உங்கள் வருகைக்கு நன்றி

தவ்ஹீத் ஜமாத் சொன்னதை உண்மைப் படுத்தும் மம்தா பானர்ஜி !

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

மக்களை எந்த வகையிலும் ஏமாற்றவே கூடாது என்பதில் உறுதியை கடைபிடித்தும், மக்களுக்கு தொல்லைதரும் எதையுமே செய்யக்கூடாது என்பதில் மிககவனத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் கடைபிடிக்க முயற்ச்சிக்கும் TNTJ சாலமறியல் போன்ற போராட்டங்களை நடத்தக்கூடாது என்று கொள்கையாகவே கொண்டு உயிர் மூச்சுடன் செயல்படுகிறது. 

சாலை மறியலை இஸ்லாம் அனுமதிக்கிறதா ?
இங்கே சொடுக்கவும் 
----------------------
TNTJ தீவிரவாதத்தை ஏன் ஆதரிப்பதில்லை
இங்கே சொடுக்கவும் 
2. http://www.youtube.com/watch?v=YXgArZp
                            ----------------------
எதிர்கட்சியாக இருந்தபோது தினமும் ஒரு சாலைமறியல் போன்ற போராட்டங்களை செய்துவந்த மம்தாபானர்ஜி, இப்போது ஆளும்கட்சியாக இருக்கும் போதுதான், இது எவ்வளவு தவறான மக்களை சிரமத்தில் ஆழ்த்தும் செயல் என்று உணர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கிறார். 

தப்பு செய்தவர்கள் மன்னிப்பு கேட்பது இந்தக் காலத்தில் பெரிய விஷயம். அதிலும் ஆளும் கட்சியாக இருக்கும் அரசியல்வாதிகள் கேட்பது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாத விஷயம். ஆனால் மன்னிப்பு கேட்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. கடந்த காலத்தில் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்ததற்கும் கடையடைப்பு செய்ததற்கும் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார்.


மத்தியமாநில அரசு ஊழியர்கள்வங்கிப் பணியாளர்கள்ஆட்டோபஸ் தொழிலாளர்கள் என பல தரப்பினரும் தனியார் மயம்புதிய பென்ஷன் கொள்கைகளை எதிர்த்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்று வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். இதில் பங்கேற்கக் கூடாது என மேற்கு வங்க மக்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார் மம்தா. கடந்த ஆட்சியாளர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்தனர். அதனால் ஸ்டிரைக் வெற்றியடைந்தது. 

¢ப்போது அரசு ஊழியர்கள் யாராவது பணிக்கு வராமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை காத்திருக்கிறது. பஸ்ரயில்ஆட்டோடிராம் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். தடுத்தால் அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அவர். கடந்த காலங்களில் நீங்கள் ஸ்டிரைக் செய்யவில்லையா என யாராவது கேட்டு விட்டால்...அதற்கும் பதில் சொல்லியிருக்கிறார் அவர். திரிணாமுல் கட்சியும் கடந்த காலத்தில் ஸ்டிரைக் செய்துள்ளது. 

அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஸ்டிரைக்கால் தினக் கூலிகள் எத்தனையோ பேர் வேலை இல்லாமல்வருமானம் கிடைக்காமல் கஷ்டப்பட்டது தெரிய வந்ததும்  2 ஆண்டுகளாக ஸ்டிரைக் செய்யவே இல்லை. மேலும் ஸ்டிரைக் மூலம் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் தெரிந்து கொண்டோம் என்கிறார் அவர்.

வங்கி ஊழியர்அரசு ஊழியர்கள் வேலைக்கு போகாவிட்டால் பிரச்னை இல்லை. தனியார் ஊழியர்களுக்கும் தினக் கூலிகளுக்கும் அப்படியில்லை. அவர்களுக்கு வருமானம் மட்டுமல்லபல நேரங்களில் வேலையே போய்விடும். இந்த வேலை நிறுத்தத்தால் அவர்களுக்கு எந்த வகையிலும் லாபம் இல்லை எனும்போதுபல ஆயிரம் கோடி உற்பத்தி இழப்புவருமான நஷ்டம்,போக்குவரத்து முடக்கம் என பாதிப்பை மட்டும் அனுபவிக்க வேண்டும் எனச் சொல்வது எந்த விதத்திலும் நியாயமில்லை.


சாலை மறியலை இஸ்லாம் அனுமதிக்கிறதா ?
இங்கே சொடுக்கவும் 
------------------------------
TNTJ தீவிரவாதத்தை ஏன் ஆதரிப்பதில்லை
இங்கே சொடுக்கவும் 
2. http://www.youtube.com/watch?v=YXgArZpASvE
------------------------------

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets