சர்க்கரை நோயும், வலிகளும்
வெள்ளி, 17 பிப்ரவரி, 2012
சர்க்கரை நோய் வந்துவிட்டது என்கிற உண்மையே வலியும், வேதனையும் தருகிற விஷயம் என்கிற நிலையில், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டோருக்கு உண்டாகிற நரம்பு சம்பந்தப்பட்ட வலிகள் இன்னும் வேதனையானவை. சர்க்கரை நோய் பாதித்தோருக்கு உண்டாகிற நரம்பு வலிகள், காரணங்கள், தீர்வுகள்.
கால் எரிச்சல், ஒருவித மதமதப்பு, மின்சாரம் தாக்கின மாதிரி சுளீர்னு ஒரு வலி, சாதாரணமா தொட்டா கூட வலியை உணர்வது, சின்னதா ஆரம்பிக்கிற வலி, கொஞ்சம், கொஞ்சமா அதிகமாகிறது... இந்த எல்லா அறிகுறிகளும் சர்க்கரை நோய் பாதித்தவங்களுக்கு இருக்கும். தவிர கால் மரத்து புண் உண்டாகிறது, சில சமயங்கள்ல கிருமி நோய் ஏற்பட்டு, விரல்களையோ, கால்களையோ கூட வெட்டி எடுக்க வேண்டிய கட்டம் வரை இந்த வலி அபாயமானது.
சர்க்கரை நோய் பாதிச்சவங்களுக்கு எல்லா நரம்புகள்லயும் பாதிப்பு ஏற்படலாம். கால் எரிச்சல், உடம்பு முழுக்க ஒருவிதமான எரிச்சல், கை வலி, தசை வலிகளை அதிகமா உணர்வாங்க. வலியோட இருக்கிற பாதிப்பை விட, வலியில்லாத புண்கள் இன்னும் ஆபத்தானவை. தொற்று நோய் ஏற்பட்டு, அதன் விளைவா, உடல் அவயங்களை இழக்கற நிலை ஏற்படலாம். அதனால வலியில்லாத புண்களை அலட்சியப்படுத்தவே கூடாது.
சர்க்கரையை கட்டுப்பாட்டுல வச்சுக்கிறதுதான் எல்லா பாதிப்புகளுக்கும் தீர்வு. சாதாரண மனிதர்களைவிட இவங்க கை, கால்களை அதிகபட்ச சுத்தத்தோட பராமரிக்கணும். ரொம்ப முக்கியமா கை, கால்கள்ல அடிபடாம கவனமா இருக்கிறதும், அடிபட்டா, உடனடியா சிகிச்சை எடுத்துக்கிறதும் அவசியம்.
எல்லாத்தையும் மீறி, தீவிர வலியால அவதிப்படறவங்க. வலி நிர்வாக மருத்துவரோட ஆலோசனையின் பேர்ல சில வகை மருந்துகளை எடுத்துக்கலாம். தேவைப்பட்டா வலி ஏற்படுத்தும் நரம்புகளை சில மருந்துகள் மூலமா கட்டுப்படுத்தியும், வலியைக் குறைக்கச் செய்யலாம். தவிர உடம்பில் தடவக் கூடிய சில மருந்துகளும் உதவும்.

நன்றி - டாக்டர் குமார்.