உங்கள் வருகைக்கு நன்றி

பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாதுகாப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்

வெள்ளி, 22 மார்ச், 2013

கோடை காலம் போல வெயில் கொளுத்துகிறது. வீட்டிற்குள்ளேயே அனல் அடிக்கிறது. இதற்கிடையே மின் தட்டுப்பாடு வேறு மக்களை படுத்தி எடுக்கிறது. எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகளை கூறுகின்றனர் உள் அலங்கார நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள், வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒட்டடை, தூசுகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். சுத்தமான காற்று அதிகமாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
கோடைகாலத்தில் ஜன்னல் திரைச்சீலைக்களை தண்ணீரில் நனைத்துப்போடுங்கள். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை மணிக்கு ஒருமுறை ஈரமாக்க வேண்டும். இதனால், வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும். தரையிலும் அவ்வப்போது ஈரத் துணியால் துடைக்கலாம். பால்கனி, ஜன்னல்களுக்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைத்தும் குளிர்ச்சியை பெறலாம்.
மின் விசிறிகள் அழுக்கேறி இருந்தால் காற்று குறைந்து விடும். எனவே, வாரம் ஒருமுறை மின் விசிறி இறக்கைகளை துடைத்து பராமரித்தால் அதிக காற்று கிடைக்கும். இது பவர் கட் காலம். எப்பொழுது கரண்ட் போகும் என்று கூற முடியாது. எனவே அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் கைமேல் பலனாக உதவுவது ஓலை விசிறிகளே. எனவே, கோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். பனை ஓலை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். அத்துடன் அவற்றை பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் நனைத்து வைத்து விட்டு பயன்படுத்திப் பாருங்கள். இயற்கை ஏசியாக காற்று வரும்.
வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். அதேபோல் கிழக்கு, மேற்கு பக்க ஜன்னல்களில் கண்ணாடிகள் இருந்தால் சன் கிளாஸ் ஒட்டலாம். வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பதால் பசுமையால் குளிர்ச்சி ஏற்படும்.

Read more...

போலீசாரின் எச்சரிக்கை நோட்டீஸ் !

வியாழன், 25 அக்டோபர், 2012



வீட்டின் முன்பக்க கதவில், "டோர் லென்ஸ்' "டோர் லாக் சங்கிலி' இணைக்க வேண்டும். அருகிலுள்ள வீட்டாரிடம் நன்றாக பழகி, அவர்களது போன் எண்களை குறித்து வைத்திருங்கள். அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அவசர உதவி எண்களை தெரிந்து வைத்திருங்கள். "டிவி', கேபிள் கனெக்ஷன், பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ரிப்பேர் என வரும் நபர்களை நன்றாக விசாரித்து, உறுதிப்படுத்திய பின்னரே, வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும்.அவ்வாறான நபர்கள் மீது சந்தேகம் வந்தால், உடனே போலீசை தொடர்பு கொள்ள வேண்டும். நன்றாக அறிமுகமானவர்களை, அதுவும் போட்டோ, நிரந்தர முகவரியை வாங்கிய பின்னரே வீட்டு வேலைக்கு அமர்த்த வேண்டும். நீங்கள் தனியாக இருக்கும் மற்றும் வெளியூருக்கு செல்லும் விவரங்களை யாரிடமும் சொல்லாதீர்கள். வெளியூருக்கு செல்லும்போது, அருகிலுள்ள ஸ்டேஷனுக்கு சென்று, "லாக்ட் ஹவுஸ்' என்ற ரெஜிஸ்டரில் கையெழுத்திட்டு, மொபைல் எண்ணை பதிவு செய்து செல்ல வேண்டும். வாகனங்களில் இருந்து வீட்டுக்குள் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும்போது, மறக்காமல் கைப்பை எடுத்துச் செல்லுங்கள். தங்க, வெள்ளி நகைகள், ரொக்கப்பணத்தை வீட்டில் வைக்காமல் வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வையுங்கள். அன்னிய மற்றும் சந்தேக நபர்களை எக்காரணத்தை கொண்டும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர். இரவு நேரங்களில் வீட்டை சுற்றியும், கடைகளின் முன்புறமும் விளக்குளை ஒளிரவிடுங்கள். உங்கள் பகுதியில் ஏதேனும் பேன்ட் பிட், ஜமுக்காளம், மெத்தை விற்பவர்கள், தங்கம், வெள்ளி முலாம் பூசுபவர்கள்போல், எவரேனும் நடமாடினால் வீட்டுக்குள் விடாதீர். போலீசுக்கு போன் செய்யுங்கள். கூரியர், பார்சல் வந்துள்ளது; பரிசு விழுந்துள்ளது என யாராவது கதவை தட்டினாலும், சரியாக விசாரிக்காமல் திறக்காதீர். திருட்டு, சந்தேக நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க,  ஸ்டேஷன் எண்களில் தொடர்பு 
கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Read more...

கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் இருக்கும் இடம் ?

வியாழன், 26 ஜூலை, 2012


ஹோட்டல் அறைகளில் சுகாதாரம் எப்படி இருக்கிறது என்று அமெரிக்காவின் பிராந்தியங்களில் ஆராய்ச்சி செய்தார்கள். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே நீல் இந்த ஆய்வு முடிவுகளை நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஹோட்டல் அறைகள் என்பது ஓரிரு நாள்களுக்கு மட்டுமே தங்குவதற்காக விருந்தினர்கள் வந்துபோகும் இடம்தான்அங்கு மருத்துவமனையின் அறுவைச்சிகிச்சைக் கூடத்தைப் போல கிருமி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைதான்ஆனாலும் நாம் பார்க்கும்போது தூய்மையாகவும் நறுமணத்துடனும் இருக்கும் ஹோட்டல் அறைகளில் நமக்கே தெரியாத ஆபத்துகள் இருக்கின்றன என்பதை இந்த ஆய்வு புலப்படுத்துகிறது. (அமெரிக்காவிலேயே இந்தக் கதை என்றால் நம்ம ஊரு ஹோட்டல்களை நினைத்தால்....ஆத்தாடி!)
எல்லா அறைகளிலும் கதவு கைப்பிடிகளிலும் டி.வி. ரிமோட்டுகளிலும் கிருமிகள் அதிகம். எந்த அளவுக்கு என்றால் - அந்த அறையில் உள்ள டாய்லெட் இருக்கை விளிம்புக்கு அடியில் இருப்பதை விட! இன்னொரு இடமும் இருக்கிறது. அது படுக்கைக்கு அருகிலேயே இருக்கும் பெட்ரூம் ஸ்விட்ச்தான் அது. ஹோட்டல் அறையில் உள்ள டி.வி. ரிமோட்டுகள் அசுத்தமானவை என்றால் அதை எதனுடனாவது ஒப்பிட வேண்டும் அல்லவாவீடுகளில் இருக்கும் டி.வி. ரிமோட்டுகள் அளவுக்கு அசுத்தமானவை என்கிறது ஆய்வு. அதாவது கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அதில் ஆயிரக்கணக்கில் குடியிருக்கின்றன.
நல்ல ஸ்டார் ஹோட்டல்கள் என்றால் அறையை தினமும் சுத்தம் செய்வார்களேஅப்படியுமா கிருமிகள் வந்துவிடுகின்றன என்று சிலர் கேட்கக்கூடும். அதற்கும் இந்த ஆய்வுக் குழுவின் தலைவர் கேட்டி கிர்ஷ் பதில் வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு அறையையும் 30 நிமிஷங்களுக்குள் சுத்தப்படுத்துகிறார்கள். படுக்கை விரிப்புகள்தலையணை உறைகள்போர்வைகள் ஆகியவற்றை தோய்க்க எடுத்துக்கொள்கிறார்கள். பாத்ரூம்டாய்லெட் உள்பட அறை முழுவதையும் "மாப்புபோட்டுத்தான் சுத்தப்படுத்துகிறார்கள். அதற்குப் பயன்படுத்தும் தண்ணீரில்தான் விசேஷமே அடங்கியிருக்கிறது. ஏதாவது ஓரிடத்தை முதலில் மெழுகும்போதே அதில் ஆயிரக்கணக்கான கிருமிகள் தொற்றிவிடுகின்றன. அதையே மீண்டும் மீண்டும் நீரில் நனைத்து மெழுகுகிறார்கள். மாப்பை அவர்கள் நல்ல நீரில் சுத்தம் செய்துஅழுக்குத் தண்ணியை ஹோட்டல் அறையின் கழிவுநீர்ப்பாதையில் கொட்டிய பிறகு அவர்கள் எடுத்துவரும் தள்ளுவண்டிக்கு இடம்பெயர்கின்றன கிருமிகள். அங்கு மட்டுமல்லாது பக்கெட்டிலும் மாப்பின் கைப்பிடியிலும் அடிப்பாகத்திலும்இண்டு இடுக்குகளிலும் இடம்பிடித்துவிடுகின்றன.
இதனால் கிருமிகள் எந்தக் குறையும் இல்லாமல் அந்த ஹோட்டலிலேயே வாசம் செய்கின்றன. அவற்றில் கணிசமானவை அங்கே தங்குபவர்களின் பெட்டிகள்பைகளில் ஏறி அவர்களுடைய ஊர்களுக்குச் சென்றுவிடுகின்றன. ஹோட்டலில் தங்குகிறவர்கள் அனைவருமே பாதிக்கப்பட வேண்டுமே என்று கேட்கலாம். அவர்களுடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்வரை கிருமிகள் அடக்கியே வாசிக்கும். சக்தி குறைந்தால் போட்டுப் பார்த்துவிடும்!

Read more...

பற்களைப் பாதுகாக்க செய்யக்கூடியதும், செய்யக் கூடாததும்

வெள்ளி, 25 மே, 2012


முகத்திற்கு அழகு சேர்ப்பது பல்லுதாங்க... இறந்த பின்னரும் மண்ணில் மக்கிப் போகமல் இருப்பது பல்லுதாங்க... பல்லில் ஏதாவது பிரச்னை என்றால் புற்றுநோய் வர வாய்ப்பு இருக்குதாங்க... பயமா இருக்கா... அப்ப பல் டாக்டர்கள் சொல்வதை கேளுங்க...

உடலில் உள்ள முக்கிய உறுப்பு பல். பற்களில் சிறு பிரச்னை ஏற்பட்டால், அது பற்களை மட்டும் இல்லாமல் உடலில் உள்ள மற்ற உறுப்புகளை பாதிக்கும். 

Common Boomer Dentition Issues   Severe Veneer Bonding Leakage

சில சமயம் புற்றுநோயாக மாறும் அபாயம் உண்டு. பல்லில் ஏற்படும் பொதுவான பிரச்சனை சொத்தை. இதை ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது பல் முழுதையும் பாதிக்கும். சிலசமயம் பல் இரண்டாக உடைந்து போகும். அப்போது, உடைந்த கூறான பல், நாக்கு மற்றும் கன்னப் பகுதியில் குத்தி காயம் ஏற்படும். 
Acid Destruction   Busted Broken Teeth 


இது புற்றுநோயாக மாறும் வாய்ப்பு உண்டு. பல் சொத்தையை வேர் வைத்தியம் செய்து, செராமிக் செயற்கை பல்லை பொருத்தலாம்.  பல்லின் அடுத்த பிரச்சனை பல்செட். இதை அணிபவர்கள் இருபத்து நாலு மணிநேரமும் பயன்படுத்தக்கூடாது. ஒரு நாளைக்கு பதினைந்து மணி நேரம் மட்டுமே அணியணும். இரவு படுக்கும் போதும் கண்டிப்பாக கழட்டணும். 

தொடர்ந்து அணிவதால், தடை எலும்பில் பாதிப்பு ஏற்படும்.  நம் வாயில் பலகோடி பாக்டீரியாக்கள் உள்ளன. பல் இடுக்கில் சிக்கிக் கொள்ளும் உணவுகளை சரியாக சுத்தம் செய்யாமல் இருந்தால், வாய் துற்நாற்றம், ஈறு பிரச்னை ஏற்படும். பாக்டீரியாக்கள் எச்சில் மூலமாக வயிற்றுக்கும் மற்ற உறுப்புக்கும் பரவும். 

இதனால் கண்கள் சிவப்பாகும், சருமத்தில் தேமல், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஒவ்வொரு முறை உணவு சாப்பிட்ட பிறகு வாயை நன்றாக தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். பல் சிறப்பாக இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றார்.


பல் ஆரோக்கியத்துக்கு டிப்ஸ்... 

செய்ய கூடியவை...

தினமும் காலை. இரவு இரண்டு வேளை பல் துலக்க வேண்டும்.

இரவு படுக்கும் முன் பல் இடுக்கில் உள்ள உணவு பொருட்களை பிளாஸ்‘, தண்ணீரால் சுத்தம் செய்யணும்.

பால் சார்ந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
பல்லில் பிரச்னை இருந்தால் உடனடியாக பல் நிபுணரை அணுக வேண்டும். 

செய்ய கூடாதவை...

பற்களில் ஒட்டிக் கொள்ளும் உணவு பொருட்களை தவிர்க்கவும்.பென்சிலை கடிப்பது மற்றும் பிளாஸ்டிக் மற்றும் நூல் போன்ற பொருட்களை பல்லால் கடித்து கிழிக்க கூடாது.
 புகை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்


ஆரோக்கியமான பற்களின் படங்கள்

 .

Read more...

பெண்கள் பாதுகாப்பு அவர்கள் கையில்தான் உள்ளது

வியாழன், 8 மார்ச், 2012


வீடே உலகம் என்று முடக்கப்பட்டுக் கிடந்த பெண்கள்  உலகமே வீடு என விசால அறிவோடு வெளிப்பட்டுள்ள இன்றைய காலத்திலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்தபடியே உள்ளன என்பது அவலகரமான உண்மையாகும்.

பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பெண்கள் முன்வந்துவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் மீதான வக்கிரத் தாக்குதல்கள் குறையவில்லை. அடுப்பங்கரையில் மட்டுமே அடைந்து கிடந்த பெண்கள் ஆட்சி மன்றங்களில் அடிபதித்திருக்கும் இந்த காலத்திலும் பெண் முன்னேற்றம், பெண் விடுதலை ஆகியவை குறித்த சரியான வரையறைகள் பெறப்படாமலே உள்ளன.

ஆண்களை விடக் குறைவான அளவில் பெண்கள் உடை உடுத்துவதும், ஒழுக்கச் சீர்கேடுகளில் ஆண்களையும் விட ஒருபடி மேலே நிற்பதும் தான் பெண் விடுதலையின் சின்னங்கள் என ஒரு சில பெண்ணியவாதிகள் பேசுவதும், எழுதுவதும் பெண்ணினத்தை பாதிப்புகளின் படுகுழியில் தள்ளியுள்ளன என்று சொன்னால் மிகையாகாது.

வீட்டு நிர்வாகப் பணிகளான சமையல், குழந்தை பராமரிப்பு, பெரியோரைப் பேணுதல் போன்ற பணிகளெல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் சின்னங்கள், வீட்டு வேலைகளை பெண்கள் செய்வதே இழிவு, வெளியிடங்களில் பணிபுரியச் செல்வதே பெண் விடுதலை என்று சில பெண்ணியவாதிகள் வேதாந்திகள் போல கூறி வருகின்றனர்.

தவிர்க்க இயலாத சூழல்களில் குடும்பத்தைத் தாங்கி நிறுத்தும் பொறுப்பு பெண்ணின் மீது சுமத்தப்படும் போது வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை யாரும் குறை கூற முடியாது. ஆடம்பர வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், பெண் விடுதலை என்ற நோக்கிலும், வலியச் சென்று வெளியிடங்களில் வேலைச் செய்வது பெண்களுக்குப் பெருந்தீமையாக அமைவதை அவர்கள் எண்ணிப் பார்க்க தவறி விடுகின்றனர்.

வீட்டு வேலைகளும், குழந்தை பராமரிப்பும், பெரியோரைப் பேணுதலும் இழிவான செயல்கள் அல்ல என்பதை பெண்கள் விளங்க வேண்டும். வீட்டு நிர்வாகம் செய்யும் பெண்கள் இல்லத்தரசியாகவும், வெளியிடங்களுக்குப் பணிக்குச் செல்கையில் ஆளுமைக்குட்பட்ட ஊழியராகவும் ஆகிவிடும் எதார்த்த நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தவிர்க்கவியலாத காரணங்களின்றி வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை பெண்கள் தவிர்ப்பது அவர்களின் நிம்மதிக்கு வழிகோலும். பணிக்குச் செல்லும் பெண்கள் பெரும்பான்மையாக பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதை இன்றைய புள்ளி விபரங்கள் துல்லியமாகக் கூறியுள்ளன.

பாலியல் சீண்டல்களுக்கு வக்கிரப் பார்வைகளே முழு முதற் காரணமாக அமைகின்றன. கண்ணியமான உடைகளே என்றும் பெண்களுக்கு முதல் பாதுகாப்பாகத் திகழும். எனவே இதை எல்லாப் பெண்களும் பின்பற்றினால் பெரும்பாலான பாலியல் வக்கிரங்கள் குறைந்துவிடும்.

கண்ணியமான ஆடைகளால் பெண்கள் தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும். அத்துமீறிச் சீண்டும் ஆண் வக்கிரர்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும், வீரத்தையும் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் தற்போது மிகவும் சுயமாகவும், சுதந்திரமாக செயல்பட தொடங்கியுள்ளனர். தினமும் பல்வேறு மனிதர்களை சந்திக்கின்றனர். தற்போது பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து, சினிமாவை பார்த்து  நவநாகரீகம் என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிகின்றனர். மேலும் சினிமாவில் பெண்களை ஆபாசமாக சித்திரிக்கின்றனர்.

ஆனால் இதை பார்த்து சில பெண்கள் நாகரிகம் என்று ஆபசமாக உடை அணிகின்றனர். பெண்கள் பாதுகாப்பு அவர்கள் கையில் உள்ளது என்பதை அவர்கள் உணருவதில்லை. பெண்கள் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி வேண்டுமானலும் உடை அணியலாம். ஆனால் வெளியில் செல்லும் போது நாகரிகம் என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிவதை தவிர்க்க வேண்டும். நாம் அணியும் உடை ஆண்களை தவறு செய்ய துண்டுவதாக இருக்க கூடாது. 

Read more...

லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கடந்த சில ஆண்டுகளாகலேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை,இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறதுலேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடுஅதிகரிப்பினால்இந்த கவலைக்கான காரணங்களையும்தீர்வுகளையும் பலரும் கண்டறிந்துவருகின்றனர்சில இடங்களில்லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால்தீ பிடித்ததகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தனடெல்சோனிஏசர் போன்ற நிறுவனங்கள்,தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தைவிரைவில் அடைந்ததனால்அவற்றை வாங்கிக் கொண்டுபுதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும்ஏற்பட்டன.
தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இதுகுறித்து இங்கு காணலாம்மோசமான பேட்டரிகளைத் தவிர்த்துலேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம்அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளனநாம் பயன்படுத்தும் அனைத்துஎலக்ட்ரானிக் பொருட்களுமேஅவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்துஅதில் கைகளை வைத்துப் பார்த்தால்இந்தவெப்பத்தின் தன்மையை அறியலாம்டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும்லேப்டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவுஇதனால்அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தைவெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள்சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டியசூழ்நிலையில் அமைகின்றனநெருக்கமாக இருப்பதனால்இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம்வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன்லேப்டாப் கம்ப்யூட்டர்களில்அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல்திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றனபதியப்படும் ஆப்பரேட்டிங்சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்கஇந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாகஇயக்குகின்றனஇதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும்அதனால் தான்,வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள்ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப்பயன்படுத்துகின்றனர்ஆனால்இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்றமுடியவில்லைவிசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால்வெப்பம்வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாகஉள்ளதுஎனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும்அதனை குளிரவைப்பதிலும் கவனம்செலுத்தினால்பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனைலேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால்உடனேகம்ப்யூட்டரைத் திறந்துஇயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும்சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும்பெரும்பாலும்இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாதுதிறந்தால்நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர்புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம்இந்த சாப்ட்வேர் புரோகிராம் களைலேப்டாப்கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமேஅதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.
காற்று துளைகளின் சுத்தம்வெப்பம் வெளியேறுவதற்காகஅமைக்கப்பட்டிருக் கும் காற்றுதுளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும்இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால்,வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாதுஎனவே சுத்தம் செய்வது அவசியம்.
பயாஸ் சோதனைநம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம்வெப்பம் உருவாவதனைஅறியலாம்இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம்என்பதற்குஉங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும்.சில நிறுவனங்கள்இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டிருப்பார்கள்.
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால்வெப்பம் உருவாவதனைத்தடுக்கலாம்வெப்பமானசூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரைஇயக்கக்கூடாதுஅதே போலமூடப்பட்ட கார்சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது.ரேடியேட்டர்கள்வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரைவைத்திருக்கக்கூடாதுஇந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும்நம் தொடைகளின் மீதுவைத்து இயக்குவது கூடாதுஇதனால்வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும்நம் உடலையும்இந்த வெப்பம் தாக்கும்மெத்தைகள்துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்துஇயக்குவதும் தவறு.
இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவெனசிறிய ஸ்டாண்டுகள் விற்பனைசெய்யப் படுகின்றனஇவற்றைப் பயன்படுத்தினால்நல்ல இடைவெளி கிடைப்பதனால்வெப்பம்வெளியேறுவது எளிதாகிறதுஇந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால்,வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.
லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாதுஎனவே வெப்பம் எளிதில்விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்கவேண்டும்மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினைவெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம்இந்த வழிகளை மேற்கொண்டால்வெப்பமானதுலேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets