உங்கள் வருகைக்கு நன்றி

பேஸ்புக் சீரழிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேஸ்புக் சீரழிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

எந்தச் சூழலிலும் பிறரைக் காப்பாற்றத் துணியுங்கள்.

புதன், 13 பிப்ரவரி, 2013




அந்த நடுத்தர வயது மனிதர் அன்று அதிக வெளிச்சமில்லாத புதிய பாதையில் போய்க் கொண்டிருந்தார். சாலையின் இரண்டு பக்கங்களிலும் புதர்கள் மண்டிக்கிடந்தன. தெரியாத்தனமாக இந்தப் பாதையில் வந்து விட்டோமே, இருட்டாக இருக்கிறதே என்று பயந்தார். திரும்பிப் போகவும் முடியவில்லை. தொடர்ந்து நடக்கவும் பயமாக இருந்தது.
திடீரென்று ஒரு புதர் அருகே யாரோ யாரையோ மிரட்டுவது போல சப்தம் கேட்டது.
ஏன் தான் இந்தப் பாதையில் வந்தோமோ? என்று நொந்து கொண்டார். வேகமாக ஓடிப்போய் போலீசுக்கு ஃபோன் செய்யலாம் என்று நினைத்தார். அதே நேரம் பாதிக்கப்பட்ட நபரைக் காப்பாற்றப் போய் தனக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என்றும் பயப்பட்டார்.
ஆனால் கேட்டது ஒரு பெண்ணின் கூக்குரல். எவனோ ஒருவன் பலாத்காரம் செய்கிறான் என்பது நொடிப் பொழுதில் புரிந்துவிட்டது. அந்த மனிதர் மேற்கொண்டு எதுவும் யோசிக்கவில்லை. தனக்கு என்ன நேர்ந்தாலும் சரி, அந்தப் பெண்ணைக் காப்பாற்றுவோம் என்று துணிந்து புதர்வெளிக்குள் பாய்ந்து அந்த மனிதனைப் புரட்டிப் புரட்டி எடுத்தார். அவருக்கு எங்கிருந்து அப்படி பலம் வந்தது என்று தெரியவில்லை. அவனும் அந்தப் பாதையில் யாரையும் எதிர்பார்க்கவில்லை. அந்த அதிர்ச்சியில் அவன் அடிதாங்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிப்போனான்.
பிறகு புதர் அருகே மூச்சுவாங்க நின்ற அந்த மனிதர், ""பெண்ணே, வெளியே வா. இனி உனக்கு ஆபத்து இல்லை. முரடன் ஓடிப்போய் விட்டான்'' என்று அழைத்தார். சில நொடிகளில் ஒரு பெண்ணின் குரல் கேட்டது: ""அப்பா நீங்களா?''
எந்தச் சூழலிலும் பிறரைக் காப்பாற்றத் துணியுங்கள். பாதிக்கப்பட்டவர் உங்கள் உறவினராகவும் இருக்கலாம். அது உங்களுக்கு அப்போது தெரியாமல் இருந்திருக்கலாம்.

Read more...

கண்ணாடி மற்றும் கேமரா கயவர்கள் கவனம் தேவை!

செவ்வாய், 18 டிசம்பர், 2012


பெண்கள் தங்கள் குடும்பத்துடன் மட்டுமல்ல... உறவினர், அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் குழந்தைகள் என டூர் அடிப்பர். அப்படி பெண்கள் நிறைய வரும் இடத்தில் அவர்களின் பாதுகாப்பிற்கு அவர்கள் தான் முதலில் உஷாராக இருக்க வேண்டும். டூர் அடிக்கும்போது, ஓட்டல்களில் தங்குவது தவிர்க்க முடியாத விஷயம்.

சாதாரண கண்ணாடி சைத்தானாகும்!
முகம் பார்க்கும் கண்ணாடி ரூபத்திலும் ஆபத்து வரலாம். முகம் பார்க்கும் கண்ணாடியில், "டூ வே மிர்ரர்' என்ற ஒரு வகை கண்ணாடி உள்ளது. இந்த கண்ணாடியின் ஒரு பக்கம் முகம் பார்க்கலாம். அதே சமயம் மற்றொரு பக்கத்தில் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்து கொண்டு இருக்கும் நபரை பார்க்க முடியும். முகம் பார்க்கும் கண்ணாடியின் பின்பகுதி அடைப்பாக தானே இருக்கும் என்று நினைத்தால் அது தவறு. அதாவது அந்த கண்ணாடியில் முகம் பார்ப்பவருக்கு கண்ணாடிக்கு மறுபுறம் என்ன இருக்கிறது என்று தெரியாது. ஆனால், கண்ணாடியின் மறுபுறம் இருப்பவர் முகம் பார்க்கும் நபரை பார்க்கலாம். இந்த வகை கண்ணாடி இப்போது வீட்டின் ஜன்னல்களிலும் பொருத்தப்படுகின்றன.

ஓட்டல் அறைகளிலும் வசதியான லாட்ஜ்களிலும் சுவரிலோ அல்லது ஜன்னல்களை ஒட்டியோ இந்த "டூ வே மிர்ரர்' கண்ணாடிகள் பொருத்தப்பட்டு இருக்கலாம். எனவே, அங்கு தங்குபவர்கள் அது சாதாரண முகம் பார்க்கும் கண்ணாடிதானா? அல்லது "டூ வே மிர்ரர்' என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
சரி... அதை எப்படி கண்டுப்பிடிப்பது? கண்ணாடியை விரல்களால் லேசாக தட்டி பாருங்கள். உள்ளீடற்ற நிலையில் காலியாக இருப்பது போன்று சத்தம் கேட்டால் அது "டூ வே மிர்ரர்' அல்லது கண்ணாடியின் ஓர் இடத்தில் கைகள் இரண்டையும் குவித்து அந்த இடத்தில் இருட்டை ஏற்படுத்தி கொண்டு மறுபக்கம் பாருங்கள். மறுபக்கம் இருக்கும் பொருட்கள் தெரிந்தால் அது "டூ வே மிர்ரர்' தான். மற்றொரு சோதனையும் உள்ளது. கண்ணாடியின் மீது உங்கள் விரல் நகத்தை வையுங்கள். உங்கள் விரல் நகத்துக்கும் கண்ணாடியில் தெரியும் விரல் நகத்துக்கும் (இமேஜ்-உருவம்) இடைவெளி இருப்பது போன்று தெரிந்தால் அது வழக்கமான முகம் பார்க்கும் கண்ணாடி. அப்படி இடைவெளி இல்லாமல் உங்கள் விரல் நகம் கண்ணாடியில் தெரியும் விரல் நகத்தை நேரடியாக தொடுவது போல் தெரிந்தால் அது "டூ வே மிர்ரர்'. முகம் பார்க்கும் கண்ணாடியில் இவ்வளவு சமாசாரம் இருக்கிறதா என்று யோசிக்கிறீர்களா? கேவலமான மனிதர்களின் இது போன்ற இழிவான நடவடிக்கைகள் பற்றி அடிக்கடி கேள்விப்படுகிறோமே. அதனால் எல்லா இடங்களிலும் உஷாராக இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?

காமிரா சாத்தான்கள்!
ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் சென்று தங்கும் போது குடும்பத்தினர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கண்ணாடியாவது தெரியும்படி, பெரிதாக ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். ஆனால், காமிராக்கள் அப்படியல்ல... பெரிய ஓட்டல்கள், லாட்ஜ்கள் வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் உள்ள குளியல் அறைகளுக்கு உள்ளும் பெண்கள் நிம்மதியாக சென்று வர முடியவில்லை.
எங்காவது ரகசியமாக கேமராக்கள் அல்லது செல்போன் மறைத்து வைத்து படம் எடுத்து விடுகின்றனர். கேமரா செல்போன்கள் மலிவாகி விட்டதால், பலரது கைகளிலும் அதை பார்க்க முடிகிறது. பெண்கள் இன்னமும் கவனமாய் இருக்க வேண்டி உள்ளது. மொத்தத்தில் கேமரா செல்போன், கேமரா போன், பின் ஹோல் கேமரா போன்றவை வந்த பிறகு பெண்கள் கவனமாக இருக்கணும் என்பதில் எந்த கருத்து மாறுபாடுமில்லை. அவற்றை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபவர்களை கடுமையாக தண்டிப்பதன் மூலம்தான் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்தி தர முடியும்.

ஓட்டல்களில் தங்கும்போது.
ரகசியமாக எங்காவது கேமராக்கள் அல்லது கேமரா செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். அவற்றின் கழுகு கண்களில் இருந்து தப்பிக்க சில வழிகள்... யோசனைகள்.

1.
அறைக்குள் சென்றதும் சுற்றும் முற்றும் நன்றாக நோட்டமிடுங்கள்.
சுவர்களை கூர்ந்து கவனியுங்கள். சுவர்களின் ஒட்டப்பட்டு இருக்கும் காகிதங்கள் (வால் பேப்பர்) தொங்க விடப்பட்டு இருக்கும் படங்கள் சுவர் கடிகாரங்கள் ஆகியவற்றின் பின் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். மூலை முடுக்குகளையும் கூர்ந்து கவனியுங்கள்.

2.இரவில் தூங்கும்போது மின் விளக்கை அணைத்து விடுங்கள். இருட்டில் நடப்பதை படம் படிக்கும் திறன் சாதாரண ரகசிய கேமராக்களுக்கு கிடையாது.

3.
அறையில் இருக்கும் டி.வி பெட்டிக்குள் ரகசிய கேமரா மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம். எனவே, டி.வி. இயங்காதபோது அதன் மெயின் இணைப்பை துண்டித்து விடுங்கள்.

4.
குளியல் அறையில் ஏதாவது இடத்தில் ரகசிய கேமரா அல்லது செல்போன் மறைந்து வைக்கப்பட்டுள்ளதா என்று கவனியுங்கள். ஏதாவது இடத்தில் துவாரம் இருந்தால் அதை ஒரு காகிதத்தால் மூடி விடுங்கள். அதன் பின்னால் கேமரா மறைந்து வைக்கப்பட்டு இருக்கலாம்.

5. ஓட்டல் வளாகத்தில் உள்ள நீச்சல் குளம், பார் போன்ற இடங்களில் சில ஆசாமிகள் செல்போனை நோண்டி கொண்டே இருப்பர். செல்போன் கேமராவை ரகசியமாக உங்கள் பக்கம் திருப்பி அவர்கள் உங்களை ரகசியமாக படம் எடுக்கலாம்.

6.
லேப்டாப் கம்ப்யூட்டரை இயக்கி கொண்டு இருப்பது போல், அதில் உள்ள கேமரா மூலம் சிலர் உங்களை ரகசியமாக படம் பிடிக்கலாம்... கவனம்.

Read more...

பேஸ்புக் உபயோகத்திற்கான ஷார்ட்கட் கீகள்

வியாழன், 20 செப்டம்பர், 2012


பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமுதாய இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் உயர்ந்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீகளை இங்கு காணலாம். 
ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்தும் முன், முதல் கீயான மாடிபையர் கீ ( கீ போர்டின் செயல்பாட்டினை மாற்றித் தரும் கீ) நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும். விண்டோஸ் இயக்கத்தில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கு Alt+Shift, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் Alt. இந்த கீகளுடன், கீழே தரப்படும் கீகளை இணைத்துப் பயன்படுத்தலாம். 
1. புதிய மெசேஜ் பெற M

2. பேஸ்புக் சர்ச் ?

3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ் 1

4. உங்கள் புரபைல் பேஜ் 2

5. நண்பர்களின் வேண்டுகோள்கள் 3

6. மெசேஜ் மொத்தம் 4

7. நோட்டிபிகேஷன்ஸ் 5

8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் 6

9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் 7

10. பேஸ்புக் ஹோம் பக்கம் 8

9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் 9

10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் O

இறுதியில் தரப்பட்டுள்ள கீகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த மாடிபையர் கீயுடன் பயன்படுத்த வேண்டும். எடுத்துக் காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2 பயன்படுத்த வேண்டும். 
இந்த ஷார்ட்கட் கீகளில் உள்ள எண்களை, நம்லாக் செய்து கீ பேடில் இருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான கீகளையே பயன்படுத்த வேண்டும்.

Read more...

பேஸ்புக் சீரழிவுகள்

சனி, 26 மே, 2012


பேஸ் புக் மூலம் காதலை வளர்த்து ஓட்டலில் கற்பை இழந்து ஏமாற்றப்பட்ட பெண்கள் 2 பேர் வேலூர் ஏடிஎஸ்பியிடம் புகார் செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ??? அவரது தோழி ???  ஆகியோர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். ??? க்கு பேஸ் புக் மூலம் சதீஷ் ஜெயராம் என்பவர் பழக்கமானார். சதீஷ் நண்பர் ஆனந்த்பாபு. சதீஷ்,  ??? மூலம் ஆனந்த்பாபுவுடன் ??? க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த 2 ஜோடிகளின் நட்பு பேஸ் புக் மூலம் வளர்ந்தது. பின்னர் தொலைபேசியிலும் நட்பை வளர்த்தனர். கடந்த ஜனவரி மாதம் சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர் சென்னைக்கு சென்றனர். 

வேலூரை சுற்றிப்பார்க்கலாம் எனக்கூறி ???,  ??? ஆகியோரை அழைத்துக்கொண்டு வந்துள்ளனர்.   ஆனால் வேலூருக்கு வராமல் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகள் எடுத்து தங்கினர். ???, சதீஷ் ஆகியோர் ஒரு அறையிலும்,  ???, ஆனந்த்பாபு ஆகியோர் மற்றொரு அறையிலும் தங்கியுள்ளனர். 2 வாலிபர்களும் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி தங்கள் பேஸ் புக் தோழிகளுடன் ஜாலியாக இருந்துள்ளனர்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதமும் அந்த பெண்களை ராணிப்பேட்டைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் ஆனந்த்பாபு, ??? வுடன் தொலைபேசியில் பேசுவதை நிறுத்திக்கொண்டார். கடந்த மார்ச் மாதம் ??? விடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆனந்த்பாபு பேசி, அதே ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் ??? அங்கு செல்ல மறுத்துவிட்டார்.

ஓட்டலில் தனிமையில் இருந்த காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்திருப்பதாகவும், அதனை இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுவதாகவும் கூறி ஆனந்த்பாபு மிரட்டியுள்ளார். இந்நிலையில் ??? வும் தன்னை சதீஷ் ஏமாற்றிவிட்டதாக ??? விடம் கூறியுள்ளார். இதுகுறித்து வேலூர் ஏடிஎஸ்பி   முருகேசனிடம் ??? நேற்று புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 பேஸ் புக் மூலம் ஏமாந்தது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்கள், மேலும் பல தகவல்களை தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த கஜித்ரா, "பேஸ்புக்' மூலம், வேலூரைச் சேர்ந்த ஆனந்த்பாபு என்பவருடன், உல்லாசமாக இருந்து, கற்பை இழந்தார். பின், வேலூர் கூடுதல் எஸ்.பி., முருகேசனிடம் புகார் செய்தார். நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், பேஸ் புக் மூலம் கற்பை இழந்த, மேலும் சில பெண்கள், புகார் கொடுக்க வேலூர் வந்திருந்தனர். அவர்கள் கூறியதாவது: காயத்ரி, கஜித்ராவை ஏமாற்றிய சதீஷ் மற்றும் ஆனந்த் பாபு, வேறு சில பெண்களையும், அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு நாள், கிழமை என முறை வைத்து, அழைத்து வந்துள்ளனர். இதற்கு ஏற்றவாறு பேஸ் புக்கில் தகவல் அனுப்புவர். ஒரு பெண்ணை அழைத்து வருவது, மற்ற பெண்ணுக்கு தெரியாது. இதற்கு ஏற்றபடி, ஊர், லாட்ஜ்களை மாற்றி, மாற்றி தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் உல்லாசமாக இருந்ததால், இவர்களுக்கு உல்லாசம் மட்டுமே குறிக்கோள் என்ற சந்தேகம், கஜித்ராவுக்கு வந்தது.
இதை காயத்ரி தேவியிடம் சொன்ன போது, அவர் நம்பவில்லை. இதனால், ஆனந்த்பாபுவின் தொடர்பை துண்டித்தபோது தான், வீடியோ பிரச்னை வெடித்து, வேறு வழியின்றி அவர் சொல்லும்படி கேட்க நேர்ந்துள்ளது.ஆனந்த்பாபுவின் நண்பர் திலீப். இவர், மரைன் இன்ஜினியரிங் படித்து விட்டு, சிங்கப்பூரில் உள்ள கப்பல் கம்பெனியில் பணிபுரிகிறார். ஆறு மாதம் விடுமுறையில், சொந்த ஊரான ராணிப்பேட்டைக்கு வந்தார். ஆனந்த்பாபு, பேஸ் புக் விஷயத்தை சொல்லவே, அவரும் சில பெண்களுக்கு தகவல் அனுப்பி, அவர்களை வேலூர், திருவண்ணாமலை, சேலம் என அழைத்துச் சென்று, உல்லாசமாக இருந்துள்ளார். பின் திலீப், நண்பர்கள் லூயிஸ், ஆனந்த்ராஜ் ஆகியோருக்கும், பேஸ் புக் மூலம் தகவல் தெரிய வர, அவர்களும் இதே முறையை பின்பற்றி, பல பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதில், இவர்கள் உல்லாசமாக இருக்க ஆன செலவுகள் அனைத்தும், அந்தந்த பெண்களே ஏற்றுக் கொண்டுள்ளனர். கஜித்ரா போல, 16 பெண்கள் சீரழிக்கப்பட்டதாக தெரிகிறது.பேஸ் புக் மோசடியில் சிக்கிய சதீஷ், ஆனந்த்பாபு ஆகியோர், சில மாதங்களுக்கு முன், ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில், நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருந்தபோது, பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின்படி கைதாகி, ஜாமினில் வந்துள்ளனர். தற்போது, சதீஷ், ஆனந்த்பாபு, திலீப், நித்தியானந்தம் கைது செய்யப்பட்டுள்ளனர். லூயிஸ், சிங்கப்பூருக்கும், ஆனந்த்ராஜ், பெங்களூருக்கும், சில பெண்களை அழைத்து கொண்டு, உல்லாசமாக இருக்கச் சென்றுள்ளனர். உல்லாசமாக இருக்கும்போது, அதை வீடியோவில் படம் எடுத்தவர் லூயிஸ். இவர் வேலூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரையும் உல்லாசத்துக்கு அழைத்துச் சென்று, ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பேஸ்புக்கால் இன்னும் என்ன சீரழிவுகள் ஏற்படப் போகிறதோ ? ஆண்களுடன் பழ்குவதில் அதிகம் எச்சரிக்கையுடன் இருப்பதே பெண்களுக்கு பாதுகாப்பு.
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets