உங்கள் வருகைக்கு நன்றி

பயன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயன்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகள்

வெள்ளி, 22 மார்ச், 2013

கோடை காலம் போல வெயில் கொளுத்துகிறது. வீட்டிற்குள்ளேயே அனல் அடிக்கிறது. இதற்கிடையே மின் தட்டுப்பாடு வேறு மக்களை படுத்தி எடுக்கிறது. எனவே வெப்பத்தில் இருந்து தப்பிக்க சில ஆலோசனைகளை கூறுகின்றனர் உள் அலங்கார நிபுணர்கள் படித்துப் பாருங்களேன்.
குளிர்காலத்தில் ஜன்னலை அடைத்து வைத்திருக்க வேண்டிய சூழல் இருந்திருக்கும். கோடையில் வீட்டிற்குள் காற்று நன்றாக வர ஜன்னல்கள், வீட்டு வாயில்களை அடைத்துக் கொண்டிருந்த பொருட்களை அகற்றுங்கள். ஜன்னல் கம்பிகளில் படிந்திருக்கும் ஒட்டடை, தூசுகளை சுத்தமாக துடைத்து விடுங்கள். சுத்தமான காற்று அதிகமாக வருவதற்கு வசதியாக இருக்கும்.
கோடைகாலத்தில் ஜன்னல் திரைச்சீலைக்களை தண்ணீரில் நனைத்துப்போடுங்கள். அதேபோல் பால்கனியில் துணியை தொங்கவிட்டு அதை மணிக்கு ஒருமுறை ஈரமாக்க வேண்டும். இதனால், வீட்டுக்குள் வரும் அனல் காற்று ஈரத் துணிகள் மூலம் குளிர்ச்சியாக மாறி விடும். தரையிலும் அவ்வப்போது ஈரத் துணியால் துடைக்கலாம். பால்கனி, ஜன்னல்களுக்கு வெட்டி வேரில் கிடைக்கும் பாயை தொங்க விட்டு அதை நனைத்தும் குளிர்ச்சியை பெறலாம்.
மின் விசிறிகள் அழுக்கேறி இருந்தால் காற்று குறைந்து விடும். எனவே, வாரம் ஒருமுறை மின் விசிறி இறக்கைகளை துடைத்து பராமரித்தால் அதிக காற்று கிடைக்கும். இது பவர் கட் காலம். எப்பொழுது கரண்ட் போகும் என்று கூற முடியாது. எனவே அடிக்கடி கரன்ட் கட் ஆவதால் கைமேல் பலனாக உதவுவது ஓலை விசிறிகளே. எனவே, கோடையில் இவற்றை பத்திரப்படுத்தி வையுங்கள். பனை ஓலை விசிறியை எளிதில் கிடைக்கும் இடத்தில் எடுத்து வையுங்கள். அத்துடன் அவற்றை பக்கெட் நீரில் ஒரு மணி நேரம் நனைத்து வைத்து விட்டு பயன்படுத்திப் பாருங்கள். இயற்கை ஏசியாக காற்று வரும்.
வீட்டு மொட்டை மாடியில் வெள்ளை பெயிண்ட் அடிக்கலாம். அதேபோல் கிழக்கு, மேற்கு பக்க ஜன்னல்களில் கண்ணாடிகள் இருந்தால் சன் கிளாஸ் ஒட்டலாம். வீட்டைச் சுற்றிலும் செடிகளை வளர்க்கலாம். வீட்டிற்குள் செடிகள் வளர்ப்பதால் பசுமையால் குளிர்ச்சி ஏற்படும்.

Read more...

சம்பாதிப்பதைப் பற்றியும், சேமிப்பதைப் பற்றியும் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுப்போம்

செவ்வாய், 26 ஜூன், 2012


பணத்தின் பயன்பாடு, அதன் தேவை, அதன் அருமை போன்றவைகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள். கல்வி என்பது பல வழிகளிலும் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும். அந்த கல்வி கிடைக்க காரணமாக அமையும் பணத்தைப் பற்றியும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதும் அவர்களின் அறிவுரையாகும்.
தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு கனவு இருக்கும். கல்வி, விளையாட்டு, இசை, மற்றும் இன்னபிற செயல்பாடுகளில் தம்மால் அடைய முடியாததை தம் குழந்தைகளை ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
பள்ளியில் கல்வி கற்பது அறிவு வளர்ச்சிக்கு, விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு. அந்த கல்விக்கும் விளையாட்டிற்கும் தேவையான பணம் பற்றியும் குழந்தைகளுக்கு கொஞ்சம் கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு பணத்தின் மீதான அருமை தெரியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பண்டைய காலங்களில் கல்வி முறையில் குழந்தைகளுக்கு பணத்தின் அருமையை உணர்த்தும் விதமான கல்வி கற்பிக்கப்பட்டது சிறிய வயதில் வந்து தங்கி பயிலும் மாணவன் கல்வி கற்று பெற்றோரிடம் செல்லும் போது அவன் கையாலேயே அளிப்பான். இதுதான் வழக்கம். இதன் மூலம் பணத்தின் அருமையும் அதன் தேவையும் சிறு வயதிலேயே உணர்ந்து கொள்ள முடியும். எனவே இன்றைய கல்வி முறை மாறிவிட்டது. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து லட்சம் லட்சமாக கொட்டி படிக்க வைக்கின்றனர். எனவே இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு பணத்தைப் பற்றி கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமையாகிறது.
எந்த முறைகளில் கற்பிக்கலாம்?
குழந்தைகளின் கையில் பணத்தைக் கொடுத்து எண்ணச் சொல்லலாம். இந்த பணத்தை சம்பாதிக்க எப்படி எல்லாம் போராடி வேண்டியிருக்கிறது எத்தனை மணிநேரம் உழைக்க வேண்டியிருக்கிறது என்பதையும் குழந்தைகளுக்கு கூறலாம். பணத்தின் மதிப்பையும் அதன் தேவையையும் கதைகள், விளையாட்டுக்கள் மூலம் குழந்தைகளுக்கு புரியவைக்கலாம்.
குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்க அவர்களின் கையில் பணத்தை கொடுத்து வாங்கி வரச்சொல்லலாம். மீதமுள்ள பணத்தை சேமிக்க கூறலாம்.
குழந்தைகள் வளர வளர அவர்களுக்கான தேவையும், செலவும் அதிகரிக்கிறது. ஒவ்வொரு மாதமும் அவர்களுக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து அவர்கள் எவ்வாறு செலவழிக்கிறார்கள் என்பதை கண்காணிப்பது அவசியம்.
பணத்தினால் ஏற்படும் லாப நஷ்ட கணக்குகளைப் பற்றியும் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் எதற்கு செலவழிக்க வேண்டும்? எதற்கு செலவழிக்கக் கூடாது என்பதை குழந்தைகள் உணர்ந்து கொள்வார்கள்.
சில சமயம் குழந்தைகளிடம் இருந்து பணத்தை கடன் வாங்கி சில நாட்கள் கழித்து அதற்கு அதிகாமாக் திருப்பி தரலாம். இதனால் பணத்தை முதலீடு செய்தால் அதன்மூலம் வருவாய் பெருகும் என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்வார்கள்.
பணம் பத்தும் செய்யும் என்பார்கள். அந்த பணத்தை சம்பாதிப்பதைப் பற்றியும், சேமிப்பதைப் பற்றியும் குழந்தை பருவத்திலேயே கற்றுக்கொடுப்பதன் மூலம் அவர்களின் பொறுப்புணர்வு அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

Read more...

மொபைலால் ஏற்படும் பாதிப்பு, அதனை தவிர்க்கும் முறைகளும்.

ஞாயிறு, 24 ஜூன், 2012

அன்றாட வாழ்வில் மொபைல் போன் பயன்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது. மொபைல் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்கக் கூட யாரும் தயாராக இல்லை. அதன் பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் தேவை. இல்லையென்றால் பல வித பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். 


கண்களை காத்துக் கொள்ளுங்கள்:* மொபைல் போன் திரை, கண்களை பாதிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (சி.வி.எஸ்.,) எனும் நோய் தாக்குகிறது.
*
அமெரிக்காவில் சராசரியாக ஒருவர் தினமும் குறைந்தது மூன்று மணி நேரம் மொபைல் திரையை பார்க்கிறார்.


சி.வி.எஸ்.,சின் அறிகுறிகள்:கண்கள் வறண்டு போதல்: சாதாரணமாக ஒரு நிமிடத்துக்கு 16-20 முறை கண்களை சிமிட்டுவோம். ஆனால் மொபைல் போன்களை பார்க்கும் போது 6-8 முறைதான் சிமிட்டுகிறோம்.


தலைவலி: கழுத்தை சாய்த்து வைத்துக் கொண்டு, கண்களை வருத்தி மொபைல் திரைகளை பார்ப்பதால் தலைவலி ஏற்படும்.
பார்வை மங்குதல்: தொடர்ந்து திரைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, பார்வை மங்கலாகும். பின் அதுவே நிரந்தரமாகும்.


கிட்டப் பார்வை: மொபைல் போன் திரையினால், கிட்டப் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
*
குறைபாடை சரி செய்ய கண்ணாடி அணிதல், கான்டாக்ட் லென்ஸ் பொருத்துதல், லேசர் அறுவை சிகிச்சை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.
* 2
கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் கான்டாக்ட் லென்சை பயன்படுத்துகின்றனர்.
*
ஆண்டுதோறும் சுமார் 7 லட்சம் அமெரிக்கர்கள், லேசர் கண் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.


கண்களை காக்க...:* அடிக்கடி கண் சிமிட்டுங்கள்
*
பாதுகாப்புக்காக சன் கிளாஸ் அணியுங்கள்
*
விழிகளை சுத்தம் செய்யும் மருந்துகளை பயன்படுத்துங்கள்


காதுகளுக்கு ஏற்படும் பாதிப்பு:தொடர்ந்து மொபைலில் பேசும் 37 சதவீதம் பேருக்கு காதிரைச்சல் நோய் ஏற்படுகிறது. மொபைலில் பேசாத நேரங்களிலும் காதில் முணுமுணப்பு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
*
மொபைலில் பத்து நிமிடத்திற்கு மேலாக தொடர்ந்து பேசுவோருக்கு காதிரைச்சல் ஏற்பட 71 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.
*
காதிரைச்சல் நோயை சரி செய்யவது கடினம்.


காதிரைச்சலை தவிர்க்க...:* அதிகப்படியான ஒலியைக் கேட்கக் கூடாது. உப்பு, காபியின் அளவை குறைக்க வேண்டும். புகைக்கக் கூடாது. வேலைப்பளுவால் ஏற்படும் சோர்வை தவிர்க்க வேண்டும்.
*
எளிய உடற்பயிற்சி செய்யவும். ரத்த அழுத்தத்தை சீராகவும், மனஅழுத்தம் இல்லாமல் இருக்கவும்.


கவனமாக இருங்கள்:* 40, 50 வயதில் வரும் பிரச்னைகள், தற்போது 15 வயதிலே ஏற்படுகிறது. இதற்கு கம்யூட்டர், மொபைல் போன்களை அதிகம் பயன்படுத்துவதும் முக்கிய காரணம்.
*
மொபைலில் "டைப்' செய்யும் போது 91 சதவீதம் பேர் அளவுக்கு அதிகமாக கழுத்தை சாய்க்கின்றனர். இதனால் கழுத்துவலி ஏற்படுகிறது.
* 10-20
சதவீதம் பேர், மொபைல், கம்ப்யூட்டரை அதிக நேரம் பயன்படுத்துவதால், பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
*
இடைவெளி எடுங்கள்
* "
வார்ம் அப்' செய்யவும்
*
தினமும் உடற்பயிற்சி செய்யவும்
*
அதிகம் நீர் அருந்தவும்


தூக்கத்தை கெடுக்கும் மொபைல்:* மொபைல் போனை உபயோகிப்போருக்கு தூக்கம் வர 6 நிமிடம் தாமதமாகிறது. ஆழ்ந்த தூக்கத்தையும் பல நிமிடங்கள் மொபைல் போன் தடுக்கிறது.
*
பத்து ஆண்டுகளுக்கும் மேல் மொபைல் உபயோகிப்போருக்கு, அதிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சினால், மூளைக் கட்டிகள் ஏற்பட 50 சதவீத வாய்ப்பு உண்டு.
*
ஒரு வகை நரம்பு புற்றுநோய், மூளைப்புற்று நோய் ஆகியவை மொபைல் போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சால் ஏற்படும் என கண்டறிப்பட்டுள்ளது.
*
அதிகப்படியான வேலைப்பளுவை குறைக்கவும்.
*
படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பே, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
*
முடிந்தவரை "ஹெட் போனை' பயன்படுத்தவும்.
*
தூங்கும் போது மொபைலை தலை யிலிருந்து குறைந்தது 98 இன்ச் தள்ளி வைக்கவும்.
கவனத்தை சிதற வைக்கும் மொபைல்
*
போதையில் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் பாதிப்பை விட, மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டும் போது, நான்கு மடங்கு அதிகமாக விபத்து ஏற்படும்.
*
மொபைலில் "டைப்' செய்து கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு 23 மடங்குக்கும் அதிகமாக விபத்து ஏற்படும்.


விபத்தை தவிர்க்க...:* வாகனத்தை ஓட்டும் போது அவசியமாக பேசியாக வேண்டிய கட்டாயத்தில் "ஹேண்ட்ஸ் பிரீயை' பயன்படுத்தலாம்.
*
டிரைவிங்கின் போது மொபைலை "வைப்ரேஷனில்' வைக்கவும்.
மொபைல் போன் தகவல் தொடர்பை எளிதாக மாற்றியுள்ளது. அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டால், இழப்புகளை தவிர்த்து பயன் பெறலாம்.

Read more...

மொபைல் ஃபோனை பயன்படுத்துவதி கவனமாக இருங்கள்

ஞாயிறு, 17 ஜூன், 2012


மொபைல் போன் நம் மூன்றாவது கரமாக மாறிவிட்ட நிலையில், பலரும் அதனை எப்படிப் பயன்படுத்தக் கூடாதோ, அந்த வழிகளில் பயன் படுத்தி வருகின்றனர். பல முறை, அரசு மற்றும் நிறுவனங்களால் எச்சரிக்கை செய்தும், இந்த கூடா பழக்கங்கள் தொடர்ந்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, மொபைல் பேசிக் கொண்டே, ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் சாலைகளைக் கடந்து சென்று விபத்தில் சிக்கி மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேல் இருப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. காய மடைந்து நிரந்தர ஊனம் முற்றவர்களின் எண்ணிக்கை இதனைக் காட்டிலும் அதிகம்.
இந்த இழப்புடன், சமுதாய ரீதியாக மொபைல் போனில் பேசும்போது மேற் கொள்ளப்படும் பழக்க வழக்கங்கள், பலருக்கும் எரிச்சல் ஊட்டுவதாக உள்ளது. கீழே தரப்பட்டுள்ள சில பழக்கங்களை நீங்கள் பயன்படுத்தி வருபவராக இருந்தால், உடனடியாக அவற்றை விட்டுவிடுவது நல்லது.
கடை ஒன்றில் பணம் செலுத்தும் கவுண்ட்டர் அருகே சென்ற பின்னர், சாலைகளில் டோல் கேட்டில் பணம் செலுத்தக் காத்திருந்து உங்கள் முறை வரும்போது, போனில் பேசுவதிலும், டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டாம். பணம் பெறுபவர் மட்டுமின்றி, உங்களுக்குப் பின்னால், பணம் செலுத்த காத்திருப்பவர்களின் கோபத்திற்கு ஆளாவீர்கள். சில நிமிடங்கள் உங்களுடன் பேசுபவரோ, அல்லது உங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் காத்திருக்கலாமே.
டெக்ஸ்ட் மெசேஜ் அமைப்பது மற்றும் மின்னஞ்சல் செய்திகளை வாசிப்பது போன்ற வற்றை, சாலையில் நடக்கும்போது அல்லது படிகளில் இறங்கி வரும்போது மேற்கொள்ள வேண்டாம். நிச்சயம் விபத்தில் தான் இது முடியும். காரணமாயிருப்பவர் நீங்கள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் அப்பாவிகளையும் இது பாதிக்கும். ஒரு சிலர், தாங்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டுகையில் இது போல அபாயகரமான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இது அறவே தவிர்க்க வேண்டிய ஒன்று.
மொபைல் போனில் கேம்ஸ் விளையாடு கையில், வீடியோ காட்சிகளைக் காண்கையில், பொது இடங்களில் ஸ்பீக்கர்களை இயக்கியவாறு இருப்பது மற்றவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஹெட் செட் மாட்டி, உங்களுக்கு மட்டும் கேட்கும்படி வைத்துக் கொண்டு விளையாடலாம்; வீடியோ பார்க்கலாம்.
கழிப்பறைகளில் மொபைல் பயன் படுத்துவதனைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் பலர் இருக்கின்றனர். நீங்கள் எங்கிருந்து, என்ன செய்து கொண்டு பேசுகிறீர்கள் என்பதனை அடுத்த முனையில் உங்களுடன் பேசுபவர் தெரிந்து கொண்டால், உங்களைப் பற்றி நிச்சயம் தாழ்வாகத்தான் எண்ணுவார். சிறிது நேரம் கழித்து, இந்த அழைப்புகளை வைத்துக் கொள்ளலாமே.
சிலர், மற்றவர்களுடன் இருக்கையில், தங்களுக்கு அழைப்பு வந்த மாதிரி பேசிக் கொண்டிருப்பார்கள். இது மற்றவர்களிடம் உங்களுக்கு மதிப்பை ஏற்படுத்தாது. நம்மைக் காட்டிலும் வேறு ஒருவரே முக்கியமானவர் என நீங்கள் கருதுவதாக அவர்கள் எண்ணலாம். எனவே, பொய்யான இந்த செயல்பாட்டினைத் தவிர்க்கலாமே.

Read more...

செம்பருத்தி பூ - பலன் மற்றும் பயன்கள்

சனி, 3 டிசம்பர், 2011


மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள், ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.  செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள், தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.  அதன் விவரம்: 

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 

Read more...

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets