உங்கள் வருகைக்கு நன்றி

மூலிகையின் பயன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூலிகையின் பயன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேன் பெட்டிகள் வைத்து, 'முருங்கைத்தேன்'

ஞாயிறு, 28 ஜூன், 2020


துாத்துக்குடி மாவட்டம்ஏரல் அருகில் உள்ள, சாயர்புரம் முருங்கைத் தோட்டத்தில், தேன் பெட்டிகள் வைத்து, 'முருங்கைத்தேன்' உற்பத்தி செய்து வரும் ஆனந்த்: அடிப்படையில விவசாயக் குடும்பம் தான். சின்ன வயசுலயே சொந்தமா ஏதாவது தொழில் செய்யணும்னு ஆர்வம் இருந்துச்சு. பி.ஏ., பொருளாதாரம் படிச்சு முடிச்சதும், காளான் பண்ணை வைக்கலாம்னு, அதுக்கான பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்டேன். மதுரையில், காளான் பண்ணை ஆரம்பிச்சேன். அறுவடை செஞ்ச காளான்களை ஒரே நாள்ல விற்பனை செய்துடணும். ஆனா, விற்பனை செய்ய முடியல. அதனால, காளான்கள் வீணாகி, நஷ்டம்
ஆகிடுச்சு.இனிமேல் விவசாயம் செஞ்சாலும் சரி, உற்பத்தி செஞ்சாலும் சரி, அதன் மூலமா கிடைக்கிற பொருளை இருப்பு வெச்சு தான் விற்பனை செய்யணும்னு முடிவு எடுத்தேன். அப்படியொரு தொழிலைத் தேடினேன். அப்போது தான், தேன் வியாபாரம் செய்யலாம்னு யோசனை தோணுச்சு. கோயம்புத்துார் மாவட்டம், விவசாயம் நிறைஞ்ச பகுதி. அதனால அந்தப் பகுதியில தேன் உற்பத்தி செய்றவங்ககிட்ட, தேனை வாங்கி, விற்பனை செய்ற தொழிலை ஆரம்பிச்சேன்; ரெண்டு வருஷம் போச்சு.
கோயம்புத்துார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல தேனீ வளர்ப்பு குறித்த ஒரு வாரப் பயிற்சியில கலந்துகிட்டேன். பிறகு, நண்பர் ஒருவர் தோட்டத்துல, 10 பெட்டிகளை மட்டும் வெச்சு, வளர்த்துப் பார்த்தேன். பிறகு, பெட்டிகளை அதிகமா வைக்க ஆரம்பிச்சேன். பெட்டிகளோட எண்ணிக்கையும், உற்பத்தியும் அதிகமாகிடுச்சு. இப்ப, 'மதுரம் இயற்கை தேனீ பண்ணை'ங்கற பேர்ல கோயம்புத்துார்லயும், துாத்துக்குடியில இருக்கும், என் சொந்த நிலத்துலயும், 950 பெட்டிகள் மூலம் தேன் உற்பத்தி செய்துட்டு வர்றேன்.
புதிதாகக் கூடு கட்டி,தேன் அறுவடை செய்ய, மூன்று மாதங்கள் ஆகும். வாரம் ஒருமுறை கட்டாயம் பெட்டிகளைத் திறந்து, ஒவ்வொரு சட்டகத்தையும் எடுத்துப் பார்க்க வேண்டும். தேனீக்கள் சரியாகக் கூடு கட்டுகிறதா; நோய்கள் ஏதும் தாக்கியுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஜனவரி முதல், மார்ச் வரையிலும், ஜூன் முதல், ஆகஸ்ட் வரையிலும் அதிகமாகப் பூப்பூக்கும். இந்த மாதங்களில் அதிகமாகத் தேன் சேகரிக்கலாம். ஏப்ரல் முதல், மே வரையிலும், செப்டம்பர் முதல், டிசம்பர் வரையிலும் பூக்கள் குறைவாகப் பூக்கும். தேன் உற்பத்தியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துல, ஆறு மாதம் தான் அதிக உற்பத்தி நடக்கும். மழைக்காலம் உள்ளிட்ட மற்ற, ஆறு மாதங்கள் உற்பத்தி குறைவாக இருக்கும். என்கிட்ட இருக்கும், 950 பெட்டிகள் மூலமா, ஒரு வருஷத்துக்குச் சராசரியா, 12 ஆயிரம் கிலோ தேன் கிடைச்சுக்கிட்டு இருக்கு; 31 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது!

Read more...

புதினாவின் பயன்களை அறிந்து கொள்வோம்.

புதன், 11 செப்டம்பர், 2019


நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ச்சத்து, உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின், '' மற்றும் தயாமின் ஆகிய சத்துக்கள், புதினா கீரையில் அடங்கியுள்ளன.
சட்னி, ஜூஸ் என, எந்த விதத்தில் பயன்படுத்தினாலும், இதன் பொது குணங்கள் மாறுவதில்லை.
அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்கும் சக்தி இதற்குண்டு. ரத்தத்தை சுத்திகரிக்கிறது; வாய் நாற்றம் மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது; பசியை துாண்டுகிறது; பெண்களின் மாதவிலக்கு பிரச்னைகளையும் தீர்க்கிறது.
ஆண்மை குறைவை நீக்கி, முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும், வயிற்றுப் புழுக்களை அழிப்பதோடு, வாய்வுத் தொல்லையையும் அகற்றுகிறது.
புதினாவை நீர் விடாமல் அரைத்து, பற்றுப் போட்டால், தசை வலி, நரம்பு வலி, தலை வலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை மற்றும் நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முகப்பரு, வறண்ட சருமம் உள்ளவர்கள், இதன் சாற்றை முகத்தில் பூசி வர, நல்ல பலன் கிடைக்கும்.
புதினா கீரையை நிழலில் காய வைத்து, பாலில் சேர்த்து கொதிக்க விட்டு, டீக்கு பதிலாக அருந்தி வந்தால், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வயிற்றுப்போக்கின் போது, புதினாக்கீரை துவையலை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சரியாகும். கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த, கைகண்ட மருந்தாகவும் பயன்படுகிறது.
புதினா இலையை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, இந்த நீரை குடித்தால், மூச்சுத்திணறல் நீங்கும். புதினா, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து, சிறிது நேரம் கழித்து அலசினால், பொடுகு மறைந்து, கூந்தல் பட்டு போல் பளபளக்கும்.
கொஞ்சம் புதினா இலையை, தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டிய கஷாயத்தில், எலுமிச்சை சாறு சேர்த்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், செரிமானக் கோளாறு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுகளில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.
தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து, சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்த பின், புதினா இலைகளை சேர்த்து மறுபடியும் கொதிக்க விட்டு இறக்கி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்த்து, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகலாம்.
புதினா இலைகளை வெயிலில் காய வைத்து, அதனுடன் தேவையான அளவு துாள் உப்பு சேர்த்து சலித்து, பாட்டிலில் சேமித்து வைக்கலாம். இந்த பொடியால், தினசரி பல் தேய்த்து வந்தால், வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. பற்கள் வெண்மையாக ஜொலிக்கும். ஈறுகளில் ரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவையும் நீங்கும்.
கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்திய பின், துார எறியும் தண்டுகளை, தொட்டி மண்ணில் ஊன்றி வைக்கலாம்.
இந்த காயகல்பத்தை, வீட்டிலேயே வளர்த்து, உணவில் சேர்த்து, ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.

Read more...

உலர் முருங்கை இலை, விதை விற்பனையில் வருமானம்.

வியாழன், 4 அக்டோபர், 2018


பிளேட்டோசென் சமரசம்: பி.டெக்., - எம்.பி.ஏ., முடித்த நான், பிலிப்பைன்ஸ் நாட்டில், அரசு சாரா அமைப்பின் இயக்குனராக இருந்த போது, விவசாயம், சுற்றுச்சூழல் என, நிறைய, 'புராஜெக்ட்' செய்தோம். அப்போது, வெளிநாடுகளில் முருங்கை இலைக்கு, அதிகத் தேவை இருப்பது தெரிய வந்தது.அதன்பின், இந்தியா திரும்பி, உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தேன். அந்த நேரத்தில், ஓய்வு பெற்ற அப்பாவிடம், முருங்கைச் சாகுபடி பற்றி கூறியதும், ஏற்றுக் கொண்டார். நிறைய ஊர்களுக்குப் போய், முருங்கை விவசாயிகளைப் பார்த்துப் பேசியதில், இலை அறுவடைக்கு, செடி முருங்கை ஏற்றது என, தெரிந்தது.இது, மொத்தம், 40 ஏக்கர் நிலம்; நல்ல செம்மண். 10 ஏக்கரில் நெல்லி, 5 ஏக்கரில் நாட்டு ரக எலுமிச்சை, 15 ஏக்கரில் மாமரங்கள், 5 ஏக்கரில் செடி முருங்கை, 2 ஏக்கரில், முருங்கை விதைக்கு என விட்டு உள்ளோம். மீதி, 3 ஏக்கரை, முருங்கைச் சாகுபடிக்காகத் தயார் செய்து வைத்துள்ளோம். காய வைத்த முருங்கை இலையை எங்களிடம் இருந்து வாங்கி, ஜெர்மன் நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். 45 நாளுக்கு ஒருமுறை, இலை அறுவடை செய்யலாம். மழைக்காலங்களில் அறுவடை செய்ய மாட்டோம். அந்த வகையில், ஆண்டுக்கு, ஐந்து தடவை அறுவடை செய்யலாம். 1 ஏக்கர் செடி முருங்கையில், ஓர் அறுப்புக்கு, 4,000 - 4,500 கிலோ இலை கிடைக்கும்.மேலும், 1,000 கிலோ இலையைக் காய வைத்தால், 100 கிலோ உலர்ந்த இலை கிடைக்கும். ஆண்டுக்கு, 2,000 கிலோ உலர்ந்த இலை கிடைக்கிறது. 1 கிலோ, 130 ரூபாய் என, ஆண்டுக்கு, 1 ஏக்கர் மூலமாக, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்கும். இடுபொருள், பராமரிப்பு, அறுவடை, போக்குவரத்து எல்லாம் சேர்த்து, 85 ஆயிரம் ரூபாய் செலவு போக, 1.50 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் வரும்; ஒரு முறை நடவு செய்தால், ஐந்து ஆண்டு வரை வருமானம் பார்க்கலாம்.தொடர்புக்கு: பிளேட்டோசென் சமரசம்: 95661 01102; சமரசம்: 94437 35902.

Read more...

தண்ணீர், தண்ணீர், தண்ணீர்

செவ்வாய், 18 ஜூலை, 2017

சாதாரணமான தண்ணீரில் மெக்னீசியம், கால்சியம், கார்பனேட், தாமிரம் போன்ற தாது பொருட்கள், இயற்கையாகவே கலந்துள்ளன. 'பேக்கேஜ்டு' குடிநீரில், சுத்திகரிப்புக்கு பின், இந்த தாதுப் பொருட்கள் எல்லாம் சேர்க்கப்படுகிறதா என்பது சந்தேகமே. மேலும், சுத்திகரிப்பு இயந்திர கருவியில் தண்ணீரை சுத்தப்படுத்தி கொண்டுவர, மூன்று மடங்குதண்ணீர் வீணாகிறது. வீட்டில் கிடைக்கும் ஆழ்துளை கிணறு தண்ணீர் அல்லது குழாய் தண்ணீரை, அப்படியே பருகலாம். ஆழ்துளை கிணறு தண்ணீர் உவர்ப்பாக இருந்தால், செப்பு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால், அதுவே நன்றாக சுத்திகரித்து விடும். அந்த நீரை மண்பானையில் ஊற்றி வைத்து குடித்தால், அதைவிட சுவையான, பாதுகாப்பான குடிநீர் எதுவுமில்லை. செப்பு பாத்திரம், மண்பானை இரண்டும் உலகிலேயே மிகச்சிறந்த சுத்திகரிப்பு கருவிகள்.அதேபோல், எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து, குடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நோய் பரவும் காலம், மழைக் காலங்களில் மட்டும் நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி பருகினால் போதும். மற்ற நாட்களில் சாதாரண தண்ணீரே போதும். இந்த காய்ச்சிய குடிநீரையும், வடிகட்டி அன்றே குடித்துவிட வேண்டும். முதல் நாள் காய்ச்சிய நீரை மறுநாள் பருகுவதால், எந்த நன்மையும் இல்லை. அதேநேரம், சென்னை போன்ற பெருநகரங்களில் நிலத்தடி நீர் மாசடைந்த நிலையில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த நீரை அப்படியே குடிக்கலாமா என்பது ஆய்வுக்குரியது. எனவே, அவர்கள், வீட்டிலேயே மூலிகை குடிநீர் தயார் செய்து பருகலாம். கேரளாவில் பெரும்பாலான இடங்களில், பதிமுகம் குடிநீரை தான், மக்கள் பருகுகின்றனர். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பதிமுகம் மரப்பட்டையை வாங்கி, தண்ணீரில் ஊற வைத்து கொதிக்க வைத்து பருகலாம்.காய்ச்சும்போது தண்ணீர் ஊதா நிறத்தில் இருக்கும். இதை எல்லா காலத்திலும் எல்லாரும் பருகலாம். பதிமுகம், குடிநீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டுள்ளதோடு, நோய் எதிர்ப்பு சக்தியாகவும் செயல்படுகிறது. குறிப்பாக, இதய நோயாளிகள், கொழுப்பு பிரச்னை, இதய அடைப்பு உள்ளோருக்கு, பதிமுகம் நீர் மிகவும் நல்லது.கருங்காலி குடிநீரும், உடலுக்கு ஆரோக்கியம் தரும் மூலிகை நீர். கருங்காலி பட்டையுடன் வெட்டிவேர், ரத்த சந்தனம், விளாம் பிசின், கொத்தமல்லி, சீரகம் போன்ற மூலிகைகள் கலந்த கலவை கடைகளில் கிடைக்கிறது. இதை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி பருகுவதால் சளி, இருமல், தோல் மற்றும் ரத்தம் சம்பந்தமான வியாதிகள் குணமாகின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு, கருங்காலி தண்ணீர் நல்லது.
இதுதவிர, சீரகத்தை லேசாக வறுத்து, தண்ணீரில் சிறிது நேரம் கொதிக்கவிட்டு வடிகட்டி, இளஞ்சூட்டில் அந்த நீரை பருகலாம். சீரக குடிநீர், செரிமான சுரப்பிகளை துாண்டி, நல்ல பசியை உண்டாக்கும். இந்த நீரைப் பருகுவதால் எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. உடலில் உள்ள வாயுக்களைக் கட்டுப்படுத்துகிறது. வயிறு சார்ந்த நோய்களைப் போக்குவதுடன், நோய் தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.


ஆயுர்வேத மருத்துவர் ஹரிஹரன்: 

Read more...

வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்

வெள்ளி, 22 மார்ச், 2013

கோடை காலம் போல வெயில் கொளுத்துகிறது. வீட்டிற்குள்ளேயே அனல் அடிக்கிறது. இதற்கிடையே மின் தட்டுப்பாடு வேறு மக்களை படுத்தி எடுக்கிறது. எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகளை கூறுகின்றனர் உள் அலங்கார நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள், வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒட்டடை, தூசுகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். சுத்தமான காற்று அதிகமாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
கோடைகாலத்தில் ஜன்னல் திரைச்சீலைக்களை தண்ணீரில் நனைத்துப்போடுங்கள். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை மணிக்கு ஒருமுறை ஈரமாக்க வேண்டும். இதனால், வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும். தரையிலும் அவ்வப்போது ஈரத் துணியால் துடைக்கலாம். பால்கனி, ஜன்னல்களுக்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைத்தும் குளிர்ச்சியை பெறலாம்.
மின் விசிறிகள் அழுக்கேறி இருந்தால் காற்று குறைந்து விடும். எனவே, வாரம் ஒருமுறை மின் விசிறி இறக்கைகளை துடைத்து பராமரித்தால் அதிக காற்று கிடைக்கும். இது பவர் கட் காலம். எப்பொழுது கரண்ட் போகும் என்று கூற முடியாது. எனவே அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் கைமேல் பலனாக உதவுவது ஓலை விசிறிகளே. எனவே, கோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். பனை ஓலை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். அத்துடன் அவற்றை பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் நனைத்து வைத்து விட்டு பயன்படுத்திப் பாருங்கள். இயற்கை ஏசியாக காற்று வரும்.
வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். அதேபோல் கிழக்கு, மேற்கு பக்க ஜன்னல்களில் கண்ணாடிகள் இருந்தால் சன் கிளாஸ் ஒட்டலாம். வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பதால் பசுமையால் குளிர்ச்சி ஏற்படும்.

Read more...

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க

திங்கள், 29 அக்டோபர், 2012


 டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் பணி துவங்கியுள்ளது. டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை தடுக்க தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பகுதி நேர ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கப்படுகிறது. நிலவேம்பு, சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சிறந்த மூலிகை. 

அரசு மருத்துவமனை சித்த மருத்துவர்கள் கூறுகையில், ‘மூலிகை குடிநீரை டெங்கு வந்தவர்கள் மட்டும் இன்றி, வராமல் தடுப்பதற்கும் பயன்படுத்தலாம். தொடர்ந்து 7 நாட்களுக்கு மூலிகை குடிநீரை குடித்தால், டெங்கு மட்டுமின்றி, பன்றிகாய்ச்சல், சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்களும் வருவதை முற்றிலும் தடுக்கலாம். காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. ஒவ்வொரு சீதோஷ்ண நிலை மாறும் சீசனிலும் நிலவேம்பு குடிநீரை குடிப்பதன் மூலம் வைரஸ் காய்ச்சல் வராமல்  தடுக்க முடியும்என்றனர்.

Read more...

இவர் பேசுவது, பச்சைக் குழந்தைகளுடன் அல்ல... காய்கறி செடிகளுடன்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

:"என்னடா ஆச்சு...? ஏன் இப்படி வாடிப் போயிருக்கே...? தாகமா இருக்கா?...பூச்சி ஏதாவது கடிச்சிருச்சா...? இதோ இப்ப தண்ணி ஊத்துறேன்...' பீளமேட்டை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் பாலகிருஷ்ணன் இப்படி பேசுவது, பச்சைக் குழந்தைகளுடன் அல்ல... காய்கறி செடிகளுடன்.

விளை நிலங்கள் அத்தனையும் "கான்கிரீட் காடுகள்' ஆக மாறி விட, காய்கறி, பழங்களை விளைவிக்க மண்ணில் இடமில்லை. இதனால் ஆசை ஆசையாக காய்கறி சமைத்து சாப்பிட முடியாத நிலை. ஆனால், பேராசிரியர் பாலகிருஷ்ணனுக்கு இது குறித்தெல்லாம் கவலை இல்லை. தனது வீட்டின் மொட்டை மாடியையே அழகான விளைநிலம் ஆக மாற்றி, தினமும் "ப்ரெஷ்' ஆன பச்சைக் காய்கறிகள், கீரைகளை ஆசை தீர சமைத்து சாப்பிட்டு வருகிறார்.

கத்தரிக்காய், கீரை, தக்காளி, பச்சை மிளகாய், பீட்ரூட், காரட், தட்டைப் பயறு...இப்படி நீள்கிறது இவரது மாடி வீட்டுத் தோட்டத்தின் பச்சைக் காய்கறி பட்டியல். பீளமேடு சர்வஜனா பள்ளியின் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்ற பின், இப்போது கணியூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர் ஆக பணிபுரிகிறார் பாலகிருஷ்ணன். இவரது மனைவியும், ஒரு கல்லூரியில் பேராசிரியை ஆக பணிபுரிகிறார்.
Stock Photo - terrace or roof 
gardening. fotosearch 
- search stock 
photos, pictures, 
wall murals, images, 
and photo clipart
கல்லூரி மாணவர்களுடன் நேரத்தை கழித்து விட்டு வீடு திரும்பும் இருவரும், மீதமுள்ள பொழுதை வீட்டில் உள்ள நூலகத்திலும் "ரூப் கார்டனிலும்' கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். காய்கறித் தோட்டத்துக்கு மண்ணுக்கு பதிலாக தேங்காய் நார் கழிவைதான் பயன்படுத்துகின்றனர். மண்ணில் வளர்வதை விட அதிக செழிப்பாக காட்சியளிக்கின்றன, காய்கறிகள். அவரைக்காய், பாகற்காய் போன்ற சிலவகை காய்கறிகளுக்கு தேவையான பந்தலும் மொட்டை மாடியிலேயே ரெடி. பந்தலில் படர்ந்து ஆரோக்கியமாக சிரிக்கின்றன பச்சைக் காய்கறிகள்.


பேராசிரியர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ""இன்று காய்கறிகளை ப்ரெஷ் ஆக வாங்க முடிவதில்லை. பல்வேறு உரங்களும் பயன்படுத்தப்படுவதால் உடல் நலன்தான் கெடுகிறது. விலையும் அதிகமாக உள்ளது. மொட்டை மாடியில் சிறிது இட வசதியுள்ள எவரும் இது போல் காய்கறித் தோட்டம் அமைக்கலாம். மொட்டை மாடியில் மண்ணை கொட்டினால், கட்டுமானம் பாதிக்கப்படும். அதற்கு பதிலாக பச்சை நிற தார்பாலின் பைகளை பயன்படுத்துகிறேன். சிறிதும் பெரிதுமாக நியாயமான விலையில் கிடைக்கிறது. இதில் மண்ணுக்கு பதிலாக தென்னை நார் கழிவுகளை கொட்டி காய்கறி நாற்று நடலாம். தென்னை நார் கழிவுகளுக்கு மண்ணைப் போல் எடையில்லை. அங்குமிங்கும் எளிதாக தூக்கிச் செல்லலாம். நார்க் கழிவில் உள்ள நார்கள் காய்கறி செடியின் வேர்களை இறுக்கிப் பிடித்துக் கொள்வதால், மண்ணில் வளர்வதைப் போல் செடிகள் "ஸ்ட்ராங்' ஆக வளர்கின்றன.
Stock Photo - terrace or roof 
gardening. fotosearch 
- search stock 
photos, pictures, 
wall murals, images, 
and photo clipart
""இதன் அடிப்பகுதி ஓரங்களில் துளை உள்ளதால், ஊற்றும் தண்ணீரால் வேர்கள் அழுகுவதில்லை. காய்ந்த மாட்டுச் சாணம் மற்றும் வீட்டு சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகள்தான் உரம். இதனால் ஒரு செடியில் 15 கத்தரிக்காய் வரை கிடைக்கிறது. இயற்கையான முறையில் விளைவிப்பதால் சுவைக்கும் குறைவில்லை. நமக்குத் தேவையான காய்கறிகளை நாமே விளைவித்து சாப்பிடுவதில் கிடைக்கும் திருப்தியும், சந்தோஷமும் தனிதான்,'' என சிரிக்கிறார் பாலகிருஷ்ணன்.காய்கறிகள் மட்டுமில்லை...வீட்டைச் சுற்றிலும் அலங்கரிக்கும் பூந்தொட்டிகளுக்கும் தென்னை நார் கழிவைதான் பயன்படுத்துகிறார் பாலகிருஷ்ணன்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets