோஸ் மெல்ல மெல்ல ரத்தக் குழாய்களைப் பதம் பார்க்கிறது. ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு முறையான ரத்த ஓட்டம் இல்லாததால் உடலின் முக்கிய உறுப்புகள் சேதமடைகிறது.
சர்க்கரை நோயை முழுமையாக குணமாக்க முடியும்
அலோபதி (ஆங்கில) மருத்துவத்தில் சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாது என்றும், வாழ்நாள் முழுவதும் மருந்து,மாத்திரை, ஊசியோடு கட்டுபாட்டில்தான் வைத்துக்கொள்ள முடியும் என்கிறது. ஆனால் இந்திய மருத்துவத்தில் (சித்தா,ஆயுர்வேதிக்) குறிப்பிட்ட காலம் வரை (6 மாத காலம்) மூலிகை மருந்துகளை எடுத்து, கணையத்தை மீண்டும் இயங்க செய்ய முடியும் என்று கூறுகிறது. மேலும் வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரையின்றி உணவுக் கட்டுபாட்டுடன் மற்றும் சிறிது உடற்பயிற்சி நடைப் பயிற்சிகள் மூலம் முழுமையாக மாத்திரை மருந்து இல்லாமல் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழலாம்.
கட்டுப்பாடான வாழ்க்கை முறையால் மருந்துமாத்திரையிலிருந்து விடுதலை பெற முடியுமா?
இந்திய மருத்துவத்தில் இது முழுக்க முழுக்க சாத்தியம். சர்க்கரை நோயோடு வந்தவர்கள் மூலிகை மருந்துகளை சிறிது காலம் எடுத்து பின்பு உணவு, உடற்பயிற்சியோடு வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டு உள்ளார்கள் என்பது சிகிச்சை அனுபவத்தில் நிரூபிக்கப் பட்டுள்ளது. முறையான கட்டுப்பாடான உணவு அதோடு தொடர் உடற்பயிற்சியைக் கடைபிடித் தால் மருந்து, மாத்திரை,இன்சுலின் ஊசியிலிருந்து விடுபட முடியும். கட்டுப்பாட்டை தொடர்ந்து கடைப்பிடித்தால் அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் சர்க்கரை நோய்க்கு மருந்துகள் தேவைப்படாது. இதுவே சர்க்கரை நோயை வெல்வதற்கான ரகசியம்! இதைப் பலர் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets