உங்கள் வருகைக்கு நன்றி

தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம்.

செவ்வாய், 6 மார்ச், 2012


சணல் மூலம் ஆரம்பத்தில் கோணி பைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. தற்போது, பேன்சி பை, செல்போன் பவுச், லேப்டாப் பேக், பைல் போன்றவை சணலைக் கொண்டு தயாரிக்கப்படு கின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், கலை நயத்துடனும் இருப்பதால் பலர் விரும்பி வாங்கு கின்றனர். எனவே சணல் பொருட்கள் தயாரிக்க கற்றுக் கொண்டால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் 

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத இந்த தயாரிப்புக்கு மாவட்ட நிர்வாகமும், மத்திய ஜவுளித் துறையும் உதவி புரிகின்றது. கண்காட்சியில் இலவசமாக இடம் அளிக்கின்றனர். அரசின் கல்லூரி, அரசு அலுவலகங்களில் கண்காட்சி நடத்தி ஆர்டர் பெறலாம்.  தென்னை, வாழை நார் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம் வேறு. ஆனால் சணல் தனித்துவம் வாய்ந்தது. திடமே இதன் சிறப்பு. பாரம்பரியமிக்க சணல் பொருட்களுக்கு அதிக மவுசு உள்ளது. பெண்கள் வீட்டில் இருந்தபடி இந்த தொழிலை செய்யலாம். இதில் நல்ல வளர்ச்சி உள்ளது. சணல் பொருட்களுக்கான சந்தை விரிந்து கிடக்கிறது. விற்பது எளிது. லாபம் அதிகம். சணல் பொருட்கள் தயாரிக்க, தையல் தெரிந்தவர்கள் ஒரு வாரத்திலும், தையல் தெரியாதவர்கள் 15 நாளிலும் கற்று கொள்ளலாம்.

உற்பத்தி பொருட்கள்: 

சணல் துணி உயர்தரம், முதல் தரம், 2ம் தரம் என உள்ளது. மீட்டர் ரூ.50 முதல் ரூ.200 வரை. ஒரு மீட்டரில் சராசரி அளவான 10க்கு 8 இஞ்ச் ஹேண்ட் பேக் 4 தைக்கலாம். தையல் நூல் (1 ரோல் ரூ.32. 100 பை தைக்கலாம்), ஜிப் (மீட்டர் ரூ.3. 5 பை தைக்கலாம்), ஜிப்ரன்னர் (144 ரூ.90. 144 ஜிப் தைக்கலாம்) ஸ்டீல் பட்டன், லாக் பட்டன்(1க்கு ரூ.5), ஹேண்டில் காட்டன் ரோப் (கிலோ ரூ.80. 100 பை தைக்கலாம்)

தயாரிக்கும் முறை

சணல் துணியை தேவையான பொருட்களின் அளவுக்கு ஏற்ப வெட்டிக் கொள்ளவும், கலை நயத்தோடு தைக்கவும் பயிற்சி அவசியம். மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்களை கொண்டு தான் தைக்க முடியும். சாதாரண துணிகளை தைப்பது போல் எளிதாக இருக்காது. சணல் துணிகளை தைப்பது துவக்கத்தில் கடினமாக இருக்கும். காலப்போக்கில் எளிதாகும். ஒவ்வொரு பொருளுக்குரிய தனித்துவத்தை அறிந்து அதற்கேற்ப தைப்பது முக்கியம். உதாரணமாக ஹேண்ட் பேக்கில் 5 அறைகள் இருக்குமாறு தடுப்பு அமைக்க வேண்டும். அதற்கு லைனிங் துணி பயன்படுத்த வேண்டும். தாம்பூல பை தயாரிக்க கைப்பிடியாக காட்டன் ரோப் பயன்படுத்த வேண்டும். காலேஜ் பேக்கில் நீளமான பெல்ட் டேப் அமைக்க வேண்டும். அதில் 2 அறைகள் மற்றும் வெளியில் ஜிப்புடன் ஒரு அறை தைக்க வேண்டும்.

லெட்டர் பேடு தயாரிக்க லேமினேஷன் சணல் துணியை பயன்படுத்த வேண்டும். முன்புற துணிக்கு சோபா தயாரிக்க பயன்படுத்தப்படும் கெட்டியான துணியை பயன்படுத்த வேண்டும். பர்ஸ் தயாரிக்க வெளியே வழவழப்பான கலம்காரி துணி, பைல் மற்றும் லேப்டாப் பை தயாரிக்க உயர்தர சணல் துணி தேவை.சணல் தொழிலை ஆரம்பித்து கலை கட்டுங்கள் உங்கள் வாழ்வில் 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets