உங்கள் வருகைக்கு நன்றி

அன்றைய பொழுதிற்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க,

செவ்வாய், 6 மார்ச், 2012


அதிகாலை 3 மணிக்கு முழிப்பு வந்துடுது. அதற்கப்புறம் தூக்கமே வரமாட்டேங்குது. சும்மாதான் படுத்திருக்கிறேன்'' "சீக்கிரம் படுத்தாலும் நல்லா தூக்கம் வர பனிரெண்டு மணிக்கு மேலாகுது'' "நல்லா தூங்கி ரொம்ப நாள் ஆகுது'' "எவ்வளவு லேட்டா படுத்தாலும் காலையில கரெக்டா அஞ்சு மணிக்கு மேல தூங்க முடியலை'' இப்படி பலவிதமான புலம்பல்களுடனும், உடல் உபாதையுடனும், உடல் அலைச்சலுடனும், மன உளைச்சலுடனும் உலகில் பாதிப்பேர் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு காரணத்தினால் சரியான தூக்கம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இருட்டு வெளிச்சம், இன்பம் துன்பம், கஷ்டம் நஷ்டம், நன்மை தீமை, சந்தர்ப்பம், சூழ்நிலை இவைகளோடு சம்பந்தப்பட்டது, தூக்கம். நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தூக்கத்தை வரவழைக்க முடியாது. அதே மாதிரி நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் வருகின்ற தூக்கத்தை நிறுத்தவும் முடியாது. தூக்கமின்மை அதாவது போதிய நேரம் தூங்காததை மருத்துவ மொழியில் `இன்ஸாம்னியா' என்று சொல்வதுண்டு.

தூங்கப்போவதற்கு முன்பு தீவிரமான யோசனை, மூளையை கசக்கி சிந்திப்பது என்று சொல்வார்களே அந்த மாதிரி எண்ணங்கள் உருவாவது, உடலை அதிகமாக வருத்திக் கொள்வது, உடலுக்கு அதிகமாக வேலை கொடுப்பது, தூங்கும் இடம் ஒரு நல்ல சூழ்நிலையில் அமைந்திராமல் இருப்பது, தூங்கும் நேரம் ஒத்துப் போகாமல் இருப்பது, நாள்பட்ட உடல் நோய்கள், தாங்க முடியாத வலி, மன அழுத்தம், மன உளைச்சல் இவை அனைத்துமே தூக்கமின்மையை உண்டுபண்ணும்.

தூக்கத்தை வரவழைக்க பலபேர் பலவிதமாக முறைகளைக் கையாளுகிறார்கள். சிலர் யோகா செய்கிறார்கள். சிலர் தியானம் பண்ணுகிறார்கள். சிலர் மருந்து மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். சிலர் மது அருந்துகிறார்கள். இப்படி பலவிதமான முறைகளைக் கையாண்டு தூக்கத்தை வரவழைக்கிறார்கள். தூக்கமின்மைக்கும் மதுவுக்கும் நிறைய சம்பந்தம் உண்டு.

மது அருந்தினால் நல்ல தூக்கம் வரும் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். தூக்கம் வர வேண்டும் என்பதற்காகவே மதுவை அருந்த ஆரம்பித்தவர்கள் நிறைய பேர். மது, அது எந்த வகையாக இருந்தாலும், எவ்வளவு விலை உயர்ந்ததானாலும் சரி, ஆரம்பத்தில் அது ஒரு தூக்கத்தை உண்டு பண்ணும் பொருள் தான். ஆனால் மதுவுக்கு அடிமையாகி விட்டால் அது நிம்மதியான தூக்கத்தை தராது.

முன்னிரவில் தூக்கத்தை கொடுத்து பின்னிரவில் தூக்கத்தைக் கெடுத்து விடும் தன்மையுடையது மது. மேலும் கண்கள் சுற்றிக்கொண்டே தூங்கும் தூக்கத்தையும் (ஆர்.இ.எம். தூக்கம்) மது குறைத்து விடும். வயதானவர்களுக்கு ஒரு சிறிய சத்தம் கூட தூக்கத்தை கெடுத்து விடும். அதற்குப் பிறகு தூக்கத்தை வரவழைக்க வயதானவர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

மறுபடியும் தூங்குவதற்கு ரொம்ப நேரம் ஆகும். மனிதனுடைய பழக்க வழக்கங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் தூக்கத்தைப் பற்றிய பலவிதமான விஷயங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. செயற்கை வெளிச்சங்கள் அதாவது லைட்டுகளும், பல்புகளும் கண்டுபிடிக்கப்பட்ட 19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு செயற்கை வெளிச்சத்துக்கு பஞ்சமே இல்லை என்றாகிவிட்டது.

செயற்கை வெளிச்சங்கள் அதிகமாக வராத காலங்களில், அதாவது நம் தாத்தா பாட்டி காலத்தில் சூரியன் மறைந்த கொஞ்ச நேரத்திலேயே தூங்கப் போய்விடுவார்கள். ஆனால் இரவில் நிறைய தடவை விழிப்பார்கள். மறுபடியும் தூங்குவார்கள். முன்னிரவில் ஆழ்ந்த தூக்கமும் பின்னிரவில் லேசான தூக்கமும் இவர்களுக்கு இருக்கும். பின்னிரவில் கண்கள் சுற்றும் தூக்கமும் (ஆர்.இ.எம். தூக்கம்) இவர்களுக்கு இருக்கும்.

தூங்குகிற நேரத்தில் உடம்பும், மூளையும் வேலை பார்ப்பதில்லை. இரண்டும் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடும் என்று நீங்கள் நினைக்கலாம். இது சரியல்ல. நாம் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் விளையாடிக் கொண்டிருந்தாலும், படித்துக் கொண்டிருந்தாலும் நமது மூளை பிசியாக வேலை பார்த்துக் கொண்டுதான் இருக்கும். நமக்கு தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படும் நேரத்தில், மூளையும் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கும்.

ஆனால் ஓரளவு தான் மூளை ஓய்வு எடுத்துக்கொள்கிறது. நாம் தூங்கும்போது மூளை ரொம்ப பிசியாகி விடுகிறது. அன்றைய பொழுதிற்கும், அடுத்தடுத்த நாட்களுக்கும் உங்களை தெம்பாக வைக்க, உங்களை தேக ஆரோக்கியத்தோடு உற்சாகமாக வைக்க, உடலுக்குள் என்னென்ன ரசாயன மாற்றங்கள் பண்ண வேண்டுமோ அதையெல்லாம் பண்ணி உடம்பை ரெடியாக மூளை வைத்திருக்கிறது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets