உங்கள் வருகைக்கு நன்றி

வீட்டுத் தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீட்டுத் தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நிறைவான வருமானம் கொடுப்பது, முருங்கை மட்டும் தான்.

வெள்ளி, 26 ஜூலை, 2019


குருஷ்' ரக முருங்கையை, இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, தர்மலிங்கம்: ஐந்தாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு போகாமல், சிறு வயதிலேயே அப்பாவுடன், வாழைக்காய் வியாபாரம் பார்க்கிறேன். 1982-ல், முருங்கைக்காய் விவசாயத்தை ஆரம்பித்தேன்.ஆரம்பத்தில், யாழ்ப்பாணம் முருங்கையை வைத்து, ரசாயன உரம் போட்டு வந்தேன்.கடந்த, 2008ல், பஞ்சகவ்யா தயாரிப்பு குறித்து புத்தகத்தில் படித்து, அதன்பின், ரசாயன உரங்களை நிறுத்தி, இயற்கைக்கு மாறினேன்.'குருஷ்' வகை முருங்கை ரகங்களை வளர்த்து வருகிறேன். யாழ்ப்பாணம் முருங்கைக்கு அடுத்தபடியாக, பிரபலமான ரகம் இது. இது, எப்படி எங்கள் பகுதிக்கு வந்தது என, தெரியவில்லை.இந்த ரக முருங்கைக்கு, தண்ணீர் அதிகம் தேவைப்படாது. காய்கள் நீளமாகவும், நுனி வளையாமலும் இருக்கும். காய்களைபறித்து, மூன்று நாள் வரை இருப்பு வைக்கலாம்.அதனால், இந்தப் பகுதியில் அதிகமாக, இந்த ரகத்தைத் தான் சாகுபடி செய்கின்றனர். எட்டு ஆண்டுகளுக்கு முன், போலையார்புரம் எனும் கிராமத்திலிருந்து, இந்த ரக முருங்கை குச்சிகளை வாங்கி வந்து நட்டேன்.எனக்கு, 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில், 6 ஏக்கரில், குருஷ் முருங்கை உள்ளது. 4 ஏக்கரை, முருங்கை சாகுபடிக்காக தயார் செய்து வைத்துள்ளேன். 1 ஏக்கரில்,100 மரங்கள் நடவு செய்யலாம்.இதில் இருந்து ஆண்டுக்கு, 12 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ முருங்கை, குறைந்தபட்சம், ௭ ரூபாய் முதல், அதிகபட்சம், 80 ரூபாய் வரை விலை போகிறது.மொத்தமாக கணக்கு பார்க்கும் போது, 1 கிலோவுக்கு, 30 ரூபாய்க்கு மேல் விலை கிடைக்கும்.அந்த வகையில், 12 டன் முருங்கை மூலமாக, 3.60 லட்ச ரூபாய் வருமானமும், இதர செலவுபோக, ஆண்டுக்கு, 1 ஏக்கர் முருங்கை மூலமாக, 3.30 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது.மொத்தம், 6 ஏக்கருக்கும் சேர்த்து, 19.80 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்.முருங்கையில் இவ்வளவு வருமானமா என, கொஞ்சம் மலைப்பாகத் தான் இருக்கும்.உண்மையில், இதை விட அதிக லாபம் எடுக்கிறேன். சரியான முறையில் நடவு, தேவையான சமயத்தில் உரம், பருவத்தில் பராமரிப்பு என, கண்ணும் கருத்துமாக பராமரித்தால், இந்த வருமானம் சாத்தியம் தான்.அதிக பராமரிப்பு இல்லாமல், நிறைவான வருமானம் கொடுப்பது, முருங்கை மட்டும் தான்.தொடர்புக்கு: 9976011750.

Read more...

வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி

புதன், 4 ஜூலை, 2018


வெளிநாடுகளுக்கு முருங்கை இலையை ஏற்றுமதி செய்து வரும், திருநெல்வேலி மாவட்டம், கடகுளம் கிராமத்தை சேர்ந்த டெல்சன்: 5 ஏக்கர் நிலத்தில், இயற்கை முறையில் முருங்கை போட்டுள்ளேன். இயற்கை விவசாயம் செய்யும், 30 ஏக்கர் முருங்கைத் தோட்டங்களை, கடந்தாண்டு குத்தகை எடுத்து, கீரை பறித்தோம். இந்தாண்டு, குத்தகையின்றி, அதே தோட்டங்களில் இருந்து, 1 கிலோ கீரை, 15 ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன்.

ஒரு ஈர்க்கு முருங்கை இலையை பறித்து, ஒரு மணி நேரம் வைத்து, வேகமாக ஆட்டிப் பார்த்தால், இலை உதிரக்கூடாது. பறித்த இலைகளை தண்ணீர் தெளித்து, பாலித்தீன் கவரில் வைத்து, ஐஸ் பாக்சில், 24 மணி நேரம் வைப்போம். அப்போதும் இலைகள் வாடாமல், உதிராமல் இருக்க வேண்டும்.செடி முருங்கை கீரைகள், ஏற்றுமதிக்கு ஏற்றதல்ல; மர முருங்கை கீரை தான் பறிப்போம். பறித்த கீரைகளை பருத்தி துணியில் கட்டி, 'பேக்கிங்' கூடம் எடுத்து வருவோம். தார்பாலின் ஷீட்டில், தண்ணீர் தெளித்து கீரைகளை, அரை அடி உயரத்துக்கு அடுக்கி, லேசாக தண்ணீர் தெளிப்போம்.

அதன்பின், காய்ந்த மற்றும் பழுப்பு இலை, பூக்களை நீக்கி, 150 கிராம் அளவு, பாலித்தீன் கவருக்குள் வைத்து, ரப்பர் பேண்டு போடுவோம். அடுத்து, 65 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெர்மாகோல் பெட்டிகளில், மூன்று ஐஸ் கட்டிகளை வைத்து, அதன் மேல் தண்ணீர் உறிஞ்சாத பேப்பரை விரித்து, 25 கீரை பாக்கெட்டுகளை அடுக்குவோம். அதன் மேல் ஐஸ் கட்டி, 25 கீரை கட்டு, மூன்றாவது அடுக்காக, 10 கீரை கட்டு என, மேலேயும் ஐஸ் கட்டி வைத்து, ஒரு பெட்டியில், 60 கட்டு கீரை அடுக்குவோம்.
மாதத்தில், 10 நாட்கள் துபாய், எட்டு நாள் கத்தார், ஐந்து நாள் ஓமன், இரண்டு நாள், லண்டன் என, தினமும், 400 கிலோ முருங்கைக் கீரையை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறேன். இவ்வாறு, 25 நாட்களில், 10 ஆயிரம் கிலோ முருங்கைக் கீரை ஏற்றுமதி வாயிலாக, நான்கு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
கீரை கொள்முதல், பறிப்பு, பேக்கிங் கூலி, வேன் வாடகை, விமான கட்டணம், தெர்மாகோல் பெட்டி, ஐஸ்கட்டி, மின் கட்டணம் அனைத்தும் சேர்த்து, 2.70 லட்சம் ரூபாய் செலவு போக, மாதம், 1.30 லட்சம் ரூபாய் வரை, லாபம் கிடைக்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய, கேரள மாநிலம், கொச்சின் பேக் ஹவுசுக்கு போய், சுங்கத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டியுள்ளது. இதனால், போக்குவரத்து நேரம், செலவு அதிகமாகிறது. 
தமிழகத்தின் விமான நிலைய பகுதிகளில், பேக் ஹவுசை கொண்டு வந்தால், ஏற்றுமதியாளர்களுக்கு வசதியாக இருக்கும்; ஏற்றுமதியை அதிகப்படுத்தவும் முடியும். அந்த வசதி கிடைத்தால், நானே, 100 பேருக்கு வேலை கொடுக்க முடியும். அந்தளவு முருங்கைக்கீரைக்கு தேவையுள்ளது.

தொடர்புக்கு: 90806 60084.

Read more...

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம்

புதன், 19 ஜூலை, 2017

வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டத்துக்கு சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 2 மாதத்தில் விண்ணப்பித்த 8 ஆயிரம் பேரில் இரண்டாயிரம் பேருக்கு காய்கறித் தோட்ட இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
காய்கறிகள் நம் உணவில் இன்றியமையாத ஒன்றாகும். சரிவிகித உணவின் அடிப்படை யில் 85 கிராம் பழங்களையும், 300 கிராம் காய்கறிகளையும் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், நாம் 120 கிராம் காய்கறிகளைத்தான் சாப்பிடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நகரங்களில் வாழும் மக்களுக்கு போதிய இடவசதி இல்லாததால் வீட்டின் பின்புறம் தோட்டம் அமைக்க முடிவதில்லை. இதைக் கருத்தில் கொண்டு வீட்டு மொட்டை மாடியில் சிறிய அளவில் தோட்டம் அமைத்து காய், கனி, மருந்து செடிகள், பூச்செடிகள், அலங்கார தாவரங்களை வளர்க்க வசதியாக தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை,“நீங்களே செய்து பாருங்கள்” (வீட்டு மேல்தளத்தில் ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல்) என்ற பெயரில் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது.

இத்திட்டத்தின் கீழ் வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பயனாளியும் 5 தளைகள் (கிட்ஸ்) வரை வாங்கலாம். ஒருகிட்விலை ரூ.2,650. இதில், சுமார் 50 சதவீதம் (ரூ.1,325) மானியம். இந்தகிட்டில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, கொத்தவரை, செடி அவரை, முள்ளங்கி, கீரைகள், கொத்தமல்லி விதைகள், இயற்கை உரம், மண் அள்ளும் கருவி, பாலிதின் விரிப்புகள் உள்ளிட்ட 15 வகையான இடுபொருட்கள் உள்ளன.
இந்த இடுபொருட்களை பெறுவதற்கு tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

வீட்டு மாடியில் 50 சதுர அடி இடம் இருந்தால், காய்கறித் தோட்டம் அமைத்து, அந்த வீட்டுக்குத் தேவையான பசுமையான காய்கறி, பழங்களைப் பெறலாம்.

இத்திட்டம் குறித்து தோட்டக்கலைத் துறை ஆணையர் சத்யபிரதா சாகு கூறுகையில், 
வீட்டு மாடியில் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் சோதனை முயற்சியாக சென்னை மாநகர், கோவை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மாடித் தோட்டம் அமைக்க விருப்பம் தெரிவித்து 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 2 ஆயிரம் பேருக்கு மாடித் தோட்ட இடுபொருட்கள் கொண்டகிட்வழங்கிவிட்டோம். மாடித் தோட்டத்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னையில் அண்ணாநகர், மாதவரம், திருவான்மியூரில் உள்ள தோட்டக்கலைத் துறை டெப்போவில் காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரைகிட்வழங்கப்படுகிறது. ஒருபகுதியில் 20 முதல் 30 பேர் வரைகிட்கேட்டு விண்ணப்பித்தால், அவர்களுக்கு வேனில் எடுத்துச் சென்று கொடுக்க திட்டமிட்டுள்ளோம்

அங்கு தோட்டக்கலை அதிகாரியாக முகம்மது நசிர் என்பவர் இருக்கிறார். எல்லோரிடமும் இன்முகத்துடன் பேசி நமது சந்தேகங்களுக்கு அழகிய முறையில் விளக்கம் அளிக்கிறார்..மேலும் விபரம் வேண்டுவோர் அவரை 9841155808 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளவும். 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets