உங்கள் வருகைக்கு நன்றி

பெற்றோர்களே இரண்டு விஷயங்கள்.

திங்கள், 26 மார்ச், 2012

1.பெற்றோர் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
டீன் ஏஜ் வயதில் உள்ளோர்காதல் வயப்பட்டால்கண்டுபிடிப்பது பற்றி கூறும் மன நல மருத்துவர். பெற்றோர் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்... உங்கள் பிள்ளைகள்ஒரு பையனிடமோ அல்லது பெண்ணிடமோ போனில் பேசுவது அல்லது அவர்கள் சந்தித்துப் பேசிக் கொண்டிருப்பதை மட்டும் வைத்துஅவர்கள் காதலில் உள்ளனர் என்று தீர்மானம் பண்ண வேண்டாம். பிள்ளைகள் காதலில் விழுந்தால்பரவசமான ஆனந்தத்தில் இருப்பர்அதிகப்படியான உற்சாகம் அவர்களிடம் இருக்கும்.தன் வெளித்தோற்றத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பர். திடீரென்று வினோதமாக நடந்து கொள்வர். முதலில் பிடிக்காத விஷயமெல்லாம்இப்போது பிடிக்க ஆரம்பித்து விடும். அதுஅந்த காதலரின் பாதிப்பாக இருக்கலாம். போன் கால்கள் வந்தால்உடனே தனியிடத்திற்கு போய் விடுவர்.இவையனைத்தும் உங்கள் பிள்ளைகள் காதலில் விழுந்ததற்கான அறிகுறிகள்.இது அனைத்தையும் விடகாதலில் உள்ள பிள்ளைகளுக்கு திடீரென்றுபடிப்பில் கவனம் சிதறிமதிப்பெண் குறைய ஆரம்பித்து விடும். அவர்களின் எண்ணம் முழுவதும் காதலரின் ஆதிக்கமே இருக்கும். இதனால்பிள்ளைகள் மேல் சந்தேகப்பட்டுஅவர்களை கண்காணிக்க ஆரம்பித்தால்அவங்களுக்கு வருத்தமும்கோபமும் அதிகமாகி விடும். இது மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம்.காதல் வயப்படுவது டீன் ஏஜில் இயற்கை. இதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். சிலர் காதல் வயப்பட்டிருந்தாலும்படிப்பில் கவனச் சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்வர். இந்த மாதிரியானவர்களுக்கு காதல்ஒரு தன்னார்வத்தை கூட்டுவதாக இருக்கும். காதல் அனுபவம் அல்லது ஈர்ப்பு இல்லாத இளைஞர்கள்இன்றைய காலகட்டத்தில் மட்டுமல்லஎந்தக் காலகட்டத்திலும் கிடையவே கிடையாது. அதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். தன் குறிக்கோளை பாதிக்காத வகையில்லட்சியத்தை நோக்கி நம்மை நகர்த்துதான் சிறந்தது என்பதைடீன் ஏஜ் வயதில் உள்ளவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். திருமணத்திற்கு பிரகான காதல்தான் உண்மையிலேயே சிறப்பானது. 

2. பெற்றோர்களே கவனியுங்கள்!'
தற்போது இளம் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர். 13 வயது முதல், 20 வயதிற்குட்பட்டவர்கள் தான் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் அதிகம் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற பிரச்னைகளுக்கு காரணம்,  நம் வளர்ப்பு முறையும், வாழ்க்கைச் சூழலும் தாறுமாறாக மாறிப் போய் கிடப்பதும்தான். இன்றைய படிப்பு,  அறிவை வளர்ப்பதற்கு பதில், பொருளாதார ஆதாயத்தை நோக்கியதாகவே உள்ளது. தாய்மொழிப் பாடங்கள் வழியே மாணவர்களுக்கு புகுத்தப்படும் நன்னெறிகள்,  நீதிபோதனைகள் அனைத்தும் குறைந்து விட்டன. நற்குணங்களை வளர்த்தெடுக்கும் அம்சங்கள், மொழி இலக்கியங்களில் தான் அதிகம் விரவிக் கிடக்கின்றன. விரல் விட்டு எண்ணும் அளவிலான மாணவர்கள் கூட,  இவற்றையெல்லாம் இன்று படிப்பதில்லை. அறிவியல், கணக்கு என்று இயந்திரத் தனமான பாடங்களையே தான் குழந்தையிலிருந்தே கற்றுக் கொள்கின்றனர். காரணம்,  நம் வற்புறுத்தல் தான். மீடியாக்களில், அதீதமாகக் காட்டப்படும் வன்முறைக் காட்சிகள்,  குடும்பத்தில் பெற்றோரிடம் நடக்கும் தொடர் மோதல்கள்,  இன்னபிற அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து, சிறு வயதிலேயே பெரும் குற்றங்களைச் செய்யும் அளவிற்கு மனதைத் தூண்டுகின்றன. உளவியல் ரீதியாக இதை அணுகும்போது, தொடர்ந்து ஒரே விஷயத்தை எடுத்துக் கொண்டு கொடுக்கப்படும் டார்ச்சர்,  இயல்பாகவே மனபாதிப்பை உண்டாக்கும். இதை மன நோய் என்று சொல்ல முடியாது; மன பாதிப்பு என்று சொல்லலாம். வழக்கமான செயல்பாடுகளிலிருந்து, ஒருவர் மாறுபாடு தெரிந்தாலே, அதைச் சரியாக கண்டுபிடித்து முறையான கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். மனநோய் என்பது 40,   50 வயதிற்கு மேல் தான் வரும் என்று இப்போது பலரும் நினைக்கின்றனர். ஆனால், இன்று 13 -17 வயதுள்ளவர்கள் அதிகமாக மனநோய் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். இதை அனைத்துப் பெற்றோரும் உணர்ந்து, குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets