உங்கள் வருகைக்கு நன்றி

குளிர் காலத்தில் பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குளிர் காலத்தில் பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மின்சார வாரியத்தின் அட்வைஸ்ட் டிப்ஸ் சில...

வியாழன், 25 அக்டோபர், 2012


பருவமழை காலங்களில் மின்சாரம் தாக்காமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  
1.      மின் விபத்துகளை தவிர்க்க மின்சார ஒயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்ற மின்ஒப்பந்தகாரர்கள் மூலம் செய்வதுடன், ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற மின்சாதனங்கள் பயன்படுத்த வேண்டும்.
2.      மின்சார பிளக்குகளைப் பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்சை ஆப் செய்து விட வேண்டும்.
3.      குளிர்சாதனப்பெட்டி, கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்களுக்கு மூன்று பின் சாக்கெட் உள்ள பிளக்குகளை பயன்படுத்துவது, ஈ.எல்.சி.பி. என்ற மின்கசிவு கருவியை மெயின் ஸ்விட்ச் போர்டில் பொருத்துவது, உடைந்த மின்சாதனங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
4.      மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் கேபிள் டி.வி. வயர்களை கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
5.      எர்த் பைப் பக்காவாக போடுவது, 5 ஆண்டுக்கு ஒரு முறை வீட்டின் ஒயரிங்குகளை மாற்றுவது,
6.      மின்சார கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே கம்பி மீது துணி கயிறு கட்டுவது, கால்நடைகளை கட்டுவது, விளம்பர பலகை வைப்பது, மழைகாலங்களில் மின்சார கம்பங்களுக்கு அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
7.      மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் அளிக்க வேண்டும். அத்துடன் ஈரமான இடங்களில் சுவிட்சுகள் பொருத்துவது, மின் சர்க்யுட்டை அளவுக்கு மீறி பளு ஏற்றுவதை தவிர்க்க வேண்டும்.
8.      தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் விட்டு அணைக்காமல், தீயணைப்பான்களை பயன்படுத்துவது,
9.      இடி, மின்னலின் போது வெட்ட வெளி, குடிசை, மரத்தின் அடியிலோ, பஸ் நிறுத்த நிழற்குடையின் கீழே தஞ்சம் புகாமல், கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு போன்ற பெரிய கட்டிடங்களிலோ, உலோகத்தால் மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடையுங்கள்.
10.  இடிமின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்ïட்டர் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 

Read more...

குளிர்கால வயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்க

வெள்ளி, 9 டிசம்பர், 2011

குளிர்காலத்தில்  பனி ஒத்துக்கொள்ளாமல்சீதோஷ்ண நிலை மாறுபடுவதால் பலருக்கு தும்மல்மூக்கடைப்பு,சளி பிடித்தல் என்று இருக்கும். சுவாசக் கோளாறுகள் செரிமான பிரச்சினைகளையும் கொண்டு வருகிறது. அஜீரணம், கொஞ்சம் சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போன்ற உணர்வு, உப்பிசம், வயிற்றில் அதிக அமிலசுரப்பு போன்ற தொந்தரவுகள் இருக்க வாய்ப்புண்டு. குளிருக்காக அடிக்கடி அதிகம் காபி, டீ குடிப்பதும் வயிற்றுப் பிரச்சினைகளை தோற்றுவிக்கும். புகை பிடிப்பவர்கள் குளிர்காலத்தில் அதிகமாக பிடிக்கிறார்கள். இதுவும் சுவாசக் கோளாறுகளையும், செரிமான தொந்தரவுகளையும் உருவாக்குகிறது.

காலை, மாலை, இரவு நேரங்களில் செரிமானத்திற்கு எளிதான உணவுகளை உட்கொள்ளலாம். மதிய நேரத்தில் மட்டும் அசைவம், கொழுப்பு பொருட்கள் சேர்ப்பது நல்லது. பொதுவாகவே அசைவ உணவுகளை எக்காலத்திலும் மதிய உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உணவை நன்றாக மென்று விழுங்க வேண்டும். அசைவ உணவுடன் பப்பாளி பழத்தை சேர்ப்பது ஜீரணிக்க உதவும்.
                              
வறுத்த உணவுகள், சிப்ஸ், வெண்ணெய், க்ரீம் சேர்ப்பது பலருக்கு செரிக்காது. ஒத்துக்கொள்ளாத உணவை விலக்கி விடவேண்டும். வெதுவெதுப்பான நீர் குடிக்கலாம். ஒரு சிலருக்கு நான் என்ன சாப்பிட்டாலும் எந்த பிரச்சினயும் எனக்கு வராது என்பார்கள். அதுவும் சாத்தியம்தான்.

கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்த்து போன்ற உணர்வு சிலருக்கு இருக்கும். இத்தொல்லை இருக்கும்போது சாப்பாட்டுடன் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காலிஃபிளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், பீன்ஸ் உள்ளிட்டவை வாயுவை அதிகரிக்கும். இவற்றையும் தவிர்க்கலாம்.
                              
பொதுவாக உணவு ஆலோசனை என்பது அவரவர் குடும்ப வருமானம், உடல்நிலை, நோய்கள், வயது, கிடைக்கும் சூழல் என்று பல காரணிகளைக் கொண்டு இருக்கும். மேலே சொல்லப் பட்டவைகள் பொதுவானவையே. கவணத்தில் கொண்டால் குளிர்காலவயிற்றுப் பிரச்சினைகளை தவிர்க்கலாம்

இரவில் இட்லி, தோசை, தேங்காய்ச் சட்னி, தயிர், குளிர்ந்த தண்ணீர் போன்றவற்றை நீங்கள் சாப்பிட வேண்டாம். உளுந்து சேரும் உணவு வகைகளால் தொண்டையில் கபக்கட்டு ஏற்படும். அதன் இனிப்புச் சுவையாலும், எளிதில் செரிமானமாகாத தன்மையாலும் கபத்தை வளர்க்கிறது. சளி உற்பத்தியைத் தடுக்கும் உணவு வகைகளில் சிறந்தது - ஒரு பிடிக் கொள்ளு, பயத்தம் பருப்பு, கொண்டைக் கடலை, பச்சைப் பயறு, துவரம் பருப்பு ஆகியவற்றைச் சுமார் 3 லிட்டர் தண்ணீரில் வேக வைத்து, அரை லிட்டராகத் தண்ணீர் குறுகியதும் வடிகட்டி, சூடு ஆறியதும் சிட்டிகை இந்துப்பு கலந்து, அரை ஸ்பூன் தேனும் சேர்த்து, இரவு உணவாகப் பருகுவதுதான். மேலும் தொண்டையில் சளி உற்பத்தியைப் பெருமளவு தடுக்கும் ஒரு சில உணவுப் பொருட்களின் தொடர் உபயோகத்தின் மூலமாகவும் நீங்கள் பயன்பெறலாம். அதன் விவரம் வருமாறு:

 *   ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கொதிக்கவிட்டு, அரை கிளாஸôக ஆனதும் வடிகட்டி, இரவில் படுக்கும் முன், தொண்டையில் படும் வகையில் விட்டு, கொப்பளித்துத் துப்பிவிடவும். தொண்டைப் புண் ஏதேனுமிருந்தால் ஆறிவிடும். சளி முறிந்து எளிதில் வெளியாகும்.
 *  மிளகைத் தூள் செய்து தேனில் குழப்பி நடுவிரலில் தோய்த்துத் தொண்டையினுள் தடவ, உள்நாக்கு தொங்குதல், டான்ஸில் சதை வளர்ச்சி, தொண்டையில் கட்டி, சளி அடைப்பு போன்றவை நீங்கிவிடும். மிளகையும் வால் மிளகையும் நல்லெண்ணெய்யில் பொரித்துச் சாப்பிட, தொண்டையில் சளி கட்டாது. இவற்றையே நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், தொண்டை வேக்காளத்தைக் குறைத்து வறண்ட இருமலையும், தொண்டை எரிச்சலையும் போக்கும்.
 *   4 - 5 பூண்டைப் போட்டு விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் 10 மி.லி. வீதம் சேர்த்துக் காய்ச்சி, 5 மி.லி. வீதம் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, நுரையீரல், தொண்டைப் பகுதிகளில் அடைந்து கிடக்கும் கபத்தை இளக்கி வெளியே கொண்டு வந்துவிடும். கபத்திலுள்ள நாற்றத்தைப் போக்கும். அதிலுள்ள கிருமிகளை அழித்துவிடும். குழந்தைகளுக்கு ஏற்படும் அள்ளுமாந்தம் எனும் நுரையீரல் கப உபாதையிலும் இதனைக் கொடுக்கலாம். உள்ளிப் பூண்டின் சாறு 1 அவுன்ஸ் (30 மி.லி.), தேன் 1/2 அவுன்ஸ் (15 மி.லி.) சேர்த்து ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டு தினம் 3, 4 வேளை உள்நாக்கில் படும்படி தடவி வர, தொண்டை சளி ஏற்படாமல் பாதுகாக்கும்.
 *   ஒன்றிரண்டு வெற்றிலையுடன் சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து உணவுக்குப் பிறகு சாப்பிட, சளி அடைப்பைப் போக்கிவிடும்.

Read more...

குளிர்கால பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி

வெள்ளி, 2 டிசம்பர், 2011

காதுமூக்குதொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது எப்படி குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம்.  இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல்சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம்.   குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல்வலியும் இருக்கும். ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலிமூக்கு அடைப்புகண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும்.

பனிக்காலத்தில் ஏற்படும்  சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது. இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்ப டுத்தாமல் தலை வலியை உண்டாக்கும். சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர் களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம். 


பாதுகாப்பு முறை:  சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள்பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.  குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீகாபி தவிர்க்கவும். 



காபின் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் சளித்தொல்லை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். -  இ.என்.டி. டாக்டர் சாந்தி செல்வரங்கம்.

ரெசிபி

புதினா ஜூஸ்: இஞ்சித் துருவல் டேபிள் ஸ்பூன்புதினா இலை அரை கப் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் கப் எலுமிச்சை சாறு, 1 கப்  சர்க்கரைத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து நாள் வரை பயன்படுத்தலாம். தினமும் கப் புதினா ஜூஸ் குடிப்பதால் சளியை உருவாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.


பிரிஞ்சால் ராய்தா: கத்தரிக்காய் 100 கிராம்புளிக்காத கெட்டி தயிர் கால் கப்பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் 1, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு எடுக்கவும். மேல் தோலை உரித்து விட்டு பிசைந்து கொள்ளவும். தயிர்வெங்காயம்நறுக்கிய பச்சை மிளகாய்உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளலாம். சப்பாத்திசாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.



கொத்தமல்லி  துவையல்: கொத்தமல்லி இரண்டு கப்தேங்காய் அரை கப்பொட்டுக்கடலை கால் கப்இஞ்சிபூண்டு அரை டீஸ்பூன்பச்சை மிளகாய் 2, புளி சிறிதளவு  எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் தேவைக்கேற்ப உப்புதண்ணீர் சேர்த்து சேர்த்து அரைக்கவும். 

டயட்
குளிர் காலமாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சுண்டல் வகைகள்முளை கட்டிய தானியங்களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் இருவேளை உணவில் காய்கீரை மற்றும் பழ வகைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளை கட்டாயம் உணவில் சேர்க்கவும். முருங்கைக்கீரைபேரீச்சைதிராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியான பதார்த்தங்கள்குளிர்பானங்கள்ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. புளிக்காத தயிர் மற்றும் மோர் சேர்க்கலாம். வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் இரும்புச் சத்தை உட்கிரகித்துக் கொள்ள உதவும். சத்தான உணவு முறை  மூலம் குளிர்கால நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. 

பாட்டி வைத்தியம்


*   எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும். 

*   எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி             உண்டாகும். 

*   கடல் அழிஞ்சில் பட்டைதிப்பிலிதாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து         சாப்பிடலாம். சளிஇருமல்,  தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும். 
*   கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும். 
*   அரைக் கீரை தண்டுடன் மிளகுமஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளிஇருமல் மற்றும் நுரையீரல் 
    தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். 
*   அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும். 
*   ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.
*   ஆலமர விழுதை பொடி செய்து காலைமாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

 நன்றி - மாலைமலர்

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets