உங்கள் வருகைக்கு நன்றி

ஜங்க் உணவு,உணவை சூடு படுத்தலாமா, காலை உணவால் பயனுண்டா

திங்கள், 12 மார்ச், 2012

ஒவ்வொருவரும் உணவுக்காகத்தான் கஷ்டப்பட்டு உழைக்கிறோம், சம்பாதிக்கிறோம், அதிகமாக செலவு செய்கிறோம். ஆனால், உண்ணும் உணவு உடலுக்கு ஏற்றதாக உள்ளதா என்பதை பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.
தற்போது வந்துள்ள ஜங்க் உணவுகளும், பாஸ்ட் புட்களும் வயிற்றை பாழாக்குகின்றன என்பது பலருக்கும் தெரியும். ஆனால், அதன் மீதான நாட்டம் வயிற்றை கெடுத்து விடுகிறது.
ஜங்க் உணவு ஏன் தேவையற்றது என்று கூறுகிறார்கள் என்றால், ஒன்று, அதிக கலோரிகள், அல்லது வெறும் வயிறை நிரப்பும். இது இரண்டுமே நிச்சயமாக உடலை பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட கலோரி உணவை சாப்பிடும் நபர், திடீரென அதிக கலோரிகள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது அதனால் உடலின் ஜீரண சக்தி பாதிக்கப்படுகிறது. அதிகப்படியான சர்க்கரை, உப்பு, கொழுப்பு, குறைந்த சத்துக்கள் இவை உடலை எல்லா வகையிலுமே பாதித்துவிடும்.
அல்லது, பசி இருக்கும் சமயத்தில் வெறும் வயிறை நிரப்பும் ஜங்க் உணவை சாப்பிடுவதால் வயிறு நிரம்பிவிடும். ஆனால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்குமா. கிடைக்காத பட்சத்தில் உடல் பலவீனமடைகிறது.
பொதுவாக நாம் சாப்பிடும் உணவில் நார் சத்து, நீர் சத்து, கொழுப்பு இருக்கும். இவை உணவை செரிமானம் செய்ய அவசியமாகிறது. ஆனால் ஜங்க் உணவுகளில் இவை எதுவும் இருப்பதில்லை, மாவுச் சத்து, கொழுப்பு சத்து அதிகமாக இருந்தால் உணவு செரிமானம் கடினமாகும்.
எனவே, நாம் சாப்பிடும் உணவை கவனமாக தேர்வு செய்து சுகாதாரமான முறையில் தயாரித்து உண்ண வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

உணவை சூடு படுத்துவதால் சத்துக்கள் இழக்கின்றன

சமைத்த உணவு ருசியாக இருக்கிறதா என்று மட்டும் பார்க்காமல் அது உடலுக்கு ஏற்ற சத்துக்கள் நிறைந்த உணவாகவும் இருக்கிறதா என்பதை பெண்கள் கவனிக்க வேண்டும்.
வேகமாகவும், மிக எளிதாகவும் உங்கள் காலை உணவை தயாரிக்கலாம். ஆனால் அதற்கு முன்னதாக என்ன உணவை தயாரிக்கப் போகிறோம் என்று முடிவு செய்துவிட்டு அதற்கான பொருட்களை தயாராக வாங்கி வைக்க வேண்டும்.
மூன்று வேளைக்கும் சேர்த்து சமைத்து வைத்து விடுவதோ, ஒரு வாரத்திற்குத் தேவையான உணவை சமைத்து பிரிஜ்ஜில் வைப்பதோ எளிதாக இருக்கலாம். ஆனால் அதனை உண்பதால் உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ எவ்விதத்திலும் நன்மை இருக்காது என்பதை உணருங்கள்.
ஒரு உணவை சமைத்து உடனடியாக பரிமாறினால் அதில் இருக்கும் சத்துக்கள், அதை எடுத்து வைத்து பிறகு சூடு படுத்தும் போது காணாமல் போகிறது.
சத்தாண உணவை சமைப்பதற்கான குறிப்புகள் இங்கே எப்போதும் புதிய காய்கறிகளை வாங்கி சமைக்கப் பயன்படுத்துங்கள்.
காய்கறிகளை அதிகமாக வேக வைக்க வேண்டாம். அதிகமாக மசாலாவையும் சேர்க்க வேண்டாம்.
காய்கறிகளை முதலில் கழுவிவிட்டு பிறகு நறுக்குங்கள். நறுக்கிய பிறகு கழுவினால் நிறைய சத்துக்கள் வெளியேறிவிடும்.
கீரையை எக்காரணத்தைக் கொண்டும் எலுமிச்சை அல்லது புளியுடன் சேர்த்து சமைக்காதீர்கள்.
பெரும்பாலும் காய்கறிகளை குக்கரில் பல விசில்கள் வைத்து வேக வைக்காதீர்கள். குக்கரில் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து மூடிவிட்டு தண்ணீர் கொதித்ததும் மூடியைத் திறந்து அதில் காய்கறிகளைப் போட்டு மூடி வெய்ட்டைப் போடவும். விசில் வருவதற்குள் குக்கரை இறக்கி கீழே வைத்துவிடுங்கள். அந்த ஆவியிலேயே காய்கறிகள் வெந்து விடும். இதனால் காய்கறிகளில் உள்ள சத்துக்களை காப்பாற்றலாம்.
வெங்காயத்தை நறுக்கிய உடனேயே சமைக்காமல், நறுக்கி வைத்து 10 நிமிடங்கள் கழித்து சமைத்தால் நிறைய சத்துக்கள் சேர்ந்திருக்கும். ஆனால், நறுக்கி வைத்து பல மணி நேரம் கழித்து பயன்படுத்தக் கூடாது.
பொதுவாக வீடுகளில் பால் பொங்கியதுமே அடுப்பை அணைத்து விடுவார்கள். அவ்வாறு இல்லாமல், பொங்கி வரும் போது அடுப்பில் தீயை குறைத்து 10 முதல் 15 நிமிடங்கள் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் பாலில் உள்ள பாக்டீரியாக்கள், கிருமிகள் சாகும்.
அலுமினியப் பாத்திரங்களை அதிகமாக சமைக்கப் பயன்படுத்தக் கூடாது. அலுமினியப் பாத்திரங்களில் சமைத்த உணவுகளில் அலுமினியத்தின் அளவும் அதிகமாக இருக்கும். இது மூளையில் சேர்ந்தால் ஞாபக மறதி நோய் ஏற்படும். இதற்கு தீர்வே கிடையாது. ஸ்டெய்ன்லஸ்ஸ்டீல் பாத்திரங்களே சமைப்பதற்கு ஏற்றவையாகும்.


காலை உணவை தவறாமல் சாப்பிடுபவர்களை விட, அதை தவிர்ப்பவர்களுக்கு மன அழுத்தம், நோய் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இன்றைய நவீன காலத்தில் காலை நேரத்தில் அவசர, அவசரமாக வேலைக்கு புறப்படுபவர்களில் பலரும் காலை உணவை தவிர்க்கின்றனர். சிலர் வழக்கமாகவே காலையில் சாப்பிடுவதில்லை. அதே போல்,   மது அருந்தி விட்டு தாமதமாக படுக்கைக்கு செல்வோரும் காலையில் உணவை விட்டு விடுகின்றனர். 

ஆனால், காலை உணவை தவிர்ப்பதால் பல பிரச்னைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். இது குறித்து இங்கிலாந்தில் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவு விவரம்: ஆய்வில் காலை உணவு சாப்பிடுபவர்கள், அதை தவிர்ப்பவர்கள் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டனர். காலையில் சாப்பிட்டதால் மனம், உடலளவில் உற்சாகமாக இருந்ததுடன் அன்று முழுவதும் மன அழுத்தமின்றி சவாலான பிரச்னையை கூட திறம்பட கையாண்டதாக 89 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். 

ஆய்வில் நடந்த ஆங்கிலம், கணிதம் உட்பட 25 போட்டிகளில் காலையில் உணவு சாப்பிட்ட 61 சதவீதம் பேர் சிறப்பாக செயல்பட்டனர். சாப்பிடாத 75 சதவீதம் பேர் போட்டிகளில் சில தவறுகள் செய்தனர். மனசோர்வுடனும் காணப்பட்டனர். ஆய்வில் பங்கேற்ற 2000ல் 48 சதவீதம் பேர், வார வேலை நாட்களில் குறைந்தது ஒரு நாளாவது காலையில் சாப்பிடுவதில்லை. மேலும், 25 முதல் 35 வயதுடையோரில் 50 சதவீதத்துக்கு மேற்பட்டோர் சாப்பிடாததால் மன உளைச்சல், சோம்பலை உணர்வதுடன், சிடுசிடுப்புடன், சரியாக வேலை செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets