வன்முறையில் ஈடுபடும் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்
வியாழன், 9 பிப்ரவரி, 2012
மாணவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...இதை ஒரு கவுரவப் பிரச்னையாக்கி, காவல் துறையிடம், "மல்லு' கட்டாமல், தங்கள் படிப்பில் கவனம் செலுத்தி, தலைசிறந்த குடிமகன்களாக மாற வேண்டும்.
பஸ்தின கொண்டாட்டங்களில் மாணவர்கள் இறங்கியுள்ளனர். ஒரு கல்லூரி, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் வெற்றி பெற்றால், நாமும் அது போல் பயிற்சி எடுத்து, பதக்கம் வெல்ல வேண்டும் என துடிப்பதில் அர்த்தம் உண்டு.ஆனால், "அவர்கள் பஸ் தினம் கொண்டாடிவிட்டனர்; நாமும் கொண்டாட வேண்டும்' என, மாணவர்கள் நினைப்பது, அர்த்தமற்ற, அவசியமற்ற, தேவையற்ற, குறிக்கோளற்ற, சிந்தனையற்ற செயல்.
பஸ் டே இந்த பஸ் டே" என்ற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகமும், ரவுடிசமும் கொஞ்சம் நஞ்சமல்ல. "பஸ் டே" அன்று அவர்கள் கற்கும் அந்த ரவுடிச பாடத்தைதான் பிற்காலத்தில் தன்னுடைய வாழ்க்கையிலும் பயன்படுத்த ஆரம்பித்து விடுகிறார்கள. எவன் நம்மை கேள்வி கேட்பான், கேள்விகேட்க முடியும் என்ற அந்த சமுகவிரோத போக்கும், எவன் எக்கேடுகெட்டு போனால் எனக்கென்ன எனக்கு என் மகிழ்ச்சிதான் முக்கியம் என்ற அந்த சமுதாயத்தின் மீது அக்கறை இல்லாத போக்கும் அவர்கள் கற்கும் இடம் அந்த பஸ் டே கொண்டாட்ட பேருந்தில்தான்.
பஸ் டே" தினத்தன்று அவர்கள் கற்றுக்கொண்ட ரவுடிச பாடத்தை அதற்கு பிந்தைய நாட்களிலும் இப்படி செய்தால் தான் தங்களுடைய ஹீரோயிசம் வெளிப்படுவதாக நினைத்துக்கொண்டு பேருந்தின் மீது ஏறுவதும், பேருந்தில் தாளம் தட்டுவதுமாக பொதுமக்களை பயமுறுத்தி, பேருந்தை சேதப்படுத்தி வருகின்றனர்.
இவர்கள் பயணிக்கும் பேருந்தில் ஏதேனும் இளம்பெண்கள் ஜென்னல் ஓரம் அமர்ந்துவிட்டால் வேண்டும் என்றே அந்தப்பெண்ணுக்கு அருகில் இருக்கும் பேருந்து தகட்டின் மீது வேகமாக தாளம் தட்டுவது, அந்த பெண்ணின் காதுக்கு நேராக உ..... ஆ.... என்று கத்துவது என்று இவர்கள் செய்யும் அராஜகம் கொஞ்சம் நஞ்சம் அல்ல. இவர்கள் அராஜகத்தை பேருந்து நடத்துனர் தட்டிக்கேட்டு விட்டால் போதும் அவ்வளவுதுதான் அன்று அவருடைய மரியாதை அந்த கல்லூரி மாணவ ரவுடிகள் பேருந்தில் இருந்து இறங்கும் வரை.
இதற்க்கெல்லாம் நம்மை யார் என்ன செய்துவிட முடியும் என்று நினைப்பதால்தான் சிறு தவறில் ஆரம்பித்து பல பெரிய பாதிப்புகளில், தவறுகளில் கொண்டு போய் விடுகிறது. இதுபோன்ற அராஜகங்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கினால்(தாக்கினால்) தான் இவர்கள் திருந்துவார்கள். அப்படி பார்க்கும்போது போலீசார் அந்த மாணவர்களை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தயவு செய்து அதை தடுக்கும் நோக்கில் மதம், ஜாதி, தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர், இடத்தகராறு, முதலாளி ஆதாரவு என்று அந்த ரவுடிச மாணவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டாம்.
சரியோ தவறோ எங்களை எவனும் எதுவும் செய்ய முடியாது என்று நினைத்துக்கொண்டு இருக்கும் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ரவுடிசம் செய்துக்கொண்டிருக்கும் கல்லூரி ரவுடிகளுக்கும் போலீசார் அடித்தது முதல் சவுக்கடியே!.கடைகளில் இருந்து குளிர்பான பாட்டில்களையும், பொருட்களையும் எடுத்து சூறையாடுவது எந்தவகையிளும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். நஷ்டப் பட்ட வியாபாரிகளுக்கு இவர்களால் என்ன உதவியை செய்யப் போகிறார்கள். அவர்களின் கண்ணீருக்கு காரணமான இவர்களை சும்மா விடக்கூடாது. இனியாவது திருந்தட்டும்!. பிறகு கல்லூரியை பற்றியும், பாரம்பரிய இடத்தை பற்றியும் பேசட்டும்.
இப்படிச் செய்யலாமே
கொண்டாட்டங்கள் என்பது, பல்வேறு தரப்பினரிடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கு, ஒரு காரணியாக அமைய வேண்டும் என்பது தான் பொது நியதி. ஆனால், "பஸ் டே' போன்ற கொண்டாட்டங்கள், வன்முறையைத் தூண்டுவதாக அமைவது, மனதுக்கு வேதனையளித்து, அதன் நோக்கத்தில் சந்தேகத்தை எழுப்புகின்றன. இந்த கொண்டாட்டத்தால், வயதான மற்றும் கைக்குழந்தையுடன், பஸ்சில் பயணம் செய்யும் பெண்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர் என்ற செய்தி, நம்மிடையே கலக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பொதுச் சொத்துக்களும் சேதமடைகின்றன. மாணவ சமுதாயம், தங்கள் செயல்களால் தோன்றும் விபரீத விளைவுகளைப் பற்றி சற்று சிந்தித்து, ஆராய வேண்டும். அதற்குரிய சூழ்நிலையை உருவாக்கித் தருவது, கல்லூரி நிர்வாகங்களின் பொறுப்பு. இம்மாதிரி நிகழ்வுகளில் ஏற்படும் அசம்பாவிதங்களை படம் பிடித்து, ஒவ்வொரு கல்லூரியிலும் திரையிட்டு, அதை மாணவர்களிடையே விவாதத்திற்கு உட்படுத்தினால், அது அவர்களிடையே நல்ல மன மாற்றத்திற்கு வழிவகுக்கும். அந்த விவாதங்களில், காவல் மற்றும் போக்குவரத்துத் துறையினரும் கலந்து கொள்வது அவசியம். தாங்கள் தினமும் பயணம் செய்யும் பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களில், சிறந்தவர்களை ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து, அவர்களை தங்கள் கல்லூரிகளுக்கு வரவழைத்து, கவுரவித்து, பாராட்டி பரிசுகள் வழங்கும் முறையை, "பஸ் டே' கொண்டாட்டமாக மாணவர்கள் கடைபிடிக்க ஆரம்பிக்கலாம். இதனால், மாணவர்களுக்கும், போக்குவரத்து துறையினருக்கும் இடையே நல்லிணக்கம் வலுப்படும் என்பது உறுதி.