உங்கள் வருகைக்கு நன்றி

பெண்கள் பாதுகாப்பு அவர்கள் கையில்தான் உள்ளது

வியாழன், 8 மார்ச், 2012


வீடே உலகம் என்று முடக்கப்பட்டுக் கிடந்த பெண்கள்  உலகமே வீடு என விசால அறிவோடு வெளிப்பட்டுள்ள இன்றைய காலத்திலும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்தபடியே உள்ளன என்பது அவலகரமான உண்மையாகும்.

பட்டங்கள் ஆளவும், சட்டங்கள் செய்யவும் பெண்கள் முன்வந்துவிட்ட இந்த காலத்திலும் பெண்கள் மீதான வக்கிரத் தாக்குதல்கள் குறையவில்லை. அடுப்பங்கரையில் மட்டுமே அடைந்து கிடந்த பெண்கள் ஆட்சி மன்றங்களில் அடிபதித்திருக்கும் இந்த காலத்திலும் பெண் முன்னேற்றம், பெண் விடுதலை ஆகியவை குறித்த சரியான வரையறைகள் பெறப்படாமலே உள்ளன.

ஆண்களை விடக் குறைவான அளவில் பெண்கள் உடை உடுத்துவதும், ஒழுக்கச் சீர்கேடுகளில் ஆண்களையும் விட ஒருபடி மேலே நிற்பதும் தான் பெண் விடுதலையின் சின்னங்கள் என ஒரு சில பெண்ணியவாதிகள் பேசுவதும், எழுதுவதும் பெண்ணினத்தை பாதிப்புகளின் படுகுழியில் தள்ளியுள்ளன என்று சொன்னால் மிகையாகாது.

வீட்டு நிர்வாகப் பணிகளான சமையல், குழந்தை பராமரிப்பு, பெரியோரைப் பேணுதல் போன்ற பணிகளெல்லாம் பெண்ணடிமைத்தனத்தின் சின்னங்கள், வீட்டு வேலைகளை பெண்கள் செய்வதே இழிவு, வெளியிடங்களில் பணிபுரியச் செல்வதே பெண் விடுதலை என்று சில பெண்ணியவாதிகள் வேதாந்திகள் போல கூறி வருகின்றனர்.

தவிர்க்க இயலாத சூழல்களில் குடும்பத்தைத் தாங்கி நிறுத்தும் பொறுப்பு பெண்ணின் மீது சுமத்தப்படும் போது வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை யாரும் குறை கூற முடியாது. ஆடம்பர வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும், பெண் விடுதலை என்ற நோக்கிலும், வலியச் சென்று வெளியிடங்களில் வேலைச் செய்வது பெண்களுக்குப் பெருந்தீமையாக அமைவதை அவர்கள் எண்ணிப் பார்க்க தவறி விடுகின்றனர்.

வீட்டு வேலைகளும், குழந்தை பராமரிப்பும், பெரியோரைப் பேணுதலும் இழிவான செயல்கள் அல்ல என்பதை பெண்கள் விளங்க வேண்டும். வீட்டு நிர்வாகம் செய்யும் பெண்கள் இல்லத்தரசியாகவும், வெளியிடங்களுக்குப் பணிக்குச் செல்கையில் ஆளுமைக்குட்பட்ட ஊழியராகவும் ஆகிவிடும் எதார்த்த நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, தவிர்க்கவியலாத காரணங்களின்றி வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்வதை பெண்கள் தவிர்ப்பது அவர்களின் நிம்மதிக்கு வழிகோலும். பணிக்குச் செல்லும் பெண்கள் பெரும்பான்மையாக பாலியல் சீண்டல்களுக்கு ஆளாவதை இன்றைய புள்ளி விபரங்கள் துல்லியமாகக் கூறியுள்ளன.

பாலியல் சீண்டல்களுக்கு வக்கிரப் பார்வைகளே முழு முதற் காரணமாக அமைகின்றன. கண்ணியமான உடைகளே என்றும் பெண்களுக்கு முதல் பாதுகாப்பாகத் திகழும். எனவே இதை எல்லாப் பெண்களும் பின்பற்றினால் பெரும்பாலான பாலியல் வக்கிரங்கள் குறைந்துவிடும்.

கண்ணியமான ஆடைகளால் பெண்கள் தன்னைக் தற்காத்துக் கொள்ள வேண்டும். அத்துமீறிச் சீண்டும் ஆண் வக்கிரர்களை எதிர்கொள்ளும் தைரியத்தையும், வீரத்தையும் பெண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்கள் தற்போது மிகவும் சுயமாகவும், சுதந்திரமாக செயல்பட தொடங்கியுள்ளனர். தினமும் பல்வேறு மனிதர்களை சந்திக்கின்றனர். தற்போது பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என நினைத்து, சினிமாவை பார்த்து  நவநாகரீகம் என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிகின்றனர். மேலும் சினிமாவில் பெண்களை ஆபாசமாக சித்திரிக்கின்றனர்.

ஆனால் இதை பார்த்து சில பெண்கள் நாகரிகம் என்று ஆபசமாக உடை அணிகின்றனர். பெண்கள் பாதுகாப்பு அவர்கள் கையில் உள்ளது என்பதை அவர்கள் உணருவதில்லை. பெண்கள் வீட்டில் இருக்கும் பொழுது எப்படி வேண்டுமானலும் உடை அணியலாம். ஆனால் வெளியில் செல்லும் போது நாகரிகம் என்ற பெயரில் ஆபாசமாக உடை அணிவதை தவிர்க்க வேண்டும். நாம் அணியும் உடை ஆண்களை தவறு செய்ய துண்டுவதாக இருக்க கூடாது. 

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets