உங்கள் வருகைக்கு நன்றி

இதை வர்த்தகமாக்கி வாழ நினைக்கலாமா?

திங்கள், 5 மார்ச், 2012

முதுமையின் அனுபவம்இளமையின் செயல் வேகம்'' எனக் கலந்த குடும்ப அமைப்பையே நமது முன்னோர் "கூட்டுக் குடும்ப உறவு'களாக வளர்த்தெடுத்தனர். ஆனால்இன்றைய இளம் தலைமுறையினரோ மேலை நாட்டுக் கலாசாரத்தையே விரும்புகின்றனர்.
இத்தகைய கலாசாரப் போக்கால்பெற்றெடுத்தவர்கள்உடன் பிறந்தவர்கள்மரத்தின் கிளைகள் போல நிற்கும் அக்கம்பக்கத்துச் சொந்தங்கள் என எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிபணமும்அதனால் வரும் சிற்றின்பமுமே முன்னிலைப்படுத்தப்படுகிறது.
அறத்தை மறந்த தலைமுறையால்தான் தற்போது ஊழல்முறைகேடு என பல தவறுகள் பொதுவாழ்வில் அரங்கேறி வருகின்றன என்பது சமூக ஆர்வலர்களது ஆதங்கம்.
அறத்தை மையமாக வைத்து தேடப்படும் பொருளும்அதனால் வரும் இன்பமும் தனி மனிதருக்கு மட்டுமல்லாது சமூகத்துக்கும் மிகுந்த பயன்தரக்கூடியவையாக இருக்கும். ஆனால் அறத்துக்குப் புறம்பாகச் சென்று தேடும் பொருளும்இன்பமும் தனி மனிதரை வேண்டுமானால் மேம்படுத்தும். சமூகத்தை அழிவு நிலைக்கே கொண்டு செல்லும்.   இக்கருத்தை நமது இன்றைய தலைமுறையினர் மறந்துபோனதற்கு மாறிவிட்ட கல்விச்சூழலும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

நமதுநாடில் சமீபகாலமாக நடந்துவரும் சம்பவங்கள் நமது கலாசாரம் காணாமல் போய்வருவதை எச்சரிப்பதாகவே அமைந்துள்ளன. நல்ல பணியில் இருக்கும் மகன்மருமகள் மற்றும் பேரக் குழந்தைகள் என அனைவரும் இருந்தும் ஒரு மூதாட்டி அநாதை இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
மாமியாரை அநாதை இல்லத்தில் சேர்க்கக் கோரும் மருமகள்மாமனாரை தன்னுடன் தங்க அனுமதிக்கக் காரணம்அவர் கடைகளுக்குச் செல்லுதல் உள்ளிட்டசிறு சிறு வேலைகளுக்கு பயன்படுகிறார் என்பதுதான். ஆகபயன்படாமல் போகும் நாற்காலி உள்ளிட்ட பொருள்களைக்கூட தனி அறையில் வைத்துப் பாதுகாக்கும் பழக்கமுள்ள நமது மண்ணில் வேலை செய்யமுடியாத நிலையில் முதியோர்களை அநாதை இல்லங்களுக்கு அனுப்புகிற அநாகரிகம் வளர்ந்திருப்பதை என்னவென்று சொல்ல?
தமிழகத்தில் மட்டும் தற்போது ஆயிரத்துக்கும் அதிகமான முதியோர் இல்லங்கள் உள்ளன. இதில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் குக்கிராமங்களில் கூட அநாதை முதியோர் இல்லங்கள் அதிகமாகத் தென்படத் தொடங்கிவிட்டன.
மேலும்வயதானவர்களை மாத்திரை கொடுத்து மரணிக்கவைத்தல்எண்ணெய் தேய்த்து குளிர்ச்சியால் இறக்கவைத்தல் என பல வழிகளில் முதியோர் கொலைகள் மறைமுகமாக நடந்துவருவதும் அதிர்ச்சியளிக்க வைக்கிறது.
மாதத்துக்கு பலமுதியோர் தற்கொலை செய்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. சாப்பிடக்கூட திராணியற்றுசாகப்போகும் நிலையில் உள்ள பெற்றோரைபிள்ளைகளே அரசு மருத்துவமனையில் சேர்த்துவிட்டுதிரும்பிப் பார்க்காமல் செல்லும் நிகழ்வுகளும் அதிகம் நடக்கின்றன. அப்படிக் கைவிடப்படும் முதியோரைஉதவிக்கு ஆள் இல்லை எனக் காரணம் கூறி மருத்துவமனையிலிருந்தும் விரட்டிவிடுகிறார்கள். இதனால்அந்த முதியோர்மருத்துவமனை வளாகத்தில் குளிரிலும்வெப்பத்திலும் உடல்நடுங்க கிடப்பது மனதை பதைபதைக்கச் செய்வதாக உள்ளது.
அந்திம காலத்தில் உறவுகள் அற்ற நிலையில்அந்த அநாதை இல்லத்திலே அவர்களில் பலரும் கடைசி மூச்சையும்தங்களது உறவுகள் மீதான ஏக்கத்தையும் காற்றில் கரைக்கின்றனர். இறந்த நிலையில் அந்த இல்லத்தினரே சடங்குகள் செய்து புதைத்தும் வருகின்றனர்.
இதைவிடக் கொடுமையான சம்பவம்வாடகை வீட்டில் வயதான பெற்றோர் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையும் தென்மாவட்டங்களில் உள்ளது. அப்படி வயதான பெற்றோர் இருந்தால்மாதம் தனிக் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. வாடகை வீட்டில் குடியிருப்போரில் வயதானவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தால்சடலத்தை வீட்டு வாசலில் மட்டுமே வைக்கவேண்டும் என்பதும் வீட்டு உரிமையாளர்களின் நிபந்தனையாகும். இதுபோன்று பிரச்னைகள் போலீஸ் நிலையம் வரை விசாரிக்கப்படுவதும் வழக்கமாகி வருகிறது.
ஆம்! கல்தோன்றிமண்தோன்றாக் காலத்து முன்தோன்றிய நாகரிகம் மிகுந்த மூத்த குடிகளாகிய தமிழர்கள்தான் இப்போது அனைத்தையும் வர்த்தகமாக்கி வாழ நினைக்கிறோம் என்பது வருத்தத்துக்குரியதே.
முதியோர் பாதுகாப்பு சட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டும் அதை யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.. முதியோருக்கான உரிமைகள் எங்கும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதுகுறித்து பல முறை மாநில தலைமைச்செயலர் முதல் நீதிமன்றம் வரை எடுத்துச்சென்றும் இன்னும் உரிய தீர்வு காணப்படவில்லை என வருத்தப்படுகிறார் முதியோர் நலனுக்காக பல ஆண்டுகளாகப் போராடிவரும் மதுரை இந்திரம் டிரஸ்ட் அமைப்பின் வழக்குரைஞர் கா.ராம்பிரபு.
ஏணிகள் இல்லாமல் உயரமான இடத்தை எட்டமுடியாது. ஏறிவந்துவிட்டோமே என ஏணியை எட்டி உதைத்தால் பிறகு இறங்கவேண்டிய நேரத்தில் பாதுகாப்பாக இறங்கமுடியாத நிலை ஏற்படும். வாழ்க்கையும் அப்படித்தான். குழந்தைப் பருவத்தில் நமது நலனையே முன்னிறுத்தி வாழும் பெற்றோர்வயதாகி குழந்தைகள் போல செயல் இழந்து நிற்கும்போது அவர்களை பெற்றோர் இடத்தில் இருந்து பேணிக் காப்பதுதானே மனிதத்துவம். அதை மறந்து அறம் மறந்த மணிதர்களாக இன்றைய தலைமுறையினர் இருப்பது சரியல்ல என்பதை உணர்வது நல்லது.

கருத்துரையிடுக

  © Blogger template Leaving by Ourblogtemplates.com 2008

Back to TOP  

Blogger Widgets