உங்கள் வருகைக்கு நன்றி

லேப்டாப் கம்ப்யூட்டரின் வெப்பம் தடுக்க

வியாழன், 23 பிப்ரவரி, 2012

கடந்த சில ஆண்டுகளாகலேப்டாப் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வெப்பம் குறித்த கவலை,இவற்றைப் பயன்படுத்து வோரிடையே அதிகரித்து வருகிறதுலேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடுஅதிகரிப்பினால்இந்த கவலைக்கான காரணங்களையும்தீர்வுகளையும் பலரும் கண்டறிந்துவருகின்றனர்சில இடங்களில்லேப்டாப் கம்ப்யூட்டர்கள் கூடுதல் வெப்பத்தினால்தீ பிடித்ததகவல்களும் மக்களை அதிர்ச்சி அடையச் செய்தனடெல்சோனிஏசர் போன்ற நிறுவனங்கள்,தாங்கள் விற்பனை செய்த லேப்டாப் கம்ப்யூட்டர் களில் உள்ள பேட்டரிகள் அதிக வெப்பத்தைவிரைவில் அடைந்ததனால்அவற்றை வாங்கிக் கொண்டுபுதிய பேட்டரிகளைத் தந்த நிகழ்வுகளும்ஏற்பட்டன.
தமிழகத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் நாமும் இதுகுறித்து இங்கு காணலாம்மோசமான பேட்டரிகளைத் தவிர்த்துலேப்டாப் கம்ப்யூட்டர்கள் வெப்பம்அதிகமாக வெளிப்படுத்துவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளனநாம் பயன்படுத்தும் அனைத்துஎலக்ட்ரானிக் பொருட்களுமேஅவை இயங்கத் தொடங்கியவுடன் வெப்பத்தை வெளியிடுகின்றன.ஒரு டிவிடி பிளேயர் இயங்கிய சில நிமிடங்கள் கழித்துஅதில் கைகளை வைத்துப் பார்த்தால்இந்தவெப்பத்தின் தன்மையை அறியலாம்டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும்லேப்டாப்கம்ப்யூட்டர்களில் இடம் மிகக் குறைவுஇதனால்அதில் வைக்கப்பட்டுள்ள வெப்பத்தைவெளிப்படுத்தும் எலக்ட்ரானிக் பொருட்கள்சிறிய இடத்தில் நெருக்கமாக வைக்கப்பட வேண்டியசூழ்நிலையில் அமைகின்றனநெருக்கமாக இருப்பதனால்இவற்றிலிருந்து வெளிப்படும் வெப்பம்வெளியேற மிகக் குறைந்த இடமே கிடைக்கிறது.
அடுத்த பிரச்னை இயக்க திறன்லேப்டாப் கம்ப்யூட்டர்களில்அதிக வேகத்தில் இயங்கும் கூடுதல்திறன் கொண்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பொருத்தப்படுகின்றனபதியப்படும் ஆப்பரேட்டிங்சிஸ்டங்களும் அவை வேகமாக இயங்கஇந்த எலக்ட்ரானிக் பொருட்களை கூடுதலாகஇயக்குகின்றனஇதனால் அதிக வெப்பம் உருவாகிறது.
லேப்டாப் கம்ப்யூட்டரைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் இது தெரியும்அதனால் தான்,வெப்பத்தினை வெளியேற்றும் வகையில் சிறிய விசிறிகள்ஹீட் ஸிங்க் எனப்படும் தகடுகளைப்பயன்படுத்துகின்றனர்ஆனால்இவற்றால் முழுமையாக வெப்பத்தினை வெளியேற்றமுடியவில்லைவிசிறிகள் காலப் போக்கில் வேகம் குறைந்து இயங்குவதால்வெப்பம்வெளியாவதில் பிரச்னை ஏற்படுகிறது.
பொதுவாக லேப்டாப்பில் ஹார்ட்வேர் பிரச்னை ஏற்பட இந்த வெப்பம் அடிப்படை காரணமாகஉள்ளதுஎனவே இந்த வெப்பத்தினை வெளியேற்றுவதிலும்அதனை குளிரவைப்பதிலும் கவனம்செலுத்தினால்பல பிரச்னைகள் ஏற்படுவதனை முன்கூட்டியே தடுக்கலாம்.
விசிறிகள் சோதனைலேப்டாப்பில் அதிக வெப்பம் உருவாகிறது என்று தெரிந்தால்உடனேகம்ப்யூட்டரைத் திறந்துஇயக்கத்தின் போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து விசிறிகளும்சரியாக அதன் அதிக பட்ச வேகத்தில் இயங்குகின்றனவா எனச் சோதிக்க வேண்டும்பெரும்பாலும்இவற்றை நாம் திறந்து பார்க்க இயலாதுதிறந்தால்நிறுவனங்கள் வாரண்டி ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்எனவே விசிறிகள் இயக்கத்தினைக் காட்ட இணையத்தில் கிடைக்கும் சாப்ட்வேர்புரோகிராம்களைப் பயன்படுத்தி அறியலாம்இந்த சாப்ட்வேர் புரோகிராம் களைலேப்டாப்கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமேஅதன் இணைய தளத்தில் கொண்டிருக்கலாம்.
காற்று துளைகளின் சுத்தம்வெப்பம் வெளியேறுவதற்காகஅமைக்கப்பட்டிருக் கும் காற்றுதுளைகளை அடிக்கடி கவனிக்க வேண்டும்இவற்றில் தூசு படிந்து அடைத்துக் கொண்டிருந்தால்,வெப்பம் விரைவாக வெளியேற்றப்பட மாட்டாதுஎனவே சுத்தம் செய்வது அவசியம்.
பயாஸ் சோதனைநம் பயாஸ் செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதன் மூலம்வெப்பம் உருவாவதனைஅறியலாம்இந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இதனை மாற்றலாம்என்பதற்குஉங்கள் லேப்டாப் கம்ப்யூட்டர் தயரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்கவும்.சில நிறுவனங்கள்இந்த பயாஸ் அமைப்பினையும் அப்டேட் செய்து புரோகிராம்களை வெளியிட்டிருப்பார்கள்.
பொதுவான சில பழக்கவழக்கங்களையும் நாம் மேற்கொண்டால்வெப்பம் உருவாவதனைத்தடுக்கலாம்வெப்பமானசூரிய ஒளிபடும் இடத்தில் வைத்து லேப்டாப் கம்ப்யூட்டரைஇயக்கக்கூடாதுஅதே போலமூடப்பட்ட கார்சிறிய அறை ஆகியவற்றில் இயக்கக் கூடாது.ரேடியேட்டர்கள்வெப்பம் வெளியேறும் இடங்கள் அருகே லேப்டாப் கம்ப்யூட்டரைவைத்திருக்கக்கூடாதுஇந்த கம்ப்யூட்டரை லேப்டாப் என அழைத்தாலும்நம் தொடைகளின் மீதுவைத்து இயக்குவது கூடாதுஇதனால்வெப்பம் வெளியேறும் வழிகள் தடைபடும்நம் உடலையும்இந்த வெப்பம் தாக்கும்மெத்தைகள்துணிவிரிப்புகள் ஆகியவற்றின் மீது இவற்றை வைத்துஇயக்குவதும் தவறு.
இப்போது லேப்டாம் கம்ப்யூட்டர்களை வைத்து இயக்கவெனசிறிய ஸ்டாண்டுகள் விற்பனைசெய்யப் படுகின்றனஇவற்றைப் பயன்படுத்தினால்நல்ல இடைவெளி கிடைப்பதனால்வெப்பம்வெளியேறுவது எளிதாகிறதுஇந்த ஸ்டாண்டுகள் அலுமினியத்தினால் செய்யப்பட்டிருந்தால்,வெப்பத்தினை அது எடுத்துக் கொள்ளும்.
லேப்டாப் கம்ப்யூட்டரில் வெப்பம் உருவாவதனைத் தடுக்க முடியாதுஎனவே வெப்பம் எளிதில்விரைவாக வெளியேற்றப்படும் வழிகளை நாம் நம் பழக்கத்தின் மூலம் தடுக்காமல் இயங்கவேண்டும்மேலும் கூடுதல் துணை சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பத்தினைவெளியேற்றுவதனை விரைவுபடுத்தலாம்இந்த வழிகளை மேற்கொண்டால்வெப்பமானதுலேப்டாப் கம்ப்யூட்டரின் பாகங்களைத் தாக்குவதனைத் தடுக்கலாம்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets