உங்கள் வருகைக்கு நன்றி

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் அதிகமாக அமர்வது!

சனி, 31 மார்ச், 2012


ஆபீசில் வேலை பார்ப்பது, டிவி, கம்ப்யூட்டர் முன்பு செலவிடுவது என ஒரு நாளைக்கு 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்வது உயிருக்கு ஆபத்து என எச்சரிக்கிறது ஆஸ்திரேலிய ஆய்வு. ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலை சீனியர் ஆராய்ச்சியாளர் ஹிட்டி வாண்டர் பிளாக் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தினார். 

அதில் 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 2.22 லட்சம் பேரிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சி ரிப்போர்ட் விவரம் இதுதான்: தினமும் உடற்பயிற்சி, வாக்கிங், ஒழுங்கான டயட்.. எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அலுவலகத்தில், டிவி, கம்ப்யூட்டர் முன்பு என தினமும் 11 மணி நேரத்துக்கு மேல் உட்கார்ந்தே இருப்பவரா நீங்கள்  

இன்னும் சில ஆண்டுகளில் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். அதிக நேரம் உட்கார்ந்துவிட்டு, மற்ற நேரத்திலும் உடற்பயிற்சிகள் இல்லாமல், ஒழுங்கான டயட்டும் இல்லாமல் இருந்தால் இந்த ஆபத்துக்கான வாய்ப்பு இரட்டிப்பு. அதற்காக, அதிக நேரம் உட்கார்வது ஆட்கொல்லி என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. 

அதிக நேரம் உட்கார்வதற்கும் வாழ்நாள் குறைவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்று சொல்லலாம். நன்கு ஆரோக்கியமாக இருப்பதற்கும் இதய நோய்கள், சர்க்கரை, அதிக பருமன் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உட்காரும் நேரத்தைகுறைப்பது மிகமிக அவசியம். அலுவலகத்தில், கம்ப்யூட்டர், டிவி முன்பு, பஸ், டூவீலர் வாகனங்களில் செல்வது உள்பட உட்காரும் நேரத்தை முடிந்தவரை குறையுங்கள். 

முடிந்தவரை நில்லுங்கள், அதிகம் நடந்துசெல்லுங்கள். மற்ற நேரங்களிலும் உடற்பயிற்சி, மற்ற வேலைகள் செய்வது என ஆக்டிவ் ஆக இருங்கள். இவ்வாறு ஆய்வு ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் இதய நோய்கள் ஆய்வு நெட்வொர்க் மற்றும் தேசிய இதய பவுண்டேஷன் உதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதய பவுண்டேஷன் தலைமை அதிகாரி டோனி தர்ல்வெல் கூறுகையில், ‘‘சுறுசுறுப்பின்றி சோம்பலாக உட்கார்ந்திருப்பது இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 1.7 கோடி இறப்புகளை ஏற்படுத்துகிறது. நாம் ஓய்வாக இருக்கும் பெரும்பாலான நேரத்தை டிவி, கம்ப்யூட்டர், வீடியோகேம்கள் வீணடிக்கின்றன. இவற்றில் செலவிடும் நேரத்தை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமான வாழ்வை தரும்’’ என்கிறார்.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets