உங்கள் வருகைக்கு நன்றி

எதிர்காலத்தில் கம்ப்யூட்டரால் செய்ய முடியாத பணிகளுக்கே நல்ல வாய்ப்புகள்!

புதன், 22 பிப்ரவரி, 2012


இன்று பட்டப் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களில் அறிவியல் மற்றும் கணிதம் படித்தவர்களுக்கே அதிக வேலை வாய்ப்பு உள்ளது என்ற ஒரு கருத்து பொதுவாக நிலவுகிறது. நீங்கள் தற்போதுதான் கல்லூரிப் படிப்பை வேறு புலத்தில் முடித்தவராக இருந்தாலும் சரிகல்லூரிப் பருவத்தில் காலெடுத்து வைக்கப் போகின்றவராக இருந்தாலும் சரிஇதைக் கவனமாகப் படிக்கலாம்.
இன்றைய மாணவர்களுக்கு முதலிலேயே ஆறு இலக்க ஊதியம் பெற வேண்டும் என்ற வேட்கை இருக்கிறது. இந்த இலக்கை நாம் படித்த அறிவியல் மற்றும் கணிதம் தவிர்த்த பிற படிப்புகளால் தர முடியுமா என்ற கேள்வியும் உள்ளூர இருக்கத்தான் செய்கிறது. தற்போது வேலை வாய்ப்பு சந்தையில் இது போன்ற ஒரு நிலை இருந்தால் கூட எதிர்காலத்தில் இந்த நிலை கணிசமாக மாறிவிடும் என்று கணிக்கப்படுகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான வேலை   வாய்ப்பு சந்தையில் தற்போது மவுனமாக நிலவும் சூழ் நிலையின் அடிப்படையிலேயே இந்தக் கணிப்பு வெளியாகி உள்ளது.
எதிர்கால வேலை வாய்ப்புகளைப் பொறுத்தவரை பின்வரும் காரணிகளின் அடிப்படையிலேயே மாற்றம் ஏற்படும் என்று வேலை வாய்ப்பு சந்தை சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கம்ப்யூட்டரால் செய்ய முடியாத வேலைகளை செய்ய முடிவதன் மூலம் மட்டுமே எதிர்கால வேலை வாய்ப்பு சந்தையின் தன்மை இருக்கும். கம்ப்யூட்டர் செய்யும் வேலைகளையே செய்பவர்களின் வேலைக்கான வாய்ப்புகள் மந்தமாகும்.
தற்போது மிக அதிகபட்ச ஊதிய விகிதங்களுடன் இருக்கும் பல்வேறு பணிகளுக்கும் எதிர்கால வேலை வாய்ப்பு சந்தையில் கிராக்கி குறைவதுடன் ஊதிய விகிதங்களும் கணிசமாகக் குறையும் வாய்ப்புகள் உள்ளது.
தொழில் நுட்ப ரீதியான படிப்புகளைப் படித்தவர்கள் எதிர்காலத்தில் ஒரு பாதுகாப்பான பணிகளில் இருப்பது அரிதாக மாறிவிடும். இதனால் அவர்கள் சுயமாக தங்கள் துறை சார்ந்த பணிகளைச் செய்வார்கள்.
எதிர்காலத்தில் அதிகபட்சமானோர் ஸ்டெம் (STEM) துறை சார்ந்த பணிகளிலேயே ஈடுபடுவதுடன் அவர்களுக்கே அதிக பட்ச ஊதியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதாவது Science, Technology, Engineering, Mathematics ஆகிய துறைகளையே ஸ்டெம் என்னும் சுருக்கம் குறிக்கிறது. இனி ஒரு தனி நபரின் திறமையைச் சார்ந்தே நல்ல ஊதியமும்பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்குமே அன்றிகல்வித் தகுதியைப் பொறுத்து அமையப் போவதில்லை.
தற்போதே அதிகமான பணிகளை கம்ப்யூட்டர் வாயிலாக செய்து வருகிறோம். இது இனியும் மடங்காக அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே ஸ்டெம் துறைக்கு வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும்பதவி உயர்வு மற்றும் சம்பள விகிதங்கள் அதிகரிக்கும்.
மொத்தத்தில் எதிர்காலத்தில் கம்ப்யூட்டரால் செய்ய முடியாதமனிதனுக்கும் மனிதனுக்குமான பரிமாற்றங்களில் உள்ள பணிகளுக்கே நல்ல வாய்ப்புகள் ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது. 
    
ஐ.டி., பணி கிடைக்க தேவைப்படுவது என்னென்ன

ஐ.டி.என்பது இன்று எந்தத் துறையிலும் தேவைப்படும் தொழில்நுட்பமாக மாறியுள்ளதை அறிவோம்.
இன்றைய இளைஞர்களின் கனவுக் கோட்டையாகவும்லட்சிய இலக்காகவும் இத் துறை திகழ்கிறது. இந்தத் துறையின் வளர்ச்சியானது மற்ற பல துறைகளுக்கான விருப்பங்களை புரட்டிப் போட்டுள்ளது. ஆனால் இந்தத் துறையில் நுழைவது நாம் நினைப்பது போல் மிகவும் எளிதானதல்ல.
இந்தத் துறையின் சிறந்த அடையாளங்களாகக் கருதப்படும் டைஸ்.காம்மான்ஸ்டர். காம்,நவ்க்ரி.காம்ஜாப்ஸ்.சிலிகன் இந்தியா.காம் போன்றவற்றின் மூலமாகவே இன்றைய இளைஞர்கள் தங்கள் பணி வாய்ப்பைத் தேடுகிறார்கள். ஐ.டி.நிறுவனங்களில் உள்ள டெக்னிகல் பதவிகளை பல்வேறு ஐ.டி.முடித்த இளைஞர்கள் ஏன் பெற முடிவதில்லை என்பதற்கு முக்கிய காரணங்களாக சிலவற்றை எச்.ஆர்.நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அவை இதோ...
பயிற்சித் திறன் : இன்றைய சூழலில் கல்லூரிகளில் ஐ.டி.குறித்து அதிக பாட திட்டத்தை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் முடிக்க வேண்டியிருப்பதால் முழுமையான பயிற்சியளிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. ஆனால் இத்துறை சார்ந்த நிறுவனங்களோ தங்கள் பணிச் சூழலுக்குத் தேவையான திறன்கள் கொண்டவர்களை மட்டுமே பதவியில் நியமனம் செய்ய விரும்புகின்றன.
எனவே ஐ.டி.துறையில் நீங்கள் நுழைய விரும்பும் பட்சத்தில் இத்துறை சார்ந்த அறிவை நீங்கள் மேலும் அப்டேட் செய்வது முக்கியமானதாகும். எதிர்காலப் பணித் தேவைகளுக்காக பயிற்சி பெறுவதை குறைந்த நபர்களே விரும்புகிறார்கள். உங்கள் நடத்தைஆளுமைத் தன்மைபணி குறித்த அறிவு ஆகியவற்றைப் பொறுத்தே உங்களுக்கு இந்த ஐ.டி.,நிறுவனங்களில் பணி கிடைக்கும் என்பதால் இவற்றை மேம்படுத்து மிக முக்கியமானதாகும்.
படித்தவற்றை செயல்படுத்துவது : இன்றைய கல்வித் திட்டத்தின் பொருள் நடைமுறைப் பணிச் சூழலில் அவற்றை செயல்படுத்துவது குறித்து முழுமையாக விளக்குவதில்லை. இதனால் தேவையற்ற பல்வேறு பகுதிகளைப் படித்த போதும்அன்றாட அலுவலக சூழலில் படித்தவற்றில் பலவற்றையும் செயல்படுத்தத் தெரியாமல் திணறுவதை காண முடிகிறது. படித்தவற்றை நடைமுறைப் படுத்தும் திறன் இருக்கிறதா என்பதை ஐ.டி.நிறுவனங்கள் உங்களிடன் நிச்சயமாக பரிசோதிக்கும் என்பதால் இந்தப் பிரிவில் உங்கள் திறமைகளை மேம்படுத்துவது நல்ல பலன்களைத் தரும்.
உங்கள் ரெஸ்யூமின் தன்மை : சில ஐ.டி.துறை நாட்டம் கொண்ட பட்டதாரிகள்மிகச் சிறந்த திறமைகள் இருந்தும் கூட அவற்றை வேலை வாய்ப்பு சந்தையில் விற்பதில் தோல்வி அடைகிறார்கள். எனவே உங்கள் ரெஸ்யூம் மிகவும் பலம் வாய்ந்தபடியாக அமைப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
உங்கள் திறமைகள்அனுபவம்அறிவு போன்றவற்றை ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் கூர்மையுடன் வடிவமைப்பது நல்லது. உங்களுக்கு பல்வேறுபட்ட திறமைகள் இருந்தாலும் ஒரு குவிப்புடன் ஒரு துறை சார்ந்ததாக ரெஸ்யூமை வடிவமைப்பதே நல்லது. உங்கள் ரெஸ்யூம் பொதுவானதாக வடிவமைக்கப்பட்டால் உங்கள் வாய்ப்புகள் மங்கிவிடும்.
பணி தேடும் திறமை : இன்று இருக்கும் பல்வேறு பணி தேடும் வாய்ப்புகளுக்கிடையே எப்படி உங்களுக்கான பணியைத் தேர்ந்தெடுப்பது என்ற வழிமுறைகளை ஐ.டி.பணி தேடும் ஒருவர் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும். வழக்கமாக பணி தேடுவதற்கு நாம் உபயோகிக்கும் இணையதள போர்ட்டல்களுடன் நமது தனிமனித வலையமைப்பு மற்றும் சோசியல் மீடியாக்களின் மூலமாக நமது கனவுப் பணியை அடைய முடியும். எந்த நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு செல்ல இருக்கிறோமோ அந்த நிறுவனத்துடன் நமது தகவல் உறவை முன்னரே ஏற்படுத்துவது நல்ல பலன் தரும் என்று கூறுகிறார்கள்.
என்னென்ன பதவிகள் காலியாக உள்ளதுஅவை எப்போதுஎப்படி நிரப்பப்பட உள்ளன என்பது போன்ற தகவல்களை நீங்கள் பலப்படுத்துவதன் மூலம் பதவியைப் பெறத் தேவையான தகுதிகள் உங்களுக்குத் தெளிவாகப் புரிய வரும். இந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் ஐ.டி.துறையில் நல்ல மற்றும் எதிர்பார்த்த பணி வாய்ப்பினைப் பெற முடியும் என்பதே இத்துறை சார்ந்த எச்.ஆர்.நிபுணர்களின் கருத்தாக உள்ளது. 
http://c14.zedo.com/OzoDB/0/0/0/blank.gif

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets